ஆச்சரியமாக சற்றும் எதிர்பாரா விதமாக துக்ளக் அதை பிடித்து அச்சில் ஏற்றியிருகின்றது, நன்றி

கக்கனை பற்றி சுமார் 5 ஆண்டுக்கு மேலாக எழுதியிருப்போம் கண்டுகொள்வார் யாருமில்லை

ஆச்சரியமாக சற்றும் எதிர்பாரா விதமாக துக்ளக் அதை பிடித்து அச்சில் ஏற்றியிருகின்றது, நன்றி

நமக்கு தேசபற்றையும் இன்னும் பல நல்ல விஷயங்களையும் நியாயமாகவும் மகா துணிச்சலாகவும் போதித்த பத்திரிகை அது, அதன் உண்மையும் நம்பகதன்மையும் துளியும் சந்தேகத்துக்கு இடமில்லாதது

எந்த பத்திரிகையினை மிக சிலாகித்தோமோ, எந்த பத்திரிகையோடு வளர்ந்தோமோ அதே பத்திரிகையில் நம் பெயரும் வந்தது வாழ்வின் நெகிழ்ச்சியான தருணத்தில் ஒன்று

நாம் வெட்டியாக கோலமிடவில்லை, நாம் தனியே இடும் கோலங்களையும் சிலர் கவனிக்கின்றார்கள் என்பதுதான் மிகபெரும் ஆறுதல்

இந்த பறவையின் குரலையும் கவனித்து பதிவு செய்த அந்த குழுமத்துக்கு நன்றி

பிற்படுத்தபட்டவரும் அப்பழுக்கற்ற தேசியவாதியுமான அப்பெருமகனுக்கு அவர்கள் பத்திரிகைதான் இடம் கொடுத்திருக்கின்றது

பொதியில்லா மாடு துள்ளத்தான் செய்யும்

எந்த வேலைக்காரனுக்கு அலுவலகம் செல்ல பிடிக்கும்? எந்த மாணவனுக்கு கல்லூரி செல்ல பிடிக்கும்?

அப்பன் காசில் அலுவலகம் செல்பவன் எவனாவது வேலைக்கு செல்வானா?
ஜாலியாக போராடத்தான் செல்வான்..

12ம் வகுப்பிலே உன் கல்வி கடனுக்கு நீதான் பொறுப்பு என தலை நிறைய சுமையோடு வெளியேவிட்டால் ஒரு பயல் போராட செல்வான்?

பொதியில்லா மாடு துள்ளத்தான் செய்யும்

இவ்விடம் குடியுரிமை பெற்று தரப்படும்..

உலகெல்லாம் இருக்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கும் நிறுவணம் இது

உலகெல்லாம் இருக்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கும் நிறுவணம் இதுஇந்துக்களை தவிர எல்லா மதத்தாரும் இங்கு நாடினால் நலம் பெறலாம், அவ்வளவு சக்தி வாய்ந்த‌ திராவிட ஆன்மீக நிலையம்ஒருவாரமாக வாடிகனையும், சவுதி முல்லாக்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருக்கின்றதுபாகிஸ்தான் மற்றும் வங்கதேச, பர்மா இஸ்லாமியருக்கு சிறப்பு முன்னுரிமை உண்டு என்கின்றார் தலமை சித்தர்

தமிழக மாணவர்களுக்கு நாம் சொல்லிகொள்வது

தமிழக மாணவர்களுக்கு நாம் சொல்லிகொள்வது ஒன்றுதான் , நீங்கள்தான் எதிர்கால இந்தியா. இந்நாட்டினை வருங்காலத்தில் உயர்த்தபோகும் தலைவர்கள்

உங்களுக்கும் இத்தேசத்தின் அமைதியிலும் வளப்பத்திலும் பங்கு இருக்கின்றது, இந்த தென்னங்கற்றுகளே நாளை சோலையாக போகின்றன , இந்த நாற்றுக்களே நாளை இந்நாட்டின் மணிகளாய் நிரம்ப போகின்றன‌

ஆனால் விளையும் பொழுதே பாதை மாறினால் பதராகாதா? வேரற்று போனால் வீழ்ந்துவிடாதா?

உங்களின் கல்விக்கு இத்தேசம் செல்வழிக்கும் பணம் தெரியுமா? உங்களுக்கு எல்லாமும் கொடுத்து பாதுகாப்பும் கொடுத்திருப்பது இத்தேசம்., வங்கதேசமோ பாகிஸ்தானோ அல்ல?

உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்கின்றோம், எல்லையில் அந்த சனியன்களால் நாம் செலவழிக்கும் பணமே உங்களின் வசதிகளில் குறைவை தருகின்றன. நாட்டின் எல்லையினையும் கெடுத்துவிட்டு நாட்டுக்குள்ளும் வந்து அவன் கெடுப்பதை அனுமதிக்கின்றீர்களா?

நீங்கள் என்ன படிக்கின்றீர்களோ எமக்கு தெரியாது, உங்கள் நிறுவணம் சிறுபான்மையா என்பதும் எமக்கு தெரியாது

ஆனால் நீங்கள் இந்நாட்டின் வரலாற்றை கற்கவில்லை என கருதுகின்றோம், அது உங்கள் பிழை அல்ல. திட்டமிட்டு உங்களை அடிமைகளாக வைத்திருக்க சிலர் கற்றுகொடுத்த பிழை

அருமை செல்வங்களே.

அது பிரிட்டிஷ் இந்தியா என ஒன்றாய் இருந்து நாம் போராடினோம், பெரும் போராட்டத்தில் நம்மை இரண்டாய் பிரித்தான் வெள்ளையன்

நிச்சயம் நாம் பிரிவினையினை விரும்பவில்லை, விரும்பி பிரித்தவன் ஜின்னா, அதற்கு ரகசிய ஆதரவு காந்தி

ஆம் மேற்கு பாகிஸ்தானை இரண்டாக உடைத்து எல்லை காந்தி கபார்கான் தலமையில் ஒரு பாகிஸ்தான் நம்மோடு இணையவாய்பிருந்தும் இருக்கும் இஸ்லாமியர் பலமாக இருக்கட்டும் என அந்த தொப்புள்கொடியினை வெட்டிவிட்டார் காந்தி

கிழக்கே வங்கமும் கிழக்கு பாகிஸ்தான் ஆனது

இந்தியாவும் பாகிஸ்தானும் அன்றே செய்த ஒப்பந்தம் உங்களுக்கு தெரிந்திருக்க நியாமில்லை, சொல்லி தருவாருமில்லை

ஆம், அது இஸ்லாமிய குடியரசு என்றும் இத்திருநாடு அறிவிக்கபடாத இந்துநாடு எனவும் ஏற்றுகொள்ளபட்டது

இங்கிருக்கும் சிறுபான்மையினரான இஸ்லாமியர் எப்பொழுதும் அங்கு செல்லவும் அங்கிருக்கும் சிறுபான்மையினரான இந்துக்கள் இங்கு வரவும் அந்த ஒப்பந்தம் வழிசெய்தது

அப்பொழுதே இருவரும் செல்லும் பொழுதுதான் எல்லை கலவரமும், நவகாளி கொடுமைகளும் நடந்தன‌

அவை எல்லாம் சொல்லி உங்களை வெறியேற்ற விரும்பவில்லை, அவை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்

ஆம் விஷயம் இதுதான், இங்கு சிறுபான்மையினர் அங்கு செல்லவும் அங்கிருக்கும் சிறுபான்மையினர் இங்கு வரவும் எக்காலமும் தடையில்லை

ஆனால் அங்கிருக்கும் பெரும்பான்மையினரான இஸ்லாமியர் இங்கு அனுமதிக்கபட்டால் என்னாகும்? சுமார் 30 கோடி மக்களும் இங்கே ஓடிவருவர், அந்நாடுகள் அப்படி அழிந்து கிடக்கின்றன‌

திபெத் அகதிகள் வாழவில்லையா என்பீர்கள்?

அன்பர்களே, ஈழதமிழன் அடிவாங்கியதும் எங்கே ஓடிவந்தான்? கேரளா வந்தானா? மராட்டியம் ஓடினானா? தமிழகம் தானே தொப்புள் கொடி உறவென வந்தான்

அப்படி அருணாசலபிரதேச தொப்புள்கொடி திபெத், அவர்கள் மிக சொற்பமே. இன்று அவர்களை அருணாசலபிரதேசத்தில் பெருவாரி வைத்திருக்கின்றோம், யுத்தம் வந்தால் சாகபோவது அவர்களே

ஈழசிக்கலுக்கும் நமக்கும் என்ன? 1957ல் 5 லட்சம் மலையக தமிழரை நாடற்றவர் என தமிழகத்துக்கு விரட்டிய கதை நீவீர் அறிவீரா? அறிய முற்படுங்கள்

ஈழத்தவர் யுத்தமென வந்தார்கள், யுத்தம் முடிந்தபின் அவர்கள் தாயகம் திரும்புவதுதானே சரி

இங்கே இப்பொழுது வடகிழக்கில் என்ன சிக்கல்?

1971க்கு பின் வங்கதேச மக்கள் முறையின்றி குவிந்தனர், உரிய ஆவணமுமில்லை அகதி அடையாளமுமில்லை, சந்தையில் வந்த மந்தைபோல் கூட்டம்

இதில் இந்தியன் யார் அந்நியன் யார் என எப்படி அறிவீர்கள்?

அதற்குத்தானே சட்டம் கொண்டுவந்தோம், அதற்கா குதிக்கின்றீர்கள்? தகுமா?

அந்த 1 கோடி வங்கதேசத்தவனை உள்ளேவிட்டால் அவன் எங்கே செல்வான் தெரியுமா?

50 லட்சம் பேர் தமிழகமே வருவான், இங்கு பலவிதமான குழப்பம் மிஞ்சும். இதெல்லாம் உங்களுக்கு ஏன் புரியவில்லை?

இங்குள்ளவன் வேலைவாய்ப்பு கல்வி சாலை மருத்துவனை போக்குவரத்து எல்லாம் அவனால் பங்கிடபடும்

உன் வீட்டில் எல்லோரையும் அணைத்து சோறுபோடும் பெருந்தன்மையாளராக நீங்கள் இருக்கலாம்,ஆனால் மிகபெரிய நாட்டில் இன்னும் ஏராளமான ஏழைகள் உள்ள நாட்டில் அவர்களும் ஏன்?

இங்குள்ள இஸ்லாமியரை யாராவது விரட்டமுடியுமா? இது புரியாமலா போராடுகின்றீர்கள்?

அதுவும் ரயிலை உடைப்பதும் தண்டவாளத்தை உடைப்பதும் சரியா, அவை எல்லாம் உங்கள் குடும்பத்தாரின் வரியில் உருவான அரசு சொத்து அல்லவா?

தமிழக மாணவர்களே, அருமை தங்கங்களே

உங்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்கின்றோம்

இங்கு அரசியலுக்காக உங்களை தூண்டிவிடுவார்கள், உதாரணம் இந்தி எதிர்ப்பு போர் என திமுக நடத்தியதில் செத்தவர்கள் 90% கல்லூரி மாணவர்களே

எந்த திமுக தலைவனாவது செத்தானா? இல்லை அவன் வாரிசுகள்தான் செத்ததா?

அன்று செத்தவன் குடும்பம் ஒன்றுமில்லாமல் இருக்க திமுக குடும்பம் உச்சத்தில் இருப்பது நீங்கள் அறியாததல்ல, செத்தவன் குடும்பத்து நிலை என்ன என யாருக்காவது தெரியுமா?

சரி இந்திவிரட்டினார்களா என்றால் திமுகவினர் பள்ளிகளே அதை கற்பிக்கின்றன, தமிழை காத்தார்களா என்றால் முக ஸ்டாலினின் பேச்சே சாட்சி

இந்த மண்ணில் திராவிட வலையில் சிக்காத கலாம், அண்ணாதுரை மயில்சாமி, சிவன் போன்றோர் எல்லாம் விஞ்ஞானியானார்கள்

சிக்கியவர்கள் வைகோ நாஞ்சில்சம்பத் என நாசமாய் போனார்கள்

ஈழவிவகாரத்தில் இப்படித்தான் மாணவர்களை திரட்டி புலிகளை ஆதரிக்க வைத்தார்கள், அப்புலி நம் ராணுவம் 1500 பேரை கொன்று அருமை தலைவனையும் கொன்றது

அதன்பின் இவர்கள் சத்தமில்லாமல் இருந்தார்கள், ஆனால் அன்று பாழாய் போன மாணவனின் கல்வியினை யார் திருப்பி கொடுப்பது

ஏன் உங்களை தூண்டுகின்றார்கள்?

உங்களை வசபடுத்துவது எளிது, இன்னொன்று காவல்துறை உங்கள்மேல் கைவைக்க அஞ்சும், வைத்தால் அரசியல் செய்யலாம்

தயவு செய்து இந்த மாயவலையில் சிக்காதீர்கள், இவர்கள் மீன்பிடித்து சந்தையில் விற்பவர்கள், அவர்கள் வலையில் விழுந்துவிடாதீர்கள்.

உங்கள் குடும்பத்தையும் இத்தேசத்தையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு வருங்காலத்தில் உண்டு. உங்கள் குடும்பம் உங்கள்மேல் கொண்ட கனவும் நம்பிக்கையும் எவ்வளவு?

அதை இந்த அற்ப பொய் அரசியலுக்காய் பலிகொடுப்பீர்களா? அது உங்கள் தந்தை தாயினை நீங்களே கொல்லுதலுக்கு சமம்

அந்த கொடிய கூட்டத்தில் அண்ணா என்பவர் கொஞ்சம் நல்லவர், அவர் சொன்னதை உங்களுக்கு சொல்கின்றோம்

“மாணவர்கள் அரசியலை அத்தை மகள் போல சுற்றி சுற்றி வரலாம் ஆனால் தொடகூடாது

உரிய காலம் வரும், பருவம் வரும் அப்பொழுது மேடை வரும் மாலையும் வரும். அதுவரை பார்வையாளனாக இருப்பதே நல்லது

உரக்க சொல்கின்றேன் தம்பி, நன்றாய் படி, யோசி, இந்நாட்டை உற்று பார். பார்வையாளனாய் இரு, படிப்பு முடித்து பட்டம் வாங்குமுன் அரசியலுக்கு வந்துவிடாதே

நான் படிப்பு முடிக்குமுன் களத்துக்கு வந்தால் உருப்பட்டிருப்பேனா? சட்டமேதை அம்பேத்கர் படிப்பு முடிக்காமல் போராட வந்திருந்தால் தாழ்த்தபட்டோர் உரிமை மீண்டிருக்குமா?

படி, அறிவை பெறு , தகுதியினை வளர்த்துகொள், அதன் பின் வா, அறிவுடையவனாய் வா

சிறுபிள்ளை வேளான்மை வீடுவந்து சேராது , கன்றுகுட்டி ஏர் இழுக்க முடியாது

பருவத்தில் பழுக்காமல் பிஞ்சிலே பழுக்க முயன்றால் பழம் யாருக்கும் பலனற்று போய்விடும்”

கேட்க செவியுள்ளவன் கேட்கட்டும்

திமுகவின் தலைவராக எந்த முஸ்லீம் இருந்தான்?

காங்கிரஸின் தலைவராக எந்த இஸ்லாமியன் இருந்தான்?

திமுக காங்கிரஸ் ஆட்சியில் எந்த இஸ்லாமியனுக்கு உச்சபதவியும் அமைச்சரவையும் தரபட்டது என சிந்தித்துவிட்டு அவனவன் களமிறங்கட்டும்

சோற்றுக்கு ஊறுகாயாய் அவர்களை பயன்படுத்தும் குடும்ப கட்சிகள் இவை

கேட்க செவியுள்ளவன் கேட்கட்டும்

பாஜக ஆட்சி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு : உபிஸ்

பாஜக ஆட்சி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு : உபிஸ்

சரி பாஜக ஆட்சி எப்படி வந்தது?

பெருவாரியான மக்கள் வாக்களித்ததால் வந்தது அதுவும் இருமுறை

ஆக தேச ஒற்றுமைக்காகத்தானே அந்த ஆட்சி அமைந்திருக்கின்றது, அது எதற்காக தேர்ந்தெடுக்க்கபட்டதோ அதை சரியாக செய்யும்

காங்கிரஸ் கூட்டணியே ஒற்றுமைக்கு கேடு அதனால்தான் மக்கள் கூப்பில் வைத்திருகின்றார்கள்

மின்சார கார்கள் இந்தியாவிலும் வந்தாயிற்று

முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ ஓடும் என்கின்றது டாட்டா

பெட்ரோலுக்கு மாற்றுவேண்டும் என உலகம் எண்ணெய் வர்த்தகம் சோவியத் ரஷ்யா மற்றும் அரபு நாடுகளிடம் சிக்கிய 1960களிலே சிந்திக்க தொடங்கியது

ஆம் சோவியத்தின் ஆட்டம் வேறுவகை, இஸ்ரேலை முன்னிட்டு அரபு நாடுகள் ஆடிய ஆட்டம் மறுவகை

இதனாலேதான் அரேபியாவில் அமெரிக்கா புகுந்து அவ்வளவு அழிவினை கொண்டுவந்தது

பெட்ரோலை டம்மியாக்காமல் அவர்களை அடக்கமுடியாது என உலகம் மெதுவாக வேறு வழிகளை யோசித்தது அதில் ஒன்றுதான் மின்சார கார்கள்

இதோ இந்தியாவிலும் வந்தாயிற்று

இனி பெட்ரோலை புறக்கணித்து அரபு நாடுகளை முழங்காலில் இடவேண்டும் என்பது 2001லே எடுக்கபட்ட உலகமுடிவு

அதற்கான காட்சிகள் திட்டமிடபட்டு , 2014 வாக்கில் தொழில்நுட்பங்கள் உறுதிசெய்யபட்டன‌

ஹைபிரிட் எனப்படும் பாதி பேட்டரி பாதி பெட்ரோல் கார்கள் வந்தன இப்பொழுது முழு மின்சார காரும் வந்தாயிற்று

இனி பெட்ரோல் கார்கள் வேண்டாம் என மின்சார கார்களுக்கு சில சக்திகள் உத்தரவிட்டதன் விளைவே கார் கம்பெனி தடுமாற்றம், இது உலகெல்லாம் உண்டு

இதோ மின்சார கார் வந்தாயிற்று, இனி வருங்காலத்தில் நமக்கு இறக்குமதி கச்சா எண்ணெய் குறையும் , நம் பணம் மிஞ்சும்

சரி இனி என்னாகும்?

மிகபெரும் மின்சார உற்பத்தி மையம் வேண்டும், அதற்கு அணுவுலைகள் அவசியம்

அவையும் இன்னும் பல மின்சார உற்பத்தி மையங்கள் வேகமாக பெருக்கபட வேண்டும், அதற்கான காரியத்தில் இந்த அரசும் வேகமாக களமிறங்கிவருகின்றது

விரைவில் தீக்குளிக்க பெட்ரோல் இல்லாமல் மின்சாரம் பாய்ச்சித்தான் இனி பைத்தியகார தொண்டர்கள் சாக வேண்டும்

எல்லா தொழிலும் ஒருநாள் மறையும் என்பதற்கு பெட்ரோலிய பரகாசுர தொழிலும் விதிவிலக்கு அல்ல..

அடி ஒன்றே அவர்களுக்கான மொழி

கலவரகாரர்கள் தங்களை இந்தியன் என உணராதவரை இங்கு அமைதி சாத்தியமில்லை,

அடி ஒன்றே அவர்களுக்கான மொழி

இல்லை வேறுமாதிரி உணரவைக்கலாம்

இஸ்லாமியனை கப்பலில் ஏற்றி துருக்கி, சவுதி என இஸ்லாமிய நாட்டுக்கும், கிறிஸ்தவனை பிரிட்டன்னுக்கும் இத்தாலிக்கும் அனுப்பலாம்

அங்கு நீ இஸ்லாம் அல்ல, கிறிஸ்தவன் அல்ல மாறாக “இந்தியன் நீ இந்தியன்” என சொல்லி சொல்லி அடித்துவிரட்டுவான் அல்லவா? அப்பொழுது ஞானம் வரும் உண்மை விளங்கும்

வெகுதொலைவு இல்லாவிட்டாலும் அருகிருக்கும் பர்மா, இலங்கைக்காவது அனுப்பி வைக்கலாம், நொடியில் ஞானம் பிறக்கும்

வார்த்தையும் சட்டமும் விளக்கமுடியாததை அனுபவம் விளக்கிவிடும்

இவர்களுக்கு அனுபவ கிசிச்சைதான் சரி

முதல் ஆளாக சர்வாதிகாரியினை ஆளில்லா விமானத்திலும், ராகுல் கேந்தியினை ட்ரோனிலும் அனுப்பி சோதிக்கலாம்

சுயநல அரசியல் கோஷ்டிகள்

சோனியா பிரதமராகும் பொழுது அந்நியர் பிரதமராவதை அனுமதிக்கமாட்டோம் என சொல்லி தனிகட்சி கண்ட மம்தாவும், சரத்பவாரும் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதுதான் காமெடி

அந்நியரை பிரதமராக விடமாட்டார்களாம், ஆனால் குடியுரிமை கொடுத்து வாக்களிக்க சொல்வார்களாம்

சுயநல அரசியல் கோஷ்டிகளை அடையாளம் காட்டும் நேரமிது