கருணாநிதிக்கு சகலமும் அவர்தானே

திமுக அருந்ததிய மக்களுக்கு பெரும் முன்னேற்ற திட்டங்களை செய்தது, மனித கழிவினை மனிதனே அகற்றும் கொடுமைக்கு பாடுபட்டது, இப்பொழுதும் மேட்டுபாளையத்துக்கு திமுகவே பெரும் குரல் கொடுக்கின்றது : உபிஸ்

“அருந்ததிய சமூகம் உய்ய திமுக அரும்பாடு பட்டதா?

ஆமாம், மனித கழிவினை மனிதனே அகற்றுவது பெரும் கொடுமை.

கருணாநிதியுடன் கடைசிகாலத்தில் இருந்தது யார்?

நித்யா..

அவர் யார்?

அருந்ததிய சமூகத்தவர்

கருணாநிதிக்கு சகலமும் அவர்தானே

ஆமாம், எடுத்து போட்டது வரை அவர்தான்

சரி நீ கிளம்பு..”

இனிதான் இருக்கின்றது விஷயம்

தூத்துகுடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கபடும் என மத்திய அரசு சொல்லிவிட்டது, இது நல்ல அறிவிப்பு என்றாலும் இனிதான் இருக்கின்றது விஷயம்

இந்த திட்டம் வெறும் 1 ஏக்கர் நிலத்தில் அமையபோவதில்லை மாறாக 2400 ஏக்கர் நிலம் வேண்டும் , இவ்வளவு பெரும் அரசு நிலம் அப்பக்கம் கிடையாது, நிச்சயம் தனியார் நிலத்தில் கை வைக்க வேண்டும்

விடுவார்களா கோஷ்டிகள்? எம்.பி வேறு அக்கா கனிமொழி

வாழ்வாதாரம் கெடுகின்றது, மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு ராக்கெட் தேவையா? நிலத்தை பிடுங்கும் காவிகள், அமித்ஷா அராஜகம் என கிளம்புவார்கள்

உண்மையில் குலசேகரபட்டினம் ஏவுதளம் அமைக்க மிக அருமையான இடம், அதிலிருந்து தொட்டுவிடும் தூரத்தில் இந்துமாக்கடல் வருவதால் மிக மிக அருமையான தேர்வு

இந்த கனவும் விண்வெளிதுறைக்கு 1970களிலே இருந்தது, ஆனால் காலம் கனியவில்லை

இப்பொழுது மகேந்திரகிரி ராக்கெட் எரிபொருள் நிலையத்தில் இருந்து அருகாமையில் இருப்பதாலும் இன்னும் பல காரணங்களாலும் குலசேகரபட்டினம் நோக்கி வருகின்றார்கள், பழனிச்சாமி அரசு இருக்கும் பொழுதே காரியத்தை முடித்துவிட மத்திய அரசு திட்டமிடுகின்றது

2400 ஏக்கர் எனும் பொழுது நிச்சயம் பலரின் நிலம் கைகொள்ளபடும் அதில் தாதுமணல் ஏரியாவும் உண்டு

விவகாரம் நிச்சயம் பெரிதாக வெடிக்கலாம், பெரும் போராட்டம் நடக்கலாம் ஆனால் இந்த மத்திய அரசுக்கு தமிழக போராட்டத்தை கட்டுபடுத்தும் வித்தை கைவிரலில் இருப்பதால் என்ன நடக்கின்றது என்பதை விரைவில் பார்க்கலாம்

சிலருக்கு கடைசி காலம் நிம்மதியாய் இராது

செட்டிநாட்டு செட்டிகளுக்கு சில சாபங்கள் உண்டு, பலருக்கு குழந்தை இருக்காது, சிலருக்கு கடைசி காலம் நிம்மதியாய் இராதுஏகபட்ட உதாரணங்கள் அங்கு உண்டு எனினும் கண்முன் கண்ட சாட்சி எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார்மிகபெரும் தனவானாக இருந்தும் இறுதிகாலங்களில் வளர்ப்புமகனால் அவர் படாதபாடுபட்டு நிம்மதியின்றி தவித்தார்ப.சிதம்பரத்துக்கும் அந்த செட்டிநாட்டு சாபம் தொட்டுவிட்டதுதான் மகா சோகம்..

தமிழக பாஜகவுக்கு அப்படி என்ன பயம் இருக்கின்றது?

ஹமாஸ், அல் கய்தா மற்றும் இன்னபிற இயக்கங்கள் தங்கள் தலைவனின் பெயரை வெளிபடையாக அறிவிக்காது, காரணம் அப்படி அறிவித்தால் இஸ்ரேல் தொலைத்துகட்டிவிடும்

ஆனால் அவர்கள் அப்படி ரகசியம் காத்தாலும் இஸ்ரேல் மோப்பம் பிடித்து தொலைத்துவிடும் என்பது வேறுவிஷயம்

சரி அவர்கள் தலைவனை அறிவிக்க தயங்குவதில் அர்த்தமிருக்கின்றது, தமிழக பாஜகவுக்கு அப்படி என்ன பயம் இருக்கின்றது?

தலைவரை அறிவித்தால் அடுத்தநொடி அவர்களுக்குள்ளே அடித்து கலைந்துவிடுவார்கள் என்ற அச்சமாக இருக்குமோ?

அவர் வாழ்வினை படமாக்குகின்றேன் என வருகின்றானா?

ஜெயலலிதா இறந்து இரு வருடமாகின்றது, அதற்குள் அவர் கதையினை படமாகவும் வெப் சீரியலாகவும் ஆளாளுக்கு எடுத்துகொண்டிருக்கின்றார்கள், மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வரலாம் போலிருக்கின்றது

அதாவது ஜெயாவின் கதைக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கும் என நம்புகின்றார்கள்

கருணாநிதி என்றொருவரும் இருந்தார், கடைசிவரை சினிமாவினை பிரியாமலும் இருந்தார். சினிமாகாரர்களுக்கு அவர் செய்த சலுகை ஏராளம்

எவனாவது ஒரு பயல் அவர் வாழ்வினை படமாக்குகின்றேன் என வருகின்றானா?

அட அவர் குடும்ப நிறுவணங்கள் எவ்வளவோ படம் எடுக்கின்றன அவர் கதையினை பேரன்களாவது படமாக்க நினைகின்றார்களா?

அவர் கதையினை படமாக்கினால் சல்லி பைசா வசூலாகாது என தெரிந்திருக்கும் போல

அவனுகளும் அவனுக ஆராய்ச்சியும்

காவேரி பூம்பட்டினம் கடலில் மூழ்கி செட்டியார்கள் செட்டிநாடு வந்த கதைக்கும், இந்துமா கடலில் பழைய மதுரை மூழ்கிய கதைக்கும் வித்தியாசம் தெரியாத பயல் எல்லாம் தமிழருக்கு மீம்ஸ் போட்டு போதிக்க வந்துவிட்டான்

சந்தேகமே இல்லை இதெல்லாம் தும்பிகள் அட்டகாசமாக மட்டுமே இருகும்

மதுரை கடலில் மூழ்கியதால் வெகு தொலைவுக்கு சென்றுவிட்டார்களாம்,

எவ்வளவு தொலைவு தெரியுமா வெறும் 80 கிமீட்டர்

அவனுகளும் அவனுக ஆராய்ச்சியும்

அந்த வீடு அப்படியேதான் இருக்கும்

“நான் எனக்காக ஒன்றையும் சேர்க்காதவன், தமிழர் நல்வாழ்வு ஒன்றிற்காக எல்லாம் இழந்தவன், என் ஒரே சொத்தான இந்த வீட்டையும் என் காலத்துக்கு பின் மருத்துவமனைக்கு எழுது வைத்துவிட்டேன்..” என அடிக்கடி சொன்னார் கருணாநிதி

இன்று அவர் இல்லை ஆனால் அந்த வீடு அப்படியே இருக்கின்றது

கருணாநிதி திமுகவினரின் நெஞ்சத்தில் வாழ்வதால் அவர் சாகவில்லை, சாகவும் மாட்டார்.

அதனால் அந்த வீடு அப்படியேதான் இருக்கும்