இந்திய எதிர்ப்புகாக ஊதிபெரிதாக்கட்ட ஒரு பிம்பம்

திருச்செந்தூர் கோவிலில் மற்றசாதி நுழைய தடை இருந்தது அதை பெரியாரும் அவரின் இயக்கமும் போராடி நீக்கிற்று என எவனாவது கிளம்பினால் அவனை திருசெந்தூர் ஆலய கோவில் தூணில் கட்டி வைத்து அடிக்க சங்கம் தீர்மானித்திருக்கின்றது

ஆம், அப்படி ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது

திருசெந்தூர் ஆலயம் மிக மிக பழமையானது முழுக்க பாண்டிய வம்சத்தாரிடமே அது இருந்தது, அவர்கள் காலத்துக்கு பின் நாயக்க மன்னர்கள் அதை வணங்கினர்

அந்த மங்கம்மாளின் புகழ்பெற்ற சாலைகள் கூட எல்லாமும் திருசெந்தூர் நோக்கியே அமைக்கபட்டன‌

அங்கு எல்லா சாதியும் எல்லா இனமும் எக்காலமும் நுழைய வழி இருந்தது, இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டுமானால் 18ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி பக்கம் நாடார் இனத்தவருக்கு மேலாடை அணிய அனுமதி இல்லை

அப்பொழுதுதான் அய்யா வைகுண்டர் அவதரித்தார், சாதாரண முத்துகுட்டியாக இருந்த அவர் முழு ஞானம் அடைந்து வைகுண்டராக மாறியது திருசெந்தூர் ஆலயத்திலே

தன்னை நாராயணின் அவதாரமாக மக்கள் கருதினாலும் அவர் திருசெந்தூர் கோவிலின் அடியவராக இருந்தார், அந்த நாடாரை யார் தடுத்தார்கள்?

ஆக அந்த இந்து அவதாரமே கன்னியாகுமரியில் தோள்சீலை போராட்டத்தை வென்று கொடுத்தது, அப்பொழுது பெரியாரின் தாத்தா கூட பிறக்கவில்லை

திருசெந்தூர் ஆலயத்திலோ அதற்கு அடுத்த பிரதான ஆலயமான வள்ளியூர் முருகன் கோவிலிலோ சாதிய வேறுபாடுகள் இருந்ததில்லை, இரண்டுமே பாண்டிய மன்னனின் நேரடி கட்டுபாட்டில் இருந்தவை

மதுரையில் வெள்ளையன் காலத்தில் மற்ற சாதிகள் நுழைய குழப்பம் இருந்தது அதை மதுரை வைத்தியநாத அய்யர் எனும் பிராமணனும் பசும்பொன் தேவருமே உடைத்து எல்லா மக்களையும் அழைத்து சென்றார்கள், பெரியார் அந்த பக்கமே வரவில்லை

நாமும் கவனிக்கின்றோம், உடன்கட்டை ஏறுதலை தடுத்த ராஜாராம் மோகன் ராய் ஒரு இந்து

கன்னட சீர்திருத்தவாதி பசவய்யா ஒரு இந்து, வங்காள சீர்திருத்தவாதி ஒரு இந்து

ஆக இந்து மத சீர்திருத்தவாதிகள் அங்கேயே உருவாகி கடவுள் உண்டு எனும் கொள்கையில் இருந்து விலகாமல் காலத்துக்கு ஏற்ற மாறுதல்களை வழங்கிகொண்டே இருந்தனர்

இந்து கல்லூரிகளும் கல்வி நிலையமும் பெருகிகொண்டேதான் இருந்தன‌

இதில் பெரியார் வந்துதான் சீர்படுத்தினார் கிழித்தார் என்றால் அதைவிட மகா பெரும் பொய் இருக்கவே முடியாது

திராவிட கழகம் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தது, எந்த தேர்தலில் அது ஆட்சியினை பிடித்தது?

இல்லை, ஒரு காலமும் இல்லை.

சும்மா திண்ணையில் உட்கார்ந்து வெட்டிகதை பேசும் இயக்கமாகவும், பிராமணனை வம்புக்கு இழுக்கும் இயக்கமாகவும் அது இருந்தது, உருப்படியாக ஒரு புல்லையும் புடுங்கவில்லை

அதிலிருந்து திமுக பிரிந்தபின்னும் இங்கு வரவேற்பில்லை, வரவேற்பு எம்ஜி ராம்சந்திரனுக்கு இருந்தது அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வரமுயன்றார்கள்

அவர்கள் 1960ல் தடுமாறிகொண்டிருக்க அந்நிய சக்திகளின் ஆதரவு கிடைத்தது, இந்திய எதிர்ப்பு சித்தாங்களை உருவாக்கும் சில தொடர்புகள் அப்பொழுது கிடைத்தன, அவற்றுக்கு காமராஜர் எதிரியாய் இருந்தார்

அப்பொழுது ராம்சந்தர் எனும் சினிமா முகத்தானை காட்டி ஆட்சிக்கும் வந்தனர், அதன் பின் அவர்கள் எழுதிய பெரும் பொய்மூட்டை வரலாறுதான் பெரியாரும் அவர் புரட்சியும்

மற்றபடி ஒன்றுமே இல்லை, பெரியார் என்பவர் இங்கு 1960க்கு பின் இந்திய எதிர்ப்புகாக ஊதிபெரிதாக்கட்ட ஒரு பிம்பம், அதை தவிர ஒன்றுமில்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s