நித்திசாமி தன் உச்சகட்ட திருவிளையாடலை ஆடிகொண்டிருக்கின்றார்

நித்திசாமி தன் உச்சகட்ட திருவிளையாடலை ஆடிகொண்டிருக்கின்றார்

அன்னார் நீண்டகாலமாகவே திட்டமிட்டு தனக்கொரு தேசம் வேண்டுமென ஆசைபட்டிருக்கின்றார், இந்தியாவில் சாத்தியமில்லை, இந்தோனேஷியா தீவுகள் என்றால் இஸ்லாமிய நாடு. இதனால் ஈக்குவெடார் நாட்டை குறிவைத்திருக்கின்றார் சாமி

5 ஆண்டுகளுக்கு முன்பே மெல்ல அங்கு ஊடுருவி தங்கத்தை கடத்தி ஈக்குவெடார் நாட்டிடம் அந்த தீவை பெற்று பல கட்டுமானங்களை செய்திருக்கின்றார், சாமி கடத்தி சென்ற தங்கம் மட்டும் 6 ஆயிரம் கிலோ

அமெரிக்காவிலும் சாமிக்கு சில நிலையங்கள் உண்டு அவற்றின் தலமையகமாக ஈக்வெடார் தீவினை நிர்மானித்திருக்கின்றார் சாமி.

இப்பொழுது தீவு அவரின் கட்டுபாட்டில் இருக்கின்றது அதை கைலாச நாடு என அறிவித்து தானே அரசன் எனவும் சொல்லிகொள்கின்றார்,

மதம் இந்துமதமாம், அரசன் இவராம், தனி கொடி , சின்னம் இன்னும் அணி, தேர், புரவி எல்லாம் அறிவித்துகொண்டிருக்கின்றார்

குடியுரிமையும் கொடுக்கின்றாராம் பக்த கோடிகள் முண்டி அடிக்கின்றன‌

நாடு உருவாவது சிக்கலான விஷயம், இது என் நாடு என ஒருவன் சொல்லிகொண்டவுடன் அது சாத்தியம் என்றால் ஈழமும் இன்னும் பல நாடும் அன்றே உருவாகியிருக்கும், தமிழகத்திலே ஏகபட்ட நாடுகள் ஏற்பட்டிருக்கும்

நாடு என்றால் உலக நாடுகள் அங்கிகரிக்க வேண்டும், ஐ.நா சபை அதை ஒரு நாடாக ஏற்று உலக நாடுகள் ஏற்று ஏகபட்ட விஷயங்கள் உண்டு

இதனால் சாமி சும்மா விளையாட்டு காட்டிகொண்டிருக்கலாம் மிஞ்சி போனால் ஈக்வெடாரின் சுயாட்சி பகுதி என்ற அளவில் இருக்கலாம்

ஆனால் சாமியின் அடிப்பொடிகள் ஒவ்வொரு நாட்டிலும் தனிநாடு அடைய எங்களுக்கு ஆதரவளியுங்கள் என ஓவ்வொரு நாட்டின் அதிகார பீடங்களிடமும் தொங்கிகொண்டிருக்கின்றன, பகவானின் கோபத்தை தாங்கமாட்டீர்கள் என மிரட்டலும் நடக்கின்றதாம்.

இப்பொழுது இந்தியா தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது, சாமி மேல் ஏகபட்ட வழக்குகள் உண்டு அது போக 6 டன் தங்கத்தை கொண்டு சென்றிருக்கின்றார் என்பதால் கடும் கோபத்தில் இருக்கின்றது

ஒரு இந்திய சாமி தனியாக தீவு வாங்கி தனிநாடு அழிச்சாட்டியம் செய்கின்றான் இந்திய அரசும் ஒத்துழைக்கின்றதா என கடும் விமர்சனங்கள் எழ இந்திய அரசு அவமானத்தில் கண்கள் சிவக்கின்றது

சமீபகால சர்ச்சைகளுக்கு காரணம் இதுதான், இந்திய அரசும் விடுவதாக இல்லை

சாமி போப்பாண்டவரின் வாடிகன் போல தனக்கொரு தனிநாட்டை உருவாக்கி கொண்டதாக சொல்லிகொள்கின்றது இனி இந்தியா வராது

பல்லாயிரம் கோடிகளை இவர் எப்படி திரட்டினார்? இந்தியாவில் இருந்து உரிய ஆவணம் அனுமதியின்றி எப்படி கடத்தினார் என மகா ஆத்திரத்தில் இருக்கின்றது இந்திய மேலிடம்

நாம் அன்றே சொன்னோம், சாமியின் பாதை ஜப்பானின் ஓம் ஷின்காரியோ அமைப்பின் அழிச்சாட்டியம் போல் இருக்கின்றது, பெரும் கூட்டம் சேர்ந்த துறவிகளுக்கு நாடு ஆளும் ஆசை வரும் , ஜப்பானில் அப்படி ஒரு சாமி வந்து பல்லாயிரம் பேரை கொன்று பின் ஜப்பான் அரசால் கொல்லபட்டது என சொன்னோம்

ஒஷோ இதே காரியத்தை செய்தார், செக்ஸ் உட்பட பல விஷயங்களை வியாபாரமாக்கிய ஓஷோ அமெரிக்காவுக்கு ஓடினார், அங்கு ஒரு தனி சுயாட்சி பகுதியினை தனக்காக உருவாக்க முனைந்தார்

மக்கள் ஆதரித்தால் அமெரிக்காவில் எதுவும் சாத்தியம் என்பதால் என்னென்னவோ செய்தார், வாக்களரை வசியம் செய்ய கொடுக்கபட்ட மருந்தில் ஆயிரம் பேர் செத்தனர், அமெரிக்கா அவரை தேட தொடங்க இந்தியா தப்பி இங்கேயே செத்தார்

அவரின் ஆசிரமத்தை மூடி சீல் வைத்தது அமெரிக்கா

இந்த வரிசையில் நித்திசாமி ஈக்வெடார் நாட்டு தீவில் அழிச்சாட்டியத்தை ஆரம்பித்திருக்கின்றார், இன்னும் கொஞ்சகாலம் ஆடும் நித்தி அதன் பின் படவேண்டியதை பட்டு அதன் பின்பே முழு ஞானம் அடைவார்

நித்தியின் தீவு நாட்டுக்கு செல்ல இதோ இந்த சுட்டியில்தான் https://kailaasa.org பக்கம் இருக்கின்றது, குடியுரிமை உடனே சாமி கொடுத்துவிடும்

ஆனால் விசா எப்படி? என்றெல்லாம் கேட்க கூடாது, அநேகமாக ஈக்வெடாரில் இறங்கினால் சாமியின் அடிபொடிகள் அழைத்து செல்லலாம். இந்தியாவுக்கு மிகபெரும் தலைவலியாக சாமி மாறியிருக்கும் காலமிது

நிச்சயம் உலகம் அங்கீகரிக்கும் நாடாக எல்லாம் அது மாறாது, அதெல்லாம் சாத்தியமே இல்லை

மாறாக ஈக்வெடார்காரன் தலையில் மிளகாய் அரைத்து “ஒரு ஓரத்தில நாடக கொட்டகை நடத்துறொம் சாமி, காசு சரியா கொடுத்துறோமுங்க” என சொல்லிவிட்டு இதோ பகவான் இதோ கடவுள் என கூட்டத்திடம் சம்பாதிக்கலாம்

இது பெரும் சர்வதேச சிக்கலை ஏற்படுத்தலாம், சாமி விக்ரம் பட சத்தியராஜ் போல ஈக்வெடாரை ஆட்டி வைக்கலாம் அல்லது ஈக்வெடார் நாடு அவரை பிடித்து நாடு கடத்தலாம் எனினும் இப்போதைக்கு இது மகா குழப்பம்

இந்துமதம் அரசனையும் துறவியாக்கும், முதன் முறையாக ஒரு துறவி அரசன் என சொல்லிகொள்கின்றான், இது நிச்சயம் இந்து பாரம்பரியமாக இருக்கமுடியாது

ஆக ரஞ்சிதா ஒரு நாட்டிற்கு ராணியாகிவிட்டார் என்பதை உலகுக்கு சொல்லிவிட்டார் சாமி..

இப்போதைக்கு 27 பேரோடு “உலகம் எனது கைகளிலே.. உருளும் பணமும் பைகளிலே.. யோசித்து பார்த்தால் நானே ராஜா.. ஆண்டவன் படைச்சான்..சந்நியாசி ஆக்கினான்.. அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்..”என தன் மந்தகாச புன்னகையினை வீசியபடி பாடிகொண்டிருக்கின்றார் நித்திசாமி..

சாமி அங்கே சென்றுவிட்டார் அவரின் சீட கோடிகள் தமிழ்நாட்டில் இருந்து எப்படி குடியேற போகின்றார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s