ஈழம் ஏன் நாசமாய் போனது

ஈழம் ஏன் நாசமாய் போனது என்பதற்கான விடை இனியும் எல்லோருக்கும் கிடைக்காமல் இருக்காது

அங்கும் திராவிட சித்தாந்தம் நுழைந்திருக்கின்றது, பின் எங்கிருந்து உருப்படும்? உருப்படாமல்தான் போகும்

அதை அடித்துவிரட்டிய இலங்கைக்கே இவ்வளவு அழிவு என்றால், வைத்து வணங்கும் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு அழிவு வந்திருக்கும்?

சரி, இலங்கையில் ஏது ஆரிய பார்ப்பானியம்?

சிங்களன் பார்ப்பான் இல்லை இந்துமதமும் இல்லை அவன் ஆரியனுமில்லை

பின்பு ஏன் அங்கு திராவிட கழகம்?

இலங்கை என்பது தென்னாட்டு பூமி சாயல் அதாவது திராவிட பூமி, அங்கு யாரை எதிர்த்து திராவிட கழகம்? திராவிடனை திராவிடனே எதிர்த்து ஒரு கழகமா?

ஏதோ திராவிடம் என்பது “Jack Daniel” சரக்கு போல செல்லும் இடமெல்லாம் அதை கொண்டு சென்று போதை ஏற்றி மகிழ்வதில் சிலருக்கு ஒரு போதை சுகம் இருக்கும் போலிருக்கின்றது

போதையில் வம்பிழுத்தால் என்னாகும்? அடிதான் விழும்

சட்டீஸ்கரில் நடந்த விஷயம் தெரியுமா?

சட்டீஸ்கரில் விடுமுறை கிடைக்கா எல்லை பாதுகாப்புபடை வீரன் 5 பேரை சுட்டுகொன்று பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றான்

சொந்தநாட்டினை பாதுகாக்க சென்று சொந்தநாட்டுகாரனாலே சுட்டுகொல்லபட்டிருக்கின்றனர் அந்த வீரர்கள்

வீரர்களின் மனநலனையும் காக்கும் பொறுப்பு உண்டு என்பது தெரிகின்றது, விஷயம் பெரிதாகின்றது

இனி மேனேஜர் லீவ் கொடுக்கவில்லை என்றால் “சட்டீஸ்கரில் நடந்த விஷயம் தெரியுமா?” என உருமினால் போதும் உடனே தாரளாமாக விடுமுறை கிடைத்துவிடும்

இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது

இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது. கோத்தபாய இந்தியா வந்ததை பாகிஸ்தான் விரும்பவில்லை அல்லது இலங்கை தன் ஆட்டத்தை ரகசியமாக ஆடுகின்றது

நேற்று இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் அமைச்சர் கோத்தபாயாவினை பார்த்து “நாம் எப்படி எல்லாம் பழகினோம், ஆனால் நீர் மோடியோடு சப்பாத்தி சாப்பிட போயிருக்கின்றீர், எம்மோடு டீ குடுக்க வரகூடாதா” என்பது போல் அழைப்பு விடுத்திருக்கின்றார்

ஆம் பாகிஸ்தான் கோத்தபாயாவினை பாகிஸ்தானுக்கு வர அழைக்கின்றது, கோத்தபாய உடனே ஓடினால் இது அவர்களின் கூட்டு சதி என பொருள், தயங்கினால் மோடி முறைத்துகொண்டிருக்கின்றார் என பொருள்

பார்க்கலாம், கோத்தபாய இருவரில் யாரை கடுப்பேற்ற போகின்றார் என்பது விரைவில் தெரியும்

நித்திக்கான நேரம்

நாம் ஆன்மீகத்தையும் யோகிகளையும் பரமஹம்சர்களையும் சுவாமிகளையும் மகான்களையும் நோக்கி பார்த்தவர்கள் என்ற வகையில் சொல்கின்றோம், மகான்களும் யோகிகளும் அதிசய வரம் சில பெற்றிருப்பார்கள்

கடுமையான விரதத்தாலும் தவத்தாலும் சில அதீத வலிமையினை பெறுவார்கள், அந்த சக்தி மூலம் பல வியத்தகு காரியங்களை ஆற்றமுடியும்

இது ஆன்மீகத்தின் மிக சிறிய படிநிலை இதற்கு மேல் எவ்வளவோ உண்டு, இதனால்தான் முற்றிலும் உணர்ந்தவர்கள் பஞ்ச கோலத்தில் பரதேசியாய் அலைவார்கள், ஆம் உண்மை தெரிந்துவிட்டால் நாம் வெறும் தூசு என்பது புரியும்

அதுதான் முற்றும் உணர்ந்த பரிபூரண நிலை, அவர்கள் ஒதுங்கி இருப்பார்கள், யாரிடமும் பேசவும் மாட்டார்கள், ஆனால் ஒரு பார்வையிலே மகா அற்புதம் நிகழ்த்த அவர்களால் முடியும்

ஆனால் பந்தி முடிந்த வீடுபோல் ஒரு நிறைவான அமைதியில் இருப்பார்கள், வெந்த பதார்த்தம் போல ஒரு சலனமற்ற நிலையில் இருப்பார்கள்

அம்மாதிரியான மகான்களை பார்ப்பது மகா மகா அபூர்வம்

நித்தி போன்ற சாமிகள் உலகில் ஏராளம் உண்டு. அவர்கள் அற்புதம் செய்ய கூடியவர்களே, நோய்களை தீர்ப்பவர்களே, அதற்கு மேலும் ஏகபட்ட வித்தைகள் அவர்களிடம் உண்டு

ஆனால் உண்மை ஞானம் என்பது அதைவிட பலகோடி மடங்கு மேலானது

இந்த பரிபூரண ஞானமில்லாதவர்கள், நித்திதவிர வேறு சாமியினையோ அவர்களின் ஞான வாதங்களை சித்து விளையாட்டுக்களை, மகா ஞான பார்வையின் வீரியத்தினை அறியாதவர்கள் நித்தியினை சுற்றி ஆடிபாடி கொண்டிருக்கின்றார்கள்

நித்திசாமியும் தன் சீடகோடிகளை விடாமல் வைத்துகொண்டிருக்கின்றார்

அவர்கள் பூனையினை புலி என்றும், உலக்கையினை யானையின் கால் என்றும் நம்பிகொண்டிருக்க்கின்றார்கள், சுவாமியும் ஆம் நான் யானை மட்டுமல்ல டைனோசர் என சொல்லி அவர்களை நம்ப வைத்து கொண்டிருக்கின்றார்

நம்ப வைப்பது அவர் திறமை, நம்புவது அவர்கள் விருப்பம்

அவரை விட பெரும் பெரும் ஞானமும் தவமும் பெற்றோர் இந்தியாவில் உண்டு ஆனால் அவர்கள் குரல் கூட வெளியில் கேட்காது, நிறைகுடம் தளும்பாது

யாருக்கு தன்னை வெளிபடுத்தவேண்டுமோ அவர்களுக்கு மிக சரியாக தன்னை வெளிபடுத்திவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்

நித்தி சில யோக சக்திகள் பெற்றதால் ஞானியாகவோ மகானாகவோ கடவுளாகவோ ஆகிவிட மாட்டார்

வரம் கொடுத்த எல்லோரையும் ஆட விட்டு அடக்குவதுதான் இந்து தர்மமும் புராணமும் சொல்லும் பாலபாடம்

இது நித்திக்கான நேரம், அவர் ஆடட்டும், ஆண்டவனுக்கான நேரம் வரும்பொழுது உண்மை விளங்கும்

ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கே அஞ்சினால் சர்வாதிகாரி ஆவது எப்படி?

மோடி எதிர்ப்பு என காங்கிரஸ்டன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்ததை விடுத்து வேறு எல்லா தேர்தலுக்கும் திமுக அஞ்சுவது தெரிகின்றது

இடைதேர்தலில் இதே கூத்தை செய்தார்கள், இன்னும் சில இடங்களில் செய்தார்கள்

இப்பொழுது உள்ளாட்சி தேர்தலுக்கும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், தமிழ்நாட்டில் எடப்பாடி தேர்தல் நடத்தமாட்டார் என சவால்விடுவதும், தேர்தல் அறிவிக்கபட்டால் நீதிமன்றம் ஓடுவதும் திமுகவின் முரண்பட்ட இரட்டை நிலை..

ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கே அஞ்சினால் சர்வாதிகாரி ஆவது எப்படி?

பச்சை தமிழன் உலகிலே முதன் முறையாக தனி நாடு அடைந்திருக்கின்றான்

ஒரு திராவிட தமிழன், அதுவும் ஒரு பச்சை தமிழன் உலகிலே முதன் முறையாக தனி நாடு அடைந்திருக்கின்றான்.

அதுவும் கத்தியின்றி ரத்தமின்றி தங்க கட்டியால் சாதித்திருக்கின்றான்

ஈரோட்டு ராம்சாமி, காஞ்சிபுரம் அண்ணாதுரை, திருகுவளை கருணாநிதி, வெல்வெட்டிதுறை பிரபாகரனால் முடியாதெல்லாம் அவனால் முடிந்திருக்கின்றது

அந்த பச்சை தமிழன் ஒரு காவி என்பதால் இப்பாவி சமூகம் அவனை பாராட்டாமல் இருப்பது வரலாற்று சோகம்..

திமுக செய்த தில்லாலங்கடி

திமுக மோசடி என்றால் என்ன என்பதை விளக்க இந்த படம் ஒன்றே சாட்சி

இந்திராவினை வணங்குகின்றார் காமராஜர் அங்கு நித்திசாமி ஸ்டைலில் மந்தகாச புன்னகையினை வீசியபடி குறுக்கே ஓடிவருகின்றார் கருணாநிதி இது முதல்படம்

அடுத்து கருணாநிதியினை குனிந்து வணங்கினார் காமராஜர் என அடிப்பொடிகள் அடுத்த படத்தை வெளியிடுகின்றன இது இரண்டாம் படம்

அதுவும் கேட்டால் சும்மா வணங்கவில்லையாம் “அந்த ஆளு 10 கிருஷ்ணனுக்கு சமம்ணே, அவரமாதிரி ஒரு ஆற்றல்மிக்கவன் 1000 வருஷத்துக்கு ஒருதடவைதான் வருவாருண்ணேண், தமிழருக்கு அவரவிட்டால் நாதியில்லண்ணேன்” என சொல்லி சொல்லி வணங்கினாராம் காமராஜர் என கண்கள் பனிக்க சொல்வார்கள்

திமுக செய்த தில்லாலங்கடி வேலைகள் இம்மாதிரியானவை..