ஏன் இப்படி இழுக்கின்றார்கள்?

தமிழ்நாட்டில் மிக சாதாரண விஷயத்தை அதாவது சன்னிலியோன் என்றால் ஆபாச வீடியோக்காரி, ஆட்டோ சங்கர் என்றால் கொலைகாரன் அப்படி ஈரோட்டு ராம்சாமி என்றால் இந்து கடவுளை அடித்திருப்பார் என கடந்து செல்லவேண்டிய இயல்பான விஷயத்தை ஏன் இப்படி இழுக்கின்றார்கள் பத்திரிகை நிறைய அதையே ஏன் வருமாறு பார்க்கின்றார்கள் என்றால் விஷயம் வேறுமாதிரியானது

இதோடு தஞ்சாவூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு என இன்னும் அழுத்தமாக தஞ்சாவூர் கோவிலையே பிரதானபடுத்தி தஞ்சையின் இன்னும் சில செய்திகளை மறைக்கின்றார்கள் என்றால் அதிலும் விஷயம் இல்லாமல் இல்லை

ஆம், வழக்கம் போல மத்திய அரசு செய்யும் மிக முக்கியமான விஷயத்தினை மறைக்கின்றார்கள், தமிழக மக்கள் பாஜக அரசின் முக்கிய திட்டத்தை செயல்படுத்துவதை தெரிந்து கொள்ள கூடாது என விரும்புகின்றார்கள்

யார் விரும்புகின்றார்கள் என்றால் தமிழ்நாடு என்றும் திராவிட மயக்கத்தில் இருக்க வேண்டும் என நினைக்கும் திமுக, அதிமுக இன்னபிற கோஷ்டிகளே, இதன் பின்னணியில் சில வெளிநாட்டு உத்தரவும் இருக்கலாம் காரணம் திமுக தலமை சொந்தமாக யோசித்து தஞ்சாவூர் கோவிலை சீண்டியிருக்காது

ஆம் மத்திய அரசு தஞ்சாவூர் விமானபடை தளத்தை மிக உயரத்துக்கு எடுத்து செல்கின்றது, அது உலகின் மிக பரபரப்பு செய்தியாகிவிட்டது

இந்திய விமானபடையின் மிகபெரும் பலம் அந்தமான், அங்கிருந்து ஆசியா முழுமையும் கட்டுபடுத்தும் படி விமானமும் ஏவுகனையும் இயக்கலாம்

அதன் அடுத்த இடமாக தஞ்சாவூரை பிரமோட் செய்துவிட்டது மத்திய அரசு, உலக அரங்கில் தஞ்சை விமான நிலையம் இடம் பிடித்துவிட்டது பாகிஸ்தான் முதல் இஸ்ரெல் அமெரிக்கா வரை தஞ்சாவூரை நோக்க தொடங்கிவிட்டன‌

ஆம் அப்படித்தான் சுகோய் விமானத்தை நிறுத்தி அதற்கு பெயரும் இட்டிருகின்றார்கள் , தஞ்சை விமான நிலைய பெயர் என்ன தெரியுமா?

புலிசுறா

ஆம் தமிழனின் புலிகொடி பறந்த இடத்தில் சோழரின் பாரமப்ரிய புலியினை சுமந்து புலிசுறா என பெயரிட்டிருக்கின்றது மத்திய அரசு

இத்தோடு சூலூருக்கு அடுத்து தஞ்சையில் தேஜஸ் விமானத்தியும் நிறுத்த போகின்றது

இன்னமும் அடுத்தவருடம் ரபேலும் வரலாம் என்கின்றார்கள், இதை நாம் முன்பே சொல்லியிருந்தோம்

ஆக மிகபெரும் ராணுவவிமான தளமாக தஞ்சை உருவெடுத்துகொண்டிருக்கின்றது, இதனால் பாதுகாப்பு ஒருபக்கம் வலுபடுத்தபடும், தஞ்சை பக்கம் மத்திய அரசு உலாவினால் ஏகபட்ட நலன்கள் இங்கு வரும்

காராஜர் காலத்துக்கு பின் இம்மாதிரியான காட்சிகள் நடக்கின்றன, இந்திய விமானபடை ஒருவித வேகத்தில் உள்ளது, வாஜ்பாய் காலத்துக்கு பின்பு 10 வருட காலம் விமானபடை மேம்படுத்தபடவில்லை

பழையதை கழித்தார்களே ஒழிய புதிது வாங்கவில்லை இது ஒருவித தேக்கத்தை ஏற்படுத்திற்று

காங்கிரஸ் இருந்தாலே உருப்படாது இதில் திமுகவும் இருந்தால் எப்படி உருப்படும்

இப்பொழுது துரிதகதியில் மேம்படுத்துகின்றார்கள் அப்படி வந்ததுதான் தஞ்சை விமானதள புத்துயிரும் சுகோயும் தேஜசும்

முன்பு 10 ஆண்டுகள் திமுக மத்திய அரசில் இருந்தது, அப்பொழுது சன்டிவிக்கு புது புது சேனல்கள் வந்தன இதர மொழியில் வந்தது

திமுகவுக்கு கலைஞர்டிவி வந்தது, இன்னும் என்னவெல்லாமோ வந்தது திமுக பிரமுகர்களுக்கு புது புது கம்பெனிகள் வந்தன, கனிமொழிக்கு ராயல் பர்ச்னிச்சர் கடை வந்தது

ப.சிதம்பரம் குடும்பத்துக்கு என்ன வந்தது என்பது பற்றி உங்களுக்கே தெரியும்

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு காவேரி உருப்படியாக வந்தது, காணாமல் போன தஞ்சை சிலைகள் வந்தன‌

முன்பு தஞ்சாவூரில் இருந்து சோழன் கிழக்காசியா முழுக்க ஆட்டி படைத்து தஞ்சையினை கிழக்காசியாவினை மிரட்டும் தலைநகராக வைத்திருந்தது போல இன்று கிழக்காசியாவினை மிரட்டும் தஞ்சாவூராக மோடி அரசு அதை மாற்றிகொண்டிருக்கின்றது

அவ்வகையில் மோடி இரண்டாம் ராஜராஜ சோழனாகின்றார்

இது தமிழக வரலாற்றில் மாபெரும் திருப்பம், பண்டைய தமிழ்நகரமும் பாரம்பரியமும் மிக்கதான தஞ்சாவூரை மோடி உலகில் மின்ன வைக்கின்றார்

இதை தமிழன் தெரிந்தால் திமுகவினை மதிப்பானா? தாடிக்காரன் ராம்சாமியினை மதிப்பானா? இல்லை டெல்லி எதிர்ப்பு அரசியல்தான் செய்யமுடியுமா?

இதனால் ரஜினிக்கு நன்றி சொல்லி பன்றியாய் கறுப்பு சட்டையுடன் வருகின்றார்கள், தஞ்சை கோவிலில் தமிழ் வேண்டும் என கொடிபிடிக்கின்றார்கள்

ஆனால் அதே தஞ்சையினை மத்திய அரசு பெரும் உலகபுகழ் நகரமாக உருவாக்குவதை மறைக்கின்றார்கள், ஊடகமும் துணை செல்கின்றன‌

மாமல்லபுரத்துக்கு அடுத்து தஞ்சாவூர் உலக புகழ் பெறுகின்றது, மோடி அசத்துகின்றார்

இதை எல்லாம் சொல்லவேண்டியது தமிழக பாஜக, நிச்சயம் இது அவர்கள் அடித்து ஆட வேண்டிய இடம், ஆனால் அவர்களோ அடுத்த தலமை யார் என குடுமிபிடி சண்டையில் இருக்கின்றார்கள்

பின் எங்கிருந்து தாமரை மலரும்?

தமிழக பாஜகவினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், அவர்களால் இங்கு ஒருகாலமும் கட்சி வளர்க்கமுடியாது போலிருக்கின்றது, திமுக அதிமுகவின அடிமைகள் அவர்கள், அவர்கள் இருக்கும் காலம் வரை இங்கு ஒரு மாற்றமும் வாரா..

அவர்கள் அரசியல்வாதிகள் அப்படித்தான்

நாம் ஒரு இந்தியனாக இந்திய அரசின் நல்முயற்சியினை வாழ்த்தும் இந்திய தமிழனாக விஷயத்தை சொல்லிவிட்டோ இனி உங்கள் பாடு

கவனியுங்கள் தமிழகத்தின் சாலை முதல் குப்பைமேடு வரை அண்ணா பெரியார் என பெயின்ட் அடித்தது திமுக‌

முதல்முறையாக பண்டைய அடையாளங்களை மீட்டு கப்பல்கட்டு தளத்துக்கு கோவாவில் சோழன் பெயரை சூட்டியது மோடி

மாம்மல்லபுர பல்லவ அடையாளத்தை மீட்டு அதை உலகறிய செய்தது மோடி

இப்பொழுது தஞ்சாவூர் தளத்தை பலபடுத்தி உலகதரமாக்கி சோழனின் புகழ் நிலைக்கும் வண்ணம் “புலி”சுறா என பெயரிட்டிருப்பதும் மோடி

இனி தஞ்சை கோவிலில் சமஸ்கிருதத்தில் அடுத்து குஜராத் மொழியில்தான் மந்திரம் சொல்லவேண்டும், சல்லிவோட்டுக்கு பிரயோசனம் இல்லையென்றாலும் தஞ்சையின் காவேரி முதல் சிலை, பாரம்பரியம் வரை அவர்தான் மீட்டெடுக்கின்றார்

நல்ல இந்திய தலமை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி விளங்கும் மோடிக்கு, இரண்டாம் ராஜராஜ சோழனுக்கு தமிழனாக கோடி நன்றிகள்

வாழ்க நீ எம்மான்…

இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது

இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது

புதிய நீர்மூழ்கிகளில் இரு வழிகள் உண்டு முதலில் வெளிநாட்டில் முழுக்க தயாரிப்பது இரண்டாவது உள்நாட்டு தயாரிப்பில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது

இந்த இரண்டாம் வழி மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பாஜக அரசு முன்னுரிமை கொடுக்கின்றது, இந்திய பணம் இந்தியாவுக்குள்ளே சுற்றும் என்பது அந்த நிலைப்பாடு அது மிக சரியானதும் கூட‌

இந்த பல்லாயிரம் கோடி மதிப்புள்ள திட்டத்தை அதானியும் அம்பானியும் பெறுவார்கள், இதை வைத்து பெரும் அரசியல் செய்யலாம் என நினைத்திருந்த எதிர்கட்சி வாயில் மண் அள்ளி போட்டுவிட்டது மத்திய அரசு

இந்த ஒப்பந்தம் எல்&டி நிறுவணத்துத்தான் வழங்கபடும் என்பது போல அம்பானி அதானி நிறுவணங்களை போட்டியில் இருந்தே விரட்டிவிட்டது மத்திய அரசு

ஆம், அணுசக்தி நீர்மூழ்கி அதிமுக்கியமான விவகாரம் என்பதால் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள், அதானி அந்த அளவு தரம் கொடுக்கமுடியாது என்பதால் நடையினை கட்ட சொல்லிவிட்டார்கள்

அதானி பாஜக கட்சிக்கு முக்கிய கூட்டாளி எனினும் நாட்டின் பாதுகாப்பு திட்டத்தில் மிக சரியான முடிவினை எடுத்து எல்&டி கையில் நீர்மூழ்கியினை ஒப்படைக்க நினைக்கும் மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள்

தொடரவேண்டும் இந்த நன் முயற்சிகள், வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்

காலத்தின் சோகம்

காலமெல்லாம் அடுத்தவன் படத்துக்கு வசனமெழுதிய கருணாநிதி தன் குடும்ப கம்பெனிக்கு வசனம் எழுதாமல் போனது காலத்தின் சோகம்

அதே நேரம் கலாநிதி மாறனும், உதநிதியும், அழகிரி மகனும் கருணாநிதிக்கு வாய்ப்பு கொடுக்கவே கூடாது என்பதில் கவனமாய் இருந்திருகின்றார்கள்…

Happy Birthday …Michelle Pauline

காலங்கள் எவ்வளவு வேகமாக இறக்கை கட்டி பறக்கின்றது என்பது பெற்ற பிள்ளைகளை பார்க்கும் பொழுதுதான் தெரிகின்றது

அதற்குள் 8 வருடம் ஓடிவிட்டது, ஏதேதோ நடந்து எல்லாமே கனவு போலாயிற்று

வாழ்வு என்பது கனவுபோல் ஓடிவிடும் மாயை என்பது மெல்ல புரிகின்றது

அன்று இதே தை அம்மாவாசை, சீனர்கள் புத்தாண்டை தொடங்கியிருந்த நேரம் முதல் முதலாக மகளை கையில் ஏந்தினேன்

யாருடனும் அதிகம் ஒட்டாதவனும், பந்த பாசம் ரத்தபாசம் இதிலெல்லாம் அதிக நம்பிக்கையில்லாதவனுமான எனக்கு அந்த நொடியே புத்திர பாசத்தின் தன்மை விளங்கிற்று

பெண்குழந்தை தேவதையின் சாயல் என்பதும், அதோடு வாழும் வாழ்வு சொர்க்கம் என்பதும் மெல்ல விளங்கிற்று..

அதன்பின் அவளில்லா நாளில்லை, இப்பொழுது கொஞ்சமாதம் பிரிவாயிற்று, அவளும் 3ம் வகுப்புக்கு வந்துவிட்டாள்

தகப்பனுக்கு பெண் பிள்ளைமேல் தனிபாசம் உண்டு என்பது அக்காலத்தில் இருந்தே எல்லா இனமும் மதமும் சொல்லும் தத்துவம், அது உண்மைதான் போலிருக்கின்றது

ஏன் அக்கால அரசர்கள் மகள்கையில் மாலை கொடுத்து சுயம்வரம் நடத்தினான் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது, மகளின் மகிழ்ச்சி அவனுக்கு அவ்வளவு முக்கியமாய் இருந்திருக்கின்றது

வாழ்வில் நான் அடைந்த வரங்களில் முதல் நல்வரம் அவள்தான்

தெய்வம் எனக்கு தந்த ஆறுதலுக்கு மகிழ்ச்சிக்கும் இன்று பிறந்த நாள்

“அப்பா, இப்போ நான் வளர்ந்துட்டேன் , அடுப்பு எட்டுது. சப்பாத்தி எல்லாம் செய்றேன், நீங்க வாங்கப்பா செஞ்சிதாரேன், எனக்கு எவ்வளவு நாள் செஞ்சி தந்தீங்க..” என அவள் சொல்லும் பொழுது வாழ்வின் கட்டம் அழகாக புரிந்தது

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.”

தன் குழந்தை சின்ன கைகளால் கரைத்த கூழ், அமிழ்தைவிடவும் சிறந்த சுவையுடையதாக இருக்கும் என்ற வள்ளுவனின் குறள் முக்கால உண்மையானது

பெண் பிள்ளை இல்லாதோன் வாழ்வு நிறைவில்லாதது என்பார்கள், அதுவும் உண்மை போலிருக்கின்றது

காந்தி 4 மகன்களை பெற்றார் என்னாயிற்று, நேருவுக்கு ஒரே மகளால் உலக புகழ் கிடைத்தது.

“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.”

பெற்ற பிள்ளைகள் என்பது அவரவர் பூர்வ வினைபயன் என்ற வள்ளுவனின் வார்த்தைக்கு அவளே பொறுப்பு

பிள்ளைகள் வழியாகவே பெற்றோர் அறியபடுவர் எனும் யூதபழமொழி என்வாழ்வில் அவள் கையில்தான் இருக்கின்றது

தை அம்மாவாசை முன்னோருக்கு உகந்த நாளாம், ஏதோ முன்னோரின் தொடர்ச்சியாக அவள் என் கரங்களுக்கு வந்திருக்கலாம்

அவளின் பாட்டி வாழா வாழ்வினை அவள் வாழட்டும், எல்லா தெய்வங்களும் அவளை ஆசீர்வதிகட்டும்

Happy Birthday …Michelle Pauline

லண்டனில் நடந்த சம்பவம் இன்றைய உலகின் ஒருமாதிரியான செய்தி

லண்டனில் நடந்த சம்பவம் இன்றைய உலகின் ஒருமாதிரியான செய்தி

லண்டனின் இளம்பெண், அதாவது தந்தையின்றி தாய்மட்டும் கொண்ட இளம்பெண் திருமணம் செய்து தேனிலவுக்கு சென்றிருக்கின்றாள், தனியாக இருந்ததால் தாயினையும் அழைத்து சென்றிருக்கின்றாள்

அடுத்த 9ம் மாதம் குழந்தை பிறந்திருகின்றது, அதுவும் அப்பெண்ணின் கணவனை போலவே பிறந்திருக்கின்றது

அதிர்ச்சி அடைந்த இளம்பெண் மயங்கி விழுந்து எழுந்து அழுதுகொண்டிருக்கின்றாள்

காரணம் பிள்ளை பெற்றது இளம்பெண் அல்ல அவளின் தாய்

அந்த ஜெகஜால கில்லாடி மாப்பிள்ளை இரு தேனிலவினை கொண்டாடியிருகின்றான்

விஷயம் ஐரோப்பாவில் சிரிப்பாய் சிரிக்கின்றது, அப்பெண்ணோ விவாகரத்துக்கு சென்றுவிட்டாள், அவனும் அவளின் தாயும் யார் பெற்றால் என்ன இது நம் வீட்டு வாரிசு என சிரித்து கொண்டிருக்கின்றார்கள்

விஷயம் சென்னை பெரியார் திடலுக்கு தெரியுமா இல்லையா என்பது தெரியவில்லை

தெரிந்தால் இந்த வருட பெரியார் ராம்சாமி விருது இந்த லண்டன்காரனுக்கும், ராம்சாமி கண்ட ராவிருட்டு புரட்சிபெண் விருது அவனின் மாமியாருக்கும் வ‌ழங்கபடும்..

பாலசந்தர் இருந்தால் அவருக்கொரு கதை கிடைத்திருக்கும், இப்போதுள்ள இயக்குநர்களுக்கு இம்மாதிரி கதையிலெல்லாம் விருப்பமில்லை

சங்கம் அம்மாவாசையினை எல்லாம் நம்பாது

இன்று தை அம்மாவாசையாம், நிலா வராதாம்

பைத்தியகாரதனமான உலகமிது, இதோ இந்த தேயா நிலா இருக்கும் உலகில் எப்படி அம்மாவாசை வரும்?

இதனால் சங்கம் அம்மாவாசையினை எல்லாம் நம்பாது,

தலைவி இப்படி ஜொலிக்கும் பொழுது நம்பவும் முடியாது

“சங்கம் நாட்டில் எல்லா நாளும் பவுர்ணமி
சங்கம் நாட்டில் என்றும் இல்லை தேய்பிறை..”

லாலல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் சிந்தித்து பார்த்தல் நலம்..

ஈரோட்டு ராம்சாமி விதவைகள் மறுமணத்தை ஆதரித்த பெண் விடுதலை வரலாற்று புரட்சியாளராம்

இதை சொல்வதில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இருப்பதுதான் ஆச்சரியம்

அரேபிய கலாச்சாரத்தில் விதவைகளுக்கான இடம் கடுமையானது,

தூய்மையான நபி பெருமான் கதீஜா எனும் விதவையினை திருமணம் செய்து உலகுக்கே முன்மாதிரியாய் திகழ்ந்தார்

வயதில் மூத்த கதீஜா அம்மையார் மகா நல்லவராயும் இறையச்சம் கொண்டவருமாயிருந்ததால் தயக்கமின்றி அவரை மனைவியாக ஏற்றார் நபி பெருமான்

இது அச்சமூகத்துக்கே வழிகாட்டலாய் இருந்தது.

இயேசுவின் வாழ்வு சொல்வதென்ன?

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தி கல்லெறிந்து கொல்லபட இருந்தபொழுது “உங்களில் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்” என சொல்லி அந்த ஆண்கள் கூட்டத்தை விரட்டி அப்பெண்ணை காத்தார் இயேசு

இயேசுவின் வாழ்வு பெண்விடுதலை போராட்ட வாழ்வாகவே இருந்தது, விதவைகள் பாவிகள் என எல்லா ஒதுக்கபட்ட பெண்களுக்கும் அவர் நல்வார்த்தை சொல்லி ஆறுதலும் பாதுகாவலுமாக இருந்தார்

அவரின் புதுமை கானாவூரில் ஒரு பெண்ணின் கண்ணீரை துடைக்க நிகழ்ந்து கடைசியில் உயிர்த்து காட்சி கொடுத்ததும் ஒரு பெண்சீடருக்கே

மகா தூய்மையான நபிபெருமானும், கடவுளின் தேர்ந்தெடுக்கபட்ட மனிதனாக வலம் வந்த இயேசுவும் செய்து காட்டியதை விட, வாழ்ந்து காட்டியதை விடவா ஈரோட்டு ராம்சாமி கிழித்தெறிந்துவிட்டார்

பகுத்தறிவில் இதையெல்லாம் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் சிந்தித்து பார்த்தல் நலம்..