புத்தாண்டு வாழ்த்துக்கள்

நம்மையும் மதித்து பின் தொடர்ந்துவரும் எல்லா அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிச்சயம் எங்கோ இருக்கும் நாம் தமிழகத்தினை தொடர்பு கொள்ளமுடிகின்றது அதில் எவ்வளவோ உதவிகளையும் நல்ல விஷயங்களையும் பெறமுடிகின்றது என்றால் அது இந்த முகநூல் நண்பர்களாலே

“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றுஇருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்;
அம்மருந்து போல்வாரும் உண்டு” என்பார் அவ்வையார்

தேவை எனும்பொழுது ஒவ்வொரு நண்பரும் செய்யும் உதவி கொஞ்சமல்ல, அது நிச்சயம் கடவுளின் கருணையே

எல்லா நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்கள் ஒவ்வொருவருக்காகவும் பரம்பொருளிடம் பிரார்த்திகொள்கின்றோம், அது ஒன்றுதான் எம்மால் செய்யமுடியும்.

பிறக்கும் புத்தாண்டு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அமைதியும் வளப்பமும் சமத்துவமும் ஆன்மீகபலமும் நல்வழியும் கொண்டுவரும் ஆண்டாக பிறக்கட்டும்