நெல்லை கண்ணன் ஏன் இப்படி சிக்கினார்?

மோடியின் 6 ஆண்டு காலத்தில் இல்லா சிக்கல் அவருக்கு குடியுரிமை போராட்டத்தில் வந்தது, அது ஏன் இதில்மட்டும் வந்தது?

நெல்லை கண்ணன் ஏன் இப்படி சிக்கினார்?

இதுபற்றி நாம் சிந்திக்கும் பொழுது காதோரம் ஒரு குரல் கேட்கின்றது, அது நித்தியானந்தா சீடகோடிகளின் குரல்

“ஏய் மானிடா,உன் ஆத்மாவுக்கு சொல்கின்றோம். மோடிஜி நல்லவர் ஆனால் சுவாமியினை பற்றி சிலர் தவறாக சொன்னதை நம்பி நடவடிக்கை எடுக்க தொடங்கி சிக்கலில் சிக்கினார்

உன் மானிட உடல்கூட்டின் மூளை பதிவில் அது பதிந்திருக்கின்றதா? சங்கம் வளர்த்த மதுரையில், மகனே உன் குஷ்பு சங்கம் அல்ல, தமிழங்கம் வளர்த்த மதுரையில் அன்னை மீனாட்சி நடத்தும் மதுரை ஆதீன வாரிசாக சுவாமி சிவனால் அடையாளம் காட்டபட்டு பதவிஏற்க வந்தபொழுது தடுத்தது யார் தெரியுமா?

இதே நெல்லை கண்ணன், கார்த்திகை மாத வைகையாக அவன் எப்படி எல்லாம் சீறினான் தெரியுமா?

அந்த நாளில் நாங்களெல்லாம் பிடிபட்ட அயிரை மீனாக எப்படி துடித்தோம் தெரியுமா?

அப்பொழுது விரட்டியது ஜெயா அரசு, அந்த ஜெயா இன்று இல்லை. அப்படியே சுவாமியினை விரட்டும் குஜராத், கன்னட அரசுக்கும், ஈக்வெடார் நாட்டுக்கும் எம்பெருமான் நாள் குறித்துவிட்டான்

இப்பொழுது பார், சுவாமியினை ஓட விரட்டிய அமித்ஷாவினை கொலை செய்ய திட்டமிட்டதாக நெல்லை கண்ணனே சிக்கிகொண்டான்

குடியுரிமை சிக்கலில் அமித்ஷாவும் கடந்து வரமுடியவில்லை

ஆனால் எம்பெருமானோ அவர்போக்கில் வீடியோ வெளியிட்டு மானிடம் உய்ய சித்தனாக சிவபெருமான் கட்டளையினை நிறைவேற்றி வருகின்றார்.

இது தேவரகசியம், மானிடருக்கு புரியாது, உன் மரமண்டைக்கும் புரியாது

ஆனால் உன் ஆத்மாவினை பிரபஞ்சத்தோடு இணைத்து பார், அந்த ஞானகண்ணுக்கு எல்லாம் புரியும்

நீ இந்துமதம் மேல் நல்ல அபிமானம் உள்ளவன் என்பதால் இந்த ரகசியம் உனக்கு கொஞ்சம் பகவான் திருவுளபடி வெளிக்காட்டபட்டது, அது உன் பூர்வ ஜென்ம கர்மா”

சொல்லிவிட்டு விடைபெற்றது குரல், அது புத்தாண்டு வாழ்த்து கூட சொல்லவில்லை

ஆத்மாவா? சரி அதை எங்கே தேடுவது, கண்ணை மூடி தேடிபார்ப்போம் என தேடினால் நித்திசாமி மந்தகாச புன்னகையில் சிரிக்கின்றார்

இனி ஆத்மாவினை தேடவே கூடாது.

ஏன் காங்கிரஸ்காரருக்கு நாம் தமிழர் கட்சி உள்ளே ஓடிவருகின்றது?

நெல்லை கண்ணன் காங்கிரஸ்காரர்

ஆம், நாம் தமிழர் சொல்வதுபடி ஈழத்தில் தமிழரை கொன்ற, இறுதியுத்தத்தில் பல லட்சம்பேரை கொன்ற காங்கிரஸ் அரசின் கட்சிக்காரர்

நாம் தமிழர் கொள்கைபடி எக்காலமும் காங்கிரஸ் தமிழர்விரோத கட்சி

ஆனால் நெல்லைகண்ணனுக்கு சைமன் அப்படி பொங்கி தீர்க்கின்றார், அப்பா நெல்லை கண்ணன் என ஒரே ஒப்பாரி

ஏன் காங்கிரஸ்காரருக்கு நாம் தமிழர் கட்சி உள்ளே ஓடிவருகின்றது

விஷயம் வேறொன்றுமில்லை, நெல்லை தாமிரபரணி பல சக்திகளால் உறிஞ்சபடும் அதில் பல கம்பெனிகள் உண்டு

அந்த கம்பெனி பலரின் வாயினை பணத்தால் அடிக்கடி அடைக்கும்

அந்த வாய் நெல்லை கண்ணனுக்கும் உண்டு, சில கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு, நாம் தமிழருக்கு உண்டு, இன்னும் பெரிய கட்சி சிறிய கட்சி என எல்லோருக்கும் உண்டு

இனி நெல்லை கண்ணனுக்கு சைமன் ஏன் பொங்குகின்றார் அதுவும் தமிழர் விரோத காங்கிரஸ்காரனுக்கு ஏன் பொங்குகின்றார் என கவனியுங்கள் விஷயம் புரியும்

“தாயும் பிள்ளையும் ஆன போதிலும்
வாயும் பணமும் ஒன்றடா..

சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில்
திருட்டு கூட்டமெல்லாம் ஒன்றடா..”

இவர்கள்தான் இன்றை வங்க சீரழிவுக்கு முதல் காரணம்

அந்த வங்கம் அன்று உலகின் மிக மிக செழிப்பான பிரதேசமாயிருந்தது

கங்கை நதியின் டெல்டா பகுதி அது, கங்கை பல ஆறுகளாக பிரிந்து வங்காளத்தை எப்பொழுதும் பசுமையாகவே வைத்திருந்தது, நெல் என்பது அளவுக்கு மீறி விளைந்தது

வங்க காடுகளில் புலிகளும் மான்களும் செழித்திருந்தன, புலிகளின் வேட்டை பொருட்களுக்கான சந்தையே இருந்தது

கரும்பும், பருத்தியும் அதிகம் விளைந்தன, மெல்லிய துணி அங்கு நெய்யபட்டது அதற்கு ஐரோப்பாவில் கனத்த வரவேற்பு இருந்தது

காய்கறிகள் எக்கசக்கம் விளைந்தன, கடலிலும் ஆற்றிலும் மீன் வளமும் நிறைந்திருந்தது, உப்பு வியாபாரமும் நடந்தது

மொத்த்தில் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலே மிக வளமான பகுதியாகவும் , பெரும் ஆலயங்கள் கொண்டதும், மக்கள் எப்பொழுதும் குவியும் இடமாகவும் வங்கம் இருந்தது

இதனால் ஹூக்ளி ஆற்றின் கரையில் பிரெஞ்ச்காரர்கள் சந்திரநாகூர் எனுமிடத்தில் கோட்டை கட்டினர், டச்சுக்காரர் சின்சுரா ஆற்றங்கரையில் இருந்தார்கள்

ஹூக்ளி நதிகரையில் வில்லியம்கோட்டை பிரிட்டானியருக்காக இருந்தது, அங்குதான் ஆற்காடு யுத்தத்தை அடுத்து கிளைவ்கால் வைத்து வியாபாரத்தை பெருக்க எண்ணினார்

வில்லியம் கோட்டையினை சுற்றி மாதா கோவிலும் வந்தது சில குடோன்களும் வந்தது, முதலைகள் வாழ்ந்த அந்த சேறுபகுதி சென்னையில் கருப்பர் நகரம் ஆனது போல் நகரமானது

கிளைவ் அந்த தங்கம் விளைந்த வங்கத்தை நோட்டமிட்டான், அங்குள்ள நிலமையினை ஆராய்ந்தான்

அன்று வங்கம் என்பது தனியாக அல்ல, இன்றைய வங்கம் (இன்றைய வங்கதேசமும் அடக்கி), பீகார், ஒரிசா என மூன்றும் கலந்த தேசமாக இருந்தது, அது முகலாய சாம்ராயத்தின் அங்கமாகவும் இருந்தது

முகலாய சாம்ராஜ்யம் சரியும் பொழுது தெற்கே ஆற்காடு நவாப் தனி ஆவர்த்தனம் செய்தது போல அங்கே அன்வர்தீன்கான் என்பவர் தனி அரசரானார்

1756ல் அவர் இறக்க அவரின் பேரன் சுராஜ்‍ உட் டொவ்ளா என்பவன் மன்னரானார் அவருக்கு வயது 20

மனிதர் மிக செல்லபிள்ளையாக வளர்ந்திருந்தார், படிப்பு இல்லை பண்பும் சுத்தமாக இல்லை, எப்பொழுதும் போதை பெண்கள் என ஆட்டமும் கூத்துமாக வசந்த மாளிகை சிவாஜி கணேசன் போல் ஆடிகொண்டிருந்தார்

அது முற்றி சித்தபிரம்மை பிடித்த அளவு சென்றது, யாரையும் மதிப்பதில்லை, துதிபாடிகளை மட்டும் முக ஸ்டாலின் போல் அருகில் அமர்த்தி கொண்டார், ஜெயாவிற்கு குனிந்து நின்ற‌ அமைச்சர்கள் போல் அவருக்கும் எல்லோரும் குனிந்து நிற்க வேண்டும்

அவரின் அமைச்சரவை எப்படி இருந்தது என்றால் ஈழத்தில் செங்கோல் செலுத்திய காட்சி போல் இருந்தது, அவரை புகழ்ந்தவர்களுக்கு வாழ்வு இல்லையேல் முதலில் மன்னர் மிதிப்பார் அதன் பின் யானை மிதிக்கும்

இம்சை அரசன் வடிவேலு போலவே ஆட்சி செய்து கொண்டிருந்தார் இந்த சுராஜ்‍ உட் டொவ்ளா

இவரிடம் இருந்த கொடூர குணம் நேரம் போகவில்லை என்றால் விலங்குகளை சித்திரவதை செய்து ரசிப்பது அதாவது குதிரைக்கு வாலை வெட்டி ரத்தம் கசிய அது ஓடுவதை ரசிப்பது, மாட்டிற்கு கழுத்தில் வெட்டி அது துடிப்பதை ரசிப்பது

ஏதும் பறவை கிடைத்தால் ஒரு இறக்கையினை முறித்து பறக்கவிட்டு மகிழ்வது என்ற கொடூர விளையாட்டு இருந்தது, மன்னன் ஆசைபட்டால் மறுக்க முடியுமா?

ஆளாளுக்கு புதுபுது ஐடியா கொடுத்து விளையாட வைத்தார்கள், ஓணானை கள்ளியில் சிலுவையில் அறைவது அவரின் கண்டுபிடிப்பாக இருக்க கூடும்

இந்த சுல்தானுக்கு இருந்த இன்னொரு கொடும் விஷயம் ஐரோப்பியர் வெறுப்பு, 20 வயதுதான் ஆகியிருந்தாலும் இனம்புரியா வெறுப்பு இருந்தது அதை விளையாட்டாக ஆடினார்

தெளிவாக சொல்லவேண்டும் என்றால் அரேபிய நாடுகளில் சில அரபிகள் பிழைக்க வந்த வெளிநாட்டவரை ஒரு மாதிரி பார்ப்பது, வெளிநாட்டு தமிழர்கள் இந்திய தமிழர்களை மட்டமாய் நடத்துவது போன்ற தன்மை அது

அடிக்கடி பிரெஞ்ச்காரர், பிரிட்டானியர் கோட்டைக்குள் புகுந்து அவர்கள் கல்லாபெட்டியினை தூக்கிவருவார், அவர்கள் விட்டுவிடுமாறு கெஞ்சுவர், இவர் ரசிப்பார் கடைசியில் அவர்களை கொன்றுவிடுவார்

இதெல்லாம் அவரின் பொழுது போக்கு ஆனால் மன்னராயிற்று எதிர்க்க முடியாது, அவ்வப்பொழுது அடிவாங்கினாலும் வங்கத்தில் சம்பாதிக்கலாம் என்பதால் புதிய பாதை பார்த்திபனிடம் அடிவாங்கும் சிறுவன் போல ஐரோப்பியர் இருந்தனர்

இந்நிலையில் ஒரு பெரும் பணக்காரனை மிரட்டினார் சுராஜ்‍ உட் டொவ்ளா, பெரும் பணம் கோரினார், அவனோ உயிர்தப்ப வெள்ளையரிடம் சரண்டைந்தான்

வில்லியம் கோட்டை பிரிட்டானியர் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தனர், அவனை சுராஜ்‍ உட் டொவ்ளாவிடம் ஒப்படைக்க மறுத்தனர்

அவ்வளவுதான் அந்த ஐரோப்பிய வெறுப்பு சாமியாய் இறங்க தன் படையுடன் கோட்டைக்குள் புகுந்தார் சுராஜ்‍ உட் டொவ்ளா, அதுவரை பிரிட்டானியர் வெறும் வியாபாரிகள் அவ்வப்பொழுது பிரெஞ்சுக்காரரோடு கும்மாங்குத்து போடுவார்கள்

பெரும் படையினை எதிர்த்து பழக்கம் இல்லை என்பதால் வில்லியம் கோட்டை கவர்னரே படகேறி நடுகடலில் இருந்த கப்பலில் பதுங்கினார்

கோட்டையில் இருந்த 150 பிரிட்டானியரை இழுத்து சென்றான் சுராஜ்‍ உட் டொவ்ளா, எனக்கு அந்த வணிகன் தரவேண்டியதை விட பல மடங்கு தந்தால் இவர்களை விடுவிப்பேன் என அறிக்கையிட்டான்

அதன் பின் அவன் செய்ததுதான் கொடூரம்

மிக சிறிய நிலவறை சிறையில் காற்றோ, வெளிச்சமோ இல்லாத, 30 பேர் மட்டுமே இருக்க கூடிய அறையில் அவர்களை மொத்தமாக விலங்கிட்டு அடைத்தான்

கொஞ்சநேரம் தன் வழக்கமான விளையாட்டினை ஆடினான், அதாவது அவர்கள் தாகத்தால் நீர் கேட்டால் கொடுப்பது போல் காட்டுவான் அவர்கள் ஓடிவந்து விழுவார்கள் ஆனால் கொடுக்கமாட்டான்

பின் ஜெபிக்க சொல்வான், அவர்கள் ஜெபிப்பார்கள் இவன் சிரிப்பான்

இந்த விளையாட்ட்டு விளையாடிகொண்டே நன்றாக குடித்துவிட்டு நான் சொல்லும் வரை இவர்களுக்கு உணவோ நீரோ கொடுக்க கூடாது என சொல்லிவிட்டு தூங்க சென்றுவிட்டான்

அந்த உத்தரவினை மறந்தும் விட்டான், ஆனால் அந்த வெள்ளையர் இருட்டறையில் துடிதுடித்தனர், பலர் செத்தனர்

அவர்கள் கெஞ்சியும் லஞ்சம் கொடுத்தும் மன்னனின் உத்தரவின்றி காவலர்களால் செயல்படமுடியாமல் போயிற்று

பலர் இறந்தனர், இரு நாள் கழித்து வந்த சுராஜ்‍ உட் டொவ்ளா கையில் பணம் இருப்பவர்களை வைத்துவிட்டு போக சொன்னான், மன்னனிடம் அவர்களை விடுவிக்க பேரம் பேச வந்த வில்லியம் கோட்டை கவர்னர் (கப்பலில் பதுங்கியவர்) ஹால்வெல் என்பவரையும் பிடித்து இருட்டு அறையில் அடைத்தான் சுராஜ்‍ உட் டொவ்ளா

அவர் கோட்டையின் ரகசிய செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைக்கும் வரை விடமாட்டேன் என சொல்லி சித்திரவதை செய்தான் பின் சுராஜ்‍ உட் டொவ்ளாவின் சொந்தகார பெண்ணே இரக்கம் கொண்டு ஹால்வெல்லை பணம் கொடுத்து விடுவித்தாள்

இப்படியான காரியங்களை மன சுத்தியோடு செய்த சுராஜ்‍ உட் டொவ்ளா, டெல்லி சுல்தானுக்கு தான் வெள்ளையர்களை வென்றுவிட்டதாகவும், கல்கத்தாவில் ஈ அவர்களுக்கு இடமில்லை எனவும் அறிவித்தான்

கல்கத்தாவின் பெயர் அலி நாகூர் ஆனது, ஆம் அது அவனின் வெற்றிக்கு அர்த்தமாம், கடவுளின் துறைமுகம் என பெயராம்

கிட்டதட்ட 90 பிரிட்டானியர் அந்த இருட்டறையில் இறந்தனர், எஞ்சியோர் வெளிவந்து இறந்தனர்

விஷயம் சென்னைக்கு எட்டியது, அழுகையும் கோபமும் கொண்ட பிரிட்டிசார் ஏதாவது செய்யுங்கள் என கிளைவ் முகத்தை பார்த்தனர்

அவரை தவிர அவர்கள் யார் முகத்தை பார்க்க முடியும்?

கிளைவும் வாட்சனும் படை திரட்டினர், கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் கொண்ட படை அது

ஆகஸ்டில் புறப்பட்ட கிளைவ் வங்க கடலுக்க்கே உரித்தான புயல்களை கடந்து கல்கத்தாவினை அடைய டிசம்பர் ஆனது

விஷயம் சுராஜ்‍ உட் டொவ்ளா காதிற்கு சென்றது, போதையில் சொன்னான், என்னது பிரிடிசாரா? என்னிடம் மோதவா?

மொத்த ஐரோப்பாவிலே பத்தாயிரம் பேர் தேறமாட்டார்கள், இவர்கள் எத்தனை பேர்?

கிளைவோ வெறியோடு வந்தான், கூடவே வாட்சனுக்கும் கடுமையான கோபம் இருந்தது

அதுவரை வங்காளம் பெரும் போரினை கண்டதில்லை, காரணம் வங்காளிகள் சுவாவம் அப்படியாக அன்று இருந்தது

கடும் உழைப்பு இல்லாதவர்களாகவும், ஒரு மாதிரி மனநிலை கொண்டவர்களாகவும் , வெறும் பேச்சு வீரர்களாகவும், அரட்டை அடிப்பதிலுமாக இருந்தார்கள்

சண்டையோ, மோதலோ, வீர விளையாட்டோ அவர்களுக்கு தூரமாய் இருந்தது. சுராஜ்‍ உட் டொவ்ளா சுகமாக ஆள அதுவும் ஒரு காரணம்

வழக்கமாக உள்ளூரில் சண்டைக்கு ஆள் எடுக்கும் பிரிட்டாருக்கு அது பெரும் சவாலை கொடுத்தது எனினும் முடிவோடு வந்திருந்தான் கிளைவ்

ஏற்கனவே வந்து போயிருந்ததால் யுத்தம் என வந்தால் என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் அவனிடம் இருந்தது

களமிறங்கினான், வங்கத்தின் தலைவிதி வேகமாக மாற தொடங்கியது

கடும் கோபத்தில் வந்த கிளைவ் தன் ஆட்டத்தை தொடங்கினார், ஹூக்ளி கரையோர நகரங்களை எல்லாம் பிடித்தார்

இறுதியாக நவாப் பிடித்திருந்த வில்லியம் கோட்டையினை மீட்டார், நவாபின் படைகள் அலறி அடித்து தலைநகருக்கு திரும்பின‌

தரைப்போரில் கிளைவ் அடிக்க, கடற்பாதுகாப்பினை வாட்சன் செய்து கொண்டிருந்தார், நவாப் படைகள் இந்த வியூகத்தில் சிக்கின‌

நவாப் சிராஜ் உட் டவ்ளா அப்பொழுது முர்ஷிதாபாத் எனும் தன் தலைநகரத்தில் மல்லாக்க கிடந்தார், வில்லியம் கோட்டையினை வெள்ளையர் கைபற்றியசெய்தி தெரிந்ததும் அவனுக்கு வியர்த்தது

காரணம் ஆங்கிலேயர் ஒரு நாளும் இங்கு ராணுவ வெற்றி பெறுவார்கள் என அவன் நம்பவில்லை, அவன் என்ன மொத்த இந்தியாவும் அப்படித்தான் எண்ணி இருந்தது

நவாபின் படைகள் தோற்றது என்ற செய்தி கேட்டதும் அவனின் நரிமூளை வேலை செய்தது

எதற்காக இவர்களிடம் போராட வேண்டும்? வந்திருப்பது கிழக்கிந்திய கம்பெனி படை, அவர்கள் தலமையிடமே பேசிவிட்டால் என்ன?

கம்பெனியாருடன் சமாதானம் பேசினான் சிராஜ் உட் டவ்ளா, பெரும் நஷ்ட ஈடும் வில்லியம் கோட்டையினை செப்பனிட்டும் கொடுப்பதாக வாக்கு கொடுத்தான்

பெரும் பணம் கிடைத்ததால் கம்பெனியும் ஒப்புகொண்டது, கிளைவிற்கோ நவாபினை போட்டு அடிக்கும் வெறி இருந்தது ஆனால் மேலிட உத்தரவினை அவரால் மீற முடியவில்லை

இது அவமானம், சண்டைக்கென்று வந்துவிட்டு காசு கொடுத்தவுடன் திரும்ப சொன்னால் எப்படி என அவன் முணுமுணுத்தாலும் கேட்பார் யாருமில்லை

கட்சி தொண்டர்கள் மோதுவார்கள் ஆனால் தலமை கூட்டணி வைக்கும் அல்லவா? அப்பொழுது தொண்டன் துடிப்பான் அல்லவா? கிளைவின் மனநிலை அப்படி இருந்தது

ஆனால் அவன் மனதில் நவாபினை ஒரு நாள் டூப்ளேயினை அடித்தது போல் அடிக்கவேண்டும் என்ற வெறி இருந்தது

இதனிடையே ஐரோப்பாவில் மறுபடியும் பிரெஞ்ச்காரரும் பிரிட்டானியரும் மோத சென்னை கோட்டை தாக்கபடும் அபாயம் இருந்ததால் கிளைவ் சென்னைக்கு திருப்பி அனுப்பபட்டார்

கிளைவிற்கு இக்காலம் வரை சண்டை தெரியும், வியூகம் தெரியும், தைரியமாக அடிக்க தெரியும்

இந்த போர்களை எல்லாம் அவன் விளையாட்டாகவே நடத்தி வந்தான், பலமுறை சாக முயன்றவன் என்பதால் சாவினை கண்டு அவன் அஞ்சவில்லை

ஆனால் இந்திய யதார்த்தமுறை அவனுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்தன, குறிப்பாக இந்திய மனநிலை அவனுக்கு வினோதமாக பட்டது, குழப்பியது

அவன் இங்கிலாந்து மனநிலையில் வளர்ந்தவன், அங்கு அப்பொழுது பொய் சொல்லுதல், வாக்கு கொடுக்கு முன் யோசித்தல், கொடுத்த வாக்கை காப்பாற்றுதல், பொய் சாட்சி சொல்லுதல் எல்லாம் கவுரவ பிரச்சினைகள், சுருக்கமாக சொன்னால் பணத்திற்காக மனசாட்சியினை விற்பது அவர்களுக்கு அன்று அருவருப்பானது

அவை எல்லாம் அங்கு மிக மிக இழிவானவையாக இருந்தன‌

ஆனால் இந்திய யதார்த்தமோ அப்படியே தலைகீழாக இருந்தது

இங்கு பொய் சொன்னார்கள், பொய்சாட்சி சொன்னார்கள், பணத்திற்காக ராணுவ சிப்பாய்களகளே விலை போனார்கள், நவாபின் அருகில் இருப்பவரை கூட பணத்த்தால் வளைக்க முடிந்தது

அதிகாரத்திற்கும் பணத்திற்கும் விலைபோக கூடிய கூட்டமும் மக்களும் இங்கு இருந்தார்கள், தேசதுரோகம் அவர்களுக்கு தவறாய் படவே இல்லை, அதன் பெயர் சாமார்த்தியம் என சொல்லிகொண்டார்கள்

இந்த போக்கு கிளைவிற்கு பெரும் குழப்பத்தை கொடுத்தாலும் இறுதியில் தெளிந்தான்

இந்தியாவினை ஆள, இந்த பலகீனங்களை பயன்படுத்தினால் தவறே அல்ல. நாம் என்ன இயேசுநாதாரா இல்லை அவரின் சீடரா? இவர்களை நல்வழிபடுத்த?

நாம் வியாபாரி, வந்த இடத்தில் சண்டை என்றாலும் நமக்கு லாபமே முக்கியம். இந்த மக்களை திருத்தமுடியாது மாறாக நமக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் கம்பெனிக்கு நல்லது

வீரனாக இருந்த கிளைவ் ராஜதந்திரியாக மெல்ல மாறினான்

இந்நாட்டை ஆள வீரம் மட்டும் போதாது, இந்நாட்டு கலாச்சாரமான லஞ்சம் இன்னபிறவிஷயங்களில் மூழ்கினால் தவறில்லை என அவனின் உள்மனம் சொல்லிற்று

வீணாக யுத்தம் நடத்தி உயிர்களை கொல்வதெல்லாம் விட எளிதாக லஞ்சம் கொடுத்து சாதிக்கலாம் என்ற திட்டங்கள் எல்லாம் மனதில் ஓடின‌

இப்படியான நிலையில் வங்கத்தில் அவன் அடிக்கடி சுற்றியபொழுது ஒரு வியாபாரி கிளைவ் முன்னால் நின்றான்

அவன் சாதாரண வியாபாரி அல்ல, இக்கால அம்பானி போல அன்று அங்கு மிகபெரும் சக்தி, நவாபிடம் நேருக்கு நேர் பேசும் சர்வ சக்தி படைத்தவன்

ஜெயா அரசில் வைகுண்டராஜன் போல, மோடி அரசின் அம்பானி போல மிக வலுவான வியாபாரி

அவன் பெயர் ஓர்மிசென்ட்

வில்லியம் கோட்டையினை நவாப் படைகள் தாக்கியபொழுது இவரின் வியாபாரமும் நஷ்டமடைந்தது, இப்பொழுது சமாதானம் ஆகி வெள்ளையர் வந்துவிட்டதால் அவர்கள் பக்கம் அனுகூலம் ஏதும் கிடைக்குமா என பார்க்க வந்திருந்தார்

ஓர்மிசென்டை அனுப்பிவிட்டு அவரை பற்றி விசாரித்தான் கிளைவ்

அய்யா அவர் எல்லா இடங்களிலும் இருப்பார்,நவாப்பிடம் இருப்பார், அந்த பக்கம் சந்திரநாகூரில் பிரெஞ்ச்காரரிடம் இருப்பார், நம்மிடமும் இருப்பார்

யாரிடம் சேர்ந்தால் அதிக லாபமோ அவர்களிடம் சேர்ந்து கொள்வார், சந்தர்ப்பவாதி, சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் சாமார்த்திய சாலி

கிளைவிற்கு கோபம் வந்தது, அவன் வியாபாரம் பேசவேண்டுமென்றால் கம்பெனியுடன் பேசலாம், யுத்தம் வேண்டுமென்றால் என்னிடம் பேசலாம்

ஆனால் என்னை பயன்படுத்திகொள்ள எண்ணுகின்றானா? இதென்ன கீழ்தரமான புத்தி. சரி அவன் வழியிலே அவனை அணுகுவோம் என மிக கவனமாக அவனை கையாள ஆரம்பித்தான் கிளைவ்

மாவீரன் கிளைவினை தந்திரமாக கையாள எண்ணி அவனை மாபெரும் தந்திரசாலி ஆக்கியதே இந்த ஓர்மிசென்ட் என்பவர்தான்

அதாவது நவாப் சிராஜ் உட் டவ்ளா என்பவர் தற்காலிகமாக பின்வாங்கினாலும் அயோத்தி சுல்தான், டெல்லி சுல்தானுடன் சேர்ந்து வில்லியம் கோட்டையினை நாசமாக்கி வெள்ளையரை அடியோடு சாய்க்கும் ஆபத்து இருந்தது

அதற்கான அறிகுறிகளும் தென்பட்டன‌

ஆனால் ஒர்ச்சிமின்டோ அஞ்சினான், இது தன் வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் என அஞ்சினான்

அடிக்கடி நவாபினை பார்க்க செல்லும்பொழுது அவரின் ஒருமாதிரி போக்கும் குணமும் அவனை எரிச்சலடைய செய்தன‌

வங்கத்தில் இந்துக்கள், இஸ்லாமியர், வணிகர் என பலதரப்பும் நவாபின் மேல் வெறுப்பில் இருந்தன‌

இந்த இடத்தில் ஓர்மிசென்டுக்கு ஒரு ஐடியா உதித்தது, இந்த நவாபிற்கு பதிலாக பொம்மையாக ஒருவரை வைத்தால் என்ன?

கொஞ்சம் அதை பல்ஸ் பார்த்தவனுக்கு ஆச்சரியம் மிகுந்த பதில் கிடைத்தது

சிராஜ் உட்டவ்ளாவினை வீழ்த்த பலர் மனதார விரும்பியிருந்தனர், அவர்கள் யாரெல்லாம் என்றால் நவாபின் தளபதி மீர் ஜாபர், மந்திரி ராய்டுல்லப், பிரபல வியாபாரி ஜெகத்ஷேட் என சிலர் சிக்கினர்

பொல்லாட்சி வழங்கிய சிராஜ் உட்டல்ளா மீது அவனின் நெருங்கிய வட்டமே வெறுப்பில் இருந்தது, நவாபோ அதை அறியாமல் இருந்தான்

இந்த ஓர்ச்சிமென்ட், மீர் ஜாபர், ராய்டுல்லப், ஜெகத்ஷேட் அடங்கிய குழு அடிக்கடி விவாதித்தது

இவர்கள் இன்னொருவனை துணைக்கு அழைக்க முடிவு செய்தனர், ஆம் கிளைவினை இழுக்க முடிவு செய்தனர்

கிளைவிற்கோ இதுவரை வீர ஆட்டம் தெரியுமே தவிர, துரோகம் தெரியாது, ஆனால் இந்த மாதிரி கூட்டம் இருக்கும் பொழுது ஏன் போர்?

இப்பொழுது கிளைவினை பயன்படுத்தி நவாபினை வீழ்த்த வியாபாரி ஓர்ச்சிமென்ட் திட்டமிட்டான்

கிளைவோ இந்த கும்பலை பயன்படுத்தி வங்கத்து ஆட்சியினை பிடிக்க திட்டமிட்டான்

இரு தந்திரசாலிகளும் தங்கள் மனதிட்டம் வெளிதெரியாமல் ஒருவரை ஒருவர் பாவித்து கொள்ளும் திட்டத்தோடு பழகிகொண்டிருந்தனர்

இந்த கும்பல் விவாதிக்கும்பொழுதே கிளைவின் உள்ளிருந்த எச்சரிக்கை உணர்வு அலாரம் அடித்தது

நடப்பது நவாபிற்கு எதிரான சதி, ரகசியமாகத்தான் நடக்கின்றது ஆனால் தெரிந்துவிட்டால் மொத்தமும் காலி, கம்பெனியில் தன் இடமும் காலி

எப்படி நவாபிற்கு தெரிய வரும்? இந்த ஒர்ச்சிமென்ட் சொல்ல வாய்ப்பு இருக்கின்றது, நம்மிடம் அரசனை கவிழ்ப்போம் என வருகின்றவன், ஒருவேளை அரசனின் தூதனாக இருந்துவிட்டால், இல்லாவிட்டாலும் ஒர்ச்மின்ட் நல்லவன் அல்ல, அதனால் நாம் முந்திகொள்வது அவசியம்

இதனால் நவாபிற்கு ஒரு கடிதம் எழுதினான்,” அய்யா, அய்யன்மீர் நாங்கள் ஒரு நாளும் உங்களை எதிர்ப்பவர்கள் அல்ல, எங்கள் கோட்டைக்காகவே போரிட்டோம்

மற்றபடி உங்கள் நிம்மதியான ஆட்சியினை ஆதரிப்போம், அய்யா வாழ்ந்தால்தான் நாங்கள் வாழமுடியும், உங்கள் நீண்ட ஆயுளை விரும்பும் கிளைவ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி”

கடிதம் கண்டவுடன் சிராஜ் உத்தவ்லா மகிழ்ந்தான், தன்னிடம் பிரிட்டானியர் சரணடைந்ததாக எண்ணி கொண்டு கவலை மறந்தான்

கிளைவோ மற்றுமோர் ரகசிய கடித்தத்தை இன்னொரு பெயரில் மீர் ஜாபருக்கு அனுப்பினான், எழுதியது கிளைவ் ஆனால் ரகசிய தூது என்பதால் செய்தி மட்டும் இருந்தது

நவாபை வீழ்த்தி உம்மை நவாப் ஆக்க கிழக்க்கிந்திய கம்பெனி உதவும் முடிவில் இருக்கின்றது, கம்பெனிக்கு விசுவாசமாக இருப்பீரா?

மீர் ஜாபர் துள்ளி எழுந்தான்

மிக அட்டகாசமாக காய்களை நகர்த்தினான் கிளைவ், எல்லாம் தனக்கு சாதகமாக இருப்பதாக நம்பினான் ஒர்ச்சிமின்ட்

மிக ராஜதந்திரமாக சிராஜ் உத்தவ்ல்லா, ஒர்ச்சிமென்ட்டை எல்லாம் நம்ப வைத்து, தளபதி மீர் ஜாபருக்கு கனவு மூட்டிகொண்டிருந்தான் கிளைவ்

இப்போது கிளைவின் துருப்பு சீட்டு மீர் ஜாபர், காரணம் அவனே நவாபின் தளபதி

நவாபிற்கு எதிராக சதியாலோசனை முடிவில் மீர்ஜாபரை நவாப் ஆக்குவது என முடிவு செய்யபட்டது. அதாவது வெள்ளையர் நவாபோடு யுத்தம் தொடுப்பார்கள், நவாபின் படை தளபதியான மீர் ஜாபர் ஒரு பங்கு படையோடு கிளைவ் பக்கம் வந்துவிட வேண்டும், அதன் பின் நவாப் சிராஜ் உத்தவ்லாவினை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நவாப் ஆக்கலாம்

திட்டம் இறுதிசெய்யபட்டது, அப்பொழுதுதான் ஓர்மிசென்ட் தான் மிகபெரும் வியாபாரி என்பதை நிரூபித்தான்

அதாவது மீர்ஜாபர் நவாப், வெள்ளையருக்கு பெரும் கப்பம், ஆனால் தனக்கு என்ன என கணக்கிட்ட ஓர்மிசென்ட் தந்திரமான காரியத்தை செய்தான்

அதாவது இருவருக்கு தெரிந்தால் ரகசியம், மூன்றாவது ஒருவருக்கு தெரிந்தால் அம்பலம் என்பதை அமல்படுத்தினான்

தன் ஆட்களிலே ஒருவனை அரசு உளவாளியிடம் தகவலை போட்டு கொடுக்க சொன்னான் , விஷயம் நவாபினை எட்டியது, என்ன விஷயம்

மன்னர் மன்னா உங்களை ஒழித்துகட்ட நாட்டில் சதியாலோசனை நடக்கின்றது, ஆங்கிலேயரும் கலந்திருக்கலாம்

மிக நுட்பமான தந்திரம் ஓர்மிசென்டுடையது, அதாவது யார் சதியாலோசனையில் உண்டு என்பதை சொல்லாமல் மீர் ஜாபரை எல்லாம் மறைத்து வெள்ளையரை மட்டும் சிக்கலில் இட்டான்

நவாப் இதுபற்றி கொதித்தெழுந்த நேரம் சும்மா நலம் விசாரிக்க சென்றான் ஓர்மிசென்ட் , நவாப் இந்த சதியாலோசனை பற்றி ஓர்மிசென்டிடமே கேட்டார், அய்யா ஓர்மிசென்ட் இங்கு எனக்கெதிராக சதி நடக்கின்றதாம், உமக்கு ஏதும் தெரியுமா? இந்த வெள்ளையர் திட்டமாமே என உறுமினான்

ஓர்மிசென்டோ அட்டகாசமாக நடித்தான், அய்யா வெள்ளையர்கள் உங்களுக்கு அஞ்சி ஒடுங்கி கிடக்கின்றனர், நேற்று கூட நீங்கள் இல்லை என்றால் அவர்கள் வியாபாரம் இல்லை என கண்ணை கசக்கினார்கள் அவர்களாவது சதியாவது என சொல்லி நவாபினை நம்ப வைத்தான்

அங்கு நவாபினை நம்ப வைத்துவிட்டு இந்த சதி கூட்டத்தை கூட்டி புன்னகைத்தான்

அன்புடையீர் உங்கள் சதிதிட்டம் நவாபிற்கு தெரிந்துவிட்டது, ஆனால் அவரை நம்ப வைத்து உங்களை காப்பாற்றி இருக்கின்றேன், நான் நினைத்தால் நொடியில் நவாபிடம் உங்களை பற்றி சொல்லி நொடியில் கொல்லமுடியும், உங்கள் குடுமி, உயிர் எல்லாம் என் கையில், எப்படி வசதி?

மொத்த சதி ஆலோசனை கூட்டமும் திகைத்தது, கிளைவிற்கோ கடும் ஆத்திரம். இந்த மனிதன் இவ்வளவு கீழ்தரமானவனா என கடும் கோபம் கொண்டாலும் வெளிகாட்டவில்லை மாறாக பேரம் பேசினான்

ஓர்மிசென்ட் உம்மை நன்றாக அறிவேன், சுற்றி வளைத்து பேச வேண்டாம். உமது லாபம் என்ன அதை சொல்லும்

கிளைவ் நேரடியாக விஷயத்திற்கு வந்ததை புரிந்த ஓர்மிசென்ட் சொன்னான், நீங்களும் நவாபும் சண்டையிடுங்கள் சாவுங்கள் ஆனால் ரகசியம் காக்க எனக்கு 3 லட்சம் பவுண்டுகள் கொடுங்கள், இல்லாவிட்டால் அவ்வளவுதான்

கிளைவ் அதிர்ந்தான், அது மிகபெரும் பணம் அன்று கிட்டதட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவு பெரிது

கிளைவ் மெதுவாக சொன்னான், இப்பொழுது பணமில்லை ஆனால் மீர் ஜாபர் நவாப் ஆனவுடன் உமக்கு கொடுக்கபடும், இப்போது எங்களை காட்டிகொடுக்காமல் இரும்

ஆனால் ஜெகஜால கில்லாடியான ஓர்மிசென்ட் அப்படியானால் எனக்கு 3 லட்சம் பவுண்ட் கடன்பட்டதாகவும், இன்னும் சில நிபந்தனைகளுக்கு கட்டுபடுவதாகவும் எழுதி கொடுங்கள் என மிரட்டினான்

கிளைவ் யோசித்தான், நாங்கள் ஆலோசித்து நாளை எழுதி கொடுக்கின்றோம் என சொல்லி அப்போதைக்கு அவனை அனுப்பிவிட்டான்

இந்தியாவினை யார் ஆளபோகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் பத்திரம் அது, அதை எப்படி எழுதலாம் என யோசித்தான் கிளைவ்

ஓர்மிசென்டின் துரோகத்தை துரோகத்தால் வெல்ல துடித்தான்

அட்டகாசமாக திட்டமிட்டான், இரு ஆவணங்களை தயார் செய்தான், முதலாவது வெள்ளை காகிதத்தில் எழுதபட்டது அதுதான் உண்மையானது அதில் ஓர்மிசென்டின் நிபந்தனை எல்லாம் இல்லை

இரண்டாவது சிவப்பு காகிதத்தில் ஒன்றை தயாரித்தான் அது போலியானது, அதில் ஓர்மிசென்ட் மகிழுமாறு நிபந்தனைகளை எழுதியிருந்தான்

இதில் ஒரு சிக்கல் வந்தது, கமிட்டியின் மற்ற உறுப்பினர்களான மீர் ஜாபர், வாட்சன், மார்வாடி பார்ட்டி உண்மையான வெள்ளை ஆவணத்தில் மட்டும் கையெழுத்திட்டது.

கிளைவ் சிகப்பு நிற காகிதத்தில் ஒரு ஆவணத்தை ஓர்மிசென்டின் கோரிக்கையினை நிறைவேற்றுவது போல் எழுதி வாட்சன், மீர் ஜாபர் போன்றோரின் கையெழுத்தை அவனே போட்டுகொண்டான்

மறுநாள் சிகப்பு காகிதத்தை ஒர்மிசென்டிடம் ஒப்படைத்து தாங்கள் எல்லோரும் ஓர்மிசென்டிடம் சரணடைந்ததாக சொல்லிகொண்டான்

ஓர்மிசென்டிற்கு ஏகபட்ட மகிழ்ச்சி, தான் மிகபெரும் சாமார்த்தியசாலி என நினைத்து கொண்டார்

கிளைவோ அவர் இப்போது மகிழட்டும் நாளை சபையில் அதை அவர் கொண்டுவந்தால், வாட்சன் மீர் ஜாபர் கையெழுத்திட்ட வெள்ளை காகித ஆவனமும் வாசிக்கபடும் அதில் ஓர்மிசென்டுக்கு ஒன்றும் சாதகமாக இல்லை

ஆளுக்கொரு பத்திரம் வைத்திருந்தால் இரண்டும் உண்மை இல்லை என்றாகிவிடும் என மனதிற்குள் மகிழ்ந்தான் கிளைவ்

கிளைவோ இப்போதைக்கு சதிதிட்டம் மன்னருக்கு தெரியாமல் மறைக்கபட்டாலும் இந்த ஓர்மிசென்ட் என்றேனும் ஒருநாள் சொல்லிவிடுவான் அதற்குள் யுத்தம் தொடங்க முடிவெடுத்தான்

தன் திட்டத்தை இறுதி செய்தான், நவாபினை வம்புக்கு இழுத்து போர் தொடங்குவது, போரில் மீர் ஜாபர் வந்து தன்னோடு இணைந்துகொள்ள வேண்டும்

அதனால் நவாப் தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இன்னும் சில லட்சங்களை நஷ்ட ஈடாக தரவேண்டும் என வம்பிழுத்து கடிதம் எழுதினான் கிளைவ்

நவாப் சிராஜ் உட்வாலா துடித்தெழுந்தார், என்னடா இது? அன்றுதான் நலம் விசாரித்து கடிதம் எழுதினான் கிளைவ், இன்று மிரட்டுகின்றானா, ம்ம்ம் படை கிளம்பட்டும் என உத்தரவிட்டான்

40 ஆயிரம் வீரர்கள், 100 பீரங்கிகள் அவற்றை இழுக்க மாடுகள், யானைகள், ஆயிரம் பிரெஞ்ச் வீரர்கள், என பெரும் படை புறப்பட்டது

அந்த வீரர்களில் பெரும்பாலும் பஞ்சாப், ராஜபுத் வீரர்களும் இருந்தது, தென்னக வீரர்களை விட அவர்கள் உடல்வாகு வலுவாக இருந்ததாக கிளைவிற்கு தோன்றிற்று

கிளைவின் படை நவாபின் படையினை விட 20 மடங்கு சிறியது, கிளைவின் ஒரே நம்பிக்கை மீர் ஜாபர் தம்மிடம் ஓடிவருவான் என்பது

யுத்தம் தொடங்க இடமும் குறிக்கபட்டது, ஹூக்ளி நதிகரையின் பிளாசி தேர்வானது

ஆம், இந்தியாவில் ஆங்கிலேயரை வலுவாக காலூன்ற செய்த பிளாசிபோர் தொடங்க இருந்தது

ஆனால் யுத்தம் தொடங்க ஒரு நாள் இருந்தபொழுதும் மீர் ஜாபர் வந்து சேரவில்லை, ஆம் நவாப் முன் அஞ்சி நடுங்கி நின்றான் ஜாபர்

கிளைவிற்கோ கலக்கம் வந்தது, தன் வாழ்நாளில் முதன் முறையாக கலங்கி நின்றான் கிளைவ்

மீர் ஜாபர் வருவதாக தெரியவில்லை, ஆற்றை கடந்தால் பிளாசி, இச்சிறியபடை ஆற்றை கடந்து நவாபினை எப்படி வெற்றிபெறும் என யோசித்த கிளைவ் தன் படையினரிடமே ஆலோசனை கேட்டான்

போரை நிறுத்திவிட்டு ஓடலாம் என்றனர் படைகள், திகைத்தான் கிளைவ்

மீர்ஜாபரும் வராத நிலையில் தனியாக மாமரத்து அடியில் இருந்து சிந்திக்க தொடங்கினான், அவனின் உள்ளுணர்வு போரை தொடங்க சொன்னது

அந்த போர் தொடங்கியிராவிட்டால் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியே இல்லை

வருவது வரட்டும் என ஆற்றை கடந்தான் கிளைவ், நவாபினை விட்டு கிளைவ் பக்கம் செல்ல அஞ்சியபடி நின்றிருந்தான் மீர்ஜாபர்

பிளாசியில் ஒரு கரையில் இருந்தான் கிளைவ், 1 கிமி தொலைவில் இருந்தது நவாப் சிராஜ் உத்தவ்லாவின் படை

எண்ணிக்கையில் பெரும் மடங்கு நவாபின் படை. நால்வகை படைகளும் கூடவே பீரங்கி படைகளும், துணைக்கு பிரெஞ்சிக்காரரின் துப்பாக்கி படையும் இருந்தது

அக்கால பிரஞ்காரர்கள் இன்று பழனிசாமி அரசுக்கு பாஜக முட்டு கொடுப்பது போல கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரானவர்களுக்கு துணைக்கு வந்து கொண்டே இருந்தனர்

பிளாசி மாமமரத்தின் அடியில் தனியே அமர்ந்தான் கிளைவ், அவன் உள்ளம் பெரும் வருத்தத்திலும் குழப்பத்திலும் இருந்தது.

ஆம் மீர்ஜாபர் படையுடன் தன்னோடு வரவேண்டும் என்பதுதான் அவனின் திட்டம், ஆனால் ஜாபரோ வருவதாக இல்லை

இதோ யுத்தம் தொடங்கபோகின்றது, இதுவரை வராத ஜாபரா இனி வரப்போகின்றான்? எப்படி எல்லாம் இந்தியாவில் துரோகிகள் இருக்கின்றார்கள்

ஓர்மிசென்ட், மீர்ஜாபர் என அவன் நினைவில் வந்துகொண்டே இருந்தார்கள், அவனோ யுத்தத்தில் வெல்ல வாய்ப்பில்லை என்றே கருதினான், தற்கொலை என்ணம் கூட வந்து போயிற்று

சாவதே சவாம் களத்தில் சாவோம் என என எண்ணி விடிந்ததும் யுத்த களம் சென்றான்

இந்திய வரலாற்றின் மிக மிக முக்கியமான யுத்தம் அது

ஆம், இந்தியாவின் மிக முக்கியமான அரசான முகலாய அரசில் பஞ்சாப் டெல்லி வங்கம் ஆகியவை மகா முக்கியமான பகுதிகள்

வங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவோர் அப்படியே முன்னேற வாய்ப்பு பிரகாசமாக இருந்தது, இது பிரெஞ்ச்காரருக்கும் தெரியும்

இந்தியாவினை யார் ஆளபோகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் அந்த யுத்தம் தொடங்கியது, பிளாசி போர்

அது ஜூன் 23, 1757

60 ஆயிரம் வீரர்கள் இருந்த நவாபின் படையினை நேருக்கு நேர் எதிர்கொண்டான் கிளைவ், அவர்களை முன்னேற விட்டால் தொலைத்துவிடுவார்கள் என்பது அவனுக்கு தெரியும்

ஆம் ஆள் அம்பு, கோடாரி, கத்தி என வந்தால் நொறுக்கிவிடுவார்கள்

இதனால் தன் பீரங்கிபடையினை முதலில் தாக்க உத்தரவிட்டான், அதற்கு தக்க பலன் இருந்தது

கிளைவின் பீரங்கிதாக்குதலில் நவாபின் படைகள் சமநிலை இழந்தன, முக்கியமாக நவாபின் பீரங்கி படைகள் சரியாக இயங்கவில்லை

நவாபின் படை பெரும் படைதான், ஆனால் யுத்த தயாரிப்பு இல்லாமல் இருந்தது , இதை பயன்படுத்தினான் கிளைவ்

நிச்சயம் கொஞ்சம் தாக்குபிடித்திருந்தால் நவாப் கிளைவ் படைகளை நொறுக்கி இருக்கலாம், ஆனால் பின் வாங்க உத்தரவிட்டதுதான் பெரும் தவறாயிற்று

கிளைவின் பீரங்கிக்கு பதில் சொல்லமுடியாமல் நவாப் படைகள் பின் வாங்க, முன்னேறினான் கிளைவ்

இந்த மீர்ஜாபர் என்பவர் என்ன செய்தார் என்றால், மிக மிக சாமார்த்தியமான விஷயத்தை செய்தான்

என்ன செய்தான்?

கிளைவ் சொன்னபடி அவனோடு ஓடியிருந்தால் நவாப் விட்டிருக்கமாட்டான், ஒருவேளை கிளைவ் பக்கம் தோற்றுவிட்டால் தன் கதி அதோ கதி

அதே நேரம் கிளைவினையும் பகைக்க முடியாது, இருவருக்கும் பொதுவான காரியத்தை செய்ய வேண்டும்

உண்மையில் மிகபெரும் தந்திரமான காரியத்தை செய்தான் மீர்ஜாபர்

நவாபோடு யுத்தம் செய்ய சென்றவன், யுத்தம் நடக்கும்பொழுது தன் படையினை கலைத்துவிட்டு ஓடிவிட்டான்

மீர்ஜாபர் ஓடியபின் கிளைவிற்கு யுத்தம் எளிதாயிற்று, அசால்ட்டாக அடித்தான்

ஆனாலும் அவன் அடிமனதில் ஆச்சரியம் இருந்தது, எப்படிபட்ட மனிதர் இந்த மீர்ஜாபர், காலத்தை கணித்தே முடிவு எடுக்கும் மாபெரும் தந்திரசாலி இவரிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்

நவாப் படைகள் தோற்று ஓடின, அவர்களுக்கு 500 பேர் செத்தனர், கிளைவ் படைக்கு இழப்பு வெறும் 40 பேர்

கிளைவ் பிடித்த நிலபரப்பு கிரேட் பிரிட்டனை விட பெரியது, அது இங்கிலாந்தில் பெரும் சாதனையானது

பின்னாளில் சூரியன் அஸ்தமிக்கா பெரும் சாம்ராஜ்யமான பிரிட்டன் இப்படித்தான் தொடங்கியது, தொடங்கியவன் கிளைவ்

யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி வங்கத்தை கைபற்றி அலறவிட்டிருந்தான் கிளைவ், மீர் ஜாபர் அவனை பாராட்டி கடிதம் எழுதினான்

(அதற்கு முன்பு மிர் ஜாபர் என்ன செய்தான் என்றால் அவன் நவாப் சிராஜ் உத்தவிலாவிடமே சென்றான், பெரும் படை திரட்டி ஆங்கிலேயரை வெல்வோம் என்றான், நவாபும் சரி என்றார்

ஆனான் நபாபே நீர் இங்கு இருக்க முடியாது, அயோத்தி சுல்தானிடமோ இல்லை பாட்னாவிற்கோ சென்றுவிடுங்கள் என சொல்லி அவரை அனுப்பி வைத்தான்

சிராஜ் உட்டவ்ளா பாட்னாவிற்கு தப்பினான், பெரும் படை திரட்டி கிளைவினை வெல்லும் வெறி இருந்தது)

கிளைவும் அவனை தன்னை வந்து சந்திக்குமாறு கட்டளையிட்டான், ஓடிவந்து நின்றான் மீர்ஜாபர்

தன் கோபம் எதையும் வெளிகாட்டிகொள்ளாமல் தகுந்த நேரத்தில் நீர் ஓடியதாலே வெற்றி சாத்தியமாயிற்று, இனி நீரே நவாப் என அறிவித்தான் கிளைவ்

மீர் ஜாபர் வங்கத்து நவாபானார், கிழக்கிந்திய கம்பெனிக்கு வருமானம் கொட்டியது

கிளைவின் கீர்த்தி பெருகியது, கிட்டதட்ட 30 வயதிற்குள் பிரிட்டனை விட பெரும் நாட்டை வளமான நாட்டை பிடித்து காட்டியிருந்தான்

அந்த ஓர்செமென்ட் கிளைவுடன் செய்த பத்திரத்தை எடுத்து வந்தான், இது நாம் செய்த ஒப்பந்தம் அல்ல நாம் செய்தது இதோ என ஒன்றை காட்டினான் கிளைவ்

அதில் ஓர்ச்ச்மென்டின் கையெழுத்தை அவனே இட்டிருந்தான், அதிர்ந்தான் ஓர்ச்மென்ட் அவன் புகாரளிக்க மன்னனுமில்லை, அத்தோடு தெருவில் பைத்திமனானான் ஆர்ச்மென்ட்

அந்த வங்கம் இதே ஜனவரி 2ல் பிரிட்டானிய கம்பெனி சொத்தாக மாறிற்று

அதன் பின் நடந்ததெல்லாம் கொள்ளையோ கொள்ளை, கிளைவ் ஒருபக்கம் அடிக்க அவனின் அடிப்பொடிகள் பன்மடங்கு அடித்தனர்

மற்ற போர்களில் கிளைவ் பிசியாக இருக்க, அவன் அடித்த கொள்ளைவிட பன்மடங்கு கொள்ளை பிரிட்டானியரால் அடிக்கபட்டன‌

இன்றைய சிரியாவும் ஈராக்கும் லிபியாவும் சுரண்டபடுவது போல வங்கம் சுரண்டபட்டு பஞ்சம் வந்தது

உலகுக்கே படி அளந்த வங்கம் பட்டினி சாவினை கண்டது, அதிலே மனமுடைந்து தற்கொலை செய்தான் கிளைவ்

அவனுக்கு மனசாட்சி இருந்தது

அந்த வங்கம் பின் எழுச்சி பெற்று விவேகானந்தர் முதல் போஸ் வரை பலர் வந்தார்கள் 1906ல் கர்சனால் பிரிக்கபட்டு பின் ஒரு பக்கம் பாகிஸ்தானாகி தனிநாடும் ஆயிற்று

இன்று பிழைக்க வழியின்றி அந்த கிழக்கு வங்க மக்கள் நாடு நாடாய் ஓடுவதும் உலகெல்லாம் கை ஏந்தி நிற்பதும் காலகொடுமை

எப்படிபட்ட மண் அது? அதன் வளமை என்ன பெருமை என்ன? செல்வமென்ன‌

எல்லாம் அந்த மன்னனாலும் அவனை சாதுர்யமாக எதிர்கொண்ட கிளைவாலும் வந்தது

இன்று குடியுரிமை சட்டத்தால் வங்கதேசத்தவர் இந்தியாவில் நிர்கதியாகும் பொழுது அந்த சிராஜ் உத்தவுலாவும், கிளைவும், அந்த மீர் ஜாபரும், ஓர்ச்ச்மென்டும் நினைவுக்கு வருகின்றார்கள்

இவர்கள்தான் இன்றை வங்க சீரழிவுக்கு முதல் காரணம்

நாகரீகம் அறிந்த இஸ்லாமியர் பெருவாரி இருக்கின்றார்கள்

திமுக காங்கிரஸில் இருக்கும் நல்ல இஸ்லாமியர், நற்குணம் படைத்தோர் கொஞ்சமேனும் நியாய தர்மம் அறிந்த இஸ்லாமியர் நெல்லை கண்ணனையோ அவரோடு கைதட்டிய அந்த கூட்டத்தை கண்டிக்கின்றனர்

நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையும் சொல்லாமல் அவரை கண்டிக்காத அந்த கூட்டம் நடத்திய கோஷ்டியினை கண்டிக்கின்றார்கள்

அந்த நேர்மையினை நாம் வாழ்த்துகின்றோம்

ஆனால் வீம்புக்கு கண்ணனுக்கு முட்டுகொடுக்கும் சில பதர்களை பார்த்தால் பரிதாமமே மிஞ்சுகின்றது

இந்நாட்டில் நாட்டு நலம் அறிந்த, சமூக அமைதி அறிந்த, நாகரீகம் அறிந்த இஸ்லாமியர் பெருவாரி இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சி, இது நமது தேசம் என உணரும் அவர்களை வாழ்த்துகின்றோம்

ராணுவம் உஷார் படுத்தபட்டுள்ளது

தாவூத் இப்ராஹிம் போல பாகிஸ்தானுக்கு தப்பவிடாமல், மும்பை கோவை போல நெல்லையிலும் பெரும் தொடர் குண்டுவெடிப்பு நடக்கவிடாமால் தடுத்து அந்த தீவிரவாதி நெல்லை கண்ணனை கைது செய்துவிட்ட தமிழ்நாட்டு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

நெல்லை கண்ணனுக்கும் கடந்தவருடம் கொழும்பில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உண்டா என இலங்கையும்

ஐஎஸ் இயக்க தலைவன் கொல்லபட்டதற்கு பழிவாங்க நெல்லை கண்ணன் கிளம்பினாரா என அமெரிக்க உளவுதுறையும் இந்திய அரசை கேட்டுகொண்டிருப்பதாக உறுதிபடுத்தபடா தகவல் வருகின்றது

எனினும் நெல்லை கண்ணன் எனும் பெரும் தீவிரவாதி கைது செய்யபட்ட நிலையில் காஷ்மீரில் பெரும் வன்முறை வெடிக்கலாம், ஆத்திரமுற்ற‌ பாகிஸ்தான் இந்திய‌ எல்லையில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் உஷார் படுத்தபட்டுள்ளது.

திமுக தலமைக்கு புதிய சிக்கல் ஆரம்பித்தாயிற்று

தமிழக பத்திரிகை செய்திகளை படித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் விளங்கும்

ஆம், திமுக தலமைக்கு புதிய சிக்கல் ஆரம்பித்தாயிற்று, சிக்கலை தேடிகொண்டது யாரென்றால் சாட்சாத் அவரேதான்

ஆம் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இரு பெண்கள் கோலமிட்டனர், காவல்துறை கைதுசெய்தது

உடனே திமுக களத்தில் குதித்து “போர்கோலம்” பூண்டது, அவர்களின் படை, குத்தீட்டி, களம், போர், கேடயம், வெற்றிகொடி,கோட்டை எல்லாமே கற்பனை

அப்படி அவர்கள் கண்ட கோல போராட்டாம் அவர்கள் போர்கோலம்

போர்கோலம் முடிந்து அந்த கைதான பெண்கள் விடுதலையாகி திமுக தலமையினையும் சந்தித்தார்கள், திமுக தலமையும் வெற்றி சிரிப்பு சிரித்தது

பண்டைய அரசர்கள் வெற்றிபெற்று சூடும் வேப்ப‌ம்பூ மாலை மட்டும் தலையில் இல்லை

திமுக அறிவித்த போராட்டத்தை அடுத்து சில பெண்கள் கோலமிட்டு சர்ச்சையில் சிக்கினர், அதாவது அடுத்தவர் வீட்டு முற்றதில் கோலம் போட்டு இம்சை செய்த சர்ச்சை அது

அங்குதான் காவல்துறை வந்தது

கைதான பெண்களின் பின்னணியினை விசாரித்த காவல்துறை அப்பெண்கள் பத்திரிகையாளராகவும் பாகிஸ்தானுடன் தொடர்பில் அதாவது பாகிஸ்தானிய பத்திரிகை உலகுடன் தொடர்பில் இருந்ததையும் தூக்கிவிட்டார்கள்

சமீபத்தில் ஈரானில் பெரும் போர்கோலம் வெடித்தது, முதன் முறையாக புரட்சி ஈரானில் ஏற்பட்ட கலகம் காரணமாக காரணத்தை கண்டறிய முடியாமல் தவித்த ஈரான் பின்பு தன் நாட்டு பத்திரிகையாளர் 8 பேர் அமெரிக்க பத்திரிகையுடன் தொடர்பில் இருப்பதையும் அவர்களே சிக்கலுக்கு காரணம் என அறிந்து தூக்கியது

அத்தோடு நாட்டில் அமைதி திரும்பிற்று

தமிழக காவல்துறையும் அதே பாணியினை கையில் எடுத்து காட்சிகளின் மூலத்தை கண்டறிந்துவிட்டது, இது சாதாரணமாய் முடியாது

திமுக கோலம் போடும் போராட்டத்தை அறிவிப்பதும் அதில் பாகிஸ்தானிய தொடர்புள்ள பத்திரிகையாளர் சிக்குவதும் தற்செயலாக நடக்குமா என்ன?

தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி ஆதாரமின்றி பேசவும் முடியாது

ஆக இம்ரான்கானின் தளபதிகளான டான் நெல்லை கண்ணன் சிக்கிவிட்டார், அவரின் தமிழக ஜெனரல் இதோ சிக்க போகின்றார்

ஆக திமுகவினை விட இம்ரான்கானுக்கே மகா சோகமான காலம்

சீனாவுக்கு காலம் கடந்து ஞானம் வந்திருக்கின்றது

சீனா அமெரிக்காவுடன் வாணிப யுத்தம் நடந்தி இன்னும் முடிவுக்கு வராமல் அது இழுத்து கொண்டிருப்பதில் வாளை கீழே வைத்துவிட்டு ஓய்ந்து அமர்ந்துவிட்டது

நிச்சயம் அமெரிக்க பொருளாதாரமும் அது கட்டுபடுத்தும் உலக சந்தை பலமும் சாதாரணம் அல்ல, அதை எதிர்த்து நிற்கும் பலம் இப்போதைக்கு உலகில் ஒரு நாட்டிடமும் இல்லை என்பதுதான் நிஜம்

இதை நன்கு உணர்ந்துவிட்ட சீனா, இனி புத்தர்வழிக்கு திரும்புதல் நலமென கண்டுவிட்டது, புத்தவழி என்றால் அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்து ஒரு கூட்டணி வைத்து அமைதியாக அமெரிக்காவினை எதிர்ப்பது

தன்னை சுற்றி எல்லோருடனும் வம்பு வளர்த்திருக்கும் நாடு சீனா, இப்பொழுது அந்நிலையில் இருந்து மாறுகின்றது

“உலகம் சமநிலை பெறவேண்டும், உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்” என சீர்காழி பாடலை பாடியபடி அது கிளம்பிவிட்டது

அந்த தீடீர் ஞானோதயபடி ஜப்பானை நோறுக்குவோம் இரண்டாம் உலகபோருக்கு பழிவாங்குவோம் என சொல்லிகொண்டிருந்த சீனா இப்பொழுது ஜப்பானுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துவிட்டது

ஜப்பானுக்கு இது மகிழ்ச்சி என்றாலும் டிரம்ப் கண்ணை உருட்டுகின்றார், ஜப்பானோ அமைதிக்கு நாங்கள் என்றுமே திறந்த கதவோடு இருப்பவர்கள் என சொல்லிகொண்டிருக்கின்றது

இந்த “யாதும் ஊரே யாவரும் கேளீர்” திட்டத்தில் இந்தியாவினையும் இணைத்துவிட்டது சீனா, சீனாவின் ராணுவ அமைச்சகமே இந்தியாவுடன் இனி உரசல் இல்லை நாம் இணைந்து செயல்பட தயார் என்ற சாயலில் பேசியாயிற்று

நிச்சயம் இந்தியாவுக்கு இது சாதகமான நேரம்

இந்திய சீன உறவு மேம்படும் நிலையில் “அண்ணே , வேண்டாம்ணே நான் மருந்து குடிச்சி செத்துருவேம்ணே ” என சீனாவிடம் அழ தொடங்கிவிட்டது பாகிஸ்தான்

சீனாவோ ராமாயணத்து ராமனாக அவன் எனக்கும் மூன்றாம் தம்பி நீ நான்காம் தம்பி என தத்துவம் பேசிகொண்டிருக்கின்றது

ஆக சீனா அச்சுறுத்தல் இனி கொஞ்சகாலத்துக்கு இல்லை, இந்தியா எதிர்பார்த்ததும் இதுதான்

1950ல் இதனை சொன்னார் நேரு, நாம் ஆசியாவின் பெரிய நாடுகள் நமக்குள் ஒற்றுமையாய் இருந்தால் உலகை ஆளலாம் என்றார், சீனாவுக்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அவர் வாங்கி கொடுத்தது இதனாலேயே

“இந்தோ சீனா பாய் பாய்” என முழங்கி நின்றார் அந்த பெருமகன், ஆனால் மாவோ முதுகில் குத்தினான்

இப்பொழுது சீனாவுக்கு காலம் கடந்து ஞானம் வந்திருக்கின்றது

இதை எல்லாம் கணித்துத்தான் மகாபலிபுரத்தில் ஜின்பெங்குடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு ஏதோ சொல்லியிருக்கின்றார் மோடி

வழக்கமாக மோடி இரண்டாம் இந்திரா என்றுதான் அழைக்கபட்டார் இன்றுமுதல் இரண்டாம் நேருவுமாகிவிட்டார்