கிரண்பேடி ஒன்றும் தவறாக சொல்லவில்லை

அந்த கிரண்பேடி ஒன்றும் தவறாக சொல்லவில்லை

மனிதனின் காதுகளுக்கு குறிப்பிட்ட அதிர்வு ஒலிகளை மட்டுமே கேட்கும் சக்தி உண்டு, சில ஒலிகள் அளவு குறைந்தோ கூடியோ இருந்தால் மானிடனால் உணரமுடியாது

சூரியனை ஆய்வு செய்த சில கோள்கள் மட்டுமல்ல சில வான்வெளி ஆய்வுகள் சிறப்பு கருவிகள் மூலம் அந்த நுண்ணொலியினை பதிவு செய்து அதை விஞ்ஞான கருவிகள் மூலம் மானிட காது கேட்கும் வகைக்கு கொண்டுவந்தால் அது “ஓம்” எனும் ஓசையில் இருப்பதாக முன்பே சொன்னார்கள்

இது உலகில் எப்பொழுதோ சொல்லபட்ட விஷயம்

தகவல் தொடர்பு உலகில் இப்பொழுதுதான் அது கிரண்பேடி காதுக்கு எட்டியிருக்கின்றது அதை அம்மணி சொல்லிவிட்டார்

அவரை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்

அவர் ஒன்றும் தவறாக சொல்லவில்லை, இது என்றோ சொல்லபட்ட விஷயம்

ஒரு வெடிப்பின் மூலம் உருவான பிரபஞ்சம் இது, அந்த அதிர்வு விண்வெளியின் எல்லா பொருளிலும் உண்டு அது ஒரு அதிர்வு ஒலி மானிட காதால் உணரமுடியா ஒலி என்கின்றது விஞ்ஞானம்

இதை பிரணவ மந்திரமான “ஓம்” என சொன்னது இந்துமதம், அதுதான் தொடக்கம் என்றது

ஆதியிலே வார்த்தை இருந்தது என அதை சொல்வது பைபிள்

நாடக காதல் விவகாரத்தால் குடும்பங்களில் கண்ணீரும் அழுகையும் தொடரும்

இந்த நாடக காதல் விவகாரத்தால் குடும்பங்களில் கண்ணீரும் அழுகையும் தொடரும், அறியா பருவ மங்கையரின் வாழ்வு தொலையும் அதை வைத்து அரசியல்வாதியும் சாதி சங்க தலைவனும் வாழ்வான்

இப்பொழுது அதில் சினிமாக்காரனும் சேர்ந்துவிட்டான்

இவர்களால் ஒரு சிக்கலையும் தீர்க்கமுடியாது, யாருக்கும் வழிகாட்டவும் முடியாது. சிக்கலை தீர்க்கும் விஷயம் அடுத்த தலைமுறையினை வளர்ப்பவகள் கையில் இருக்கின்றது

நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சாதியிலும் உண்டு எக்காலமும் உண்டு

காதல் என்பது மானிட இயல்பு, ஹார்மோனோ இல்லை கர்ம பலனோ அதில் கொண்டு சேர்த்துவிடும்.

ஆனானபட்ட ராமனே அப்படி சிக்கி சீரழிந்தபொழுது மானிடரின் மனம் அப்படி விழத்தான் செய்யும் அது மாறாது

ஆனால் மழை மண்ணில் விழுவதை எவ்வளவு கவனமாக உரிய இடத்தில் சேமிக்க வழி செய்கின்றோமோ அப்படி காதலை பக்குவமாக கையாள சொல்லிகொடுத்தல் வேண்டும்

முதல் காரியம் பரம்பரை பெருமை, வெட்டி கவுரவம் 7 தலைமுறை சொத்து இதை கொஞ்சமும் சொல்லாமல் பிள்ளைகளை அவர்கள் இயல்பில் வளரவிட வேண்டும்

அப்பன் கோடீஸ்வரனாக இருந்தாலும் அவன் காசில் சல்லியோ இல்லை அவன் வீட்டு சுவரில் ஒரு செங்கலுக்கோ ஆசைபடா வகையில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்

தானே வளர்ந்து தன்னை பாதுகாக்க வேண்டிய நிலையில் அழுத்தத்தில் அதாவது பொறுப்பில் இருக்கும் பதிமவயதினர் மனம் காதலில் அவ்வளவு எளிதில் விழாது

சிறுவயதில் இருந்தே ஒருவித தெளிவில் குழந்தைகளை வளர்த்தால் எதையுமே எளிதாக கையாளும் அளவு தைரியமும் தெளிவும் சொல்லிகொடுத்தால் அவர்கள் காதலையும் தெளிவான மனநிலையோடு அணுகுவார்கள்

மேல்நாட்டு பெண்கள் முதல் ஜப்பானிய பெண்கள் வரை எல்லோருக்கும் ஆடையில் வித்தியாசம் உண்டே தவிர மனம் ஒன்றே

ஆனால் அவர்களிடம் இருக்கும் தைரியமும் தெளிவும் தமிழக பெண்களிடம் இல்லை. காதலையும் மனதையும் இன்னும் பலவற்றிலும் குழம்பி அந்த குழப்பத்தின் குறுகுறுப்பிலே விழுந்து அவர்கள் தெளியும் பொழுது விவகாரம் எல்லை மீறி போய்விடுகின்றது

காதல் நிச்சயம் பதின்மவயதினர் எல்லோர் தலைக்கு மேலும் வட்டமிடும் ஆனால் இது சரிவருமா, தனக்கும் வருங்கால வாழ்வுக்கும் அது பொருந்துமா என் யோசித்து முடிவெடுத்தல் அவசியம்

வெளிநாட்டினருக்கும் காதல் வருகின்றது, ஆனால் பதின்மவயதில் திருமணம் செய்யும் காதல் ஜோடி யாரையும் நீங்கள் பார்க்கமுடியாது

அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்து சொந்தகாலில் நின்றபின்பே திருமணம் செய்வார்கள் அதை எந்தகாரணம் கொண்டும் எந்த பெற்றோராலும் தடுக்க முடியாது

இங்கு வரதட்சணையும் அது கொடுக்கும் வலியும் , உழைக்காமலே மாமனார் வீட்டின் திரண்ட சொத்துக்கு ஆசைபடும் கூட்டமும் சில நாடக காதல்களை நடத்துகின்றன அதை மறுப்பதற்கில்லை

அவற்றின் குறி சொத்து ஒன்றே

இன்னொரு பக்கம் பொருத்தமானவன் என்றாலும் சாதி அந்தஸ்து இன்னபிற காரணங்களால் அக்காதல் பிரிந்து நாசமாகின்றது, பெரும்பாலும் சாதி கோஷ்டிகள் உள்ளே வரும் இடம் இதுதான்

காதலை தடுக்க முடியாது, இந்த சாதி இம்சைகளை இப்போதைக்கு ஒழிக்கவும் முடியாது

இச்சிக்கலை தீர்க்க நினைப்பவன் எவனுமில்லை அதை வைத்து எவனுக்கு எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கபார்ப்பான் அரசியல் செய்வான்

தீர்க்க நினைத்தால் செய்யவேண்டிய விஷயம் சில உண்டு

அவசரமாக செய்யவேண்டியது பதின்மவயது குழப்பமான ஆண்களோ பெண்களோ உரிய ஆலோசனை பெற கவுன்சிலிங்க் எனப்படும் ஆலோசனை அறையினை நிபுணர்களோடு பள்ளிகளில் கல்லூரிகளில் அமைப்பது

மாணவ சமூகம் நாட்டின் சொத்து என்பதால் அவர்கள் நலம்பெற இது மகா மகா அவசியம்

நம் சமூக அமைப்புபடி சில விஷயங்களை அவர்கள் பெற்றோரிடமும் உடன்பிறந்தோரிடமும் நண்பனிடமும் கூட சொல்லமுடியாது

அக்குழப்பத்திலே தவறான முடிவெடுத்து திசைமாறுகின்றார்கள், அதை தடுக்க அவர்கள் தங்கள் மன சிக்கலை கொட்ட ஒரு இடம் வேண்டும், அதற்கு வழிசெய்தல் வேண்டும்

ஊடகம் முதல் சினிமா வரை எல்லோருக்கும் சமூக பொறுப்பும் வேண்டும், வரும் படங்களும் பத்திரிகையும் கதை, இலக்கியம் என வரும் கண்ட குப்பைகளும் செல்லும் இடமெல்லாம் பதின்மவயதினரை குழப்பிவிடுகின்றன‌

அந்நிலை மாறவேண்டும், சினிமா முதல் டிவிவரை எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடு வேண்டும்

வெட்டி கவுரவம் பார்த்து வளர்க்காமல் குழந்தைகளை அவர்கள் இயல்பின் உண்மையான ஆன்மீகத்தில் வளர்த்தால் சிக்கல் வராது, அது எம்மதமாயினும் அதில் அழுத்தி வளர்க்கபடும் குழந்தைகள் வழிதவறி செல்வதில்லை

சிறுவயதில் இருந்தே உன் எதிர்காலம் உன்னை பொறுத்தது என வளர்க்கபடும் குழந்தை கடும் பொறுப்பின் காரணமாக வழிதவறாது, தஞ்சை பெரியகோவிலின் மேல் உள்ள கல் அந்த கல்தூண்களை விலகவிடாமல் பிடித்து வைத்திருப்பது போல பிடித்து வைக்கும்

இந்திய சமூகம் செய்யதவறும் பெரும் விஷயம் பெண்களை மதிக்க சொல்லிகொடுக்காதது

இதுதான் கொடூர கற்பழிப்பு முதல் ஆசிட் வரை சிக்கலுக்கு காரணம்

தன் வீட்டு பெண்ணை தெய்வம் என மதிப்பவன் அடுத்த வீட்டு பெண்ணையும் அப்படி நினைகும்படி வளர்த்தால் இங்கு ஏது சிக்கல்

இந்நாட்டு தர்மம் சிறு பெண்குழந்தைகளை கூட “தாயே” என அழைக்க சொன்ன தர்மம்

பெண்ணும் பசுவும் வலுவில்லாதவர்கள் அவர்களை நாமே காக்க வேண்டும் என ஆண்களுக்கு போதிக்கபட்ட அந்த தர்மம்..

ஆம் அன்னையினையும் தாரத்தையும் தவிர வேறு எந்த பெண் என்றாலும் அவளை வணங்கு என போதித்த தர்மம்

அந்த தர்மத்தை மீட்டெடுத்து பெண்களை மதிக்க தொடங்கும், பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஆண் சமூகத்தை உருவாக்கினாலே சிக்கல் தானாக வருங்காலத்தில் தீரும்

அதைத்தான் செய்ய வேண்டும்

மாறாக அம்பேத்கர் என தூக்கி திரிவதும், ஆண்ட பரபரைடோவ் பொண்ணும் மண்ணும் ஒண்ணுடோவ் என்பதெல்லாம் அரசியலுக்கும், சினிமா சம்பாத்தியத்துக்கும் ஊடகக்காரன் சம்பாதிக்கவுமே பயன்படும்

பெற்றோர் சொத்துக்க்கோ பெண்ணின் அப்பன் சொத்துக்கோ ஆசைபடாமல் உழைத்து வாழும் தலைமுறை உருவானால் எல்லாம் மாறும்

திரண்டிருக்கும் சொத்துக்களே பல குழப்பங்களுக்கு காரணம், அந்த சொத்துக்கு வட்டமிடும் கண்களும் அந்த சொத்தினை இவனா அல்லை இவளா அனுபவிப்பது எனும் வன்மமே காதல் குழப்ப கொலைகளுக்கும் சிக்கலுக்கும் மகா காரணம்

அந்த குழப்பத்தில் பஞ்சாயத்து பேசவரும் இழிபிறவிகள் மீதி சிக்கலுக்கு பெரும் காரணம்

இன்னும் அழுத்தமாக சொன்னால் அடுத்தவருக்காக இல்லாமல், சாதி சுற்றம் சொத்து இன்னபிற கருமாந்திரங்களை கணக்கெடுக்காமல் அவரவர் வாழ்க்கையினை அவரவர் வாழ்ந்து, அடுத்தவர் வாழ்க்கையினை அவரவர் விரும்பியபடி அவரவர் உழைப்பில் வாழவிடுதல் சால சிறந்தது

விலங்குகளும் பறவைகளும் அதைத்தான் செய்கின்றன, இறக்கை முளைத்தவுடன் பறவைகள் பறக்கின்றன‌

கால் பலத்தவுடன் குட்டிகள் பிரிகின்றன, மடியிலெ குட்டியினை சுமக்கும் குரங்கும் கங்காருவும் கூட அவை வளர்ந்ததும் விரட்டுகின்றன‌

மானிட சமூகம் ஒன்றே கால காலத்துக்கும் தன் சந்ததிமேல் அதிகாரம் செலுத்தி பாசம் பந்தம் என்ற வகையில் அதை கட்டிவைக்கின்றன, இதில் சாதியும் மதமும் கூடுதல் சங்கிலிகளாகின்றன‌

அவரவர் வாழ்க்கையினை அவரவரை உரிய காலத்தில் வாழவிடுதல் வேண்டும் அதுவரை நற்பயிற்சியில் வளர்த்தலே இச்சமூகத்துக்கு செய்யும் கடமை

மாறாக யாரும் யாருடனும் கடைசிவரை கூட இருந்து வாழவைக்க முடியாது, கொடுத்தனுப்பும் பொருளும் சாதிபெருமையும் அவர்களை கடைசி வரை வாழவைக்கவும் செய்யாது

அவரவர் வாழ்க்கையினை அவரவர்தான் வாழவேண்டும் இதில் குறுக்கே நிற்கும் யாரும் அவர்களுக்கு பெரும் துரோகமே செய்கின்றார்கள்

குடும்ப பெயர் என்பது நம் சொத்தில் அல்ல, பரம்பரையில் அல்ல உன் நடத்தையில் இருக்கின்றது, ஒவ்வொரு பெண்ணை நீ அவமானபடுத்தும்பொழுதும் அவள் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் கொடுமைபடுத்தும்பொழுதும் உன் அன்னை அழுகின்றாள் என ஒரு மகனை வளர்த்தால் அவன் நிச்சயம் நல்ல ஆண்மகனாக உருவாவான்

பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என ஆன்மீக மார்க்கமும் இந்த மண் தர்மமும் போதிக்கின்றதோ அப்படி பெண் இருக்க வேண்டும் என வளர்த்தால் நல்ல பெண் தலைமுறை உருவாகும்

இக்கால பெண்களிடமும் சிக்கல் உண்டு, ஆம் ஆண் மனது எளிதில் ஆசையினை வளர்த்துகொள்ளும் அதை சலனபடுத்திவிட்டு பின் தப்ப நினைக்கும் பெண்களும் சிக்கலுக்கு காரணம்

இந்த மண்ணின் தர்ம்படி பெண்ணை வளர்த்தால் எதிர்காலத்தில் எல்லாம் மாறும்

அன்று சாதி சங்கங்களுக்கும் அரசியலுக்கும் நாடக காதலுக்கும் அதை கண்டிக்கும் சினிமாவுக்கும் அவசியமே இருக்காது

சமூகம் அமைதியாய் இருக்கும், அதில் தெய்வம் வாழும்

ஒரு மண்ணும் புரியலண்ணே

அண்ணே மோடி அரசு நாசிச அரசு

நாசிசம் என்றால் என்ன?

தெரியாதுண்ணே சொல்லிகிட்டாங்க‌

யார் சொன்னா?

திமுக‌

நாசிசம்ன்னா என்ன சொல்லு

ஹிட்லர் கொள்கை நாசிசம்னு கருணாநிதி சொல்லிருக்கார்

ஹிட்லர் என்ன கொள்கை வச்சிருந்தான்

அதுதான் நாசிசம்

அடேய் நாசி கட்சின்னா ஜெர்மன் சோலிசம்னு அர்த்தம்

அப்படியாண்ணே

சரி, ஹிட்லர் யாருக்கு பாடுபட்டான் ஜெர்மனிக்கு

மோடி யாருக்கு பாடுபடுறார்

இந்தியாவுக்கு

அப்புறம் எப்படிடா மோடி நாசிஸ்ட் ஆவாரு

ஆமாண்ணே ஆகமாட்டாரு ஆனா பாசிஸ்ட் ஆயிருவாரு

பாசிஸ்ட்ன்னா என்ன?

முசோலினி பாசிஸ்ட்டாம் கனிமொழி சொல்லிருக்கு , ராகுல் சொல்லிருக்காரு

அடேய் பாசிசம்ன்னா இத்தாலில இருந்த ரோமை ராஜா வச்சிருந்த கோடாரி பெயரு

அய்யய்யோ அப்படியாண்ணே

அந்த ராஜா இத்தாலி வாழனும்னு கொள்கை வச்சிருந்தான் அதுதான் பாசிசம்

இப்படி விளக்கமா யாரும் சொல்லண்ணே

சரி இப்பொ சொல்லு பாசிசம்ன்னா என்ன‌

இத்தாலி வாழ்றது

மோடி யாருக்கு உழைக்கிறாரு

இந்தியாவுக்கு

பின்ன எப்படி அது பாசிசம் ஆகும்

ஒரு மண்ணும் புரியலண்ணே, அப்படி எங்கள ஆக்கிவச்சிட்டானுங்கண்ணே….

கம்யூனிசம் புகுந்த எந்த இடமும் உருப்படாது

கம்யூனிசம் புகுந்த எந்த இடமும் உருப்படாது, அங்கு குழப்பமும் கலவரமும் மட்டுமே மிஞ்சும்

அது ஆலையாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி.

தலமையினை வீழ்த்து குழப்பத்தை ஏற்படுத்து என்பதுதான் கம்யூனிச சித்தாந்தம், அதற்கு குழப்பம் ஏற்படுத்த தெரியுமே அன்றி தீர்வு சொல்ல தெரியாது

அரசை எதிர்த்துகொண்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவது அன்றி ஒரு மண்ணும் கம்யூனிசம் செய்யாது, அது அந்த ஒன்றுக்காகவே உருவாக்கபட்டது

உலகில் கம்யூனிசம் புகுந்த எந்த நாடும் உருப்படாது, சீனாவில் இருப்பது கம்யூனிசம் என்றால் அவர்களே சிரிப்பார்கள்

கம்யூனிசத்தை கையில் எடுத்த ரஷ்யா அதை தலைமொழுகி கடலிலே எறிந்துவிட்டது

கம்யூனிசம் நுழைந்தால் நாடு நாசமாகும் என அன்றே சொன்ன ஐரோப்பாவும் மேற்குலகமும் இன்றுவரை கம்யூனிசம் நுழையாமல் காவலிருக்கின்றன, காரணம் நுழையவிட்டால் அவ்வளவுதான்

கேரளமும் மேற்குவங்கமும் இங்கு கம்யூனிஸ்டுகளால் உருப்படாமலே போனது

அந்த நாசமாய் போன சிகப்பு பிசாசு கம்யூனிசம் டெல்லி பல்கலைகழகத்தில் நுழைந்தால் என்னாகும்?

பல்கலைகழகம் நாசமாகத்தான் போகும், அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது

வியாழகிழமை ரஜினிபடம் வழக்கம் போல வெளிவருகின்றது

ரஜினி சில சென்டிமென்டுகளில் ஒருகாலமும் மாறமாட்டார், அதிலொன்று வியாழகிழமை படத்தினை ரிலீஸ் செய்வது

இதெல்லாம் மூட நம்பிக்கை சனி கிழமை ராகுகாலத்தில் அப்படம் வெளியிட்டாலும் ஓடும் என பலகோடி கொடுத்து வாங்க வீரமணியும் தயார் இல்லை

ஆக வியாழகிழமை ரஜினிபடம் வழக்கம் போல வெளிவருகின்றது

இதற்கு ஹெலிகாப்டரில் இருந்து பூ தூவ சேலம் பக்கம் அனுமதி கேட்டிருக்கின்றதாம் ரஜினியின் முதியோர் ரசிக இயக்கம்

நாம் தமிழர் தும்பிகள் போன்றோருக்கு ஸ்ட்டிங்கர் ஏவுகனை எனும் ஹெலிகாப்டரை வீழ்த்தும் விஷயம் இருப்பது தெரியாது போல, அதுதானே சைமன் உண்மையிலே புலிகளுடன் பழகியிருந்தால் அல்லவா தெரியும்?

அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி

அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி

ராமசந்திரன் இறந்த பின்பே அடிக்கடி அதிமுகவில் உள்ளே வெளியே ஆடிகொண்டிருப்பர் கருப்பசாமி பாண்டியன்

அடிக்கடி திமுகவிற்கு வருவார் பின் ஓடிசென்று அதிமுகவில் சேர்வார், இரு கட்சிகளும் ஏன் போனார் என கேட்காது

காரணம் அவர் திரும்ப வருவார் என அவர்களுக்கே தெரியும். அப்படியே திரும்ப வரும்பொழுதும் தயக்கமில்லாமல் சேர்த்துகொள்வார்கள்,

இப்பொழுது அதிமுக சேர்ந்திருக்கின்றது

சில மாதங்களுக்கு முன்புதான் அவர் திமுகவில் இணைந்தார், பின்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்துவிட்டார்

ஓ அவரா விரைவில் வந்துவிடுவார் என கொஞ்சமும் அலட்டிகொள்ளாமல் இருக்கின்றது திமுக, இவரா? இந்தமுறை எத்தனை மாதம் இருப்பாரோ சரி செக் இன் செய்வோம் என சேர்த்து கொண்டது அதிமுக‌

இரு ஹோட்டல்களிலும் மாறி மாறி தங்கும் கருப்பசாமி பாண்டியன் இப்பொழுது அதிமுக ஹோட்டலில் ரூம் போட்டிருக்கின்றார் அவ்வளவுதான்

இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்?

ஈரானியர்களை தீவிரவாதிகள் என கொல்வதும், லிபியா சிரியா ஆப்கன் ஈராக்கில் எந்த தீவிரவாதியினையும் அசால்ட்டாக தூக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் இருக்கும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்?

மசூத் அசார், ஹபீத் மொகமத் என எவ்வளவு பேர் அங்கு பதுங்கியிருகின்றார்கள், அவர்கள் தலையில் ஒரு ஓலை பட்டாசினை கூட அமெரிக்கா வெடிக்காதது ஏன்?

இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஒழிந்துவிட கூடாது எனும் உலக அரசியலன்றி அது வேறல்ல