சாதிய படமாம், அதை வெளியிட கூடாதாம்..

எத்தனையோ படங்களில் இந்து தெய்வங்களை மகா கொச்சையாக விமர்சிப்பார்கள்

சமீபத்தில் கூட ஒரு யோகிபாபு படத்தில் சோ ராமசாமி உட்பட பலரை கடுமையாக விமர்சித்தும் ஈரோட்டு ராம்சாமியினை கடவுள் அளவுக்கும் செதுக்கியிருந்தார்கள்

அவர்கள் எவ்வளவும் செய்யலாம், இந்து மதத்தையும் அதன் கடவுள்களையும் மகா மட்டமாக கேவலபடுத்தலாம்

அவர்கள் சினிமாவில் பிராமணரை எவ்வளவும் சீண்டலாம், பழிக்கலாம்

ஆனால் இவர்கள் செய்யும் அட்டகாசத்தை சினிமாவாக‌ சொன்னால் அது சாதிய படமாம், அதை வெளியிட கூடாதாம்..

எதற்கு கிழித்தார்கள்?

ஆளுநர் உரையினை சட்டசபையில் கிழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆக இனி யாரும் திமுக சட்டபையில் என்ன கிழித்தது என கேட்டுவிட முடியாது

எதற்கு கிழித்தார்கள்?

ஒருவேளை பழனிச்சாமி அந்த அறிக்கையினை முக ஸ்டாலின் முதலில் வாசிக்க வேண்டுமென சொல்லிவிடுவார் என்று அஞ்சியிருப்பார்களோ?

இந்து அமைப்புகள் நுழைந்தது தவறு

என்ன இருந்தாலும் டெல்லி பல்கலைகழகத்துக்குள் இந்து அமைப்புகள் நுழைந்தது தவறு

ஆனால் அவர்கள் நுழையும் அளவு நிலமையினை மோசமாக்கி வழி செய்து கொடுத்தது அந்த தேசவிரோத மாணவர்களும் அவர்களை விட்டு வைத்த அரசும்

அந்த மனிதர் மகா சுவாரஸ்யமானவர்

அந்த மனிதர் மகா சுவாரஸ்யமானவர், தமிழ் திரையுலகம் கண்டெடுத்த ரத்தினம், தமிழ் சினிமாவுக்கே திருப்புமுனை கொடுத்தவர் பாக்யராஜ்

சினிமாவில் தன் அறிவாலும் திறமையாலும் ஜெயித்து வந்தவர் அவர், அவர் கொடுத்த முத்திரையும் அற்புதமான படங்களும் தமிழ் சினிமாவின் வரங்கள்

காலத்தால் மிஞ்சி நிற்கும் ரசனையான காட்சி முதல் சிரிக்க வைக்கும் காமெடி, உருகவைக்கும் சென்டிமென்ட் வரை அவர்படங்களின் முத்திரையே தனி

சாதாரண அசிஸ்டென்ட் டைரக்டராக வந்து, தனக்கென ஒரு இடத்தை பிடித்து எல்லோர் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்த அவரின் இடம் என்றுமே தனியானது உயரமானது

சராசரி முகமும் நடிகராகலாம் என சொன்னது அவரே, இயக்குநர் நடிகராகும் வித்தையினை அவர்தான் தொடக்கி வைத்தார்

கதை சொல்வது என்பது ஒரு திறமை, அதுவும் சினிமாவில் கதை என்பது ஒருவரியில்தான் இருக்கும், அதை 2.5 மணிநேரம் கொஞ்சமும் போரடிக்காமல் சுவாரஸ்யமாக சொல்வதுதான் கலை

அந்த கலையில் உச்சத்தில் இருந்தார் அவர், உதாரணம் நாயகனும் நாயகியும் சேருவார்களா மாட்டார்களா? என்பதுதான் கதை, அதை பல்வேறு சம்பவங்களை புகுத்தி காட்சிகளை புகுத்தி சுவாரஸ்யமாக நகர்த்த தனி திறமை வேண்டும்

அது பாக்யராஜிடம் கொட்டி கிடந்தது

பாக்யராஜின் முதல் பலம் அவரின் வாசிப்பு, சும்மா சொல்லகூடாது உலகின் எல்லா விஷயங்களையும் அவர் வாசிப்பார்

அது அவரின் பாக்யா பத்திரிகையில் அவ்வளவு அழகாக தெரியும், தமிழின் மிக சிறந்த பத்திரிகை பக்கம் பாக்யா இதழின் சில பகுதிகள்

இன்றிருக்கும் எந்த பத்திரிகையும், ஒளி ஊடகமும் அதன் தகவலுக்கும் ஆழத்துக்கும் நுட்பத்துக்கும் ஈடாகா

ஆனால் அது இங்கு கொண்டாடபடவில்லை என்பதுதான் சோகம், தமிழனின் வாசிப்பும் அவன் தேடலும் அதிலிருந்தே தெரிந்தது

நிச்சயம் பாக்யராஜின் லெவல் வேறு, அவரின் அறிவும் உயரமும் அந்த சுவாரஸ்யான கதை சொல்லும் அழகும் அதில் ஆங்காங்கே தூவும் அறிவார்ந்த தத்துவமும் காமெடியும் தனிரகம்

ஆனால் தமிழக ரசனைக்கேற்ப தன்னை சுருக்கிகொண்டார், என்ன செய்வது அவரின் தொழில் அப்படி

மனிதர் மகா சுவாரஸ்யமானவர், சுவாரஸ்யமாக கதைகளை சொல்வது எப்படி என்பதன் பெயரே பாக்யராஜ்தான்

அதனால்தான் தென்னிந்தியாவின் மிக சிறந்த கதாசிரியர் என போற்றபட்டார்

பாரதிராஜாவிடன் துணை இயக்குநராக பணியாற்றி, தொழில் கற்று அப்படியே கேமராவில் முகம் காட்டி, இயக்குநராகி நடிகராகி இசை அமைப்பாளராகி பாட்லாசிரியராகி திரைதுறையின் எல்லா பக்கங்களையும் படித்தவர் அவர்

மிக யதார்தாமான படங்களை, தமிழக வாழ்வியல் சூழலில் ஆற்றங்கரையில் வீசும் மெல்லிய காற்றுபோல் ரசனையாக கொடுத்தவர் அவர்

இன்றல்ல என்றும் தரமான காமெடிகளை அவர் படத்தில் மட்டுமே காணமுடியும், தேர்ந்த உருவாக்கம் அது

எல்லா திறமைசாலிக்கும் வரும் சோதனைகாலம் அவருக்கு முதல் மனைவியின் இறப்பில் வந்தது, ஆனால் அதை தாண்டினார்

பின்னாளில் மாறிவிட்ட தலைமுறையில் அவர் கலந்துகொள்ள விரும்பவில்லை நடிகனாய் ஓரமாய் நின்றுகொண்டார்

அவர் உடல்நலத்தில் குறிப்பாக குரலில் ஏற்பட்ட சில சிக்கல்களும் அதற்கு காரணம்

சின்னதிரையில் அவர் மின்னியிருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட விஷயங்களோடு நிறுத்தி கொண்டார்

பாலசந்தரும் பாரதிரஜாவும் வைரங்கள் ஆம் அது ஒரு பக்கம் மட்டும் மின்னும்

பாக்யராஜ் ஒரு வைடூரியம் அது நடிகன், கதாசிரியன், இயக்குநர், பாடலாசிரியர், இசை என எல்லா பக்கமும் மின்னும்

அவரிடம் சிலாகிக்க கூடிய விஷயம் அவரின் வாசிப்பு, அந்த நகைச்சுவை உணர்வு அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையாக நடித்து அவர் நடிகனாக ஜெயித்தது

அந்த முகமும் அந்த பாந்தமான குரலும் வென்றது அவரின் தன்னபிக்கையாலே

1980 முதல் 1995 வரையான காலம் அவருக்கானது, நிச்சயம் அப்பொழுது வந்த படங்கள் அவரின் படங்கள் எல்லாம் தமிழ்சினிமவின் எளிய யதார்த்த கோலங்கள்

முந்தானை முடிச்சு முதல் ஆரிரோ ஆராரிரோ வரை அவரின் படங்கள் எக்காலமும் நல்ல கதை அமைப்புக்கும் சுவாரஸ்யாமான கதைபோக்குக்கும் என்றும் எடுத்துகாட்டானவை

ஒரு காலம் வரும், அப்பொழுது பாக்யராஜ் எவ்வளவு மகத்தான கதை சொல்லி என்பதை உலகம் அறியும்

அவருக்கான பெரும் அங்கீகாரம் இங்கு கிடைத்ததா என்றால் எம்ஜி ராமசந்திரன் இருக்கும் வரை கிடைத்தது

குடும்ப கதைகளை வெகு இயல்பாக ரசிக்க ரசிக்க சொல்லியிருப்பார் பாக்யராஜ், அவர் படங்களில் பெரும்பாலும் பெண்களை மோசமாக சித்தரித்தில்லை, எது யதார்த்தமோ அதை அப்படியே சினிமாவில் செதுக்கியிருப்பார்

எளிய கிராமத்து குடும்பங்களையும் சராசரி குடும்பங்களையும் திரையில் அப்படியே காட்டியது பெண்கள் மத்தியில் தனிபெயரை அவருக்கு கொடுத்தது, ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தார்கள்

பூர்னிமா அதில் ஒருவராக அவரிடம் விழுந்திருக்கலாம்

1980 கால திரைபட உலகம் பாக்யராஜ் சொன்ன திசையில் சுழன்றது

எம்ஜி ராமசந்திரனிடம் ஒரு நல்ல விஷயம் உண்டு, நல்ல படங்களை ரசிப்பார் அப்படி எடுக்க சொல்லி ஊக்குவிப்பார்

அந்த ராமசந்திரன் பாக்யராஜினை கொண்டாடினார், பாக்யராஜ் என் கலையுலக வாரிசு என அவர் சொன்னது அன்று மாபெரும் அங்கீகாரம்

அதுதான் என்னவோ அவருக்கு கட்சி அடையாளம் கொடுத்து பின்னாளில் சில சிக்கல்களை கொடுத்தது

இன்று கொண்டாடபடவேண்டிய ஒரு சினிமாக்க்காரன் உண்டென்றால், பெரும் விழா நடத்தி ஒருவனை கவுரவிக்க வேண்டுமென்றால் பாக்யராஜ் ஒருவரே

அந்த பாக்யா மிக சிறந்த பத்திரிகை, தமிழின் அறிவார்ந்த பத்திரிகை. தமிழகம் அறிவினை தேடும் மாநிலம் என்றால் அது ஒன்றே பாக்யராஜுக்கு சொத்தாகவும் அடையாளமாகவும் மாறி இருக்கும்

ஆனால் வாசிப்பு அதிகமில்லா தமிழகம் அவரை சினிமாக்காரன் என்றே அறிந்து கொண்டது

நாம் மிகவும் ரசித்த அந்த கலைஞனை, மிக மிக சுவாரஸ்யமான இயக்குநரை கோலாலம்பூரில் சந்திக்க முடிந்தது

அவரிடம் பேசவும் கேட்கவும் எவ்வளவோ இருந்தாலும் நலம் மட்டும் விசாரித்து படமெடுக்க முடிந்தது, சில நிமிடம் மட்டுமே

அந்த ஹோட்டலில் நம்மிடம் விடைபெற்றதும், தன் பிரத்யோக நடையில் மாடியில் ஏறிகொண்டிருந்தார்

அவரின் அழிக்கமுடியா முத்திரை காட்சிகள் கண்ணுக்குள் அன்று சுழன்றன, அது இன்றும் சுழல்கின்றது

அந்த மாபெரும் கலைஞனுக்கு பன்முக வித்தகனுக்கு கலைதுறையின் வைடூரியத்துக்கு ஆக சிறந்த எழுத்தாளனுக்கு மிக சிறந்த வாசிப்பாளனுக்கு, அற்புதமான கற்பனையாளனுக்கு இன்று பிறந்த நாள்

ஜனரஞ்சகமான அந்த சுவாரஸ்ய கலைஞன் நூறாண்டுகள் வாழட்டும், எல்லா வளங்களையும் நிரம்ப பெற்று இன்னும் கலைதுறைக்கு பெரும் சேவையாற்றட்டும்.

அவரை சந்தித்த அன்று மகள் கேட்டாள் இது யாருப்பா?

“நம்ம டிவில காமெடியெல்லாம் பார்ப்போமே, தேவனே தேவனேன்னு ஒரு ஆன்டி பாடும்போது ஒரு அங்கிள் காதை மூடுவாரே

ஆமாமா..

டிங் டாங் டிங்ன்னு ஒரு அங்கிள் பியாணோ வாசிக்க தெரியாம வாசிப்பாரே

ஆமா.. அந்த அங்கிளா.. அவரோட எப்பவுமே காமெடிதாம்ப்பா…”

ஒன்றா இரண்டா பாக்யாராஜின் நினைவுகள், ஒரு கலைஞனின் மாபெரும் வெற்றி அதுதான். எக்காலமும் தன் பெயரை சொன்னால் தன் படைப்பின் நினைவுகளில் மூழ்க வைப்பது

அவ்வகையில் பாக்யராஜ் மாபெரும் வெற்றிபெற்ற கலைஞன்..

இவர் ஏன் இவ்வளவு சிரமபட்டு உண்ணாமல் உறங்காமல் நம்மை ஆய்வு செய்தார்?

இந்த நபர் யாரென தெரியவில்லை ஆனால் மனிதர் வெற்றிமாறனின் ரசிகர் போலிருக்கின்றது, முருகதாஸ் போன்றோர் இவரை பயன்படுத்தலாம்

இவர் ஏன் இவ்வளவு சிரமபட்டு உண்ணாமல் உறங்காமல் நம்மை ஆய்வு செய்தார்? திமுகவினரிடம் கேட்டால் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இருக்க்கும் ஷாப்பிங் காம்ளக்ஸை இவர் பெயரில் கொடுத்துவிட்டார் என சிரிக்காமல் சொல்லியிருப்பார்கள் விஷயம் முடிந்திருக்கும்

நாம் நம்மை பற்றி அதாவது நம் நிலைபாட்டினை பற்றி பல இடங்களில் சொல்லியாயிற்று

நாம் ஒன்றும் 92 வயது அனுபவசாலி அல்ல, அரசியலிலோ இல்லை கட்சி நிலைப்பாட்டிலோ இருந்ததுமில்லை. ஒரு இந்தியன் எனும் உணர்வு எல்லோரையும் போல எமக்கும் இருந்தது

வாசிப்பு என்பது 1ம் வகுப்பில் தொடங்கிய வழக்கம், அதில் நிறைய மறக்கவில்லை என்பது என் சாபம்

2010ல்தான் எமக்கு முகநூல் அறிமுகமானது, பிஷ்வேலி பார்ம்வேலி ஆடிகொண்டிருந்தேன், 2012 வரை அதை மட்டும்தான் கண்ணும் கருத்துமாய் செய்தேன்

2012ல் சீமானின் அட்டகாசம் அதிகமாயிருந்தது, தும்பிகளின் இம்சை ஓவராய் இருந்தது. அப்பொழுதுதான் உலக நிலவரத்தையும் சைமனின் பொய்யினையும் சொன்னோம்

அதுவும் இந்தியா ஈழமக்களுக்கு செய்த நன்மைகளை புலிகளை வளர்த்து அவர்கள் கையாலே செத்ததையும் , கடைசி யுத்தத்துக்கும் கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் சம்பந்தமில்லை என சொன்னோம்

எம் தேசத்தினை பற்றி நான் சொல்ல யாரிடம் கேட்க வேண்டும்

அப்பொழுது புலிகள் தியாகிகள், பிரபாகரன் தியாகி எனும் நிலை, அவர்களை பற்றி பேசினால் அடிக்க வருவார்கள் , வெளிநாடென்றால் கொல்வார்கள்

குஷ்பு துணிச்சலாக புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என சொல்லி வாங்கி கட்டினார், நாம் அவரை தலைவியாக ஏற்றது அப்பொழுதுதான்

ஈழபோரில் இந்தியாவின் நியாயத்தை சொன்னோம்

இங்குதான் திமுகவினர் ஒட்டினார்கள், அந்த பழக்கம் திமுகவில் சில தொடர்புகளை கொடுத்தது, அப்படியே கருணாநிதி எனும் பழுத்த அரசியல்வாதியினை சந்திக்க வைத்தது. இதெல்லாம் யார் மறுக்க முடியும்?

நான் பிறந்தவுடன் கையில் கொடிபிடித்து திமுகவுக்கு வந்தவனுமல்ல, 18 வயதிலே அவர்களால் அமைச்சரானவனும் அல்ல‌

இந்த எழுத்து இருக்கின்றது அல்லவா? அது சிரங்கு போன்றது, ஒட்டிவிட்டால் போகாது

இப்படியாக எதையாவது எழுதிகொண்டும் வாசித்து கொண்டும் இருந்தபொழுதுதான் சிந்தனை மாறிற்று

நான் மறுபடி சொல்கின்றேன், நாம் திமுக அனுதாபி அல்ல கருணாநிதியின் வயதும் தமிழும் அந்த வயதுகேற்ற மரியாதையும் வணங்க கூடியதே

சிந்தனை மாற மாற தெளிவும் வந்தது, உலக நாடுகள் இந்திய ஒப்பீடு அண்டை மாநில தமிழக ஒப்பீடு, வரலாறு என வாசித்ததில் தெளிவு பிறந்தது இது அரசியல்

ஆன்மீக கதை வேறுமாதிரியானது, அதை சொன்னால் ஒரு பயலுக்கும் புரியாது. அதெல்லாம் சொந்த அனுபவம், சொன்னால் ஆதாரம் கேட்பான், அதற்கு எங்கே செல்வது, அனுமன் போல் நெஞ்சினை கிழிக்க முடியாது

இந்துமதம் தத்துவார்த்தமும் அறிவியலும் மனவியலும் இன்னும் பல சிறப்புக்களை கொண்டது என்பது மெதுவாகத்தான் புரிந்தது

அதை நாம் மறைக்கவில்லை, இந்துமதம் என்பது சாத்தானின் வழி என்றுதான் எமக்கு போதிக்கபட்டது

ஆனால் சாத்தான் வேறு இந்துமதம் வேறு என்பது மெல்லத்தான் விளங்கிற்று

கிறிஸ்தவம் நல்லமதமே ஆனால் அது உலகாளும் அரசியலின் பகுதியாய் சிக்கியது தெரிந்தது , இங்கு கிறிஸ்தவம் பெயரில் செய்யும் குழப்பமும் சதியும் மெல்ல புரிந்தது.

எம்மேல் இவர்கள் எழுப்பும் குற்றசாட்டு இவன் கிறிஸ்தவன் ஏன் திடீரென இந்துமதம் பக்கம் வருகின்றான்?

ஒரு கிறிஸ்தவன் இந்துமதத்தை அறிய கூடாதா என்ன? அம்மதம் படிக்க படிக்க ஆச்சரியமானதாய் இருக்கின்றது படிக்கின்றேன்

எனக்கும் 35+ வயது ஆகின்றது இன்னும் மிஞ்சி போனால் 35 வருடம் இருப்பேன் அவ்வளவுதான் என் வாழ்க்கை

இந்த 35 வருட காலம் கிறிஸ்துவத்தினை மட்டும் படித்தாயிற்று கொஞ்ச காலம் புத்தமதத்தை படித்தேன் இப்பொழுது இந்துமதத்தை நோக்கி கொண்டிருக்கின்றேன்,
இஸ்லாமிய அறிஞர்களுடனும் எமக்கு நல்ல நட்பு உண்டு

அதனால்தான் இன்றுவரை இஸ்ரேலை கண்டித்து பாலஸ்தீன் பக்க நியாயத்தை சொல்கின்றோம்

மலேசிய சீக்கியர்களுடன் பழகியதால் சீக்கிய மதமும் நன்கு புரியும்,

இது போக ஆப்ரிக்கன் சிலருடன் பழகியதால் ஆப்ரிக்க வூடு மந்திரமும் தெரியும், அதை வைத்து உன்னை கொல்லாலம் என்றிருகின்றென்

ஆக ஒருமனிதன் ஒரே மதத்தில் பிறந்து அதிலே சாகவேண்டும் என்பது ஒரே அறையில் வாழ்ந்து முடிந்து போக வேண்டும் என்பது போன்றது

இந்த பறவை பல வானங்களில் பறக்க விரும்பி பறக்கின்றது விட்டுவிடுங்கள்

நாம் ஒன்றை அழுத்தமாக சொல்கின்றோம்

எமக்கு இந்நாடு முக்கியம், இந்நாட்டின் கலாச்சாரம் முக்கியம். கறுப்பு சட்டைகள் ஒப்பாரி வைப்பது போல பிராமணியம் ஆபத்தானது அல்ல அது இந்துமதத்தை தாங்குகின்றது இந்துமதம் தேசத்தை தாங்குகின்றது

நமக்கு கட்சி அபிமானம் என எதுவுமில்லை, ஆனால் மோடி தனிமனிதனாக குடும்பமின்றி சொந்தமின்றி நாட்டுக்காக உழைக்கின்றார் அதை நீங்கள் மறுக்கமுடியாது

நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவரென்பதால் இந்துக்களை அல்ல எந்த மத நம்பிக்கையினை பழித்தாலும் அனுமதிக்கபோவதில்லை இதெல்லாம் அவரவர் நம்பிக்கை

நாட்டில் சமூக அமைதிக்கும், முன்னேற்றத்துக்கும் எதெல்லாம் எதிரியோ அதை சொல்லிகொண்டே இருப்ப்போம்

இந்த நபர் யாரென தெரியவில்லை, எம்மிடம் எல்லோரும் கவனமாய் இருக்கும்படி சொல்லிவிட்டார்

அன்பரே, நாம் யாரையும் கையினை பிடித்து இங்கு அமரவைக்கவில்லை, விலகி போகின்றவர்களை தேடுவதுமில்லை

எம் நெஞ்சுக்கு சரி என படுவதை சொல்வோம், விரும்புகின்றவர்கள் வருவார்கள் பிடிக்காதோர் செல்வார்கள், அவ்வளவுதான் விஷயம்

ஆனாலும் இவ்வளவும் சொல்லிவிட்டு தலைவி குஷ்பு இவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம் என சொல்லாமல் விட்டுவிட்டீர் அல்லவா?

அது ஒன்றில்தான் எம்மை புரிந்திருக்கின்றீர்

ஒரு கிறிஸ்தவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என அவர்களாக முடிவு செய்து, இவன் இப்படித்தான் என அவர்களாக முடிவு செய்து அலறிகொண்டிருக்கின்றார்கள்

எம்மை உங்களால் புரிந்து கொள்ளமுடியாது, ஏன் என்னாலே என்னை புரிந்து கொள்ளமுடியாது

எம் மனம் என்ன சொல்கின்றதோ, மனதின் குரல் என்ன சொல்லுமோ அதை அப்படியே எழுதி வைப்போம், இதற்கு மேல் சொல்ல அவசியமில்லை

இந்த பைத்தியகாரன் கொழும்பு தாக்குதலுக்கு பின்புதான் நம்மை கவனித்திருக்கின்றான்

அதற்கு முன்பு புல்வாமா தாக்குதல், கருப்புபண ஒழிப்பு, ரபேல் விவகாரம் என பல நியாமான விஷயங்களுக்கு நாம் துணை நின்றதெல்லாம் இவனுக்கு தெரியாது போல‌

அடேய் அரைமண்டையா நீ யாரென எனக்கு தெரியாது

இதோபார், நான் ஒரு இந்தியன் அவ்வளவுதான் விஷயம்

எனக்கு இந்து ஆதரவு வேண்டும் இஸ்லாமியரை ஒழிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை, அப்படி இருந்தால் இப்படி இருக்க மாட்டோம்

நாம் ஒரு இந்தியனாக சொல்லிகொண்டே இருப்போம், இந்நாடு பெரும்பான்மை இந்துமக்கள் நாடென்பதால் அது இந்து நாடே, ஆனால் எல்லா மதத்தாரும் முழு உரிமையுடன் வாழ வாய்ப்புள்ள நாடு

எம் சிந்தனையும் அணுகுமுறையும் வித்தியாசமானது உனக்கு புரியாது, அதை உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை

கடைசியாக உனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிகொள்கின்றேன்

நாம் நம் மனதை பாதிக்கும் விஷயங்களை எழுதுவோம், எதையாவது கிளறுவோம் அதில் மண் கல் இரும்பு தங்கம் என எதாவது வரும் , சிலநேரம் ஒன்றும் வராது

அவரவருக்கு தேவையானதை அவரவர் எடுக்கின்றார்கள், உனக்கும் தேவை என்றால் எடு இல்லாவிட்டால் இடத்தை காலிசெய்

இன்னும் என்னை சீண்டிகொண்டிருந்தால் டான் நெல்லைகண்ணன் வெளிவந்ததும் அவரிடம் உன்னை சோலி முடிக்க சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை

ராம்சாமி சீடன் யாருக்கு அறிவு இருந்தது?

ராம்சாமி சீடன் யாருக்கு அறிவு இருந்தது?

மனிதருக்கு முடிதான் இல்லை என நினைத்தால் மூளையும் இல்லை

அய்யா நடிக்கும் குலத்துக்கு கூத்தாடி குலம் என்று பெயர், கணிகையர் குலம் என்பதும் அதுதான்

ஆக விவசாய குடும்பத்தில் இருந்த நீர் பெரியாரால் கூத்தாடி குலத்துக்கு வந்துவிட்டீர்

இதிலிருந்து என்ன தெரிகின்றது?

ராம்சாமியால் தமிழ்நாடு நல்ல விவசாயியினை இழந்துவிட்டது என்பது தெரிகின்றது, ராம்சாமி கொள்கை திருக்குவளை பக்கம் விவசாயத்தை ஒழித்தது, காஞ்சிபுரம் பக்கம் நெசவாளியினை ஒழித்தது

இதோ கோவை பக்கமும் ஒரு விவசாயினை ஒழித்திருக்கின்றார் ராம்சாமி..

அந்த கிராமத்தில் அந்த கதை பிரசித்தி

அந்த கிராமத்தில் அந்த கதை பிரசித்தி

ஒரு தென்னதோப்புக்கு குரங்கு ஒன்று வந்தது, பசியாலும் இன்னும் பல காயங்களாலும் வந்த அந்த குரங்கை அந்த தோட்டத்துக்காரன் பராமரிக்க தொடங்கினான்

அனுதினமும் அதற்கு பழம் வைத்தான், உணவு வைத்தான். குரங்கும் மெல்ல தயக்கம் மறைந்து அவனோடு பழகியது

ஒரு கட்டத்தில் அவனுக்கு உதவ ஆரம்பித்தது

ஆம் தென்னை மரத்தில் ஏறி அவனுக்கு தேங்காய் பறித்து போட தொடங்கியது, முதலில் சமத்தாக விளைந்த காய்களை மட்டும் பறித்தது, தோப்புகாரனுக்கு ஏக மகிழ்ச்சி

மரமேறுபவனுக்கு வேலை போனது, குரங்கு சம்பளமில்லா வேலைகாரனானது.

எங்காவது புளியமரத்தில் தொங்கி கொண்டிருக்கும் அவன் அழைத்ததும் வரும், அவன் சொன்ன மரத்தில் ஏறி அவன் சொன்ன தேங்காயினை பறிக்கும், சமத்தாக கீழே இறங்கி ஒரு வாழைபழம் வாங்கிகொள்ளும்

தோப்புகாரனுக்கோ இருக்கும் வேலையாட்களை எல்லாம்விரட்டிவிட்டு பூராவும் குரங்காக வைத்தால் என்ன என்ற அளவு சிந்தனை வந்தது..

நல்ல உணவும் பயமும் மறைய குரங்கு அதன் சேட்டையினை ஆரம்பித்தது, அதன் இயல்பான குணம் தலையெடுத்தது

தான் செய்வதெல்லாம் சரி என அதற்கு தோன்றிற்று

தேங்காய் பறித்துவிட்டு அப்படியே இளநீர் குரும்பல் என எல்லாவற்றையும் பிய்த்து எறிய ஆரம்பித்தது, தோப்புகாரனுக்கு வயிறு கலங்கியது

ஒவ்வொரு மரமாக ஏறுவதும் சகலத்தையும் உதிர்த்து போடுவதுமாய் ஒரே ஆட்டம், தோட்டகாரனுக்கு அதை என்ன செய்வதென்றே தெரியவில்லை

திடீரென காணாமல் போனது குரங்கு அவன் நிம்மதி அடைந்தான், ஆனால் அது அடுத்த தோப்பில் இதையே செய்ததென புகாருடன் ஓடிவந்தான் அதன் சொந்தக்காரன்

பாவபட்டு குரங்கை பராமரித்த பாவத்துக்கு விழிபிதுங்கி நின்றான் தோட்டக்காரன்

அத்தோடு விட்டதா குரங்கு, தன்னோடு இன்னும் பல குரங்குகளை சேர்த்து கொண்டு தோப்பையே நாசம் செய்துவிட்டது

ஊரே திரண்டு கம்பு கல்லோடு நின்றாலும் தன் சேட்டையினை ஊர் ரசிப்பதாக நினைத்து தென்னை மரங்கெளுங்கும் தாவி எல்லாவற்றையும் நாசபடுத்தி அது மகிழ்ந்துகொண்டது

தன்னாலே மக்கள் ஒன்றாய் வந்திருப்பதாகவும் தான் பெரும் புரட்சி ஏற்படுத்தியதாகவும் நினைத்தது, தன்னை தொலைக்க வந்திருக்கின்றார்கள் என அது நினைக்கவில்லை

கூட்டம் எச்சரிக்க எச்சரிக்க குரங்கு கூட்டமோ சந்தோஷத்தின் உச்சியில் தாவி தாவி எல்லாவற்றையும் நாசமாக்கி கொண்டிருந்தது

பின் மொத்தமாக தோப்பின் சொந்தகாரர்கள் கூடி வெடிபோட்டு படாத பாடுபட்டு விரட்டி அடித்தார்கள், ஊரே திரண்டு வந்து பட்டாசு போட்டு விரட்டி அடித்தது

இந்த கதைக்கும் திரையுலகின் சில படங்களுக்கும் இயக்குநர்களுகும் சம்பந்தம் இருப்பதாக நீங்களாக நினைத்தால் சங்கம் பொறுப்பல்ல..