சிரியாவுக்கு வந்து இறங்கியிருக்கின்றார் ரஷ்ய புட்டீன்

அரேபியாவின் கிழக்கே அமெரிக்காவும் ஈரானும் முட்டிகொண்டு நிற்க, கொஞ்சமும் பதற்றமின்றி சிரியாவுக்கு வந்து இறங்கியிருக்கின்றார் ரஷ்ய புட்டீன்

இவர் கொஞ்சமல்ல நிறையவே அதிரடியான ஆசாமி

ஒரு குழப்பமான நாட்டுக்குள் அதுவும் அண்டை நாடு பற்றி எரியும் பொழுது செல்ல தனி தைரியம் வேண்டும், புட்டீன் அசால்ட்டாக சென்று சிரிய அதிபர் அல் பசாத்தை சந்தித்துவிட்டு வாருங்களேன் நம் படைகள் காவல்காக்கும் இடத்தை சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என கிளம்பிவிட்டார்

தன் சுற்றுபயணத்தில் சிரிய ரஷ்ய உறவு இன்னும் முன்னேறும் என்றும் இன்னும் பல விஷயங்களை சொன்ன புட்டீன் , ஈரான் விவகாரம் பற்றி சொன்னதுதான் ஹைலைட்

ஆம், இது அணு ஆயுத யுத்தத்தில் முடியும் அதனால் எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்

இது கொஞ்சம் கவனிக்கதக்கது

ஆம், ஈரானிடம் அணுகுண்டு இருப்பதாக இதுவரை உறுதிபடுத்தபடா நிலையில் புட்டீன் இப்படி சொல்லியிருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றது

ஈரானிடம் அணுகுண்டு இருப்பதை அவர் ஒப்புகொள்கின்றாரா? இல்லை அணுகுண்டு மர்மமாக வரும் என சொல்கின்றாரா? இல்லை அணுஆயுத யுத்தம் வெடிக்கும் அளவு ரஷ்யா களமிறங்கும் என எச்சரிக்கின்றாரா? என தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது உலகம்

“அட பார்ரா, வந்துட்டார்டா நம்ம சிங்கம். அவர் சிரியாவுக்கு வந்தால் என்ன? ஈரானுக்குள் வந்தால் என்ன நாங்கெல்லாம் ஒண்ணுக்குள் ஒண்ணு” என கள்ளசிரிப்பு சிரிகின்றது ஈரான்

ஆம், விஷயம் அந்தமாதிரிதான்

ஆக ரஷ்யா ஈரான் ஈராக் சிரியா ஆகிய 4 நாடுகளும் ஒரு அணியில் வந்தாயிற்று, எதிரணியில் அமெரிக்கா இருக்கின்றது, அவர்களுடன் இந்த களத்தில் கூட்டணி யாருமில்லை

மிக மிக பதற்றமான நேரத்தில், இப்பக்கம் அமெரிக்க படைகள் நொறுக்கபடும் பொழுது அதை சுவரின் அந்த பக்கத்தில் நின்று பார்த்து கொண்டிருக்கும் புட்டீன் உலகை அலறவிடுகின்றார்

இதே மர்ம பயணத்தை அவர் டெஹ்ரானுக்கும் மேற்கொள்ளலாம், சொல்லமுடியாது

ஆக உலகத்தாரே, டிரம்ப் வெட்டி டிவிட்டுகளை விட்டுகொண்டிருக்கும் நிலையில் களத்துக்கு நேரடியாக வந்து நின்று “அங்கே என்ன சத்தம் மேன்?” என கேட்பது மகா சுவாரஸ்யம்

இப்பொழுது அமெரிக்காவில் இரவு, டிரம்ப் தூங்கிகொண்டிருக்கின்றார், கதவை தட்டி அவருக்கு புட்டீன் செய்தியினை சொல்ல பெண்டகன் அதிகாரிகள் காத்துகொண்டிருக்கின்றார்கள், இனி விடிந்து விஷயத்தை சொன்னவுடன் டிவிட்டர் அக்கவுண்டை கொஞ்ச நாளைக்கு டி ஆக்டிவேட் செய்துவிடுவார்

என்ன சொல்லுங்கள், சிரியாவினை காத்த புட்டீன் இப்பொழுது ஈரானையும் காக்க வந்துவிட்டார்

அவர்களுக்கும் இவர்களுக்கும் பங்காளி உறவா? இல்லை சம்பந்தி உறவா?

ஒரு மண்ணாங்கட்டியுமில்லை எல்லாம் எண்ணெய் படுத்தும்பாடு. எப்படியோ நல்லது நடந்தால் சரி.

அதென்ன மேசானிக் சம்பளம்?

அதென்ன மேசானிக் சம்பளம்? புத்தா குரூப் என்றால் என்ன?

அந்த கோஷ்டியில் பூராவும் இப்படிபட்ட ஆட்களாகத்தான் இருப்பார்கள் போல, இந்த காலத்திலே இப்படி பைத்தியமாய் இருக்கும் கோஷ்டி 1950களில் எப்படி இருந்திருக்கும்?

வேறு ஏன் ராம்சாமி தலைவனாகமாட்டார் , அண்ணாதுரை பெரும் அறிஞனாக மாட்டார்?

தமிழிசை தலைவராய் இருந்து கவர்ணரானதில் தவறே இல்லை, இந்த கோஷ்டி இப்படித்தான் போலிருக்கின்றது

தாமரை எந்த யூரியா, பொட்டாசியம் , காம்ளக்ஸ் உரம் போட்டாலும் , ஆர்கானிக் உரம் போட்டாலும் இந்த மாதிரி கோஷ்டி இருக்கும் வரை மலரவே மலராது

4 பேரும் 3 வோட்டும் இல்லாத நிலையிலே இவ்வளவு அலம்பு என்றால் , வலுவான கட்சியாக மாறினால் என்ன ஆட்டம் இருக்கும்?

டெப்பாசிட் போகும் நிலையிலே, அட தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கா நிலையிலே இவ்வளவு இறுமாப்பு..

ஆட்டுக்கு வாலையும் இவர்களுக்கு ஏன் ஆட்களையும் ஆண்டவன் குறைதுவைத்தான் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

காலம் வரைக்கும் இப்படி டெப்பாசிட் இழந்துட்டே இருங்கடா டேய்..

ஈரானின் அதி உச்ச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார்

அமெரிக்க நிலைகளின் மேலான தாக்குதலை தொடர்ந்து ஈரானின் அதி உச்ச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார்

அதை இந்த ஜிபி முத்து மொழியில் இப்படித்தான் சொல்லமுடியும்

“நாம அடிச்ச அடியில அலறி போயி கிடக்கானுவ, இன்னும் அடிச்சி நொறுக்கணும்

அவன விட அவனுக்கு இடம் கொடுத்திருக்கானுவல்லா நாரபயலுக, ஏ நாரபயலுவளா அவனை உங்க நாட்டுக்குள்ள வச்சிட்டு இருந்தா உங்களுக்கும் இதே கதிதாமுல, ஒரு பயலையும் விட மாட்டோமுல..”

சர்வதேச அரசியல் மற்றும் ஊடக தந்திரம் இதுதான்

ஈரானின் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன‌

மூன்று அமெரிக்க விமான தளங்களை மிக துல்லியமாக ஈரானிய ஏவுகனைகள் 50க்கும் மேற்பட்டவை தாக்கியதில் அமெரிக்க தளம் தகர்க்கபட்டிருக்கின்றது விமானங்கள் இனி பயன்படுதமுடியாத அளவு சேதமாயிற்று

இந்த செய்தி பரவும்பொழுதுதான் ஈரானில் உக்ரைன் விமானம் விபத்தாகி அது வேகமாக பரவுகின்றது, அமெரிக்கா அடிவாங்கிய கதை மறைக்கபடுகின்றது

சர்வதேச அரசியல் மற்றும் ஊடக தந்திரம் இதுதான்

இந்த யழவு தந்திரத்தில் அப்பாவி மக்கள் செத்துகொண்டிருப்பதுதான் மகா சோகம்..

உலகம் அழிவதில் எப்பொழுதுமே அழிச்சாட்டிய கிறிஸ்தவருக்கு கடும் சந்தோஷம்

உலகம் அழிவதில் எப்பொழுதுமே அழிச்சாட்டிய கிறிஸ்தவருக்கு கடும் சந்தோஷம், அது என்னவோ தெரியவில்லை ஏதும் போர் செய்தி கேட்டால் “ஹய்யா ஜாலி உலகம் அழியபோகின்றது” என கிளம்பிவிடுவார்கள்

ஆனால் முதல் இரு உலகபோரில் ஏமாந்தார்கள், அமெரிக்க ரஷ்ய பனிபோரில் ஏமாந்தார்கள், கடைசியாக சிரியாவிடமும் வடகொரியாவின் குண்டனிடம் வரை ஏமாந்தார்கள்

இப்பொழுது ஈரானால் உலகம் அழியும் என வந்துவிட்டார்கள்

இது ஒரு மனோவியாதி போல, எங்காவது போர் தொடங்கிவிட்டால் ஒவ்வொருவனையும் பிடித்து “இதோ கடைசிகாலம் , இனி உலகம் அழியும் அதனால் இயேசுவினை ஏற்றுகொண்டு சாவு” என்பது அவர்கள் கொள்கை

இதெல்லாம் எங்கே என கேட்டால் திருவெளிப்பாடு எனும் பைபிளின் கடைசி புத்தகத்தை காட்டுவார்கள்

அதில் யாக்கோபின் 12 புதல்வர்களின் பெயரும் அவர்களின் வம்சாவழியில் இத்தனாயிரம் பேரும் மீட்கபடுவார்கள் என்றிருக்கும்

இதில் என் இனத்தின் முன்னோரான சவரிமுத்து நாடார் பெயர் இல்லையே, பின் நான் எப்படி சொர்க்கம் போவது என கேட்டால் “அப்பாலே போ சாத்தானே” அதோ அக்கினி இறங்குகின்றது என சொல்லிவிட்டு ஓடுவார்கள்

ஆம் அக்னியினை டீகடை பர்னரில் கண்டிருப்பார்கள்

இதே சர்ச்சை அடிக்கடி வரும், இதுபற்றி ரமண மகரிஷியிடம் கேட்டார்கள், “அய்யா உலகம் விரைவில் அழியுமா? அச்சமாக இருக்கின்றதே..”

அந்த பழுத்த பழம் சொல்லிற்று ” அது இந்த உலகை எவன் படைத்தானோ அவனின் பிரச்சினை.

உனக்கும் எனக்கும் என்ன? நாம் எதை மாற்றிவிட முடியும்?”

தப்பிவிடுவதை பார்த்துவிடுவோம்..

அய்யா, பெப்ரவரி 11 ஈரானிய புரட்சி நாள். ஈரானின் மிகபெரும் தாக்குதல் அன்றுதான் இருக்கும் என உலகம் நினைக்கின்றது

எங்கே இதே வரியினை பார்சி மொழியில் எழுதி ஈரானில் சென்று இப்படி நில்லுங்கள் பார்க்கலாம்..

தப்பிவிடுவதை பார்த்துவிடுவோம்..

திராவிட துண்டு

திராவிட துண்டு ஆண்டவன் சந்நிதியில் இடுப்புக்கு சரியாக செல்கின்றதல்லவா? இதுதான் ஆன்மீக மண், அடியார்கள் மண்

இதைவிட திராவிட கொள்கையின் வீழ்ச்சியினை சொல்லமுடியாது

இப்பொழுதும் திமுகவினரிடம் கேளுங்கள்,

கையில் வாங்கிய விபூதி குங்குமம் திராவிட சுயமரியாதை கொடியில் பட்டுவிட கூடாது என்றுதான் துண்டை இடுப்பில் கட்டியிருக்கின்றார் அந்த திராவிட சிந்தாந்தவாதி என சிரிக்கமால் சொல்வார்கள்