ஏதோ நடந்திருக்கின்றது உண்மை ஒருகாலமும் வராது

உக்ரேனிய விமானம் ஈரானிய விமானநிலையத்தில் இருந்து மேலெழும் பொழுது விபத்துக்குள்ளாகி 180 பேர் மரணித்த செய்தி உறுதிசெய்யபட்டுள்ளது

இது விபத்து என அறியபட்டாலும் நம்ப யார் தயாராக உண்டு?

ஏதோ நடந்திருக்கின்றது உண்மை ஒருகாலமும் வராது.

அந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

இதை தொடர்ந்து அரேபியா பக்கம் விமானம் பறக்க கடும் தடை விதிக்கபட்டுள்ளது, காட்சிகள் பரபரப்பாக நகர்கின்றன

பிராமணன் இந்திய ராணுவத்தில் உண்டா

பிராமணன் இந்திய ராணுவத்தில் உண்டா, அவன் நாட்டுக்காக செத்தானா என ஏகபட்ட திராவிட கும்பல்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன‌

பிராமண இனம் தமிழகத்தில் அய்யர், தெலுங்கில் அய்யங்கார், கேரளாவில் நம்பூதிரி, வடக்கே சாஸ்திரி, ஷர்மா வங்கத்தில் சாட்டர்ஜி, பானர்ஜி, காஷ்மீரில் பண்டிட் என பல பெயர்களில் அழைக்கபடுகின்றது

இதை நாம் மட்டும் சொல்லவில்லை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரே பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்

“பார்ப்பான் ஒவ்வொரு இடத்திலியும் ஒவ்வொரு பெயரில இருக்கானுக., பேருதான் வேறங்க ஆனா எல்லா பயலும் பார்பானுங்கங்க” என பல மேடைகளில் சொல்லி பல ஏடுகளில் எழுதியவர் பெரியார்

அதில் உண்மையும் உண்டு

இந்தியாவில் தளபதிகள் முதல் பல பதவிகளில் பிராமணர் இருந்தனர், ஏன் உளவுதுறை உருவாக்கபட்டபொழுது அதன் தலைவரும் மிக சிறந்த உளவாளிகளும் பிராமணராகவே இருந்தனர்

இந்தியாவின் முதல் “பரம்வீர் சக்ரா” எனும் ராணுவத்திற்கான விருதினை பெற்றவர் சோம்நாத் ஷர்மா எனும் பிராமணர்

ஒவ்வொரு யுத்தத்திலும் செத்த ஏகபட்ட பிராமண ராணுவ வீரர்கள் உண்டு

அவ்வளவு ஏன் ? முன்பு புல்வமா தாக்குதலில் கொல்லபட்ட பங்கஜ் திரிபாதி, மகேஷ் சர்மா, குமார் ராவட் என்ற மூன்று பேரும் பிராமண சமூகம் என்கின்றது செய்தி

பிராமணர் என்றால் தமிழ்நாட்டு கோவிலில் மணியடிக்கும் அய்யர், சங்கராச்சாரி , எஸ் வீ சேகர், எச்.ராசா, குருமூர்த்தி மட்டுமே என இவர்களாக முடிவு செய்து ஏதாவது பேசிகொண்டிருப்பது

அதெல்லாம் இருக்கட்டும், சுதந்திர போராட்ட வீரன் என ஒரு திக காரனை காட்டிவிடுங்கள், ஒரு கருப்புசட்டைகாரனை காட்டிவிடுங்கள் பார்க்கலாம்

அட அவ்வளவு ஏன்? நாட்டுக்காக செத்த ஒரு திக, திமுக உறுப்பினரை காட்டுங்கள் பார்க்கலாம்

திகவும் திமுகவும் செய்தது என்ன?

இலங்கையில் இந்நாட்டு ராணுவத்தினை கொன்று குவித்த புலிகளை ரகசியமாக தமிழகத்திற்கு வரவழைத்து காயத்திற்கு மருந்து போட்ட மிக பெரிய சேவை என்பதை தவிர, அந்த தேசதுரோகத்தினை தவிர ஒன்றுமே இல்லை

விஷயம் படு சீரியசாகிவிட்டது

விஷயம் படு சீரியசாகிவிட்டது, ஈரானிய போர் விமானங்கள் கிளம்பிவிட்டன, ஈராக்கிய எல்லையில் அவை பறக்கின்றன‌

இந்நிலையில் மேலும் மேலும் ஈரானிய ஏவுகனைகள் ஈராக்கிய அமெரிக்க நிலைகளை தாக்கும் நிலையில் டிரம்ப் இன்னும் முக்கிய எடுக்கவில்லை, விவாதிக்கின்றார்

காரணம் போர் என்றால் அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலும் வழங்க வேண்டும், அது சுலபமில்லை எனினும் டிரம்ப் தன் அதிகாரத்தை முதலில் பயன்படுத்தலாம்

இந்நிலையில் உக்ரேனிய பயணிகள் விமானம் ஈரான் பக்கம் நொறுங்கி கிடப்பதாகவும் 180 பேர் பலி எனவும் செய்திகள் வருகின்றன, செய்தி எங்கோ விவகாரத்தை திசைமாற்றுகின்றது

முழு போர் சூழலுக்குள் நுழைகின்றது அரேபியா

முழு போர் சூழலுக்குள் நுழைகின்றது அரேபியா

வளைகுடாவில் குறிப்பாக ஐக்கிய அமீரகம் அருகே அமெரிக்க பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டிருக்கின்றது

இதன் அர்த்தம் விரைவில் அரபுகடலில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க கப்பலில் இருந்து ஈரான் மேல் தாக்குதல் நடத்தபடும் என்பது

ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி

ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மனிதனின் குடிநீரை குடித்து தட்டுபாட்டை உருவாக்குவதாக 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவெடுத்திருக்கின்றது ஆஸ்திரேலியா

அது பணக்க்கார நாடுதான், கடல்நீரை குடிநீராக்கி கூட அவற்றை வாழவைக்கலாம் ஆனால் அவர்கள்விரும்பவில்லை

முன்பே ஒட்டகங்களை துடைதொழிக்க விரும்பின, அரபு நாடுகளும் இன்னும் சில புளுகிராசும் கிளம்பியதால் கிடப்பில் போட்டது

இப்பொழுது வறட்சி என காரணம் காட்டி கிளம்பிவிட்டார்கள்

பட்டினி கிடந்தாலும் தன் வீட்டு நாய்க்கும் பூனைக்கும் சோறை பகிர்ந்தளிப்பது நம் மரபு, எல்லா உயிரிலும் இறைவனை காணுவதும் அதை காப்பதும் நம் பண்பாடு

காக்கை குருவி எங்கள் சாதி என பாடிய பாரதி அதைத்தான் சொன்னான்

ஆனால் நீரெல்லாம் தனக்கே என சக உயிரையும் கொல்ல துணிவது மேற்கத்திய மரபு, அவர்களின் கலாச்சாரமே அதுதான்

தமிழ்நாட்டில் காளைகளை வதைக்கின்றார்கள் என கிளம்பிய பீட்டா கோஷ்டியினை 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்லும்பொழுது காணவே இல்லை

இந்தியாவில் ஜல்லிகட்டுக்கு தடை கேட்ட அந்த பீட்டா கோஷ்டியினை பிய்ந்த செருப்புடன் தேடிகொண்டிருக்கின்றேன்

இலங்கையில் யாழ்பாணத்தில் உதய தாரகை பத்திரிகை

இலங்கையில் யாழ்பாணத்தில் உதய தாரகை பத்திரிகை 1876லே ஆரம்பிக்கபட்டதது சமீபத்தில் நினைவு கூறபட்டது.

அது அக்காலத்திலே தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்திருக்கின்றது

இலங்கையின் வடபகுதி அதாவது ஈழத்தில் எக்காலமும் சாதிபாகுபாடு உண்டு, தமிழ்நாட்டை விட அங்கு மோசமான கொடிய சாதிவெறியும் தடையும் இருந்தது

ஆனால் ஈழதமிழர் தமிழக தமிழரை விட 200 ஆண்டுகாலம் முன்னிலையில் இருந்தனர், கல்வியிலும் ஐரோப்பிய தொடர்பிலும் தமிழக தமிழரைவிட அவர்கள் மகா முன்னேற்றம்

அன்றும் அப்படித்தான் இன்றும் அப்படித்தான்

இன்றளவும் தமிழின் மிக சிறந்த அறிவாளிகளை பிராமண சமூகத்துக்கு அடுத்து ஈழதமிழரைத்தான் கைகாட்ட முடியும்

இதுபற்றி நாம் முன்பு ஒரு ஈழதமிழரிடம் கேட்டோம், “எங்கள் நாட்டில் பெரியார் என்றொருவர் வந்துதான் எங்களை எல்லாம் படிக்க வைத்தார், உங்கள் நாட்டில் எந்த கரியார் வந்து படிக்க வைத்தார்?

எப்படி இவ்வளவு முன்னேற்றம், அதுவும் சாதிவெறி பிடித்த மண்ணில் இருந்து இப்படி ஒரு சமூகம் உருவாக முடிந்தது?”

அவர் தெளிவாக சொன்னார்

“அய்யா வெள்ளையன் வந்த காலத்திலே நவீன கல்வி தொடங்கிற்று, அவன் உலகெல்லாம் தொழில் செய்த காலத்தில் ஆங்கிலமும் கொஞ்சம் அடிப்படை கல்வியும் இல்லா மக்கள் இல்லமால் தன் சாம்ராஜ்யம் அமைக்க முடியாது என கருதினான்,காரணம் அவனுக்கு இருந்தது மிக சிறிய மக்கள் தொகை

இதனால் மற்ற காலணி நாடுகளில் கல்வி கொடுத்து தனக்கு தேவையானவர்களை உருவாக்க எண்ணி கிறிஸ்தவ கல்வி நிறுவணங்களுக்கு அனுமதி கொடுத்தான்

அதில் மதமாற்றமும் நடந்தது, எங்களவர் முருக பக்த சைவர்கள் அல்லவா? கொஞ்சமும் தாமதிக்க்காமல் இந்து கல்லூரிகளும் பள்ளிகளும் பெருகின‌

இன்னொன்று நாம் ஆங்கிலேயரிடம் படித்தாலும் சைவராய் இருந்தோம் இன்றுவரை இருக்கின்றோம், இதனாலே உலகில் எங்கு சென்றாலும் தனித்துவமாய் வாழ்கின்றோம்

தமிழும் சைவமும் இரண்டற கலந்தது , ஒன்று இல்லாவிடில் இன்னொன்று வாழாது

எங்கள் நாட்டில் சாதி உண்டு, எக்காலமும் உண்டு ஆனால் அதை வைத்து அரசியலும் செய்யவில்லை. சாதி உண்டு என்பதற்காக கடவுள் இல்லை என நாங்கள் கிளம்பவுமில்லை

தமிழை விரும்பினோம், சைவத்தை நம்பினோம், கடவுளை தொழுதோம், கல்வி பெற்றோம் வாழ்ந்தோம், வாழ்வோம்”

நாமும் கேட்டோம் “அய்யா தமிழனுக்கு மதமில்லை, தமிழன் காட்டுமிராண்டி, தமிழனுக்கு எல்லாம் பார்ப்பான் ஏமாற்று தந்திரம் மூலம் கொடுமை செய்தான் என்பதெல்லாம்..”

அவர் சொன்னார்

“அய்யா தமிழனுக்கு மதமில்லை என எவனாவது சொல்லமுடியுமா? இனத்தின் அடையாளமே மதம்

தமிழன் சைவ மதமாகவே எக்காலமும் எல்லா இடத்திலும் இருந்தான் எங்கள் பூமி போல‌

ஒரு தலைவனுக்கு சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு தகுதி வேண்டும், அந்த பெரியார் என்பவர் அவ்வளவாக படிக்கவில்லை, கடவுளை நோக்கும் அறிவும் அவருக்கு இல்லை

சமஸ்கிருதம் தெரியாமலே சமஸ்கிருதத்தை விமர்சித்திருக்கின்றார், தமிழ் இலக்க்கியம் படிக்காமலே அதையும் கிழித்து போட்டிருக்கின்றார்

ஒருமாதிரி அறிவுகெட்ட மனிதராக இருந்திருகின்றார், எங்கள் நாடென்றால் அன்றே பிடித்து கட்டி வைத்து அடித்து திருத்தியிருப்போம், உங்கள் நாட்டில் அவரை தலைவராய் வைத்து நாசமானீர்கள்

இப்பொழுது சைமன் என்றொருவர் இருக்கின்றார் அல்லவா? அந்த காமெடியினை அன்றே செய்தவர் உங்கள் ஊர் பெரியார்

ஒன்று சிந்தியுங்கள், இட ஒதுக்கீடு சாதி ஒழிப்பு எல்லாம் பெரியார் சுதந்திர இந்தியாவில் பேச தொடங்கவில்லை மாறாக பிரிட்டிஷ் இந்தியாவிலே தொடங்கினார்

ஆனால் பிரிட்டன் அரசிடம் என்றாவது இட ஒதுக்கீடு கேட்டாரா? தாழ்த்தபட்ட சாதிக்கு வேலைகொடு என கேட்டாரா?

அதிகாரமும் ஆட்சியும் பிரிட்டனிடம் இருந்தபொழுது அவனிடம் கைகட்டி நின்ற பிராமணன் வீட்டு முன்னால் நீயே எதிரி என குட்டிகரணம் அடித்தது கோமாளிதனம் இல்லையா

அதிகாரம் பிரிட்டிஷ்காரனிடம் இருக்க சக வேலைக்காரனான பிராமணனை போட்டு இவர் விரட்டியது உங்களுக்கே பெரும் காமெடியாக இல்லை, அந்த ஆள் செய்ததெல்லாம் மனநலம் பாதித்தவன் செய்தது

ஆனால் ஒன்றை நான் சொல்கின்றேன், செழிப்பான‌ இலங்கையினை அனாரிகா தர்மபாலா எனும் படித்த சிங்கள டாக்டரை கொண்டு அதாவது அவனின் அபரிமிதமான பக்தியினை கொண்டு சிங்களரிடம் வெறியேற்றி இங்கு குழப்பத்தை ஏற்படுத்தினான் பிரிட்டானியன்

உங்கள் நாட்டில் படிப்பே வராத கடவுள் நம்பிக்கை இல்லா ராமசாமி கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தினான்

இரு நாடுகளும் நாசமானது இப்படித்தான்..”

இதை நாம் என்றோ சொன்னாம்

எக்காரணம் கொண்டும் ராஜிவ் கொலை குற்றவாளிகளான 3 இந்தியரையும் 4 அன்னிய நாட்டவரையும் விடமுடியாது என சொல்லிவிட்டது மத்திய அரசு

நாம் அன்றே சொன்னதைத்தான், காங்கிரசும் சோனியா அரசும் சொல்லாமல் மவுனம் காத்ததைத்தான் மோடியின் ஆட்சியில் அமித்ஷாவின் துறை தெளிவாக சொல்லியிருகின்றது

“7பேர் விடுதலை என்பது உலகில் இந்தியாவின் தரத்தை கெடுக்கும் மகா மோசமான முடிவு, இந்தியா அதை ஒருபோதும் எடுக்காது”

இதை நாம் என்றோ சொன்னாம்

காங்கிரசுக்கும் இதுதான் முடிவு ஆனால் தமிழகத்தில் அதற்கு சிதறி கிடக்கும் வாக்குகளுக்காக அது கள்ளமவுனம் காத்தது, பாஜகவுக்கு அப்படி எதுவுமே இல்லை என்பதால் சொல்லிவிட்டது

வாக்கு இருந்தாலும் அவர்கள் இதைத்தான் சொல்வார்கள் அவர்கள் இயல்பு அப்படி

சரி, 7 பேரையும் விடமாட்டோம் என மத்திய அரசு உறுதியாக சொன்னபிறகும் சத்தமில்லையே ஏன்?

வைகோவினை காணவில்லை, சீமான் பூபந்து விளையாடுகின்றார், திருமுருகன் காந்தி தூங்குகின்றார்

ராமதாஸ் இதர கணக்கில் பிசி , முக ஸ்டாலினுக்கு எடுத்து சொல்பவர்களையும் காணவில்லை

ஆக இதுதான் உண்மை, இங்கு எல்லாமே அரசியல் , தெரிந்த முடிவுக்கு அவரவர் தேவைக்கும் காலத்துக்கும் ஏற்ப ஆடுவார்கள்

அற்புதம்மாள் இனியும் கிளம்பினால் “இந்த நூற்றாண்டின் மிக சிறந்த நடிகை” என்ற பட்டத்தோடு அமரவைத்துவிடலாம்