ரோமாபுரி ராட்சசன் : 01

ரோமாபுரி ராட்சசன் : 01

அது இந்தியாவில் புத்தர் நடமாடிய காலத்திற்கும் முந்தைய காலம், அவ்வளவு பழமையான காலம். இயேசு நாதர் கூட பிறந்திருக்கவில்லை

அந்த இத்தாலியின் டைபர் நதி 7 அழகான குன்றுகளை சுற்றி ஓடிகொண்டிருந்தது, அதன் கரையில் டிரஸ்கானியர் என்ற இனம் வசித்துவந்தது, அக்கால ஆற்றங்கரைகள் ஆபத்தானவை , அதுவும் அதிமுக போல காவல் இல்லா ஆற்றங்கரைகள் யாராலும் கைபற்றபடும் ஆபத்து இருந்தது

அந்த ஆற்றங்கரைக்கு ரொமுலஸ் ரீமஸ் என இரட்டையர்கள் இந்த பழனிச்செல்வம் பன்னீர்செல்வம் அல்லது மோடி அமித்ஷா போல இருவர் வந்தார்கள், சும்மா வரவில்லை படையோடு வந்தார்கள்

வந்து டிரஸ்கானியரை விரட்டிவிட்டு இது எங்கள் நாடு என அமர்ந்தார்கள், ரொமுலஸ் எனும் பெயரால் அது ரோம் என்றானது

கிமு 753ல் ரொமுலஸால் ரோம் நிர்மானிக்கபட்டது, அதன் முதல் அரசன் அவனே, 37 ஆண்டுகளில் அவன் இறந்தான், அவனை தொடர்ந்து பீலியஸ், ஹாண்டிலியஸ், மார்ஷியஸ், பிஸ்கஸ் , டல்லியஸ், என பலர் ரோமை ஆண்டனர் கடைசியாக டார்கீனியஸ் 541 வாக்கில் ஆண்டுகொண்டிருந்தான்

ரோமருக்கென்று தனி நாகரீகமோ கடவுளோ இல்லை, கொள்கை இல்லா அதிமுக போல இருந்தனர் ஆனால் அவர்களை போல வலுவாக இருந்தனர்

கிரேக்கம் அன்று தனித்திருந்தது, இதனால் கிரேக்க கடவுள்களை இரவல் வாங்கினர், லத்தீன் பேசிகொண்டும் கிரேக்கரை கவனித்து கொண்டிருந்த ரோமில் திடீர் சிக்கல் வந்தது

அவர்கள் கிரேக்கத்திடம் இருந்து கடவுளை மட்டும் காப்பி அடிக்கவில்லை மாறாக தத்துவங்களையும் காப்பி அடித்தனர், ஒன்றுமே இல்லாதோர் என்ன செய்வார் பாவம்

ஆம் சாக்ரடீசுக்கு முன்பே கிரேக்கம் சிந்தனையின் உச்சத்தில் இருந்தது, அந்த சிந்தனை ரோமை பாதித்தது

ஒரு சுபநாளில் மிகவும் சிந்தித்த மக்கள் மன்னன் டார்கீனியனிடனிருந்து அதிகாரத்தை பங்கிட்டனர், மன்னனுக்கும் யுத்தம் நாட்டுகாவல் என கவனம் செலுத்த முடிந்தது உள்நாட்டு கவனிப்பை இவர்களிடமே விட்டுவிட்டான்.

மன்னர் ஆட்சியில் மேற்பார்வையில் மக்களாட்சி மலர்ந்தது

ஆம் உலகின் முதல் மக்களாட்சி அங்குதான் தோன்றிற்று, இயேசுவுக்கு பன்னெடுங்காலத்துக்கு முன்பே அங்கு மக்களாட்சி இருந்தது

ஆனால் தேர்தல் இல்லை, ஒரு குழுவே சீன கம்யூனிஸ்ட் போல ஆட்சி நடத்தும்

உண்மையில் அது ஒரு மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆட்சி. செனட் சபை எனப்படும் ரோம நாடாளுமன்றத்தில், செனட்டர்கள் எனப்படும் பிரதிநிதிகள் ஆயுட்கால உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் ஒன்று கூடி கொன்சுல் (Consul) எனப்படும் இரண்டு ஆட்சித் தலைவர்களை தெரிவு செய்தனர்.

இவர்கள் அரசனுக்கு பதிலீடாக இருந்தமை மட்டுமல்லாது, யுத்தப் பிரகடனம் செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர்.

ஆம் செனட் சபை என அமெரிக்கா இன்று அழைக்கும் காட்சிகளை எல்லாம் அன்றே அரங்கேற்றினார்கள் ரோமானியர்

மக்களாட்சி என்றால் என்னாகும்? மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் உருக்கமான சேவைகள் அதில் ஊழல்கள் என ஒரு காட்சி வருமல்லவா? அது அங்கும் வந்தது

ஆம், சாதி இல்லையே தவிர ஆண்ட வர்க்கம் , ஒடுக்கபட்ட வர்க்கம் என இரு பிரிவுகள் உண்டாயிற்று, உலகெல்லாம் இன்றும் இருக்கும் பிரிவுகள் இவைதான், இந்தியாவில்தான் சாதி என சொல்லி உட்பிரித்து அதை அரசியல் செய்கின்றார்கள் அயோக்கியர்கள்

ஆளும் வர்க்கம் “பட்ரீசியர்கள்”(Patricier) என அழைக்கப் பட்டனர். ஏழை உழைக்கும் வர்க்கத்தினர் “பிலேபியர்கள்” (Plebis) என அழைக்கப் பட்டனர்.

இவர்கள் இடையே பஞ்சாயத்து செய்ய ஒரு குழு அமைக்கபட்டது அதன் பெயர் கிலியேன்தலா(Clientela)

இந்த ஆளும் ஆசாமிகளுக்கு ஏதும் சிக்கல் என்றால் இந்த கிலியேன்தலா என்பவர்களை கேட்பார்கள், இன்று Client என சொல்லபடும் வார்த்தையின் மூலம் அதுவே

ஒரு கட்டத்தில் ஆளும் சாதிக்கும் அடிமை வர்க்கத்திற்கும் இடையே மோதல் முற்றி, கிலியேன் தலா எனும் மயிராவது என எச்.ராசா பாணியில் சொல்லிவிட்டு அடித்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்

இப்பொழுது நாம் திராவிடம், ஆரியம், அம்பேத்கரியம் என அடித்துகொள்கின்றோம் அல்லவா? அது போரானால் எப்படி இருக்கும்?

அப்படி அவர்கள் கிரேக்க சிந்தனையாளர் பெயரை சொல்லி
போராடிகொண்டிருந்தார்கள்

(இன்னும் சட்டம் ஒழுங்கு இருப்பதால் கலவரமில்லை, அப்படி ஒன்று இல்லை என்றால் நினைத்து பாருங்கள், விடுவார்களா?)

நிலமை எல்லை மீறி போவதை கண்ட மன்னன் டார்கீசியஸ் இது சரிவராது என செனட்டை எல்லாம் கலைத்தான் , மக்களாட்சி எல்லாம் சரிவராது ஒழுங்காக இல்லாவிட்டால் தலை சீவபடும் என எச்சரித்தான்

மக்களாட்சி ருசிபார்த்த கூட்டம் விடுமா? அதுவரை அடித்து கொண்ட ஆண்டவர்க்கமும் அடிமை வர்க்கமும் மன்னனை விரட்டி அடித்து ஆட்சியினை கைபற்றியது

தலைதெறிக்க ஓடிவிட்டான் மன்னன், ஆட்சியினை ஒருவனிடம் கொடுத்துவிட்டு திரும்ப வாங்கவே முடியாது என உலகம் படித்தது அப்பொழுதுதான், சசிகலா பின்னாளில்தான் படித்தார் பாவம்.

கான்சல் எனும் அமைப்பு முழு அதிகாரத்தையும் கைபற்றியது, இதெல்லாம் நடந்து முடிய கிமு 100 ஆகிவிட்டது

அப்பொழுது அலெக்ஸாண்டர் எனும் பெரும் புயல் அடித்து ஓய்ந்திருதது என்பதால் மெல்ல எட்டிபார்த்தனர் ரோமர்

அதாவது ரொமுலஸ் காலத்திற்கு பின் 600 ஆண்டுகள் கடந்திருந்தன, அப்பக்கம் அலெக்ஸாண்டர் ஆசியா முழுக்க மாபெரும் சாம்ராஜ்யம் எல்லாம் அமைத்த்திருந்தான்

கிரேக்கர் எந்நேரமும் மேற்கு நோக்கி பாயும் ஆபத்து இருந்தது, ஆனால் அலெக்ஸாண்டருக்கு பின்னரான கிரேக்கம் அடங்கிவிட்டதால் ஆபத்தில்லை

ரோமிற்கு முதல் ஆபத்து கார்தோஜினியர் வடிவில் வந்தது, பிரான்ஸையும் ஸ்பெயினையும் பிடித்த அவர்கள் இத்தாலியின் ரோமையும் பிடிக்க வந்தனர்

ஏற்கனவே உள்நாட்டு யுத்தத்தால் கடும் யுத்த பயிற்சியும் மனன்னையும் அவன் வீரர்களையும் விரட்டியதால் கடும் கூடுதல் பயிற்சியும் பெற்றிருந்த ரோமும் யுத்ததிற்கு தயாரானது

அவர்களின் இரு வீரர்கள் பிரசித்தி ஒருவன் பாம்பே இன்னொருவன் ஜூலியஸ் சீசர்

இருவரும் பாகுபலி பல்வாள்தேவன் போல கடும் வில்லாதி வில்லன்கள்

சீசர் என்பது ஜூலியஸின் குடும்ப பெயர், சீசர் என்றால் லத்தீனில் யானை என பொருள், ஜூலியஸின் தாத்தா யானையினை கொன்றதால் அப்பெயர் வந்ததாம், எல்லாம் நமது ஊர் கரிகால்சோழன் சாயல்

அப்படிபட்ட வீரவம்சத்தின் ஜூலியஸ் சீசரும் , பாம்பேயும் கார்தோஜினியர்களை அடிக்க படையோடு சென்றனர்

கடும் யுத்தம் இரு முறை கத்ஜோனியரை அடித்துவிரட்டியது சீசர் மற்றும் பாம்பேயின் படைகள், மக்களுக்கு ஏக மகிழ்ச்சி

ஆனால் கார்தோஜினியர் விடுவதாக இல்லை 15 ஆண்டு கழித்து மறுபடியும் வந்தனர், இனி விடுவதாக இல்லை இதுவரை தற்காத்தோம் இனி அவர்கள் பகுதிக்குள் புகுந்து அடிக்க முடிவு செய்தது கான்சல்

தளதிகள் சீசருக்கும் பாம்பேவுக்கும் உத்தரவும் வந்தது

உள்ளே புகுந்து கார்தோஜினியர் கோட்டையினை தகர்த்து அவர்களை அடியோடு வீழ்த்தி மாபெரும் செல்வத்தோடு திரும்பினச் சீசரும் பாம்பேயும்

ஆம் முதன் முதலாக ரோமை படைகள் அந்நிய தேசத்தில் பெற்ற வெற்றி அதுதான், பெரும் செல்வம் கொடுத்த யுத்தமும் அதுதான்

செல்வம் கொட்டபடும் நாட்டில் என்னாகும்? கஜானா நிறையும், மக்கள் மகிழ்வார்கள் அமைதி செழிக்கும் அப்படியே வீரர்கள் கொண்டாடபடுவார்கள்

உண்மையில் அன்று உயர்தர வீரர்கள் குழுவாக இயங்கினர்

அதில் சீசர், பாம்பே, புரூட்டஸ், சீசரோ என பலர் இருந்தாலும் தளபதியாக கொண்டாடபட்டான் சீசர்

அன்றைய ரோம் கான்சால்கள் ஆட்சியில் இருந்தது, அவர்களின் படையில் ஒரு தளபதி சீசர்

காலம் மாவீரன் உருவாக ஒரு வாய்ப்பினை உருவாக்கும் என்பது வரலாற்று நியதி, அக்காலம் ரோமிற்கும் வந்தது

(தொடரும்..)

இந்த மாநிலம் கடும் சுயநலவாதிகளின் கையில் சிக்கிவிட்டது

அந்த வில்சன் ஈழதமிழனுக்காக தீ குளித்திருக்க வேண்டும், இல்லையேல் பாபர் பசூதிக்காக தன்னை கொளுத்தியிருக்க வேண்டும்

அப்பாவி பாகிஸ்தானை தாக்காதே என்றோ, நீட் தேர்வை ரத்து செய் என்றோ, வங்க தேச மக்களை உள்ளே விடு என்றோ சொல்லி சுட்டுகொண்டு செத்திருந்தால் இந்நேரம் அக்குடும்பம் கோடீஸ்வர குடும்பமாக மாறியிருக்கும்

இந்தி படிக்காதே என சுட்டு செத்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு

அதுவும் பார்பண அதிகார நாட்டில் சிறுபான்மையினரான நான் வாழமுடியாது என சொல்லிவிட்டு அவரே அவரை சுட்டிருந்தால் இந்நேரம் அவர் வீடுமுழுக்க பணமாக கொட்டி அவரை தியாகி ஆக்கியிருப்பார்கள்

ஆனால் அவர் இரு தேசவிரோதிகளை பிடிக்க தன் உயிரை கொடுத்ததால் எல்லையில் சாகும் வீரனின் பெரும் தியாகம் சாதரண சாவாக கருதபடுவது போல் அதுவும் கடந்தாயிற்று

தமிழ்நாடு போலி அரசியல்வாதிகள், சுயநல மீடியாக்கள், வறட்டு பைத்தியகார தலைவர்கள், கொடிய பிரிவினைவாத சித்தாந்த வாதிகள் கையில் எவ்வளவு வலுவாக சிக்கியிருக்கின்றது என்பதை நாமெல்லாம் அறிய மகா முக்கிய தருணமிது

நாகர்கோவிலுக்கு ஓடி சென்று வென்ற அந்த வசந்தகுமாரை கூட காணவில்லை

திருமா, சிறுபான்மை காவலன் ஸ்டாலின், இன்னும் சமூகநீதி காக்க வந்த கணவான்கள் ஒருவனையும் காணவில்லை

கன்னியாகுமரி கடலலைகளோடு சேர்ந்து ஆரல்வாய்மொழி பக்கம் “ஓஓ..”வென‌ வீசும் காற்றோடு சேர்ந்து நாம் அவனுக்காகவும் இந்த மாநிலம் கடும் சுயநலவாதிகளின் கையில் சிக்கிவிட்டதையும் எண்ணி அழுது கொண்டிருக்கின்றோம்

ஆருத்திர தரிசனம்

ஆருத்திர தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள்

ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள்

அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் ஆன்மீக பகுத்தறிவில் அகங்காரத்தின் உச்சியில் யாகம் செய்திருக்கின்றார்கள்

இந்த யாகத்தை அறிந்த பரம்பொருள் வழக்கமான பிச்சைகார கோலத்துடன் வந்து நிற்க சில தடங்கல்களை முனிவர்கள் உணர்ந்து அவரை விரட்டினர்

அவரோ செல்லாமல் அங்கே சுற்றி சுற்றி வந்தார், ஆத்திரமடைந்த முனிகள் மதயானை, உடுக்கை, மான் , தீ என எல்லாவற்றையும் ஏவி ஒரு அரக்கனையும் ஏவிவிட்டனர்

சிவனோ யானையினை கொன்றார், உடுக்கையினை கையில் வாங்கினார், மான் தோலை ஏற்றார் அந்த நெருப்பையும் ஏற்றார், அந்த அரக்கனையும் கொன்று அவன் மேல் நின்று ஆடினார்

அதன்பின் உண்மை உணர்ந்த முனிகள் முக்கண்ணணே சரணம் என தங்கள் தோல்வியினை ஒப்புகொண்டு கடவுள் மனிதனாக முடியாது என்பதை உணர்ந்து திருந்தினர்

இதுதான் ஆருத்திர தரிசனம் என்பது, அச்சம்பவம் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடந்தது என்கின்றது புராணம் அதை நினைவு கூறி வழிபடுகின்றார்கள்

இச்சம்பவம் கூறும் தத்துவம் என்ன?

விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை பைபிளும் இந்த சாயல் சம்பவத்தை இரு இடங்களில் சொல்லும். தானும் கடவுளாக ஆசைபட்டு பழத்தை தின்றாள் ஏவாள். இன்னொரு இடத்தில் கோபுரம் கட்டி கடவுளின் இடத்துக்கு செல்ல ஆசைபடுகின்றனர் மக்கள்

இரு இடத்திலும் கடவுள் அவர்களை தடுத்து விரட்டியடிக்கின்றார்

ஆம் அன்றல்ல இன்றுவரை எல்லா மனிதனுக்கும் கடவுளாக உள்ளூர ஆசை இருக்கின்றது, இக்காலத்தில் எல்லோருக்கும் அது இருந்தாலும் அரசியல்வாதிக்கு மகா அதிகமாக இருக்கின்றது.

சிவனின் ஆருத்திரா தரிசனத்தில் அவர் மேல் ஏவபடும் விஷயங்களை பாருங்கள் மத யானை, இது மனதை குறிக்கின்றது, மான் என்பது பார்வைக்கு அழகானது கண்களால் கோரபடும் ஆசைகளை குறிக்கின்றது

நெருப்பு உணர்ச்சிக்கும், உடுக்கை என்பது செவிகளால் பெறும் இன்பத்தினையும் குறிக்கின்றது

அரக்கன் என்பவன் மனதின் அகங்காரத்தை குறிக்கின்றது

ஆம் இந்த மானிடன் மனதுக்கும் உணர்ச்சிக்கும் அடிமையாக கூடியவன். அதனால் மாயை அதிகரிக்கும் அந்த ஆசையே சகல பாவங்களுக்கும் உலக துன்பங்களுக்கும் அடிப்படை

புலன்களை அடக்கு மனதினை ஒடுக்கு இறைவன் தெரிவான்

எல்லா புலன்களையும் அடக்கி, ஆசையினையும் அடக்கி இறைவனிடம் சரண்டைதலே இறைவனை அடையும் வழி, மாறாக ஆசையினை யாகம் போல் வளர்த்தால் அது வளருமே தவிர ஞானம் கிடைக்காது

சிவன் எல்லாவற்றையும் அடக்கி வைத்து அகங்கார அரக்கனை ஒடுக்கி அதன் மேல் ஆடியது போல, சகல புலன்களையும் அடக்கினால் மனிதனும் தெய்வ நிலைக்கு உயர்த்தபடுவான் என்பதே இந்நாளின் தத்துவம்

சிவனின் இந்த கோலம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா விஷேஷம். இன்று அங்கு சிறப்பான நாள்

அத்தொகுதியின் எம்பி திருமா செல்வாரா என்றால் செல்லமாட்டார் மாறாக வோட்டு வாங்க மட்டும் செல்வார்.

இன்று ஒரு களி செய்வார்கள்,

அது அன்றொரு நாளில் வீட்டில் சமையல் பொருள் சரியாக இல்லாததால் ஒரு பக்தன் அரிசிமாவும் வெல்லமுமிட்டு களி செய்து பிச்சைக்காரன் உருவில் வந்த சிவனுக்கு படைத்தானாம், அப்படியே வீட்டு கொல்லையில் இருந்த 7 காய்கறிகளையும் கூட்டாக்கி கொடுத்தாரம்

அதிலிருந்து இந்நாளில் களி செய்யும் வழக்கம் வந்தது என சொன்னாலும், விரதம் முடியும் காலம் அரிசியும் வெல்லமும் கலந்து இனிப்பாக முடிக்க செய்யபட்ட ஏற்பாடு

இறைவன் பக்தியாய் எது கொடுத்தாலும் ஏற்றுகொள்வான் என்பதும் கவனிக்கதக்கது.

இந்துக்களுக்கு இந்நாள் சிறப்பானது, நடராஜ பெருமான் இருக்குமிடமெல்லாம் வழிபாடு உண்டு, அந்த ஆடல் வல்லவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்

ஐம்புலன்களின் ஆசையினை ஒழி, அகங்காரத்தை காலில் போட்டு மிதி, நீயும் தெய்வ நிலையினை அடைவாய் என்பதே திருவாதிரை நாள் சொல்லும் தத்துவம்

வேண்டாம்..

“மோடி தன் ஷூவில் விஷத்தை கொட்டினால் அடுத்த நாள் இந்தியாவில் பல ஊடகவியலாளர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்” – கன்னையா குமார்

சீன கம்யூனிஸ்ட் தலமை தன் பின்புறம் விஷத்தை தடவினால் இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்டும் உயிரோடு இருக்க மாட்டான், போடா டேய்

தமிழகத்தில் திமுக தலமை.. ….

வேண்டாம்..

சுத்த ரசனை கெட்ட தமிழகமாய் இருக்கின்றது

தலைவி குஷ்புவினை பலருக்கு பிடிக்கவில்லை, சுத்த ரசனை கெட்ட தமிழகமாய் இருக்கின்றது

பாரதியாரை பட்டினி போட்டு கொன்ற தமிழகம் காமராஜரை ஓட விரட்டிய தமிழகம் எப்படி இருக்கும்?

இப்படித்தான் இருக்கும்

தலைவியினை புகழ்வது தவறென்றால் அந்த தவறை சங்கம் ஆயிரம் முறை செய்யும்

“நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட தமிழகம் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி, சுடர்மிகு அழகுடன் அறிவுடன் அவரை ஏன் படைத்தாய்..”

பெங்களூரில் 3 தீவிரவாதிகள் கைது செய்யபட்டுள்ளனர்

பெங்களூரில் 3 தீவிரவாதிகள் கைது செய்யபட்டுள்ளனர்

தமிழகத்தில் மிகபெரும் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ள அந்த கொடிய தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ் வரை தொடர்பு இருந்திருந்திருகின்றதி

வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன, விசாரணை தொடர்கின்றது

தமிழகத்தை காத்த பாதுகாப்பு அமைப்புகளுக்கு கோலம் போட்டு நன்றி சொல்வோம் வாருங்கள்..

தெய்வீக குரல்

தமிழகத்தில் எவ்வளவோ பாடகர்கள் உண்டு

சீர்காழியின் குரல் வெண்கல குரல், சவுந்தராஜனின் குரல் ஆண்மை மிக்கது, பாலசுப்பிரமணியத்தின் குரல் தங்க தூணில் தட்டுவது போன்ற இனிமை

ஜேசுதாஸின் குரல் தெய்வீக குரல், அது தேனை குழைத்து வெண்கலத்தில் வார்த்து வெண்ணையில் கலக்கியது போன்ற ஒரு பாந்தமான குரல்

அந்த‌ தெய்வீக குரல் என்பது சிலருக்கே வாய்க்கும்,அக்குரல் அமைவது அபூர்வம்

அவ்வகையில் ஜேசுதாஸ் மகா அற்புதமான பாடகர், கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடிகொண்டிருப்பவர்

மலையாள உலகில் இருந்துவந்து இசையால் எல்லா இந்தியரையும் கவர்ந்த பாடகர் அவர்

சினிமாவில் அழியாத பல பாடல்களை பாடியிருக்கின்றார், கண்ணதாசன், வாலி போன்றோரின் வரிகள் அவரின் குரலால் கல்வெட்டாக பதிந்து நிற்கின்றன‌

பாடல் அவர் குரலில் வரும்பொழுது பூ எடுத்து தேனில் நனைத்து காதில் ஊற்றுவது போல் அப்படி ஒரு சுகாந்தம் கிடைக்கும், அக்குரல் உள்ளிரங்கும்பொழுதே ஒரு சிலிர்ப்பும் அமைதியும் ஏற்படும்

கிறிஸ்தவ பாடல்களில் அவரின் பாடல்கள் சாகா வரமுடையது, இந்து பாடல்கள் கேட்கவே வேண்டாம்

“ஹரிவராசனம்” அவர் குரலில் கேட்டால் உருகா மனமும் உருகும்

“ஆனந்தமானது அற்புதமானது” எனும் பாடல் அவரை தவிர யாருக்கும் சாத்தியமில்லை

ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல?

பாடகர்களால் படத்தை வெற்றிபெற செய்யமுடியும் என்பதற்கு எடுத்துகாட்டு ஜேசுதாஸ், சிந்துபைரவி என்ற படமே ஜேசுதாஸின் பாடலால் நின்றது, மறக்க முடியாது

எழுதினால் எழுதிகொண்டே செல்லலாம், மனிதரின் முத்திரை அவ்வளவு வலுவானது

மனதிற்கு பெரும் நிம்மதியும், உருக்கமும் கொடுக்கும் குரல் அந்த ஜேசுதாசுடையது

அந்த முகம் போலவே அக்குரலும் அமைதியானது, பாடும் பொழுது எவ்வித சலனமும் அவரிடம் இருக்காது, தியானத்தில் பாடுவது போன்றே இருக்கும்

ஆன்மாவில் இருந்து அவர் பாடுவதால் அந்த குரலும் ராகமும் எல்லோர் மனதையும் எளிதாக தொடுகின்றது

நிறைகுடம் தழும்பாது என்பது அதுதான்

இன்றைய பாடகர்கள் செய்யும் அழிச்சாட்டியம் ஏராளம், காதை பொத்துவார்கள், ஒரு மாதிரி வானம் பார்க்க இழுப்பார்கள், சரிவார்கள் இன்னும் ஏராள இம்சைகள்

நல்ல பாடகர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஜேசுதாஸ் பெரும் உதாரணம், இன்றிருப்பவர்கள் அவரிடம் நிறைய படிக்க வேண்டும்

கிட்டதட்ட 79 வயதானாலும் இன்னும் குரல் அப்படியே இருக்கின்றது, ஆனால் அதிகம் பாடுவதில்லை

1980,90களின் பாடல் உலகில் அவரின் முத்திரை அதிகம், குரலால் கட்டிபோட்டிருந்தார் மனிதர்

ஜேசுதாஸ் பாட வந்தது ஒரு பொற்காலம், ஆம் விஸ்வநாதனின் காலங்கள், இளையரஜாவின் காலங்கள், மெல்லிசை கொடுத்த ரகுமானின் தொடக்க காலம் அவை

அந்த பூங்காற்றுகளே ஜேசுதாஸ் எனும் மெல்லிய தூரலை சுமந்து வந்தன, அந்த காற்றே மலர் மணமும் பக்தி மணமும் கொண்ட ஜேசுதாஸின் ஆன்மீக குரலை சுமந்து வந்தன‌

காலம் காலத்துக்கும் நிற்கும் பாடல்களை கொடுக்க காலத்தால் கொடுத்த பாடகன் அவன்

வழிபாடோ தியானமோ ஆளற்ற நிசப்தத்தில் குறிப்பாக யாருமற்ற நள்ளிரவில் இரைச்சலற்ற தனிமையில் அவர் பாடலை கேளுங்கள்

அந்த பரவசம் ஆயிரம் மணி நேரம் தியானம் செய்த திருப்திக்கு சமம்

ஜேசுதாஸின் குரலும் அவர் பாடலும் அதன் அழகும் ஆத்மார்த்தமானவை, அதனை இனி கொடுக்க இன்னொரு ஜேசுதாஸ் வந்தால் மட்டுமே முடியும்

அந்த தெய்வீக பாடகனுக்கு இன்று பிறந்தநாள்

அவர் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள், அவர் குரலின் இனிமை போல அவர்வாழ்வு இனிது அமையட்டும்