அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே?

“அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே?

அடேய் இந்த பிராமணன் இருக்கானே, வேலையில கெட்டிக்காரன், நேர்மையா இருப்பான் லஞ்சம் எல்லாம் வாங்கமாட்டான், சுய அறிவு உண்டு, விசுவாசமா இருப்பான் கடவுளுக்கு பயபடுவான் இப்படிபட்டவன வேலைக்கு வச்சிக்க எந்த முதலாளி விரும்பமாட்டான் சொல்லு

அய்யோ கொத்திட்டு போயிருவாண்ணே

அதாண்டா, அவன் கொத்துவான். ஆனா உள்ளூரிலே நிம்மதியா இருந்தால் அவன் எந்த நாட்டுக்க்கு போவான்?

போகவே மாட்டான்

அவன அடிச்சி விரட்ட ஒரு சதி நடக்கணுமில்ல, அவன படிக்கவிடாம, பொழைக்கவிடாம அடிச்சாதானே அவன் இன்னொரு நாட்டுல போய் இன்னொரு நாட்டுக்காரனுக்கு வேலை செய்து அவன் நாட்டை நல்லா வச்சிருப்பான்

ஆமாண்ணே

அப்படி அவன இந்தியாவ விட்டு விரட்ட நடந்த சதிதான், ஆரிய பார்பானிய பிராமண சதி…”

இவ்வளவு இருக்காண்ணே

“அண்ணே, ஒரு சந்தேகம்ணே

என்றா..

அண்ணே அடுத்த நாடு இலங்கையில தமிழனுக்கு ஒரு பிரச்சினைன்னா திமுகா பொங்குது

ஆமா

இந்தியாவுல இஸ்லாமியருக்கு ஒரு பிரச்சினைன்னா முன்னாடி நின்னு கத்துது

அட அவனுக வங்கதேச முஸ்லீமுக்கே கத்துறானுக நீ வேற‌

ஆனா ஈரான் முஸ்லீம், சிரியா முஸ்லீம்கெல்லாம் ஏண்ணே கத்தவே மாட்டேங்குது, இவ்வளவுக்கும் காஷ்மீரியும் ஷியா முஸ்லீம்னு சொல்லிக்கிறாங்க‌

அடேய் இது புரியலியா

தெரியலண்ணே

அட அவனுக இஸ்லாமியர இந்துக்காரன் ஏதும் சொன்னாதான் குதிப்பானுக, அமெரிக்கன் இஸ்ரேல்காரன் எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சாலும் கம்முண்ணு இருப்பானுக, அரசியலப்ப்பா

இதுல எண்ணெண்ணே அரசியல்

அடேய் அந்தக்காலத்துல இருந்து அமெரிக்கா எத சொல்லுமோ அதைத்தான் இவனுக பண்ணுவானுக, இந்தியாவுல குழப்பம் பண்ணுண்ணு அவன் சொன்னா உடனே பண்ணுவானுக, ஈழவிவகாரத்துல குழப்புண்ணா குழப்புவானுக, புலிகள ஆதரின்னா ஆதரிப்பானுக, இந்திராவ அடின்னா அடிப்பானுக, இந்திய ராணுவத்தை கண்டபடி பேசுன்னா பேசுவானுக‌

இவ்வளவு இருக்காண்ணே

ஆமாடா, இன்னொரு நாடு செய்யவேண்டியதை எல்லாம் இங்கேயே இருந்து இவனுகளே பண்ணுவானுக, கேட்டா புரட்சிம்பானுக, இவனுக‌ எங்க இருந்துடா அமெரிக்காவ எதிர்ப்பானுக..அவன் லட்சம் இஸ்லாமியர கொன்னாலும் மூச்சே விடமாட்டானுக வேணும்ணா இருந்து பாரு..”

ஒரு காலமும் இப்படி இல்லையே?

ரஜினி படத்தை பார்த்துவிட்டு அவரின் ரசிகர்கள் எல்லாம் ஏன் இதயம், குடல் மற்றும் இதர பாகங்கள் தெறிக்க கத்துகின்றார்கள் என்பது புரியாமலே இருந்தது

ஒரு காலமும் இப்படி இல்லையே? இதென்ன புதுவகையான ஆக்ரோஷம் என அச்சபட்டு கேட்டால் ஒரு பயலும் சொல்லவில்லை

மிக முக்கியமான ஒருவனை பிடித்து உண்மையினை சொல் உனக்கு ரஜினிகாந்தோடு இமயமலையில் சந்திக்க ஏற்பாடு செய்கின்றேன் என ஆசைகாட்டியதும் உண்மையினை சொல்லிவிட்டான்

விஷயம் வேறொன்றுமில்லை

சீமானையும் நாம் தமிழர் தும்பிகளையும் அவர்கள் பாணியில் கலாய்க்கின்றார்களாம்

அவர்களை போல .. தெறிக்க கை கால் கண்களை எல்லாம் உருட்டி மகா உணர்ச்சி கொந்தளிப்பில் பதில் சொல்கின்றார்களாம்

அவர்கள் அப்படி சொன்னபின்பு ரஜினி ரசிகர்களின் ஆக்ரோஷ தர்பார் ரியாசனை பார்த்தபின்பு பலமடங்கு சிரிக்க முடிகின்றது

நீங்களும் இனி அந்த வீடியோக்களை பாருங்கள் விடாமல் சிரிப்பீர்கள்…

இங்கிருந்து கடத்தபடும் சிலைகளை வாங்குவது யார்?

“அன்பேரே கிறிஸ்தவனுக்கு உருவ வழிபாடு அருவருப்பானது, விக்ரகத்தை கடவுள் வெறுக்கின்றார்

எங்கே சொல்லபட்டிருக்கின்றது?

பைபிளில் சகோதரா

பைபிளை யார் கொடுத்தார்கள்?

வெள்ளைக்காரன்

சரி, இங்கிருந்து கடத்தபடும் சிலைகளை வாங்குவது யார்?

அதே வெள்ளைக்காரன்

எவ்வளவு கொடுக்கின்றான்?

நிறைய, கோடி கோடியாக கொட்டி கொடுக்கின்றான்

ஆக உன்னை விக்கிரத்தை தூர எறி என சொல்லிவிட்டு அவன் இங்கிருக்கும் விக்கிரகத்தை எல்லாம் கடத்திகொண்டு போகின்றான் அப்படித்தானே

அது வந்து புரோ… உண்மை எதுவென்றால்..

ம்ம்.. உண்மை எதுவென்றால் . நீ அடிமுட்டாளாய் இருக்கின்றாய், உன் மண்ணின் பழங்கால சிலையின் அருமை, உன் உரிமையானா சிலையின் அருமை உனக்கு தெரியவில்லை அவனுக்கு தெரிகின்றது என்பது..

ஒரே குழப்பமா இருக்கு ப்ரோ

இன்னும் நல்லா குழம்பு, அப்பொழுதுதான் தெளியும்..”

ஒரு வரலாற்று சாட்சி ஆலயம்தான் அங்கோர்வாட்

வரலாறு எப்பொழுதும் எங்கும் ஒரு சாட்சியினை மவுனமாக நிறுத்தியிருக்கும், நடந்த கொடுமைக்கும் புரட்டுக்கும் அது சாட்சியாக நின்றுகொண்டிருக்கும், உரிய வேளை வரும்பொழுது அது தன் மவுனத்தை கலைத்து வரலாற்றை மிக சரியாக சொல்லும்

அப்படி ஒரு வரலாற்று சாட்சி ஆலயம்தான் அங்கோர்வாட்.

அங்கோர் வார் எனும் கெமர் மொழியில் “கோவில்களின் நகரம்” என பொருள்

இன்று கம்போடியா என அழைக்கபடும் நாடு அன்று காம்போஜம் என்றிருந்தது, இந்தோ சீன நாடுகளுக்கே உரிய வளமான ஆறுகள் அங்கு பெருக்கெடுத்தன, அதனால் விவசாயம் செழித்தது

இங்கு பல்லவ மன்னன் ஆட்சியில் இருந்தபொழுது 7ம் நூற்றாண்டில் அங்கு படையெடுத்து கைபற்றினான், ஆம் சோழருக்கு முன்பே கிழக்காசியாவினை பல்லவனே ஆண்டான், சோழன் அவனுக்கு பின் 300 ஆண்டுகள் கழித்தே அப்பக்கம் வந்தான். பல்லவரின் கப்பல்படை அப்படியானது

அந்த பல்லவனுக்கு வாரிசு சண்டை வந்தது, அக்கால வழக்கபடி வாரிசுகள் மோதாமல் இருக்க நாட்டின் இன்னொரு பகுதிக்கு சர்ச்சை வாரிசினை அனுப்புவார்கள், அங்கே இருந்து நாட்டை கவனிப்பது அண்டை நாட்டை அபகரித்து பெருக்குவது அப்படியே நாட்டை பிரித்து முடிசூடுவது என ஏக அரசியல் உண்டு

அதற்காக முக அழகிரி மதுரைக்கு அனுப்பட்டது கனிமொழி டெல்லிக்கு அனுப்பபட்டது பற்றி எல்லாம் நீங்கள் சிந்திக்க கூடாது, விஷயம் அங்கோர் வாட்

அப்படி காஞ்சி பல்லவ மன்னன் 8ம் நூற்றாண்டில் தன் மகனை காம்போஜத்துக்கு அனுப்பினான், இனி இதுவே தன் தேசம் என உணர்ந்த அந்த சூரிய வர்மன் தான் ஒரு இந்து மன்னன் என்பதாலும் வெளிநாட்டில் இந்துமதம் பிரமாண்டமாக பரவ வேண்டும் என்பதாலும் அந்த மாபெரும் ஆலயத்தை அமைத்தான்

ஆம், அன்றும் இன்றும் அதுதான் உலகின் மாபெரும் இந்து ஆலயம், அட எல்லா மத ஆலயத்திலும் அதுதான் பெரிது

அதன் பரப்பளவு 700 ஏக்கர், ஒரு பக்க சுவர் 5 கிமீட்டருக்கும் நீளம் கொண்டது, உள்ளிருக்கும் ஆலயத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

திருச்சி திருவரங்கம் போல 30 ஆலயங்களை உள்ளே வைக்கலாம் என்றால் நீங்களே முடிவு செய்யுங்கள்

ஆம் அப்படி பெரும் சீரும் சிறப்புமான அந்த ஆலயம் கிழக்காசியாவில் இந்து பெருமையினை தாங்கி நின்றது, அதன் மொத்த பரப்பளவையும் படம்பிடிக்க நீங்கள் 2 ஆயிரம் அடி உயரத்துக்கு செல்ல வேண்டும் என்றால் பிரமாண்டத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்

இந்தியாவில் எந்த ஆலயமும் அதன் அருகே கூட வரமுடியாது , ஏணி வைத்தாலும் எட்டமுடியாது

இன்று கட்ட ஆரம்பித்தாலும் அந்த ஆலயம் கட்டபட 300 ஆண்டுகள் ஆகுமென்றால் அதன் பிரமாண்டத்தை சொல்ல வார்த்தை ஏது?

மூன்று அடுக்குகள் கொண்டது அது முதல் அடுக்கு வளாக சுவர்

இரண்டாம் அடுக்கு சுவரில் ராமாயண மகாபாரத காட்சிகள் செதுக்கபட்டிருக்கின்றன‌

மூன்றாம் உள் அடுக்கில்தான் பிரமாண்டமான ஆலயம் அமைந்திருக்கின்றது

இன்று சுற்றினாலும் முழுக்க சுற்ற ஒருவாரம் ஆகுமென்றால் இனி சொல்ல என்ன இருக்கின்றது

எப்படி அமைந்தது அங்கோர் வாட்?

காஞ்சி பல்லவர்கள் திருப்பதி வெங்கடாசலபதி பக்தர்கள் என்கின்றது வரலாறு, அப்படி இந்த கம்போடிய ஆலயத்தை விஷ்ணுவுக்கு அர்பணித்தான் சூரியவர்மன்

அவன் எப்படி கட்டினான் , எங்கிருந்து மக்களை கொண்டு சென்றான், எத்தனை ஆயிரம் சிற்பிகள்,கட்டுமான விற்பனர்கள் உழைத்தார்கள் என்பதெல்லாம் பற்றி தகவலே இல்லை

பூலோக வைகுண்டமாக மின்னிகொண்டிருந்தது அந்த வைணவ தலம்

எல்லா சாம்ராஜ்யத்துக்கும் வரும் சோதனை பல்லவ இனத்துக்கும் வந்தது, ஆம் பல்லவ இனம் புத்த மதத்தை கொஞ்ச நாள் சுமந்தது

புத்தத்தை தழுவிய எந்த அரசும் நிலைக்காது, காரணம் அது அரசனுக்கு ஒத்துவராத மதம். உதாரணத்துக்கு இந்திய ராணுவ தளபதியும், தமிழிக டிஜிபியும் அஹிம்சையே வழி, உயிர்களை துன்புறுத்த கூடாது, ஆயுதம் கூடாது, சண்டை கூடாது என்றால் நாடு நாடாக இருக்கும்?

அப்படி புத்தமதத்துக்கு மாறிய பல்லவ அரசு நிலைக்கவில்லை, இங்கு சரிந்தது

இங்கு சரிந்ததும் கம்போடிய பல்லவ அரசுக்கும் பிடியில்லாமல் தத்தளித்தது, அப்பொழுது உதித்த ஜெயவர்மன் எனும் வாரிசு அந்த கோவிலை புத்த கோவிலாக மாற்றியது

பின்பு இங்கு சோழ வம்சம் ஆட்சிக்கு வந்து அசத்தியது, சோழன் சைவ பிரிவு என்பதால் அவன் சைவ ஆலயங்களுக்கே முன்னுரிமை கொடுத்தான், கடாரம் கைபற்றி அதற்கங்கு கம்போடியா வரை சோழனின் கொடி பறந்தாலும் அவன் ஏனோ அங்கோர் வாட் கோவிலை கைபற்றி சைவ தலமாக்கவில்லை, வைணவ தலம் என்பதால் விட்டுவிட்டான் போல..

ஆனால் அவன் மனதில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்திற்று

அந்த தாக்கமே தஞ்சை பெரியகோவில் பெரும் அதிசயமாக மாற உருவாயிற்று. காம்போஜ ஆலயம் போல வரலாற்றில் ஒரு சைவ ஆலயம் நிற்க வேண்டும் என சோழன் கட்டியதே தஞ்சை பெரியகோவில்

இங்கு தஞ்சை கோவில் நம் கண்முன் கொண்டாடபட, அரச குழப்பங்களால் கம்போடியா வீழ்ந்து போக அக்கோவிலும் நாசமாயிற்று

பின்னாளைய அரசர்கள் தலைநகரை மாற்றிகொண்டு போக, அந்த அற்புத கலை பெட்டகம் காடுமண்டி போயிற்று

தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் பிரான்ஸின் படையெடுப்பு எல்லாம் அந்நாட்டின் தலைவிதியினை மாற்றின‌

பின்பு ஆங்கிலேயன் ஒருவன் அப்பக்கம் நாடு நாடாய் சுற்றும்பொழுது, காடு காடாய் சுற்றும்பொழுது அட இதென்ன ஒரு சுவர் நீண்டுகொண்டே செல்கின்றதே என ஆய்ந்து அசந்து நின்றான்

கொஞ்சம் கொஞ்சமாக 19ம் நூற்றாண்டில் அதன் பிரமாண்டம் கண்டறியபட்டபொழுதே தன் பெருமையினை உணர்ந்து கொண்டது கம்போடியா

இன்று அது புத்தநாடு என்றாலும் அது விஷ்ணுவுக்காக கட்டபட்டது என்பதை அது மறுக்கவில்லை மாற்றவுமில்லை

அந்த பெருமை பொக்கிஷத்தை தன் அதிசய பாரம்பரிய பொருளாக காட்டி தன் கரன்சியிலும் அச்சிட்டு பெருமை கொள்கின்றது அந்நாடு

இன்று கம்போடியாவின் மகா உச்ச வருமானமே இந்த ஆலயத்தை காண வரும் சுற்றுபயணிகள்தான்

அது சர்வ நிச்சயமாய் உலக அதிசயம், சந்தேகமே இல்லை அவ்வளவு பெரிய ஆலயமும் 40 ஆண்டுகளில் அது கட்டி முடிக்கபட்டு பல நூற்றாண்டுகளாய் அது பெரிதாக்கபட்ட அளவும் மாபெரும் அதிசயமே

ஆனால் ஏன் உலக அதிசயம் ஆகவில்லை என்றால் அது தாமதமாக கண்டறியபட்டது, இன்னொன்று அதை பற்றி உலக அரங்கில் பேச யாருமில்லை

ஒரு இந்து தேசம் இந்த உலகில் வலுவாக இருந்திருக்குமானால் அது உலக அதிசமாயிருக்கும்

ஆனால் வறிய கம்போடியாவும், அதன் ஏழ்மையும் இந்துமதத்தையும் தமிழனையும் பற்றி நினைத்துபார்க்க யாருமில்லை என்பதாலும் அந்நிலை எட்டாமல் போயிற்று

ஆனாலும் என்ன உலகம் சொல்லாவிட்டால் வைரம் மின்னாமல் போய்விடுமா?

அந்த அங்கோர்வாட் பல உண்மைகளை உலகுக்கு சொல்லிகொண்டே கம்போடியாவில் சாட்சியாய் வீற்றிருக்கின்றது

ஆம், உலகின் மிகபெரும் வழிபாட்டு தலம் ஒரு இந்து ஆலயம். அதை உருவாக்கியவன் தமிழன்

இந்துமதமே தொடக்கத்தில் இருந்தது, இடையில் வந்த புத்தமதம் இந்து ஆலயங்களை கைபற்றி தன் வயபடுத்தி இடையிலே ஒழிந்தும் போனது

தமிழன் தான் சென்ற இடமெல்லாம் இந்து தர்மத்தை பிரமாண்டமாய் பின்பற்றினான் அவனின் கனவும் வாழ்வும் தவமும் அதுவாய் இருந்தது

ஆம், ஒவ்வொரு இந்துவும் நினைத்து நினைத்து பெருமைபட வேண்டிய பிரமாண்டம் அது

தமிழக இந்துக்களின் பெருமை தஞ்சை ஆலயம் மட்டுமல்ல, அதை விட பெரும் சிறப்பான அங்கோர்வாட் ஆலயமுமே

மிக பரந்ததும் பழமையானதுமான அந்த ஆலயத்தை கம்போடிய அரசால் முழுக்க பராமரிக்க முடியவில்லை, யுனெஸ்கோ கட்டுபாட்டில் இருக்கின்றது ஆலயம்

அதில் ஒரு பகுதிக்கு புத்த குருக்கள் வந்து செல்வர், மற்ற பெரும் பகுதி பராமரிப்பு இன்றியும் இந்து சமய சுவடுகளை தாங்கியும் நிற்கின்றது

அந்த கம்போடியா மட்டும் இந்தியாவின் பகுதியாக இருந்திருக்குமென்றால் இன்று எப்படி எல்லாமோ அந்த ஆலயம் பிரசித்தி பெற்றிருக்கும்

என்றோ நம்மோடு இருந்த பகுதிக்கு இனி நாம் உரிமை கொண்டாட முடியாது

ஆயினும் நம் பாரம்பரியத்தில் வந்த அந்த ஆலயத்தை சீர்படுத்த உரிய காலம் வரும்

ஒரு நாள் இந்த திருநாடு முழு இந்து தர்ம நாடாக மாறும், அன்று கம்போடியா அங்கோர் வாட் ஆலயத்தை புதுபித்து சிறப்பிக்க இந்நாடு முன்வரும்

வந்தது அழியும், அழிந்தது திரும்பும்

உருவாக ஒரு காலமுண்டு, அது பாழ்படவும் காலம் உண்டு, அது மறுபடி எழவும் ஒர் காலம் உண்டு

தமிழனின் பெருமையும் தூய இந்துவாக அவன் வாழ்ந்த வாழ்வும் அவன் உருவாக்கிய பிரமாண்ட ஆலயங்களும் இந்தியாவில் மட்டுமல்ல , இலங்கையிலும் மட்டுமல்ல‌

கம்போடியாவில் உலக அதிசயமாகவே உறங்கிகொண்டிருக்கின்றது

இந்து என தன்னை உணரும் ஒவ்வொருவனும் பார்த்து ஆனந்தபட வேண்டிய ஆலயம் அது , தமிழன் என உணரும் ஒவ்வொருவனும் தன் பாரபரிய பெருமையினை உணரவேண்டிய பூமி அது

தமிழன் கடல் கடந்ததும் அங்கு ஆண்டதும் ஆலயம் கட்டியதும் தன் பெருமையும் பாரம்பரியமும் தன் மதத்தின் அடையாளமும் பின்னொருநாள் உலகிற்கு தெரிய வேண்டும் எனபதற்காக இறைவன் ஆடிய நாடகத்தின் எஞ்சிய காட்சி கற்கோவிலாய் அங்கு நிலைபெற்று நிற்கின்றது

அதை பார்க்காமல் சாகின்றவன் இந்துவாகவும் தமிழனாகவும் வாழ்ந்ததில் அர்த்தமே இல்லை..

அதில்தான் படம் வெற்றிபெற்றது

“ரஜினியின் பாட்ஷா படம் ஏன் மாபெரும் வெற்றி பெற்றது என்றால் ரஜினி அப்படத்தில் பிள்ளையார் சிலை அருகே வைக்கபட்ட வெடிகுண்டை செயலிழக்க வைத்து இந்துக்களை காப்பார்

அதில்தான் படம் வெற்றிபெற்றது

ஆனால் இந்த தர்பார் படத்தில் பிள்ளையார் சிலையே இல்லை

மும்பையில் எடுக்கபடும் தமிழ்படம் வெற்றிபெற பிள்ளையார் சிலை காட்சி அவசியம்

அந்த ரஞ்சித்பயல் பிள்ளையாருக்கு பதில் புத்தனை காட்டி படுதோல்வி அடைந்தான், இந்த முருகதாஸ் பயல் பிள்ளையாரை காட்டாமல் அதே தோல்வி அடைகின்றான்

பிள்ளையார் வந்த பாட்ஷாவும் நாயகனும் பெரும் வெற்றி பெற்றது

இப்படி சொல்லி அதிர வைக்கின்றான் JaiGanesh S Nadar என்பவன்

கேட்டால் பாலகுமாரனின் நேரடி சீடன் நானே என்பான், நாயகனுக்கு அவர்தான் வசனமெல்லாம் எழுதினார் என்பான்

அவன் சொன்னதில் இருந்து கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கின்றது,

அப்படியும் இருக்குமோ?

மும்பையினை காட்டிவிட்டு பிள்ளையாரை காட்டாவிட்டால் படம் தமிழ்நாட்டில் ஓடாதாம், சென்டிமென்டாம்

அடேய் கோடம்பாக்கம் இயக்குனர்களா, நோட் இட் பிளீஸ்

இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது

ஈரானும் அமெரிக்காவும் முட்டிகொண்டிருக்கும் நிலையில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி “நாம் வான் பாதுகாப்பின் புது யுகத்தில் நுழைந்துவிட்டோம், இனி எதிரியின் ஏவுகனைகளும் விமானமும் நுழையமுடியாதபடி பல அடுக்கு பாதுகாப்பு செய்துவிட்டோம்” என்கின்றது

ஆம் லேசர் கற்றையினை வலுபடுத்தி மகா வலுவான வான் வேலியினை அமைத்திருக்கின்றது இஸ்ரேல்

ஏற்கனவே அயர்ன் டோம் எனப்படும் சிஸ்டம் அவர்களின் நகரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலையில் 3 அடுக்கு பாதுகாப்புக்கு மாறுகின்றது இஸ்ரேல்

1000 ஏவுகனைகள் ஏவபட்டால் 10 ஏவுகனை முதல் அடுக்கில் தப்பினால் அடுத்த அடுக்கு 2 ஏவுகனைகளை விட்டாலும் அதை 3ம் அடுக்கு தடுக்கும்

இந்த இரண்டாம் மூன்றாம் கட்டத்தை தாவீது கவண் எனப்படும் David Sling என்கின்றது இஸ்ரேல்

ஆம் பழைய ஏற்பாட்டில் தாவீது கவண் கல்லில் கோலியாத் என்பவனை கொன்றாராம், அதனால் அந்த பெயராம். யூதர்களின் ஒப்பற்ற அரசன் அவன் என்பதால் அவன் அடையாளத்தையே வைத்துவிட்டார்கள்

அயர்ன் டோம், தாவீது கவண் 1 , தாவீது கவண் 2 என 3 அடுக்கு பாதுகாப்பில் நுழைகின்றது இஸ்ரேல்

இன்றைய உலகில் அதி நவீன வான் பாதுகாப்பு இதுதான், உலகம் அவர்களை ஒரு மிரட்சியுடனே பார்க்கின்றது

ஏவுகனை, விமானம், ட்ரோன், ஈ, எறும்பு, புறா என எதுவும் அதன் வானத்துக்குள் நுழையமுடியாதபடி அசத்தி நிற்கின்றது அந்த யூத நாடு

ஆச்சரியத்திலும் மகா ஆச்சரியம் அது..

இதுபற்றி ஈரானிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? அவர்களும் அடாவடி கோஷ்டி அல்லவா? அதனால் மன்சூர் அலிகான் பாணியில் இப்படித்தான் சொல்வார்கள்

“அவனுக வானத்தை மூடிட்டா, பூமிய தோண்டி எங்களால போக முடியாதா?, அப்படியே சுரங்கம் தோண்டி போய் அவனுக சிஸ்டம் பேட்டரிய உடைச்சிட்டோம்னு வச்சிக்க, அவனுக ஒரு புல்லும் புடுங்க முடியாது”