எதையோ செய்யபோய் வசமாக மாட்டிகொண்டு நிற்கின்றது ஈரான்

எதையோ செய்யபோய் வசமாக மாட்டிகொண்டு நிற்கின்றது ஈரான்

சுலைமானி கொல்லபட்டதும் அமெரிக்காவின் ஈராக்கிய நிலைகள் மேல் அவர்களுக்கு வலிக்காமல் ஈரான் தாக்க்க்குதல் நடத்தியதும் அதன் பின் இருவரும் அமைதியானதும் உலகறிந்தது

அப்பொழுது நடந்த விஷயம் உக்ரைனின் விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது

முதலில் விபத்து என மூடிமறைக்கபட்டது, ஆனால் விமான நுட்பத்தில் தேர்ந்த நாடான அமெரிக்கா ஒரு விமானம் விபத்தாகி விழுவதற்கும் ஏவுகனையால் அடித்து வீழ்த்தபட்ட காட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லி இது ஈரானால் நொறுக்கபட்டது என்றது

ஈரான் மறுத்தது

அமெரிக்கா விமானத்தின் கறுப்புபெட்டியினை கேட்க ஈரான் கொடுக்கமறுத்தபொழுது உலகில் சந்தேக ரேகைகள் தோன்றின‌

கனடாவும் இன்னும் சில நாடுகளும் களத்தில் இறங்கின,சர்வதேச குழு ஈரானுக்கு வரவேண்டும் என பல குரல்கள் எழும்பின‌

ஈரானுக்கு சிக்கல் உண்டாயிற்று, இன்னும் மறைப்பது தங்களுக்கு பலத்த சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்தவாறு கைகளை தூக்கியபடி “நாங்கதான் சுட்டோம் ஹிஹிஹிஹ்” என சொல்லிகொண்டிருக்கின்றனர்

உண்மையில் என்ன நடந்திருக்கின்றது என்றால ஈரானிய ஏவுகனைகள் அமெரிக்க நிலைகளை தாக்கியவுடன் அமெரிக்க விமானங்கள் தாக்கவரு என எதிர்பார்த்து ஏவுகனை சகிதம் நின்றிருகின்றது ஈரான்

அப்பொழுது உக்ரைனிய விமானம் டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து மேலெழும்பியிருக்கின்றது,ஈரானிய ராணுவ ரேடாரில் அது புள்ளியாய் தெரிந்திருக்கின்றது

ரேடாரில் புள்ளிதான் தெரியும் விமான விவரம் தெரியாது

போர் அச்சத்தின் உச்சியில் இருந்த எவனோ ஒரு ராணுவத்தான் பட்டனை தட்டிவிட்ட்டான், அது ராணுவவிமானமென அவன் நினைத்துவிட்டான்

ஏவுகனை விமானத்தை வீழ்த்திவிட்டது, இதுதான் விஷயம்

வீரனுக்கு பொறுப்பு வேண்டும், அவன் விமான நிலையத்தை கோரியிருக்கலாம் ஆனால் கடமையே கண்ணாணவன் சுட்டுவிட்டான்

முன்பு மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் இதே போல் தவறுதலாக சுடபட்டது, இப்பொழுது உக்ரைனிய விமானமே சுடபட்டிருக்கின்றது

சில இடங்களில் ராணுவத்தாருக்கு பொறுப்பு வேண்டும்

எழுபதுகளில் கிழக்கு சோவியத் யூனியனில் ஒரு அதிகாரி இப்படித்தான் ரேடார் முன் காவலுக்கு வைக்கபட்டார், எதிரி விமானம் வந்தால் சுட்டு வீழ்த்த அவருக்கு அதிகாரமிருந்தது

அந்த பெட்ரோப் அப்பொழுது ரஷ்ய ராடார் முன் அமர்ந்திருந்தார், அது 1983ம் வருடம், செப்டம்பர் 26

திடீரென அவரின் ரேடார் அமெரிக்க ஏவுகனைகள் மொத்தமாக ரஷ்யாவினை நோக்கி வருவதாக காட்டிற்று, அவர் இருந்தது மிக பொறுப்பான பதவி

அதாவது அவர் சொல்வது எல்லாமே உறுதிபடுத்தபட்ட தகவலாக இருக்கும் என்பதால் அவர் சொல்லிவிட்டால் ரஷ்யா தன் பதில் நடவடிக்கையினை தொடங்கும்.

வருவது என்ன ரக ஏவுகனை, அணு ஏவுகனையா? சோதனையா? என அவருக்கு தெரியவில்லை, ஆனால் அவர் சொல்லவேண்டும், சொல்வது சிக்கல் இல்லை , சொன்ன மறுநொடி ரஷ்யா அமெரிக்காவினை சின்னாபின்ன படுத்தும்

இவருக்கோ என்ன செய்வதென தெரியவில்லை, காரணம் அது மிரட்டல்கள் இல்லா இயல்பான காலம். போர் எல்லாம் வர வாய்ப்போ பிரச்சினையோ இல்லை, இப்பொழுது எப்படி?

ஆனால் சொல்லாமல் இருந்து, வருவது ஏவுகனைகளாக இருந்தால் ரஷ்யா அழியும், பின் இவர் அந்த பொறுப்பில் இருந்து என்ன பயன்?

இப்படியாக இரு விஷயங்களை மாறி மாறி யோசித்தாலும் அவர் உள்மனம் சொன்னபடி நடப்பது நடக்கட்டும் என இருந்துவிட்டார்,

20 நிமிடங்களில் முடிவு தெரியும்

எப்படி இருந்திருக்கும் அவருக்கு? ஆனால் உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் அமர்ந்திருந்தார். திக் திக்கான நிமிடங்கள்.

20ம் நிமிடத்தில் ரேடாரில் புள்ளிகள் மறைந்தன, எந்த ஏவுகனையும் ரஷ்யாவினை தாக்கவில்லை.

sஅவருக்கு ஒன்றுமே புரியவில்லை , ஆனால் நல்லவேளையாக உயரதிகாரிகளிடம் சொல்லவில்லை எனும் நிம்மதி அவருக்கு.

பின்பு ஏதோ ஒரு சோதனையில் மேக கூட்டம் இடையே வரும் சூரிய ஒளியினை ரேடார்கள் தவறுதலாக சில நேரம் ஏவுகனைகள் என அடையாளம் காட்டபடும் என கண்டுபிடிக்கபட்டது.

அதுதான் அன்றும் நிகழ்ந்திருக்கின்றது

அந்த பெட்ரோப் மட்டும் அன்று நிதானமின்றி தன் கடமையினை செய்திருந்தால் உலகின் மூன்றாம் உலகப்போரும், அணு ஆயுதபோரும் அன்றே தொடங்கியிருக்கும்.

உலகில் பாதி அழிந்திருக்கும், பெரும் விபரீதம் எல்லாம் ஏற்பட்டிருக்கும்.

அவரால் பெரும் யுத்தம் தடுக்கபட்டிருக்கின்றது, அவர் இடத்தில் இன்னொருவன் இருந்திருந்தால் இந்த நிதானம் இருந்திருக்குமா என்பது சந்தேகம், அலறியடித்து மேலதிகாரிகளுக்கு பட்டனை தட்டினால் முடிந்தது உலகம்.

இந்த விஷயத்தை அவர் 2013ம் ஆண்டுதான் சொன்னார், அதனை கேட்ட உலகம் அரண்டது மனிதர் எவ்வளவு பெரும் காரியத்தை செய்திருக்கின்றார் என அவரை பாராட்டியது.

இந்த நிதானம் மூலம் உலகை காப்பாற்றிய மனிதர் என அறியபட்ட அந்த பெட்ரோப் சமீபத்தில் மரணமடைந்திருக்கின்றார் என்று இன்றுதான் அறிவித்தார்கள்.

அதுவும் இந்த சம்பவத்தை சினிமா எடுக்க ஒருவர் தேடி சென்றபொழுதுதான் அவர் காலமான விஷயம் தெரிந்திருக்கின்றது.

ஈரானில் அப்படி யாரும் இல்லை, அசம்பாவிதம் நடந்தாயிற்று

எனினும் சுலைமானி கொலைக்கு பின்ன்பு உக்ரேன் விமானம் ஈரானுக்கு சென்றது அஜாக்கிரதையின் உச்சம், அதற்கான விலை உடனே கிடைத்துவிட்டது

ஈரானும் மகா சிக்கலில் தலையினை கவிழ்ந்தபடி நிற்கின்றது

எழுத்தாளர் போலவே பிம்பம் காட்டுகின்றார்

எப்பொழுது பார்த்தாலும் பெரிய எழுத்தாளர் போல இம்மனிதர் பேனாவும் பேப்பருமாக முகத்தை சீரியசாக வைத்து கொண்டே படமெடுக்கின்றார்

ஆனால் அப்படி என்ன புத்தகம் எழுதினார் என்றால் ஒன்றுமில்லை

கவிதையாவது எழுதினார் என்றால் அதுவுமில்லை

ஆனால் எப்பொழுதும் எழுத்தாளர் போலவே பிம்பம் காட்டுகின்றார்

மேடையில் கொடுக்கபடுவது துண்டு சீட்டு, அதை பார்த்து குழந்தை தத்தி நடைபயில்வது போல இவர் பேசுவதே தனி அழகு

அந்த துண்டு சீட்டை எழுதுவதற்குத்தான் இப்படி ஒரு காட்சிபடம் போல..

சென்னை புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது

சென்னை புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது, பேப்பர் பயன்பாடு காணாமல் போய் சர்வமும் டிஜிட்டலுக்கு மாறிவிட்ட உலகிது, புத்தகங்கள் இன்னும் சில ஆண்டுகளில் விடைபெறலாம், ஓலை சுவடி போல மியூசியத்தில் காணலாம்

அப்பொழுது இப்படி புத்தக கண்காட்சி எல்லாம் நடக்காது, கிண்டில் போன்றவை சும்மா ஆன் லைனில் நடத்தலாம், மற்றபடி இந்த பரவச காட்சியும் அனுபவமும் எதிர்காலத்தில் கிடைக்காது அதனால் சென்னைவாசிகள் தவறவிடாதீர்கள்

எந்த புத்தகம் வாங்க போகின்றீர்கள் என்பது அவரவர் விருப்பம், அவரவருக்கு என்ன அறிவு பெருக வேண்டும் என நினைக்கின்றார்களோ அதை வாங்கட்டும்

நாம் தேசியவாதி என்பதாலும், நம் சிந்தனை தமிழக குறுகிய வட்டத்துக்குள் அடங்காது என்பதாலும் எப்புத்தகம் வாங்கலாம் என கேட்டால் எம் பதில் இதுதான்

பெரும் உலக அறிவும், தெளிவும் பெறவேண்டும் என்றால் திராவிட புத்தகம் இருக்கும் பக்கமே செல்லாதீர்கள், அவை மிக மிக குறுகிய வட்டத்தில் உங்களை அடைத்து சிந்தனையினையே மிக குறுக்கிவிடும், பெரும் சிந்தனை வராது

உலக அறிவு பெரிதும் வேண்டுமென்றால் என்றுமே Pa Raghavan முதல் தேர்வு. அவரின் நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் , மாயவலை முதல் ஆயில் ரேகை , ஐ.எஸ் என எல்லாமே வரலாற்று கல்வெட்டு

இப்பொழுதெல்லாம் அந்த சுறா மாறிவிட்டது, முன்பு பெரும் கடலில் வேட்டையாடி கரையில் வந்து விஷயத்தை கொட்டும்,

இப்பொழுதெல்லாம் இலக்கிய நாவல் எனும் நீச்சல் குளத்தில் அதன் போக்கில் நீந்துகின்றது

அதன் சுகமும் பரமானந்தமும் நித்தியானந்தமும் நாவல் என்றால் அதைத்தான் அவர் செய்யமுடியும்

இம்முறை இறவான் எனும் இசைகலைஞன் கதையினை இறக்கியிருக்கின்றார், அத்தோடு அவரின் பழைய உலக புத்தகங்களை வாங்கலாம்

சுஜாதாவும் ஜெயகாந்தனும் எக்காலமும் கிளாசிக்

சைவ சிந்த்தாந்த கழக வெளியிடுகள் இன்னும் பல பழைய அதாவது சுதந்திரத்துக்கு முற்ப்ட்ட சமய ஆன்மீக நூல்கள் இருந்தால் விட்டுவிடாதீர்கள்

தொடக்க கால திமுகவினரின் சில வரலாற்று நூல்கள் சிறப்பானவை, உள்ளூர் அரசியலில்தான் பொய் சொல்வார்களே தவிர அவர்களின் அக்கால உலக அரசியல் கிளாசிக்

இனிமையான எழுத்துநடையும் பரந்துபட்ட தமிழும் வேண்டுமென்றால் கண்ணதாசனை விட்டுவிடாதீர்கள்

இந்த தலைமுறையில் Mugil Sivaமுக்கியமானவர், அவரின் ஒவ்வொரு புத்தகமும் அவ்வளவு அதிசயம். அகம் புறம் அந்தபுறம் எனும் அரசர் கதையில் தொடங்கி ஒவ்வொன்றும் அசாத்தியம்

மனிதர் தூத்துகுடிக்காரர், எழுத்து இயல்பாய் வரும் ரகம்

பயண சரித்திரம் முதல் பகுதி இரு வருடம் முன் வெளியிட்டார், இரண்டாம் பாகம் இன்னும் வரவில்லை இப்பொழுதும் வரவில்லை

உலகில் தொலைந்துவிட்ட விஷயங்களை ஆழ புகுந்து தேடி கொண்டுவருவதில் வித்தகர், இப்பொழுதும் பொக்கிஷங்களின் கதை என தொலைந்த பொக்கிஷங்களை பற்றி தொடர் எழுதினார்

நாமும் யூதர்களின் தொலைந்து போன அந்த உடன்படிக்கை பெட்டகம் எனும் பத்து கட்டளை பெட்டி பற்றி எழுதுங்கள் என சொல்லிகொண்டே இருந்தோம் அப்பொழுதும் எழுதவில்லை

சரி அதை விடுங்கள், வருஷம் பதினாறு படத்தில் குஷ்பு பயன்படுத்திய மேக் அப் பெட்டி எங்கிருக்கின்றது தெரியுமா? அதை பற்றியாவது எழுதும் என்றாலும் எழுதவில்லை

அடுத்த ஆண்டு அவரின் பயண சரித்திரம் இரண்டாம் பாகமும், குஷ்புவின் மேக் அப் பெட்டி உட்பட பொக்கிஷங்களின் கதையும் வரலாம்

கண்காட்சியில் இவரை தவறவிடாதீர்கள்

ஈழ தமிழர்களின் புத்தகங்கள் சில நன்றாயிருக்கும், கலையரசன், ராஜ்சிவா அவ்வகையில் ஞானவான்கள்

ஈழதமிழரில் ரிஷி என்பவர் ஜாம்பவான், உலக விஷயம் அவருக்கு அத்துபடி. விறுவிறுப்பு என தளம் நடத்தியபொழுது அவர் எழுதிய கட்டுரைகளை புத்தகமாக்கினால் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரர்

ஆனால் தமிழக புலிகும்பலும் இன்னபிறவும் விடாது என அஞ்சி யூ டியூபில் பரபரப்பு என பிசியாகிவிட்டார்

அவரின் புத்தகம் வந்தால் அது நிச்சயம் அதிர்வுகளை கொடுக்கும், அவர் அடுத்த வருடமாவது யோசிக்கலாம்

மதன், சுஜாதா, ஜெயகாந்தன், பா.ராகவன், முகில் போன்றோரின் புத்தகங்கள் உலக அறிவினை அள்ளி கொடுக்கும் சிந்திக்க வைக்கும்

ஆன்மீக புத்தகங்களும் சைவ சிந்தாந்த கழக புத்தகங்களும் தவிர்க்க கூடாதவை

அரவிந்தன் நீலகண்டன் தவறவிட கூடாதவர், அப்படியே அந்த ஆழி சூல் உலகும் படிக்க வேண்டியது

கம்யூனிஸ்ட் இம்சைகள், திராவிட இம்சைகள் பக்கம் சென்று அவர்களின் உளரல்களை படித்து நள்ளிரவில் ஏ பார்ப்பானியமே என கம்பு சுற்றினால் சங்கம் பொறுப்பல்ல‌

அமைதியான மனதை தொடும் ஆன்மீக நூலுக்கு கண்ணதாசனும் பாலகுமாரனும் இரு கண்களை போன்றவர்கள், இரு சித்தர்கள் அவர்கள்

ஆக காலத்தால் விரைவில் விடைபெறும் கண்காட்சிக்கு சென்று இனி கிண்டிலிலும் கிடைக்க வாய்ப்பே இல்லா நல்ல புத்தகங்களை வாங்கி வீட்டில் வையுங்கள்

கருணாநிதி மேல் ஆயிரம் குற்றசாட்டுகளை எம்ம்மால் சுமத்த முடிந்தாலும் அவரிடம் குறிப்பிட தக்க விஷயம் வாசிப்பு

அவரின் படங்களை எல்லாம் பாருங்கள், வீட்டில் தன் அறையில் புத்தக அலமாரி முன்புதான் அமர்ந்திருப்பார், யார் வந்தாலும் புத்தகம் நடுவில் இருந்துதான் சந்திப்பார்

ஆம் எல்லோரும் வாசிக்க வேண்டும் என குறிப்பால் சொன்ன தலைவர் அவர், அவரிடம் உள்ள நல்ல விஷயம் அதுதான், ஆனால் அவர் மகனே அதை செய்யவில்லை என்பது வேறு விஷயம்

வாசிப்பு ஒரு மனிதனை உருவாக்கும், முழுமைபடுத்தும், தலைவனாக்கும், அப்படி இல்லாவிட்டால்
சிந்திக்க வைத்து நல்ல தலைவனை உருவாக்க வைக்கும்

சிந்தனைக்கு புத்தகமே தீபெட்டி புத்தகமே எண்ணெய் புத்தகமே திரி

நிரம்ப வாசியுங்கள் தெளிவும் ஞானமும் அறிவும் தானாய் பிறக்கும்

சங்கம் எப்பொழுது புத்தகம் எழுதும் என ஏராளமானோர் கேட்கின்றார்கள் , சங்கத்திடம் சில கதைகள் உண்டு, வரலாறுகளும் உண்டு

அதில் சில கதைகள் கள்ளிகாட்டு இதிகாசம் போல உருக்கமானவை, எழுதினால் நிச்சயம் அவை மிக சிறந்த நாவலாக வரும்

அதை தவிர்த்து வரலாற்றிலும், அரசியலிலும் எவ்வளவோ இருக்கின்றது, மலேசிய அனுபவங்களை தொகுத்தாலே ஒரு புத்தகம் வரும்

யூத இந்து தொடர்பு, இந்து சீன தொடர்பு என எவ்வளவோ ஆய்வுகள் செய்து எழுதலாம்

வாய்பிருந்தால் பார்க்கலாம்

அதற்குமுன்பு தெய்வகாணிக்கையாக ஒன்றை படைக்க வேண்டுமல்லவா? அதனால் தமிழகம் கண்ட தனிபெரும் தாரகையின் வாழ்வினை புத்தகமாக எழுத சங்கம் தீர்மானித்திருக்கின்றது

அவரின் வாழ்வு ஆச்சரியமும் அற்புதமும் ஏமாற்றமும் வலியும், திடீரென எங்கெங்கோ இழுத்துசென்று ஓடும் ஒரு கர்மபலனும் கொண்ட வாழ்வு

அதை அவரின் ஒப்புதலுடன் எழுதலாம், அவரிடம் பேசாமல் நடக்காது, ஆனால் தெய்வம் பேசாது

நிச்சயம் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதால் பிள்ளையாரை பிடிக்க போன சனி போல மறுநாளை நோக்கியபடியே நாட்களை கடத்திகொண்டிருக்கின்றது சங்கம்

வரலாற்றை எழுதுபவர்கள் மிக சிலரே

தமிழக இஸ்லாமிய‌ எழுத்தாளர்கள் மேல் எப்பொழுதும் ஒரு வருத்தம் உண்டு

வரலாற்றை எழுதுபவர்கள் மிக சிலரே, இஸ்லாமியரில் அப்படி வரலாறு எழுதுபவர்கள் மிக குறைவு

வரலாறு என்றால் இந்த மொகலாயர், ஆற்காடு நவாப் கதைகள் அல்ல, உலகில் இரு பெரும் இஸ்லாமிய பேரரசுகள் வரலாற்றில் உண்டு

ஒன்று முகமது நபிகள் நாயகத்துக்கு பின்னரான கலீபாக்களின் ராஜ்யம் அது ஈரானில் இருந்து ஆபிரிக்கா ஊடாக ஸ்பெயின் வரை பரவியிருந்தது, மிக மிக வலுவான சாம்ராஜ்யம் அது, ஐரொப்பியரை அலற விட்ட சாம்ராஜ்யம் அது

அந்த கலீபாக்களின் ஆட்சி மகா நியாயமாகவும் முகமதுநபிகளின் போதனையினை பின்பற்றிய சொர்க்கபூமியாகவும் இருந்திருக்கின்றது

அது பின்பு சிதறி ஷியா சன்னி என என்னவோ ஆயிற்று

அதன் பின் அதன் தொடர்ச்சியாக எழும்பியது ஆட்டோமன் துருக்கியர்

வரலாற்றில் அவர்களின் சாதனை பெரிது, வீரமும் ஒரு மாதிரியான அசைக்க முடியா நிலைதன்மையும் பெரும் வரலாறு

கிட்டதட்ட ஐநூறு ஆண்டுகள் அது நின்றிருக்கின்றது

கிழக்கே வெல்லவேண்டும் கிறிஸ்துவம் கீழ்நாட்டு தேசமெல்லாம் பரவ வேண்டும், கடல்வழி இல்லா அக்காலத்தில் துருக்கு வழியாக ஆசியாவில் புகுந்து அரசியல் செய்யவேண்டும் என திட்டமிட்ட போப்பாண்டவர் கோஷ்டியினை அதுதான் விரட்டிற்று

ஜெருசலேமுக்கு நடந்த போர்கள் என அந்த சிலுவை போர்களை சொன்னாலும் உண்மையில் இருந்தது ஆதிக்க அரசியலே

போப்பாண்டவரை விரட்டி நெப்போலியனை விரட்டி அடித்ததும் துருக்கியரெ, ஐநூறு ஆண்டுகள் அவர்கள் சாம்ராஜ்யம் நீடித்து முதல் உலகப்போரை ஒட்டித்தான் முடிந்தது

துருக்கியர் வலுவாக இல்லாமல் இருந்தால் நெப்போலியன் தயக்கமின்றி இந்தியா வரை வந்திருப்பான்

துருக்கியரை வெல்லமுடியாது என கருதியதால் அவன் ஐரோப்பாவுக்குள் மட்டும் சண்டையிட்டு ரவுடியிசம் காட்டிகொண்டிருந்தான்

கலீபாக்களும் துருக்கியர்களும் பெரும் வரலாறு

ஆனால் அவர்களை பற்றி இங்கு ஒரு புத்தகமும் வராது, தமிழக இஸ்லாமிய எழுத்தாளர்களுக்கு வேலையே மோடி ஒழிக, உதயநிதி வாழ்க என்றானபின் அதையெல்லாம் எதிர்ப்பார்ப்பதும் நியாயமுமில்லை

இல்லாவிட்டால்…

“அடேய் ஒன்று உருப்படியாக தேசமும் மதமும் பற்றி எழுது இல்லாவிட்டல் குஷ்பு பற்றி மட்டும் எழுது

இல்லாவிட்டால்

ம்ம்… மகாத்மா காந்தியினை கோட்சே சுட்டது போல் சுட்டுவிடுவோம்

அய்யோ , மகாத்மா காந்தியும் குஷ்பு ரசிகராக இருந்தாரா? யாரும் சொல்லவே இல்லையே படுபாவிகள்..

அடேய் இனி கடன் வாங்கியாவது உன்னை கொல்லாமல் விடமாட்டோம்..”

சுவாமி விவேகானந்தர்

ஐரோப்பாவில் இருந்து கிரேக்க ஞானமும் மதமும் அதன் தத்துவமே பெரிது என இறுமாப்பில் வந்த அலெக்ஸாண்டரை ஞானத்தால் தோற்கடித்து திருப்பி அனுப்பிய ஞான பூமி இந்தியா

அலெக்ஸாண்டர் அதில் கவரபட்டிருந்தான், அவனுக்கு பின் புத்தமும் சமணமும் இந்நாட்டை குழப்பி போட்டது ஆதிசங்கரர் வந்து மீட்டெடுத்தார்

இஸ்லாமிய படையெடுப்புகள் அதை ஒழிக்க பார்த்தன, பிரிட்டானியர் இந்நாட்டு மதத்தை கலாச்சாரத்தை ஆண்டிகள் தேசம், பாம்பாட்டி தேசம் என மாற்றி சொல்லி இந்நாட்டின் மகத்துவத்தை திரித்தனர்

அந்த ஆண்டிகள் தேசத்துக்கா ஐரோப்பாவில் இருந்து பிழைக்க வந்தாய் என கேட்டாலும் பிரிட்டிஷ்காரனிடம் பதில் இல்லை

காலம் இந்நாட்டின் தாத்பரியங்களையும், இந்து ஞானத்தின் பிரமிப்பையும் பிரமாண்டத்தையும் அதன் விஸ்வரூபத்தையும் காட்ட ஒரு மகானை உருவாக்கியது, இரண்டாம் சங்கரராக அந்த மகான் வங்கத்தில் தோன்றினார்

சுவாமி விவேகானந்தர்

வங்கம் ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர்.

அந்த ஞான பிறப்பு சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார்.

தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், உள்ளத்தில் உறுதி,எதற்கும் அஞ்ஞாத மனஉறுதி இவற்றுடன் அவர் பரம்மஹம்சர் மடத்தின் தலைவராகும் பொழுது அவருக்கு வயது வெறும் 23.

பெரும் அவதாரங்களை தவிர, பிறவி ஞானிகளை தவிர யாருக்கும் இது சாத்தியமில்லை.

அந்த வயதிலே ஞானம் அடைந்தார், ஆண்மீகம் என்பது ஆலயத்திலோ அல்லது இமயமலை,காசி சாமியார் கூட்டத்திலோ அல்ல, ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு தெய்வீக தன்மை உண்டு, அதனை வெளிபடுத்தினால் அதுதான் ஆன்மீகம் என்பதுதான் இம்மண்ணின் ஞானமரபு என பழைய ஞானத்தை மீட்டெடுத்தார்

ஆண்மீகம் மூலம் இந்தியாவினை மாற்றி அமைக்கலாம், என்பதுதான் அவரின் கொள்கை.

அக்கால இந்தியா மிகவும் அறியாமையால் பின் தங்கி மோசமாக இருந்தது, தன் மதமும் அதன் உயர்வும் அறியாமல் இருந்தது

நாடெல்ல்லாம் சுற்றிபார்த்த விவேகானந்தர் அதனை மாற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும் என போதித்தார் , அதனால்தால் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அவருக்கு தேவையாய் இருந்தனர்.

அவரது போதனைகள் சாகாவரம் பெற்றவை, புத்தரை போல, பெருமான் இயேசுவினை போல பெரும் அறிவார்ந்த மொழிகளை அவர் போதித்தார், அதனால்தான் உலகம் அவரை மகான்கள் வரிசையில் தயக்கமில்லாமல் ஏற்றுகொண்டது.

சிகாகோ உலக சமய மாநாட்டில் எல்லோரும் ஆங்கில நாகரீகத்தில் “சீமான்களே,சீமாட்டிகளே” என சொல்லி பேச தொடங்க, எடுத்த எடுப்பிலே “சகோதர, சகோதரிகளே” என தொடங்கி கைதட்டலை அள்ளியவர். கேட்டதற்கு காரணம் சொன்னார். “ஒரு துறவிக்கு பெற்றவரை தவிர வேறு எல்லோரும் சகோதர சகோதரியே” என அமைதியாக விளக்கினார்.

அதிலும் ஒரு கிறிஸ்தவ பாதிரி அது எப்படி என துளைத்து கேட்க, அர்த்தமுள்ள புன்னகையை விவேகானந்தர் உதிர்த்தார் என்பார்கள், அர்த்தம் வேறு ஒன்றுமில்லை, பைபிளில் புனித பால் எனும் துறவி எழுதிய திருக்கடிதங்கள் எல்லாம் அன்பான சகோதர சகோதரிகளே என்றுதான் தொடங்கும், இதுதான் ஒரு துறவிக்கு முதல் அடையாளம்.

ஐரோப்பியரின் வாழ்க்கை முறை வேறு கலாச்சாரம் வேறு மதம் வேறு. ஆனால் எங்கள் இந்து மண்ணில் வாழ்வும் மதமும் கலாச்சாரமும் ஒன்று என அவர் சொன்னபொழுது ஐரோப்பியரிடம் பதிலே இல்லை, இந்துமதம் அன்றே அவர்களால் மதிப்புடம் நோக்கபட்டது

அதுவும் உலக சமயமாநாட்டில் ஒரு காவி பரதேசி கோலத்தில் சென்று, இந்திய ஞானத்தை, அதன் அமைப்பை, அதன் ஆழ்ந்த நோக்கத்தினை அவர் விளக்கி முழங்கியபொழுது, இமைக்கமறந்து அவரை வணங்கி நின்றது அந்த சபை.

பெண்களுக்கான மரியாதை என்ற பொருளில் அவர் பேசும்பொழுது “எங்கள் நாட்டில் மனைவியினை தவிர எல்லோரையும் அம்மா என்றே அழைப்பார்கள், சிறுமியிடம் பிச்சை கேட்டாலும் தாயே என அழைக்கும் பாரம்பரியம் எங்களது” என அவர் சொன்னபொழுது, மற்ற மத வித்தகர்களிடம் அதற்கு பதில் இல்லை

இந்து மத கலாச்சாரத்தில் பெண்களுக்குரிய உயர்ந்த இடத்தினை அவர் விளக்கியபொழுது மற்ற மத குருக்கள் எல்லாம் சங்கடத்தில் தலையினை தொங்க போட்டுகொண்டனர். அவ்வளவு அழகாக விளக்கினார்.

உண்மையில் பழம் இந்திய அடையாளங்களில் பெண்களுக்கான இடம் அவ்வளவு உயர்ந்ததாய் இருந்திருக்கின்றது என்பதை அவர் விளக்கியபொழுது மற்ற மதத்தாருக்கு இந்துமதத்தின் மீதான அபிமானம் கூடிற்று

இதுதான் விவேகானந்தரின் முத்தாய்ப்பு அவர் எல்லா மதங்களையும் படித்தார், எல்லா மத நோக்கத்தையும் அவரின் இளம் வயதிலே அறியமுடிந்தது, எல்லா ஆறுகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதமும் இறைவனை அடையவே என அவரால் 30 வயதிலே போதிக்க முடிந்தது.

அதனால்தான் வெள்ளையர் கூட அவரை கிழக்கின் ஞான ஒளி என அழைத்தனர். கல்வி மூலம் மக்களின் அறியாயமை அகற்றவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார், இந்தியா முழுமையும் விழிப்புணர்வு வரவேண்டும் என்பதே அவரது முதல் குறிக்கோள்.

நிச்சயமாக சொல்லலாம்,, அழிந்திருந்த இந்து மதத்தினை மீட்டெடுத்தவர் ஆதிசங்கரர் என்றால், அதற்கு அழியா புகழை கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

உலகில் பலநாடுகளில் இந்தியாவில் பிறந்த இருவருக்கு மட்டும் சிலை உண்டு, காரணம் அவர்களை உலகம் மதித்துவணங்கி ஏற்றுகொண்டது, ஒருவர் காந்தி இன்னொருவர் சுவாமி விவேகானந்தர்.

அவரது தெளிவு அப்படி, போதனைகள் அம்மாதிரியானவை. மனிதனுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் ஒப்பற்ற மந்திரங்கள் அவை. ஆன்மாவை தட்டி எழுப்ப கூடியவை.

ஒரு இந்து துறவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இருந்தவர் விவேகானந்தர்

உங்கள் அறிவிற்காக உங்கள் போல அறிவான மகனை பெற, உங்களை திருமணம் செய்ய தயார் என ஒரு இளம்பக்தை வேண்டி நிற்க, “அம்மா..துறவிக்கு பெண்கள் எல்லாம் தாய் ஸ்தானம், நீ வேண்டுமானால் என்னை மகனாக ஏற்றுகொள், நான் இப்பொழுதே உன் மகனாவேன்” என சொல்லி உயர்ந்து நின்றாரல்லவா? அதுதான் விவேகானந்தர்.

அந்த வீரதுறவியையும் இன்றுள்ள கள்ளதுறவிகளையும் காணுங்கள், உங்கள் மனதில் விவேகானந்தர் பெரும் இடத்தில் அமர்வார், அவர்தான் கோபுர கலசம், இப்பொழுது உள்ள கள்ளசாமிகள் பற்றி சொல்ல தெரியவில்லை, பிதாமகன் சூர்யாவோடு சிறையில் இருக்கும் சாமியின் நினைவுதான் வந்து தொலைகிறது.

இறைவன் பெரும் சூத்திரதாரி, நைஷ்டிக பிரம்மசாரி துறவிகளை அவன் நீண்டநாள் வாழவிடுவதில்லை, அப்படித்தான் பெரும் ஞான சூரியனாக, தெய்வீக திருமகனாக உலகெல்லாம் இந்துமதத்தின் பெருமையை ஒரு இந்தியனாக ஒளிவீசி பரப்பிய அவரையும் எடுத்துகொண்டான்.இறக்கும் பொழுது அவருக்கு வயது 39 மட்டுமே.

அவரின் சாகாவரம் பெற்ற பொன்மொழிகளில் ஒன்று நிச்சயம் அவர்களுக்கு தேவையானது. அவர் அன்றே சொன்னது,

“இந்த நாட்டிற்கு தேவையானது நிச்சயமாக மதம் அல்ல. அது அவர்களிடமே இருக்கின்றது கல்வியும், தங்கள் மதம் கலாச்சாரம் பற்றிய‌ விழிப்புணர்வுமே அதுதான் இந்நாட்டை மாற்றும், ”

எவ்வளவு அழகான போதனைகள், எளிய வாதங்கள், ஆழ்ந்த தத்துவங்களை மெல்லிய பூங்காற்று போல் சொல்லிய எளிமையான அணுகுமுறைகள்? சந்தேகமில்லை அவர் மாபெரும் ஞானி

அவரின் கிளிகதையும், கிணற்றுதவளை கதைகளும் போதும் அவரின் ஞானத்தினை சொல்ல.

ஆண்மீக தலங்கள் நிரம்பிய தமிழகத்திற்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இந்தியா சுற்றிய அவருக்கு தமிழகம் பிடித்தமான இடம், சென்னை வந்தார், அவர் தங்கிய இடம் இன்றும் விவேகானந்தர் இல்லம் என அழைக்கபடுகின்றது, மொத்த இந்தியர்களுக்கும் தெரியாத அவர் பெருமை, தமிழகத்து சேதுபதி அரசனுக்கு தெரிந்தது, சேதுபதி மன்னர் மட்டும்தான் அவர் சிகாகோ செல்ல பணவுதவியும் செய்தார்,

அதன் நன்றிகடனாகத்தான் அந்த மாபெரும் சொற்பொழிவினை நிகழ்த்தியபின் அவர் முதலில் இலங்கை வழியாக தமிழகம்தான் வந்தார்.

அவருக்கு வரவேற்பு கொடுத்த இடத்தில் இன்றும் நினைவுத்தூண் பாம்பனில் உண்டு.

குமரி விவேகானந்தர்பாறை அறிவாதவர் யாருமில்லை, அதுவும் அவர் கால்பட்ட புனிதபாறை,இவ்வாறாக‌ தமிழகத்தில் அம்மகானுக்கு அழியாத நினைவுசின்னம் உண்டு. குமரியில் விவேகானந்தர் நினைவு இல்லம் அமைக்க ஆயிரம் காரணம் உண்டு, அதில் அரசியல் சர்ச்சைகளும் உண்டு.

கொஞ்சம் அசந்தாலும் பாபர் மசூதி அளவிற்கு பற்றி எரியும் பிரச்சினைதான். பக்தவக்சலம் போன்ற உண்மை அரசியல்வாதியும், ஏக்நாத் போன்ற உண்மையான தேசபக்தர்களும் இருந்ததால் பிரச்சினை மகா சுமூகமானது, அல்லாவிட்டால் நிச்சயம் அது பெரும் கலவரமாக வெடித்திருக்கும்.

அந்த பாம்பன் நினைவுதூண் வைத்து பெரும் சர்ச்சை வெடிக்கலாம் என்றால் இப்பொழுதே கிளம்பி இருப்பார்கள், உண்மையில் விவேகானந்தர் விசுவாசிகள் உண்டென்றால் அந்த தூணை நேசித்திருப்பார்கள். ஆனால் அதனை சொல்ல கூட யாருமில்லை. நிச்சயம் அந்த இடமும் மகா வரலாற்று சிறப்பானது. அந்த ஞானமகன் சிகோகோ வெற்றி உரை ஆற்றிவிட்டு இத்திருநாட்ட்டில் கால்பதித்த முதல் இடம்.

ஒரு மாபெரும் ஞானசூரியனின் பிறந்த நாளை உலகம் அனுசரிக்கின்றது, ஒரு இந்தியனாக அந்த ஞானமகனை வாழ்த்துவோம், நிச்சயம் அவர் வாழ்த்துகுறியவர், வாழ்த்துக்கு மட்டுமல்ல பின்பற்ற தக்கவரும் கூட.

யூத ஞானத்தை புது வழியில் போதித்த இயேசுவிற்கும், இந்து மதத்தை இம்மக்கள் உண்மையாக புரிந்தால் இந்தியா விடுதலைபெறும் என நம்பிய விவேகானந்தருக்கும் ஏராள ஒற்றுமை உண்டு

இருவருமே வீரியமாக போதித்தார்கள், இருவரின் வாழ்வுமே சந்நியாச கோலமாக எழுச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது, விவேகானந்தரும் தன் கடைசி நொடியினை உணர்ந்து தன் சீடர்களுக்கு இயேசு போலவே உணவு பரிமாறியிருக்கின்றார்

அப்படியே கிறிஸ்தவ மிஷினரிகள் செய்த கல்விபணியும், விவேகானந்தரின் சீடர்களின் கல்வி பணியும் பாராட்டதக்கது

“இந்த நாட்டின் இழிநிலைக்கு காரணம் மதம் அல்ல, அந்த புனித மதத்தினை ஒழுங்காக பின்பற்றாததே..” என்ற அவரின் போதனை நிச்சயம் இன்றும், எக்காலமும் பொருந்த கூடியது.

அப்படி பின்பற்றினால் இந்நாடு எவ்வளவு உயர்வாக உலகில் ஒளிவீசும், அதனை செய்தால் இந்துமதமும் வாழும், இந்தியாவும் மகா அமைதியாக செழிப்பாக வாழும்

இந்நாடு இந்துக்கள் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்றால் அதற்கு விவேகானந்தர் காட்டிய வழியே எக்காலமும் சால சிறந்தது

இந்து எப்படி வாழவேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும்? எப்படி தியானிக்க வேண்டும் என சொல்லியும் வாழ்ந்தும் காட்டிய மகான்

இந்துத்வா என்பது என்ன? மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்துவதே இந்துமதம், ஒவ்வொரு மனதில் இருக்கும் கடவுள் தன்மையினை வளர்த்து அம்மனிதனை தெய்வநிலையினை எட்ட செய்வதே இந்துமதம்

இந்த உலக வாழ்வில் எதெல்லாம் மனிதனை மனிதனாக வாழவைக்க அவன் மனதை செம்மைபடுத்துமோ அதுதான் இந்துமதம்

“ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் எல்லா வழிபாட்டிலும் என்னையே அடைகின்றான், அது சுடுகாட்டு பூசையோ , ஆடு வெட்டுவதோ இல்லை ஆலய கருவறை முன் நிற்கும் வழிபாடோ எல்லாம் என்னையே சேரும்” என கண்ணன் சொன்ன தத்துவத்தை எளிதாக விளக்கியவர் விவேகானந்தர்

ஒவ்வொரு இந்து வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்களில் கீதை போல விவேகானந்தரின் போதனைகளும் கட்டாயம் இருக்க வேண்டும்

பாரதத்தின் கலாச்சார பெருமையும், அதன் மகா உயர்ந்த தாத்பரியமும் , இந்து மதம் உலகுக்கு சொல்லும் மாபெரும் ஞானமும் அந்த ஞானமரபும் அதில்தான் இருக்கின்றன‌

பென்னெடுங்கால ரிஷிகளும் மகான்களும் முனிகளும் ஒருசேர கலந்து உரிய நேரத்தில் இம்மண்ணின் மகத்துவத்தை விவேகானந்தர் உருவில் விளக்க வந்த நாள் இது

நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யபட்டிருக்கின்றார்

பிரபல தீவிரவாதி நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யபட்டிருக்கின்றார்

இந்நிலையில் கன்னியாகுமரி செக்போஸ்டில் காவலர் சுட்டு கொல்லபட்டது ஐ.எஸ் தீவிரவாதிகளோடு தொடர்புடையவர்கள் செய்திருக்கும் விஷயம் என செய்திகள் வர இந்திய உளவுதுறை சர்வதேச உளவுதுறைகளை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றது

சர்வதேச உளவுதுறையோ உங்கள் நாட்டில் அமித்ஷாவினையே அசால்ட்டாக தூக்க திட்டமிட்ட டாண் நெல்லை கண்ணன் இருக்கும்பொழுது எம்மிடம் விசாரிப்பது ஏன் என சீறிவிட இந்திய உளவுதுறையின் ஞான கண்கள் திறக்கபட்டிருக்கின்றன.

ஆம் இனி இவரிடம் விசாரித்தாலே மும்பை குண்டுவெடிப்பு முதல் கன்னியாகுமரி படுகொலை வரை மர்மம் விலகும் என முடிவு செய்திருக்கின்றது இந்திய தரப்பு என்கின்றார்கள்

“தமிழ்பெரியவர்” என்ற பெயரில் இப்படி ஒரு தீவிரவாதி ஐம்பது ஆண்டுகாலம் எப்படி இருக்க முடிந்தது என லெபனானின் ஹிஸ்புல்லா, பாலஸ்தின ஹமாஸ் வரை வாய்பிளந்து நிற்கின்றார்களாம்

இப்படி உலக பிரபலமாகிவிட்டார் டாண், இவர் கதையினை வைத்து முருகதாஸும், அட்லியும், ஹரியும் கதை எழுதிகொண்டிருப்பதாக வேறு சில தகவல்கள்