அந்தமானில் கருணாநிதிக்கு சிலை திறந்து வைத்தார் ஸ்டாலின் : செய்தி

அந்தமானில் கருணாநிதிக்கு சிலை திறந்து வைத்தார் ஸ்டாலின் : செய்தி

ஆக அந்தமான் எனும் காட்டுவாசிகள் நிலத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பிராமண ஆதிக்கம் இருந்திருக்கின்றது, நாகத்திலும் கொடிய பார்ப்பனர்கள் பன்னெடுங்காலமாக அந்த காட்டுவாசிகளை சூத்திரர்களாக நடத்தி சுகபோக வாழ்க்கை நடத்தியிருகின்றனர்

அங்கிருக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயங்களில் அம்மக்கள் நுழைய மறுக்கபட்டனர்

கருணாநிதிதான் தன் திராவிட புரட்சியில் அந்தமான் மக்களுக்கு விடுதலை கொடுத்து சமூக இழிவினை போக்கினார்

கருணாநிதியின் இன உணர்வு மற்றும் பெரியார் அண்ணாவுடன் சேர்ந்து நடுகடலில் அவர் நடத்திய கப்பல் மறியல் போராட்டம், படகில் தலைவைத்து போராட்டம் போன்றவற்றை மறைக்க ஆரிய பார்ப்பான் வெள்ளைக்காரன் உதவியுடன் கட்டியதுதான் அந்தமான் சிறை

அச்சிறையில் கருணாநிதியினை அடைத்து அங்கேயே கொல்ல திட்டமிட்ட பார்ப்பன ஆரியர்களின் கண்களில் மண்ணை தூவிவிடுத்தான் திராவிட கடலை தாண்டி திராவிட தமிழகத்தில் புரட்சி செய்தனர் திராவிட சிங்கங்கள்

ஆக அந்த பார்பண கொடுமையினை எதிர்த்து கருணாநிதி அந்தமானில் நிகழ்த்திய வீர போராட்டத்தை நினைவு கூற சிலை திறக்கபட்டுள்ளது

பெரியாரும் கருணாநிதியும் இல்லாவிட்டால் தமிழர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களை பார்ப்பான் எப்படி ஆக்கி வைத்திருப்பான் என்பதற்காக சென்டில் தீவு மக்களை திராவிட கழகம் அப்படியே விட்டு வைத்திருக்கின்றது

“ஏ தமிழனே திராவிட கொள்கையும் பெரியாரும் கருணாநிதியும் இல்லையென்றால் நீ இப்பொழுது சென்டில் இன மக்களை போலத்தான் காட்டுமிராண்டியாய் இருப்பாய்..”

என்னது 1949ல் ஜப்பான் அந்தமானுக்கு வந்ததா?

என்னது 1949ல் ஜப்பான் அந்தமானுக்கு வந்ததா?

அட பரிதாபமே, 1945ல் அணுகுண்டு விழுந்து ஜப்பான் அழிந்து போரை நிறுத்தி, நேதாஜியும் மர்மமானார்.

1942ல் வந்து அதுவும் உடனே பின் வாங்கிய ஜப்பானை பற்றி தலைவர் என்னமாக கதை அளக்கின்றார்?

உளறுவார் என தெரியும், ஆனால் இப்படி மகா மட்டமாக உளருவார் என்பது உதயநிதிக்கே அதிர்ச்சியாக இருக்கும்

திராவிட வரலாறு தனி வரலாறு போல..

அந்தமானில் கருணாநிதியின் மானம் காற்றில் பறக்க வேண்டும் என விதியிருந்தால் யார் என்ன செய்யமுடியும்?

தலைவரே, இந்திய சுதந்திரம் 1957ல் தானே?

https://m.facebook.com/story.php?story_fbid=3969726299720217&id=100000486580161

இப்பொழுது ஒரு நல்லகாரியத்தை செய்திருக்கின்றது

எப்பொழுதாவது உருப்படியான காரியங்களை செய்யும் பழனிச்சாமி அரசு இப்பொழுது ஒரு நல்லகாரியத்தை செய்திருக்கின்றது, அது அந்த மாமனிதன் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் அரசின் விழாவாக கொண்டாடபடும் என்பதுஇந்த ஆண்டுமுதல் அவன் பிறந்த நாளான ஜனவரி 15ம் தேதி அரசு விழாவாக கொண்டாடபடுமாம்யார் இந்த பென்னிகுவிக்தஞ்சாவூர் என்பது ராமநாதபுர மாவட்டத்தின் வறண்ட பகுதியாகவே முன்பொரு இருந்தது, கல்லணை கட்டி சோழன் காவேரியினை அங்கு திருப்பிய பின்பே அது வளமானதுஆனால் ராமநாதபுரம் வறண்ட பகுதியாகவே நீடித்தது, வைகையில் வெள்ளம் வரும் காலம் தவிர வேறு நீர் ஆதாரமில்லை, வறண்ட பூமி அதுஅது கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு முன்புவரை மகா மோசமாக இருந்தது, அது என்றல்ல வைகையினை நம்பி இருந்த , அதன் சற்று தொலைவில் இருந்த எல்லாமே வானம் பார்த்த பூமியாக காய்ந்தே இருந்ததுகிழக்கிந்திய கம்பெனி என்பது கொள்ளை அடிக்கவந்தது, அடித்தது வரிபிடுங்குவதை தவிர , அவர்கள் கம்பெனி விவகாரம் தவிர மக்களுக்கு ஏதும் செய்யவில்லைஇந்திய ஆட்சி 1857ல் பிரிட்டானியர் வசம் சென்றபின் ஓரளவு மக்கள் நல திட்டங்கள் வந்தன, அந்த பொறியாளனும் அப்பொழுது உருவாகி இருந்தான், அவன் பெயர் பென்னிகுவிக்அவன் தந்தை ராணுவ அதிகாரி, பெனன்னிகுவிக் ராணுவத்திற்கான பொறியாளராக உருவாக்கபட்டான், ராணுவத்திற்கான பாலம், கோட்டை இன்னபிற விஷயங்களை உறுதியாக கட்ட உருவக்கபட்டவன் அவன்சென்னை மாகாணத்தின் பொதுபணிதுறை அதிகாரியாக அவனை ஆங்கில அரசு அமர்த்திற்றுஅன்று திருச்சி, மதுரை எல்லாம் வரிவசூல் மையங்கள், அப்படித்தான் பென்னிகுவிக் மதுரை பக்கம் வந்தான், அது ஒரு பஞ்சகாலம்பஞ்சத்தால் மக்களும், மாக்களும் கருகிசாவும் கொடுமையினை அவன் கண்டான், மனம் ஒப்பவில்லை. ஆன் அவனின் இரக்கமுள்ள மனம் துடித்ததுஒரு ஆட்சியாளனாக அவர்களுக்கு ஏதாவது செய்ய துடித்தான், ஆம் அவர்களுக்கு தேவை நீர், அதற்கொரு பெரும் ஆதாரம், என்ன செய்யலாம்காடுமேடெல்லாம் அலைந்தான், ஒவ்வொரு ஓடையாக தேடினான், முல்லை பெரியாறு என இரு ஆறுகள் இருப்பதையும் அவை அரபிகடல் நோக்கி ஓடுவதையும் கண்டான்இயற்கைக்கே கிழக்கே வர முடியாதவாறு ஆண்டவன் படைத்திருந்தான், ஆண்டவனின் கட்டளையினை மீற அவனைபோல் இளகிய மனம் கொண்ட பென்னிகுவிக் முடிவெடுத்தான்ராணுவத்திற்கான வலுவான கட்டுமானங்களை கட்டிய அவனின் அனுபவ மூளை, சாத்தியமில்லா அவ்விஷயம் சாத்தியம் என சொன்னதுஇரு ஆறுகளும் இணையும் இடத்தில் அணைகட்ட வேண்டும் அதை கிழக்கே இருக்கும் பக்கம் திருப்ப வேண்டும்அவன் மனம் சொன்னதே தவிர நிலமை சிக்கலானது, மலை உச்சியில் அணைகட்ட வேண்டும் அதுவும் கல்லும் மண்ணும் சுமந்து சென்று கட்ட வேண்டும்அந்த மழைபிடிப்பு பகுதி, இன்னபிற பகுதி திருவாங்கூர் மன்னனிட்ம் இருந்தது, அவனிடம் ஆயிரம் வருடம் ஒப்பந்தம் போட்டு வாங்குவதே பெரும்பாடாயிற்றுமலை உச்சியில் அந்த மழை ,கொசுகடி, அட்டை, குளிர் , காட்டு மிருகம், நோய்கள் என இன்னும் ஏகபட்ட இடைஞ்சல்களை தாண்டி கட்ட வேண்டும்அதைவிட முக்கியம் கட்டிய அணையிலிருந்து தண்ணீரை கொண்டுவர வழியில்லை, வடியவிட்டால் வேறு எங்கோ செல்லும்ஆம் பாறையினை துளையிட்டு அதன் மூலம் வைகையில் கலக்க செய்ய வேண்டும்நினைத்து பார்த்தால் மாபெரும் சவால் அது, மலைமேல் ஒரு அணைகட்டுவது நினைத்துபார்க்க முடியா சவால்களை கொண்டது, அதுவும் கட்டிவிட்டு நீரை கொண்டுவருவது எல்லாம் நினைத்து பார்க்க முடியா சிக்கல்கள்ஆனால் மதுரை ராமநாதபுர மக்கள் நிலமையினை நினைத்த பென்னிகுவிக் அதை வாழ்வின் கர்மமாகவே கருதினான்ஆங்கில அரசு முதலில் சம்மதிக்கவில்லை, ஆயினும் பென்னிகுவிக் விடவில்லை மக்களிடம் வசூலிக்கும் வரி அவர்களுக்காக பயன்படுவதை தவிர என்ன நீதி இருக்க முடியும் என வாதிட்டான், அரசு பணிந்ததுஆங்கில அரசு கொடுத்த நிதியில் வேலை தொடங்கியது, கடும் சிரமம். ஒரு கல்லை எடுத்து கொண்டு அல்லது ஒரு சட்டி சுண்ணாம்பினை எடுத்து மலைஏறுங்கள் புரியும்இரு ஆண்டுகள் வேலை நடந்தது, அணை எழும்பியது. டைபாய்டு மலேரியா என சாவு ஒருபுறம் கரைந்து கொண்டிருந்த பணம் ஒருபுறம் என சவால் வந்ததுஅதைவிட சவால் கனமழை உருவில் வந்தது, ஒரே நாள் இரவில் அணையினை தரைமட்டமாக்கியது வெள்ளம்உடல் சோர்ந்த பென்னிகுவிக் மனமும் சோர்ந்தான் , ஆனாலும் அந்த வெள்ளம் அவனுக்கு ஒரு நம்பிக்கையினை கொடுத்தது”இதுதான் வேண்டும் இந்த வெள்ளம்தான் வேண்டும், இந்த மாபெரும் வெள்ளம் மதுரை பக்கம் பாயவேண்டும். ஏதோ சிறிய ஓடை என கணக்கிட்டேன் இல்லை இது மாபெரும் ஆறாக இருக்கின்றது, போதும் 5 மாவட்ட மக்களுக்கு தாராளமாய் போதும்ஆனால் அணை மிக வலுவாக இருக்க வேண்டும், மகா வலுவான அணைகட்ட இன்னும் பணம் வேண்டும்”ஆனால் ஆங்கில அரசு மறுத்தது, சாத்தியமில்லா விஷயத்தில் பென்னிகுவிக் இறங்கி அரசு பணத்தை வீணாக்கியதாக குற்றசாட்டு எழுந்தது(இப்போதுள்ள அரசியல்வாதிகள் என்றால் அணை இடிய இடிய கட்டிகொண்டே இருந்திருப்பார்கள், சம்பாதித்திருப்பார்கள். ஆனால் அந்த காலம் அப்படி இல்லை)விளைவு மக்களுக்கு தேவை இல்லா பணி எனக்கெதற்கு என ராஜினாமா செய்த பென்னிகுவிக் லண்டன் திரும்பினான்எதற்கு ஓய்வெடுக்கவா? அல்ல தன் சொத்துக்களை விற்றான் போதா குறைக்கு கையேந்தி பிச்சை எடுத்தான்ஆம் எங்கிருந்த வந்த அவனுக்கு இந்த மக்களின் கண்ணீர் அப்படி பாதித்திருக்கின்றது , மனம் உருகி நின்றிருக்கின்றான். நல்ல கிறிஸ்தவ மனம் என்பது அதுதான் , கர்த்தர் தொட்ட இதயம் அதுவேதான்அந்த பணத்தோடு வந்த பென்னிகுவிக் மறுபடியும் அந்த இடத்தில் அணைகட்டினான், இம்முறை மிக உறுதியாக கட்டினான்அந்த சுரங்கத்தையும் வெட்டினான்இதற்கெல்லாம் அவன் செய்த செலவும், பட்ட சிரமங்களும் இயேசு சிலுவை சுமந்தது போல சித்திரவதைகள், ஆனாலும் பொறுத்தான்தன் வேள்வியில் வென்று 1895ம் வருடம் அந்த அணையினை மக்களுக்கு கொடுத்தாம், ஆம் நம் மக்களுக்கே கொடுத்தான்இறுதியாக அவன் கனவுபடியே முல்லையும் பெரியாறும் கலந்து வைகையில் கலந்ததுதேனிமாவட்டம் புத்துயிர் பெற்றது, அந்த மகிழ்ச்சி ராமநாதபுரம் வரை வந்ததுஆம் 5 மாவட்ட மக்கள் அவனால் இன்றும் வாழ்கின்றனர், கர்த்தராகிய இயேசு தொட்ட உண்மையான கிறிஸ்தவ மனம் இதுதான், இதுவேதான்அவன் யார்? அவனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? வந்தான் வறுமையினை பார்த்தான் அத்தோடு சென்றிருக்கலாம், எதற்காக இந்த சவால், அதுவும் சொந்த பணத்தை கொண்டு, சொத்துகளை எல்லாம் விற்று சவால்அவன் சொன்னது இதுதான் “பணம் என்னிடம் இருந்தால் என் தலைமுறை வாழும், அதை நான் இக்காரியத்திற்கு செலவிட்டால் ஓராயிரம் தலைமுறை தொடர்ந்து வாழும்”உள்ளத்தில் நல்ல உள்ளம் என்பது இதுதான்தன் உடல் பொருள் ஆவி வாழ்வு சம்பாத்தியம் என எல்லாவற்றையும் இவர்களுக்காகவே இழந்திருக்கின்றான், ஆனால் வரலாற்றில் தெய்வமாக நின்றுவிட்டான்அந்த அணை இன்றும் தேக்கடி அருகே கம்பீரமாக நின்று மதுரை பெல்ட்டினை தாங்கி நிற்கின்றது, அவனின் நியாயமான தியாகமான சொந்த பணம் என்பதாலோ என்னவோ எந்த வெள்ளமும், கேரள சதியும் அதை அசைக்க முடியவில்ல்லைஇன்னும் 300 ஆண்டுகாலம் அது அசையாது, 500 ஆண்டுகளுக்கு பின் காலம் மாறினாலும் முல்லைபெறியாறு தமிழகத்திற்கானது என்ற அவனின் வெற்றி மாறாததுநானும் மனிதன் அவர்களும் மனிதர்கள், சக மனிதர்கள் வாழ என்னால் முடிந்ததை செய்வேன் என அவன் வந்து நின்று போராடியதற்கு என்ன ஈடு நாம் கொடுக்க முடியும்?இயற்கை வலிமை, கேரள சதி என எல்லாவற்றையும் தாண்டி அந்த அணை நிற்கின்றது என்றால் பென்னிகுவிக்கின் தர்ம சக்திக்கும் பங்கு இருக்கின்றது, முழு மனிதநேயத்தில் உருவான அணை அதுஇதனால் தனக்கென்ன லாபம் என அவன் யோசித்தானா? இதை கட்டினால் தன் வாரிசுகள் வாழும் என சிந்தித்தானா?அவன் சொத்தை எல்லாம் விற்றபின் அவனின் வாரிசுகளும் வஉசி வாரிசு போலவே தவித்தன, மிக சமீபத்தில்தான் அவரின் பேரன் இந்தியா வந்து அணையினையும் அவருக்கு மக்கள் வைத்த மணிமண்டபம், சிலை மற்றும் அபிமானத்தை எல்லாம் கண்டான்நிச்சயம் அவன் தாத்தா கோடி அரண்மனை கட்டியிருந்தாலும் இந்த பெருமையும் மகிழ்வும் வந்திரா மகிழ்ச்சியில் திரும்பிசென்றான்தன் தாத்தா செய்த காரியத்திற்காக வீடெல்லாம் படம் வைத்து, ஊரெல்லாம் சிலைவைத்து கொண்டாடுகின்றார்கள் என்பதை தவிர என்ன பெருமை ஒரு பேரனுக்கு வேண்டும்?உலகின் மொத்த செல்வத்தையும் பென்னிகுவிக் தன் குடும்பத்திற்காக சேர்த்திருந்தால் இப்பெருமை கிடைக்குமா?நல்ல தாத்தா சேர்த்து வைக்க வேண்டியது இந்த பெருமையினைத்தான்பென்னிகுவிக் ஒரு நல்ல கிறிஸ்தவன், அவனின் பேரன் அதில் பெருமை அடைகின்றான். டி.ஜி.எஸ் தினகரன் போன்ற திருட்டு கும்பல்களின் பேரன் எதில் பெருமை அடைவான்நல்ல கிறிஸ்தவன் கல்லூரி நடத்தி சம்பாதிப்பானா? இல்லை ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் அணைகட்டுவானா?பென்னிகுவிக்கே சாட்சி”இவனால் பாலை நிலங்கள் செழிபுற்றன” என இயேசுவினை குறித்து சொன்ன தீர்க்கதரிசனம், பென்னிகுவிக் வழியாக இங்கு நிறைவேறிற்று, சத்தியமாக நிறைவேறிற்றுவறண்ட பகுதி அவனால் வளம்பெற்றது, இப்படித்தான் கன்னியாகுமரி பக்கம் மிச்சிகன் எனும் வெள்ளையன் வந்து பேச்சிபாறை அணைகட்டி அதை செழிக்க வைத்தான்ஆனால் ராதாபுரம் பகுதிமட்டும் ஒரு வெள்ளையன் கண்ணுக்கும் தெரியாமல் போன வறண்ட பகுதி, காமராஜர் ஓரளவு முயன்றார் முழுவெற்றி இல்லைபென்னிகுவிக்கினை நினைக்கும் பொழுதெல்லாம் ராதாபுரம் பக்கம் அப்படி ஒருவன் வராமலே போய்விட்டானே என்ற ஏக்கமே வரும்அவ்வகையில் தேனி முதல் சிவகங்கைவரையிலான மக்கள் சக்திவாய்ந்த தெய்வங்களை வணங்கி இருக்கலாம், வரம் பெற்றிருக்கலாம்உறுதியாக சொல்லலாம், வைகையினை தோற்றுவித்தவன் சிவன் என புராணம் சொல்லும், மீனாட்சிக்கு தாலிகட்ட வந்த சொக்கன், தன் பூதகணங்கள் அருந்த அதை உருவாக்கினானாம்ஆனால் பூதகணங்கள் திரும்பியபின் வைகை சுருங்கிற்றுஅவ்வகையில் முல்லைபெரியாரை திருப்பி மதுரை பக்கம் கொண்டுவந்த அந்த பென்னிகுவிக் இரண்டாம் சொக்கநாதர்ஆம் தன் மக்களை எல்லாம் வறுமையில் தவிக்கவிட்டு, தன் சொத்தினை எல்லாம் இப்பகுதி மக்களுக்காக செலவழித்த அவன் நிச்சயம் தெய்வமேஅந்த உண்மையான மனித நேய மகானுக்கு, பெரும் மனம் படைத்த புனிதனுக்கு இன்று பிறந்த நாள்அவனின் அந்த மாபெரும் பொதுநல சிந்தனையும், அந்த தொலைநோக்கும் உறுதியும் சிலாகிக்க கூடியது, அவன் வரலாறேல்லாம் ஒவ்வொரு அரசியல்வாதியும் பதவி ஏற்கும் முன் படிக்க வேண்டிய சாசனம்குறிப்பாக பொதுபணித்துறை பொறுப்பாளர்கள், ஆம் அதற்கு இலக்கணம் வகுத்தது அவனேதென் தமிழக மக்கள் நன்றியோடு நினைகும் அந்த பெருமகனின் நினைவு ஒருகாலமும் அழியாதுதேனிபக்கம் ஒவ்வொருவர் வீட்டிலும் அவன் படத்தை வைத்து வணங்குகின்றார்கள், தெய்வமாய் கொண்டாடுகின்றார்கள்மதுரை இருக்கும் வரை மீனாட்சியம்மன் ஆலயம் நிலைத்திருப்பது போல் அவனும் நிலைத்திருப்பான்அவனே இரண்டாம் சொக்கநாதர், இரண்டாம் இயேசு கிறிஸ்துஉண்மையான மானுட நேயத்திற்கு மதம், இனம், மொழி, சாதி என எதுவுமில்லை என்பதை நிரூபித்தவன் பென்னிகுவிக்பென்னிகுயிக்கும், மிச்சிகனும் ஆற்றை திருப்பிய சாகசகாரர்கள் ஆனால் அதை காட்டி ஒருவனையும் கிறிஸ்துவனாக அவர்கள் மாற்றவில்லை, இதுதான் மனசாட்சி இதுதான் கிறிஸ்தவம்ஆம் அவர்கள் நினைத்திருந்தால் இயேசுவின் பெயரால் அணைகட்டினோம் அல்லேலூயா என லட்சகணக்கான மக்களை நொடியில் மதம் மாற்றியிருக்கலாம்ஆனால் அவர்களுக்கு மனசாட்சி இருந்தது, ஆங்கிலேயர் செய்யும் சுரண்டலும் அட்டகாசமும் மனதை உறுத்தின. இந்த ஆளற்ற அபலைகள் மனம் குளிரசெய்வதே இயேசுவுக்கான பணி என உணர்ந்து பலன் எதிர்பாராமல் பிச்சையிட்டனர்ஆம் தமிழக மக்களுக்காக பிச்சை எடுத்து அந்த அணையினை கட்டினர்இந்த பூமியில் உலாவியவர்களில் நல்ல கிறிஸ்தவர்கள், இயேசுவின் போதனையினை செய்தவர்கள் இவர்கள்தான். மதமாற்றமின்றி மானிடத்திற்கு செய்யபட்ட உச்சகட்ட சேவை அதுஅவர்களை நாம் வணங்கித்தான் தீரவேண்டும், மகாத்மா என்றால் இவர்கள்தான்உலகெல்லாம் பொங்கல் கொண்டாடும் நேரம், தேனி மக்கள் அந்த தெய்வத்திற்காக கொண்டாடுகின்றார்கள், அவனே அவர்களின் காவல் தெய்வம்

யார் கேட்க சொன்னார் ஸ்டாலினா?

என்னது? பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் தேவையா? அரசுக்கு வீண் செலவா? யார் கேட்க சொன்னார் ஸ்டாலினா?

அட டாஸ்மாக்கை திறந்து வைத்தால் 500ரூபாய் உடனே வந்துவிடும், திரையரங்கை திறந்து வைத்தால் அரசுக்கு வரியாக அதே பணம் வந்துவிடும், இதனால் அரசுக்கு நஷ்டமே இல்லை

ஆயிரம் ரூபாயோடு குடிக்க வருபவன் கையில் இருக்கும் இன்னொரு ஆயிரத்தையும் அரசுக்கு வைத்துவிட்டு செல்வான், அவனை நம்பி ஆயிரம் ரூபாய் என்ன? ஐந்தாயிரமும் கொடுக்கலாம்

அரசு பணத்தை மக்களுக்கு கொடுத்து அதை அரசுக்கே திருப்பி நாங்களெல்லாம் நல்ல பெயர் மற்றும் சைடு கமிஷனில் சம்பாதிக்கும் தந்திரம்

இதெல்லாம் எங்களுக்கு சொல்லிதந்தது கருணாநிதி என்பவரை தவிர வேறு யார்?”

லிபிய யுத்தம் விஸ்வரூபமெடுக்கின்றது

சிரியாவில் யுத்தம் ஒரு கட்டுபாட்டுக்கு வந்த நிலையில் லிபிய யுத்தம் விஸ்வரூபமெடுக்கின்றது

நல்லாட்சியும் பொற்காலமும் கொடுத்த மூமர் கடாபியினை அடித்து வீழ்த்தியதில் இருந்து லிபியாவில் குழப்பம் தொடங்கியது

அமெரிக்க கூட்டணி ஒருபக்கம், ரஷ்ய அணி ஒரு பக்கமும் இருந்து ஆடுகின்றன. ரஷ்ய அணியில் துருக்கியும் உண்டு

எகிப்தின் அடுத்திருக்கும் லிபியா எனும் பாலைவன நாட்டில் என்ன சிக்கல்? எண்ணை இருப்புதான் சிக்கல்

அந்த எண்ணை இருந்தால் அமெரிக்கா வரும் அது வந்தால் அரசியல் வரும் இன்னும் ஏராளம் வரும், அதற்கும் மேல் கடாபிக்கு இருந்த நாட்டாமை ஆசை

இப்பொழுது லிபியா கரகாரட்டகாரன் படத்தில் வரும் கார் போல யார் கட்டுபாட்டில் இருக்கின்றது என்பது யாருக்குமே தெரியவில்லை

இந்நிலையில் துருக்கியின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க உதவி குழு சுட்டு வீழ்த்தி அதிர வைத்திருக்கின்றது

அக்குழு அமெரிக்க ஆதரவுடன் இருப்பதாலும் லிபிய ராணுவத்திலிருந்து வந்ததாலும் தீவிரவாத இயக்கமென்றாலும் விமானம் எல்லாம் வைத்திருக்கின்றது

முப்படைகளும் கொண்ட இயக்கம் எனும் பெருமையினை வைத்திருந்த புலிகளோடு இந்த லிபிய இயக்கமும் அப்பெருமையினை பங்கு போட்டு கொள்கின்றது

இந்நிலையில் சர்வதேச கூலிபடையினை தந்திரமாக உள்ளே அனுப்புகின்றது ரஷ்யா

அதாவது கூலிப்படை என்பது தமிழகத்தில்தான் உண்டு காசு கொடுத்தால் கொலை செய்வார்கள் என நினைக்க வேண்டாம், அது உலக நாடுகள் எல்லாவற்றிலும் உண்டு அந்த கூலிபடைக்கு யூனிபார்ம் போட்டு துப்பாக்கி பயிற்சி எல்லாம் கொடுத்து சில நிறுவணங்கள் தயாராக இருக்கும்

அந்த நிறுவணங்களை சம்பந்தபட்ட நாடுகள் அணுகினால் உடனே ஆள் அனுப்பிவிட்டு பெரும் தொகை வசூல் செய்வார்கள்

இது எல்லா காலத்திலும் இருந்தது, வெள்ளையன் காலத்தில் சில மராட்டிய கூலிபடைகள் இப்படி ஆற்காட்டு நவாபுக்காக வந்தது

மராட்டிய படை என்ன? ராபர்ட் கிளைவே கிழக்கிந்திய கம்பெனியின் கூலிபடை தலைவனாகத்தானே யுத்தம் நடத்தி பின் இந்தியாவினை பிடித்தான்

அந்த கூலிபடை ஒன்றை லிபியாவில் களமிறக்கிவிட்டது ரஷ்யா, இப்பொழுது பெரும் குழப்பமும் சண்டையும் மூண்டாயிற்று

இன்றைய சிங்கப்பூர் போல கடாபி காலத்தில் செழிப்பாக இருந்த லிபியா இன்று சிரியா போல் சீரழிந்துவிட்டது

சரி இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம்

சர்வதேச கூலிபடை இருப்பதை புலிகள் ஏன் பயன்படுத்தவில்லை, பயன்படுத்தினால் ஈழம் எளிதாக கிடைத்திருக்குமே?

கூலிபடைகள் அழைத்தால் வரும்தான் ஆனால் சம்பந்தபட்ட கம்பெனியினை வல்லரசுகள் அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் வராது

இலங்கையில் அதுதான் நடந்தது இதனால் கூலிபடை இலங்கைக்கு வரமுடியவில்லை இதனால் புலிகளே தங்களுக்கு ஒரு கூலிபடையினை தமிழ்நாட்டில் உருவாக்கினர்

காசு கொடுத்தால் வாயிலே குண்டு போடும் வீரர்கள் இங்கு மட்டும்தான் உண்டு, அப்படி ஒரு வாய்படை உருவாயிற்று

அவை வாயால் குண்டு போட்டுகொண்டே இருந்தன, இதுகளை வைத்து என்ன செய்வது என தவித்த புலிகள் ஒரு கட்டத்தில் அழிந்தே போயினர்

ஆட்டம் முடித்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு கருத ஆரம்பித்துவிட்டது

குடியுரிமை சட்டம் தொடர்பான எதிர்கட்சிகளின் ஆட்டத்தை ஆட விட்டு இனி ஆட்டம் முடித்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு கருத ஆரம்பித்துவிட்டது

ஆம் சட்டம் நடப்புக்கு வந்ததும் காட்சிக்குள் வருகின்றார் அமித்ஷா

வந்து அவர் கேட்கும் கேள்வி, “இந்நாட்டு குடிமக்கள் அதாவது சிறுபான்மையினரின் குடியுரிமை ரத்து என ஒருவரை காட்டுங்கள்?” என்பதுதான்

இதற்கு ராகுலோ பிரியங்கா மம்தா மற்றும் எங்கு முதல்வர் பதவி ஏற்புவிழா நடந்தாலும் ஓடி சென்று நிற்கும் நல்லவரான டமில்நாட் சர்வாதிகாரி, கோலமாவு கனிமொழி என யாராவது பதில் சொல்லமுடியுமா?

அவர்கள் மக்கள் மத்தியில் ஆடட்டும், மக்கள் அவர்களின் பொய்களை உணரட்டும் என விட்டு மிகுந்த தந்திரத்துடன் விட்டு கொண்டிருந்த உள்துறை அமைச்சு, நேரம் வந்ததும் களமிறங்கிவிட்டது

இனிதான் மகா அதிரடி காட்சிகள் அரங்கேறலாம் , பொங்கல் தமிழ்நாட்டு வீடுகளில் மட்டுமல்ல நாடு முழுக்க மிக உற்சாகமாக நடக்கும் போலிருக்கின்றது.

பொங்கல் இந்து பண்டிகை

பண்டைய தமிழன் இந்துவாக இருந்தான் அவன் கொண்டாடிய பொங்கல் இந்து பண்டிகையாக இருத்தலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

சூரிய வழிபாடு, நதி வழிபாடு, நந்தி வழிபாடு, கோவில்களில் இன்றும் படைக்கபடும் பொங்கல் என அந்த பொங்கல் இக்காலம் வரை இந்துமதத்தின் அங்கமாகவே இருக்கின்றது

ஜல்லிகட்டு கூட கிராமங்களின் விளையாட்டில் ஒரு அங்கமே, மாடுபிடிக்கும் வீரர்களுக்கும் இந்துமத கட்டுபாடும் விரதமும் உண்டு, எல்லோரும் மாடுபிடிக்க அனுமதிக்கபடுவதில்லை

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சி இந்து மதத்தில் இல்லாமல் வேறு எந்த மதத்தில் இருக்கின்றது?

பொங்கல் ஒரு இந்துபண்டிகை என்பதுதான் சரி, அது தமிழருக்கான பண்டிகை என்பதெல்லாம் இந்தியா சமய சார்பற்ற நாடு என்பதை போன்ற வடிகட்டிய அயோக்கியதனம்