பாபாவும் உங்களிடம் மவுனமாக அதைத்தான் சொல்கின்றார்

தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆலயங்கள் இருக்கும் சாமிகள், கற்பனை சாமிகள் என எல்லோரிடமும் முறையிட்டும் இந்த Kasi Lingam Senthil Kumar Chennai என்பவர்கள் குறை தீரவில்லை

கடைசியாக ஷீரடி சாய்பாபாவிடம் முறையிட்டு பார்க்கலாம் என சென்றிருக்கின்றார்கள்

“ஏ பகவான் பாபாவே, உங்களாலும் எங்களுக்கு திருமணம் செய்துவைக்க முடியாவிட்டால் அது எங்களுக்கு அவமானமன்று, ஆனால் உங்கள் பெயரும் புகழும் தவமும் கெட்டே விடும்

உங்கள் ஆலயத்து வாசலிலே இவரிடம் வேண்டியும் எங்களுக்கு திருமணமாகவில்லை என சாட்சியாய் அமர்ந்துவிடுவோம் , உங்கள் பெயரை காக்கும் பொறுப்பு உங்களிடமே இருக்கின்றது ” என மிரட்ட
சென்றிருக்கின்றார்கள்

சென்று எச்சரிக்கையும் விட்டாயிற்று.

நீர் செல்லவில்லையா Sundar G Santhosh எனும் இன்னொரு பிரம்மசாரியிடம் கேட்டால்
நான் காசியிலும் ஹரித்துவாரிலும் இதே மிரட்டலை சிவபெருமானுக்கு விட்டுவிட்டு இப்பொழுதுதான் வந்தேன் என்கின்றார்

இந்த மூவரும் கோவில் கோவிலாக அலைவதை கண்டால் நமக்கு கடவுளின் திட்டம் விளங்குகின்றது, பாவம் இந்த அற்ப மானிட மனங்களுக்கு புரியவில்லை

“ஏ மூவர்களே, திமுகவில் உங்களை சேர்க்கமாடார்கள் காரணம் நீங்கள் பக்திமான்கள், அதிமுகவில் மாட்டார்கள் காரணம் உங்கள் பாக்கெட் காலி

காங்கிரஸ் கிட்டதட்ட மனநோயாளிகள் முகாமாகிவிட்டது

அதனால் நல்லவர்களே, உங்களின் சந்நியாசி கோலத்துக்கு பாஜக சரியான தேர்வு

அங்கு காவி உடை உடுத்தி சேர்வீராயின் வாஜ்பாய், மோடி, யோகி, பொன்னார் போன்ற மிக சிறந்த பிரம்மசாரிகளாக உருவாகி நாட்டுக்கு நல்ல வழிகாட்டும் தலைவராய் உருவாவீர்கள்

அதனால் நாம் பட்டினத்தார் மொழியில் சொல்கின்றோம் , கண்களால் மயக்கும் பெண்கள் பின்னால் சென்று ஏமாறாதீர்கள்

திருமணம் என்பது ஒருவழிபாதை சென்றால் சென்றதுதான், அந்த பத்ம வியூகத்தில் சிக்கினால் அர்ஜூனனாலும் அதை உடைக்க முடியாது.

உண்மையினை சொல்லி போதிக்கும் பாஜக பக்கம் வாருங்கள், பெரும் எதிர்காலம் உங்களுக்கு காத்திருகின்றது”

பாபாவும் உங்களிடம் மவுனமாக அதைத்தான் சொல்கின்றார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s