நான் பாஜவே இல்லையெ பின் ஏன் எனக்கு பேக் ஐடி..?

நான் பாஜவே இல்லையெ பின் ஏன் எனக்கு பேக் ஐடி..?

இது தூத்துகுடி ஆயர் அல்லது ஜெகஸ் கஸ்பரின் பேக் அடியாக இருக்கலாம்.

என்னை வைத்து அப்படி என்னய்யா செய்யபோகின்றாய்?

அப்புறம் நம் பொழப்பு வேறு, இது வேறு. உனக்கு எல்லாமே தூத்துகுடி ஆயர்பாடி மாளிகையில் என்றால் நாம் ஒன்றும் செய்யமுடியாது

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் உன்னை எப்படி விட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை..

இதனால் ஹாரி வெளிவே வருவதும் சரியல்ல‌

கிபி 1534 வரை பிரிட்டன் அரசு போபாண்டவருக்கு கட்டுபட்டு இருந்தது, ஒழுங்கான கத்தோலிக்க தேசமாய் இருந்தது

அப்பொழுது எட்டாம் ஹென்றி எனும் மன்னன் ஆண்டுகொண்டிருந்தான், நல்ல மன்னனாக இருந்தான், இந்த மார்ட்டின் லுத்தர் கிங் எனும் பிரிவினைவாதியினை மிரட்டி வைத்து போப்புக்கு காவல் இருந்தான் , போப்பும் அவன் “திருச்சபை பாதுகாவலர்” என பட்டமெல்லாம் கொடுத்தார்

மன்னனுக்கு மனைவியினை விவாகரத்து செய்ய கடும் விருப்பம் ஆனால் கத்தோலிக்க சட்டம் இடம் கொடுக்கவில்லை

அப்பொழுது கத்தோலிக்கம் உருப்படியாய் இருந்திருக்கின்றது, இக்காலம் போல பாதிரிகள் காமசேட்டை செய்யவில்லை, சிறுவர்களுக்கு ஞானஸ்நானனும் ஞானமும் மட்டும் கொடுத்திருகின்றார்கள்

காரணம் அன்று அமெரிக்கா என்றொரு சுதந்திர தேசமில்லை அவர்களுக்கு மன்னனுமில்லை. என்று மன்னன் இல்லா உல்லாச தேசமாக அமெரிக்கா மலர்ந்து எல்லா சுதந்திரங்களும் வந்ததோ அன்று கெட தொடங்கிற்று உலகம்

எட்டாம் ஹென்றிக்கு தன் மனைவி ஆரேகான் என்பவளை விவாகரத்து செய்ய ஆசை ஆர்கோலின் என்பவளை திருமணம் செய்ய விரும்பினான்

விவாகரத்து என்பது கத்தோலிக்கம் அனுமதிக்கா ஒன்று

இதனால் போப்பாண்டவரின் கத்தோலிக்கமே வேண்டாம், நான் அரசை விட்டு விலகுகின்றேன் என சொல்லி அரசிலிருந்து வெளிவந்தான் பின்பு பிரிவினை கிறிஸ்தவர் கத்தோலிக்கத்தை கைவிட்டு ஆங்கிலக்கன் எனும் திருச்சபை தொடங்கி அவனை அரசனாக்கினர்

ஆங்கிலிக்கன் பின்பு மெதடிஸ்ட் என பிரிந்தது , மெதடிஸ்ட் உடைந்து நொறுங்கி இன்று காணும் தெருவுக்கொரு சபை என்ற அளவில் வந்துவிட்டது

எல்லாவற்றுக்கும் காரணம் ஹென்றி மன்னனும் அவனின் காதலியான ஆர்கோலினும்

இதனால் மனமுடைந்த போப் பெண்ணால் கத்தோலிக்கத்தை விட்டு போன உன் வம்சம் பெண்ணால் அழியட்டும் என சாபமிட்டார்

போப் சரியான அரை சூரிய கிரகண நேரத்தில் சாபமிட்டிருப்பார் போலிருக்கின்றது, அவ்வப்போது கொஞ்சம் பலிக்கின்றது

பெண்களால் அந்த அரசுக்கு சிக்கலும் வரும் ஆனால் விக்டோரியா போல் பிம்பங்களும் வருவார்கள் , பின் எலிசபெத் வந்து நம்ம ஊர் கருணாநிதி போல் கடைசிவரை தலைவராய் இருந்து மகனை இளவரசாரகவே வைத்திருப்பார்

ஆனால் டயானா போல் சிலரால் சிக்கல் வரும், இப்பொழுது டயானா மருமகள் மேகன் என்பவரால் வந்திருக்கின்றது

மேகன் ஒரு நடிகை, சொல்லிகொள்ளும்படி பரம்பரையும் அல்ல, கலப்பு பரம்பரை. ஆரம்பத்தில் இருந்தே அவளை அரசகுடும்பம் ஒருமாதிரிதான் பார்த்தது

ஆனால் இளவரசர் ஹாரி அவள்மேல் வசந்தமாளிகை சிவாஜி வாணி பின்னால் அலைவது போல் அலைந்து “எனக்கு விசுவாசம் காட்ட ஆயிரம்பேர் உண்டம்மா, ஆனால் என் மேல் பாசம் காட்ட நீ மட்டும்தான இருக்கே” என சுற்றி சுற்றி வந்தார்

வசந்தமாளிகை காட்சி அங்கேயும் அரங்கேறிற்று

ஆனால் இந்த ஹாரி நல்லவர், கிட்டதட்ட எட்டாம் ஹென்றி சாயல். எனக்கு என்னை நம்பி வந்த பெண்ணே பெரிது , இந்த அரசும் ராஜ்யமும் அல்ல என பாகுபலி பிரபாஸ் போல் கிளம்பிவிட்டார்

இங்கிலாந்து ராணி எலிசபெத் இங்கிலாந்துக்கு மட்டுமல்ல, கனடா , ஆஸ்திரேலியா நியூசிலாந்து என சில நாடுகளுக்கும் ராணி

அவ்வகையில் கனடாவில் ராஜகுடும்பமாக அவர்கள் வசிக்கலாம்

இதனால் கண்ணை கசக்கிவிட்டு லண்டனில் இருந்து கனடா சென்ற மேகன் அங்குதான் வசிகின்றார், இனி ஹாரியும் அங்கே செல்வாராம்

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் ஹாரி

இதை அடுத்து ராஜமாதா எலிசபெத்தும் , இங்கிலாந்து செயல்தலைவர் சார்லஸும் அங்குள்ள ராசாத்தியம்மாளான கமீலா பார்க்கரும் கடும் ஆலோசனை நடத்திகொண்டிருக்கின்றார்கள்

“ஹாரி உனக்கு பாரம்பரியமிக்க இங்கிலாந்து மன்னர் எனும் பட்டம் வேண்டுமா இல்லை வஞ்சகி மேகன் வேண்டுமா?” என ராணி கேள்வி கேட்டார்

அருகே “நானே இன்னும் மன்னன் ஆகவில்லையம்மா.” என ஊன்றுகோலை பிடித்து அழுதுகொண்டிருந்தார் சார்லஸ், அவரை கமீலா தேற்றினார்

“பாட்டி எனக்கு லண்டனும் நீங்களும் முக்கியம் ஆனால் மேகன் அதைவிட முக்கியம்” என சொல்லிவிட்டார் ஹாரி

ஆலொசனை நீடிக்கின்றது, பாட்டிக்கு பேரனை விட மனமில்லை. செம்பருத்தி பானுமதி போல தவித்துகொண்டிருக்கின்றார்

கனடாவோ “வந்தாய் அய்யா. வந்தாய் அய்யா” என ஹாரியினை வரவேற்க தயாராகின்றது

பல்வாள்தேவனாக சிரிக்கின்றான் வில்லியம்

தேவசேனையாக கொதித்துகொண்டிருக்கின்றாள் மேகன்

ஹாரியினை அப்படி விடமுடியாது, ஏகபட்ட தீவிரவாத இயக்கம் முதல் பிரிட்டன் அரசகுடும்ப எதிரிகள் வரை அவருக்கு அச்சுறுத்தல் அதிகம்

ஏன் நாம் தமிழர் தும்பியே அவருக்கு அதிகாரம் இல்லையென்றால் “ஏண்டா கட்டபொம்மனை தூக்குல போட்டு, ஈழத்தை பிடிச்சி சிங்களவன்ட கொடுத்தது உன் முப்பாட்டன் தானே” என உறுமிகொண்டிருக்கும்

இதனால் ஹாரி வெளிவே வருவதும் சரியல்ல‌

வசந்தமாளிகை முதல் பாகுபலி வரை அதே காட்சிகள் நடந்து கொண்டிருகின்றன, அரச குடும்பத்து கதைகள் எப்பொழுதும் இப்படித்தான்

ஆக அந்த போப்பாண்டவர் அவ்வப்போதுதான் பலிக்கின்றது, மனிதர் ஒழுங்காக ஜெபிக்கவில்லை போல, நம்ம ஊர் ஜெகத் கஸ்பர் போல அரைகுறை பாதிரியாக இருந்திருக்கின்றார்

ஈழத்துல பொங்கலுக்கு டிசம்பர் மாசமே வேலை

ஈழத்துல பொங்கலுக்கு டிசம்பர் மாசமே வேலை, எதுக்குண்ணா எல்லா மக்களும் அவங்க கையால பானை செஞ்சி, அவங்க கையாலே நெல்லு விளைய வச்சி, அவங்க கையாலே நெல் குத்தி பொங்க வைக்கணும்

நான் அங்க இருந்தேன், அண்ணன் பானை செஞ்சாரு, அண்ணி மதிவதனி நெல்லு குத்துனாங்க, பொட்டு அம்மான் அடுப்பு செஞ்சாரு, ஆண்டன் பாலசிங்கம் கரும்பு சுமந்து வந்தாரு

தளபதி பால்ராஜ் பனங்கிழங்கு புடுங்கினார், தீபன் தீபற்றவைத்தான், தமிழினி அக்கா, விதுஷா அக்காவெலாம் கும்பி பாட்டு படிச்சிட்டு இருந்தாங்க‌

பொங்கல் வச்சோம், எல்லோரும் தமிழ் பொங்கல், தமிழ் பொங்கல்னு கத்தினாங்க,, எவ்வளவு ஆனந்தம் தெரியுமா?

அண்ணன் என்கிட்ட சொன்னாரு “தம்பி பொங்கல் எடுத்து சூரியனுக்கு படையடா” ,

நான் சொன்னேன் “அண்ணே திமுகவோட சின்னம் அது, அதுனால நான் அதுக்கு படைக்க மாட்டேன் , எனக்கு தெரிஞ்ச சூரியன் நீங்கதாண்ணே உங்களுக்கு படைக்கிறேன்னு ஊட்டிவிட்டேன்..”

பொட்டு அம்மனும், கே பத்மநாபனும் என்ன கட்டி பிடிச்சி அழுதாங்க,

அண்ணன் தனியே போய் தென்னைமரத்தை கட்டி பிடிச்சி அழுதார் , ஏண்ணா அவர் தனியாகத்தான் அழுவார்

மறுநாள் ஜல்லிகட்டு

அண்ணன் சொன்னார் , “இந்த வருஷம் காளை இல்லையடா, தம்பி சீமானை அடக்கிருங்கடா பார்ப்போம், முடிஞா சிங்களனையும் வர சொல்லுங்க‌…”

புஹ்ஹஹஹஹஹ.. புஹஹஹாஹாஆ

ஒரு பய வரலியே, நான் களத்துல சட்டைய கழற்றிட்டு நிக்குறேன் ஒரு சிங்கள பயலையும் காணோம்

புஹ்ஹ்ஹஹாஹ்ஹஹஹா… புஹஹஹஹஹ

ஈரான் விவகாரத்தில் இரு தரப்பும் வரிந்து கட்டுகின்றது

ஈரான் விவகாரத்தில் இரு தரப்பும் வரிந்து கட்டுகின்றது, முதலில் சுலைமானியினை கொன்றது எப்படி தகவல் கொடுத்தது யார் என கடும் விசாரணையில் இருக்கின்றது ஈரான்.

மிக ரகசியமான அந்த சுலைமானியின் வருகை எப்படி கசிந்தது, தாக்க வந்த விமானம் எங்கிருந்து எங்கு இருந்து வந்தது என பல தகவல்களை அது எடுத்துவிட்டது

திமுகவில் வைகோ போல ஈராக்கிலும் ஒரு அமெரிக்க கைகூலி உண்டு என நம்பும் ஈரான் அவரை தேடுகின்றது, காரணம் தனி விமானத்தில் அல்லாமல் சரக்கு விமானத்தில் சாதாரணமாக சென்ற சுலைமானி தூக்கபட்டிருப்பது உள்ளே இருந்த வலுவான உளவாளி அன்றி சாத்தியமில்லை

சுலைமானியினை கொன்ற ட்ரோன் கத்தார் அமெரிக்க்க தளத்தில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றது

ஈரான் கடும் எச்சரிக்கையினை தொடுத்து கொண்டிருந்தாலும், பிப்ரவரி 11 ம்தேதி அதாவது ஈரானிய புரட்சி தொடங்கிய 40ம் ஆண்டு நினைவு நாளில் யுத்தம் தொடங்கும் என நினைக்கின்றது உலகம்

நிலமை இப்படி இருக்க அமெரிக்கா அதிசக்திவாய்ந்த பி52 ரக விமானத்தை களத்துக்கு அனுப்பியிருகின்றது, பி52 என்பது அதிவேக விமானம் அல்ல மாறாக அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை எடுத்து செல்லும் விமானம்

அமெரிக்க எப் 35 என்பது வேகமாக பறந்து வேகமான ஏவுகனைகளை வீசும் அது ஒரு கட்டடத்தை அழிக்கும்

ஆனால் பி52 என்பது ஊரையே அழிக்கும் அளவு பெரும் எடை குண்டுகள் பலவற்றை சுமந்து சென்று மொத்தமாக அழித்துவிடும்

இவ்வகை விமானம் எங்கும் பெரிதும் அமெரிக்கா பயன்படுத்தியதில்லை, காரணம் சேதம் அதிகம் என்பதால் தவிர்க்கும், ஈராக்கில் மட்டும் சிலமுறை சோதிக்கபட்டது

பெரும் அழிவினைகொடுக்கும் இந்த விமானத்தை அரபு தளங்களில் நிறுத்தினால் ஈரான் தாக்கி அழித்துவிடும் என்பதால் இலங்கை பக்கம் இருக்கும் டியோ கார்சியா தீவுக்கு அனுப்பிவிட்டது அமெரிக்கா

யுத்தம் என வந்தால் ஈரானில் 52 இடம் மட்டுமல்ல, புல் பூண்டு கூட இருக்க கூடாது என வெறியோடு வந்துவிட்டது தெரிகின்றது, அவர்கள் அப்படித்தான் காலம் தாழ்த்தி அடித்தாலும் அடி பலமாக இருக்கும் ஜப்பானுக்கு நடந்தது போல‌

இந்நிலையில் எங்களுக்கும் சுலைமானி கொலைக்கும் சம்பந்தமில்லை நாங்கள் ஏன் பதறவேண்டும் என வெளியில் சொல்லிவிட்ட்டு கடும் விழிப்பில் இருக்கின்றது ஈரான்

சண்டை வந்தால் நாமே சாகவேண்டும் என கையினை பிசைந்துகொண்டிருக்கும் சவுதி தன் தூதுவர்களை அங்கும் இங்குமாக அவசர கதியில் அனுப்பிகொண்டிருக்கின்றது

இந்நிலையில் டிரம்ப் மோடியினை அழைத்து ஏதோ பேசியிருக்கின்றார் என்னவென கேட்டால் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறினோம் என சிரிக்காமல் சொல்கின்றார்கள், ஈரான் மேல் தாக்குதல் நடத்தபட்டால் இந்திய நிலைப்பாடு எப்படி இருக்கும் என டிரம்ப் பல்ஸ் பார்த்திருக்கலாம்

இந்நிலையில் ஈராக்கின் அமெரிக்க இலக்குகள் மேல் ஈரான் ஏவுகனை தாக்குதலை தொடங்கியிருக்கின்றது, ஈரானில் இருந்து தாக்காமல் ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு போராளிகள் மூலம் சண்டையினை தொடங்கியிருக்கின்றார்கள்

பொறி கிளம்புகின்றது, அடுத்து என்ன என்பது விரைவில் தெரியும்

மோடி திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார்

மோடி திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார்

இந்திய பிரதமர்களில் மட்டுமல்ல, பன்னெடுங்கால அரசர்கள், மாமன்னர்கள், சுல்தான்கள், ஆங்கிலேய லார்டுகள் அதன்பின் வந்த பிரதமர்களிலே திருவள்ளுவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர் மோடிதான்

இதோடு நின்றுவிடாமல் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் வள்ளுவர் சந்நிதிக்கு மோடி வந்து வணங்கினால் நல்லது

அந்த நன்னாளில் இந்த தமிழ் அழிச்சாட்டிய இம்சைகள் பாதிபேர் நெஞ்சுவெடித்து செத்தேவிடுவான் என்பது வேறு விஷயம்

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை

எதை கண்டும் பின்வாங்காமல் கம்பீரமாக நடக்கும் சிங்கம், ஒருவித பெருமிதத்துடன் நடக்கும் சேவல், மந்ததையில் முன் செல்லும் ஆட்டு கடா என ஒரு வரிசை உண்டு

பலம் வாய்ந்ததாயினும் பாகனுக்கு கட்டுபட்டு, கணவனை பின் தொடரும் புதுமனைவி போல, (ஆம் புது மனைவி போல மட்டும்) செல்லும் யானையும் அந்த வரிசை

அதில் இந்த ஜல்லிகட்டு காளையும் சேர்ந்து கொள்ளும்.

களத்தில் யாராலும் அடக்க முடியா காளைகள், கோட்டை தாண்டியதும் தன் வீட்டு பெண்கள் மற்றும் சிறுமியர் முன்னால் தலைகுனிந்து வந்து பணிவாக நிற்பதும், அவர்களுக்கு கட்டுபட்டு பின்னால் நடப்பதும் ஒருவித அழகு மற்றும் ஆச்சரியம்

அந்த அழகான காட்சிகளை தமிழகம் கண்குளிர கண்டுகொண்டிருக்கின்றது

எல்லோரையும் சிதறடித்துவிட்டு மைதானத்தில் அடுத்தவன் எவன்? என சில காளைகள் மைதானத்தில் நிற்கும் அழகு முன்னால் எந்த குத்துசண்டை வீரனும், கால்பந்து வீரனும், கிரிக்கெட் வீரனும் வரமுடியாது

அந்த கெத்தும் தைரியமும் ஒருவித ஆக்ரோஷமும் கவனுமாக அக்காளைகள் நிற்கும் கம்பீர அழகு ஆயிரம் அலெக்ஸாண்டருக்கும் சீசருக்கும் சமம்

நிச்சயம் இது பாண்டிய மண்ணின் விளையாட்டு, பிற்காலத்தில் பாண்டியர் இன்றைய இந்தோனேஷிய பகுதிகளை ஆளும் பொழுது , அதாவது சுப மதுரா எனும் சுமத்ரா பகுதிகளை ஆளும்பொழுது அங்கும் இந்த விளையாட்டு பரவிற்று, இன்னும் அப்பக்கம் உண்டு

இந்தோனேஷியா என்ன சிந்துசமவெளி காலத்து பொருட்களில் இருக்கும் காளை அடையாளமே அது தமிழனின் கலாச்சாரம் என உலகுக்கு சொல்கின்றது

நாம் மதுரை பக்கம் நடக்கும் ஜல்லிகட்டினை ரசித்து பார்க்கின்றோம், அந்த காளைகள் களத்தில் தொட்டுபார் என மல்லுகட்டி நிற்பதும், கோட்டை கடந்துவிட்டால் சிறுமியருக்கும் கட்டுபட்டு நடப்பதும் மகா மகா ரசனையான காட்சிகள்

தமிழகம் தவிர வேறெங்கும் அறியபடா காட்சிகள்

இப்பொழுதெல்லாம் சேவல் சண்டைகளும் அதிகம் நடத்தபடுகின்றன, அவைகளும் அதே குணமே. களத்தில் ஆக்ரோஷமாக நிற்கும் சேவல்கள் களத்தை கடந்ததும் கோழிகுஞ்சு போல் கைகளில் அடங்குகின்றது

ஆங்காங்கே ஆட்டு கிடா சண்டையும் நடக்கின்றது என்கின்றார்கள்

யோசித்து பார்த்தால் அன்றில் இருந்தே தமிழனுக்கு யானை , காளை , சேவல், கடா என எல்லா உயிர்களையும் பழக்கும் மொழி தெரிந்திருகின்றது, அவன் வாழ்வு அப்படி இயற்கையோடு இணைந்திருக்கின்றது

முன்பு முத்துகுளிக்கும் பொழுது சுறாக்கள் ஒதுங்கி செல்லும் அளவு சில வகையான மொழிகளை வைத்திருந்தானாம் தமிழன்

எல்லா உயிரையும் சக உயிராக நினைத்து வளர்த்து வாழ்ந்திருக்கின்றான், அவைகளோடு பழகியிருக்கின்றான், பேசியிருக்கின்றான்

அதன் தொடர்ச்சிதான் இந்த விளையாட்டுக்கள், எக்காரணம் கொண்டும் இவற்றை தவறவிடாதீர்கள், குடும்பத்தோடு பாருங்கள் மனம் அதில் லயிக்கும்

ஆம், பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் கலந்துவிட்ட உணர்வுபூர்வமான காட்சிகள் இவை.

இந்தியா அதில் சிக்கவில்லை

அமெரிக்க சீன பொருளாதார ஒப்பந்தம் முடிந்தபின் அமெரிக்கா ஒரு விஷயத்தை மெல்ல கசிய விடுகின்றது, எனினும் இந்தியா அதை புன்னகைத்தபடியே கடந்து செல்கின்றது

இந்தியா அதில் சிக்கவில்லை

ஆம், முன்பு டிரம்ப் மோடியுடன் சந்திப்பு நடத்தியபொழுது, “சீனாவோடு உங்களுக்கு எல்லையே வராதே, பின் என்ன எல்லை தகறாது” என டிரம்ப் கேட்டதாகவும் அதற்கு மோடி பதிலேதும் சொல்லாமல் சிரித்துவிட்டு வந்துவிட்டார் என்றும் தகவல்கள் கசிகின்றன‌

டிரம்ப் விவரம் இல்லாமல் சொல்லவில்லை, விஷயம் உள் அர்த்தம் மிக்கது

அதாவது இந்தியா திபெத் நாட்டோடுதான் தன் எல்லையினை பகிரும், திபெத்தினை சீனா ஆக்கிரமித்தபின்பே சீன இந்திய எல்லை தகறாறு வந்தது, டிரம்ப் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முறுகலை ஏற்படுத்த திபெத்துக்கும் இந்தியாவுக்குமே எல்லை உண்டு என்ற வார்த்தையினை பிடுங்கபார்த்தார்

மோடி இடம் கொடுக்கவில்லை

சில பதர்கள் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா சீனாவுடன் ஏன் மோதவில்லை என கேட்கும்

சரிக்கு சமமான எதிரியுடன் அறிவாளி மோதமாட்டான், ஆனானபட்ட அமெரிக்காவே ரஷ்யாவுடன் மோதாது

சில இடங்களில் ராஜதந்திரம் அவசியம், மோடி அதை அட்டகாசமாக செய்திருக்கின்றார்