ரஜினிகாந்த் யோசித்து பேசவேண்டும் : முக ஸ்டாலின்

ரஜினிகாந்த் யோசித்து பேசவேண்டும் : முக ஸ்டாலின்

ராம்சாமி திமுகவினரை உதிர்ந்த மயிர்கள் என்றார், திமுகவினர் ஆம் அவர் உடலில் இருந்து உதிர்ந்தோம் என அழுதார்கள்

ராம்சாமி அவர்கள் நல்லகுடும்பத்து பிறப்பு இல்லை என்றார், ஆம் நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் என்றார்கள் இவர்கள்

நாற்காலிக்கு ஆசைபட்ட கோஷ்டி அது என்றார் ராம்சாமி, பெரியாருக்கான நாற்காலி காலியாய் இருக்கின்றது என்றது இவர்கள்

கூத்தாடி ராம்சந்திரனை வளர்க்காதே என்றார் ராம்சாமி, அவருக்கு ராம்சந்திரன் போல் கத்திவீச வருமா அந்த வயிற்றேரிச்சல் என்றார்கள் இவர்கள்

இப்படி எல்லாம் யோசித்து பேச ரஜினிக்கு எப்படி தெரியும்?

ஆகம விதிப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்

ஆகம விதிப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்” , * உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு பதில்

முச்சந்தி பிள்ளையாருக்கே அஞ்சும் அரசு, தஞ்சை கோவிலுக்கு உருண்டு புரண்டு ஓடாதா?

எனினும் எதிர்கட்சி தலைவர் தடையினை மீறி தமிழில் குடமுழுக்கு நடத்துவார் அல்லது ஆலயத்தில் போராடுவார் என எதிர்பார்ப்போம்

இந்தியாவில் பெரும் நாசவேலைக்கு திட்டமிடும் கோஷ்டியின் தலைவர் அவர்

தற்போது காவல்துறையால் அதிதீவிரமாக தேடபடும் நபர் காஜா மைதீன், “அல் ஹந்த்” எனபடும் பயங்கராவத அமைப்பை ஐ.எஸ் ஆதரவோடு நடத்தி இந்தியாவில் பெரும் நாசவேலைக்கு திட்டமிடும் கோஷ்டியின் தலைவர் அவர்

அன்னார் கொஷ்டியே வில்சன் எனும் காவலரை மேலே அனுப்பியது, அதில் இருந்து அதிதீவிர தேடல் நடக்கின்றது

இந்த காஜாமைதீனை கேரளாவிலும் கன்னடத்திலும் அலசி தேடினால் அவன் சென்னையில் 20 நாட்களாக இருந்திருக்கின்றான், சாலையில் அசால்ட்டாக நடந்து டீ குடித்திருக்கின்றான், அப்படியே பீடிகட்டு வாங்குவது போல துப்பாக்கி வாங்கியிருக்கின்றான்

நிச்சயம் பழனிசாமிக்கு இது நெருக்கடியான செய்தி

தமிழக துப்பாக்கி நடமாட்டம் போதை நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் மத்திய அரசு தமிழக அமைதிக்கு விருது கொடுப்பதெல்லாம் மாபெரும் காமெடி

எனினும் எதிர்கட்சி நினைத்தால் பயங்கரவாதிகள் நடமாட்டம் என பழனிச்சாமியினை கதற வைக்கலாம், ஆனால் சிறுபான்மை வாக்குகளை இழக்கவிரும்பாத திமுக அமைதி காக்கத்தான் செய்யும் அவர்கள் அரசியல் அப்படி

விஷயம் விஸ்வரூபமாகின்றது, உலகம் தேடும் தீவிரவாதி சென்னையில் உலாவியிருக்கின்றான், இன்னும் எங்கெங்கு சென்று யாரை பார்த்தானோ?

ச்சே.. இல்லை..அவரை விட்டுவிடுங்கள்

நெல்லை கண்ணனை எல்லாம் அவன் சந்தித்ததாக செய்தியில்லை, “என்ன பெரியவரே காஜா மைதீனும் நீங்களும் டவுணில் இடியாப்பமும் சொதியும் சாப்பிட்டீர்களாமே? அப்படியா” என கேட்டால் மறு நிமிடமே நெல்லை கண்ணன் செத்தே விடுவார்

ஒருமுதியவரை கொன்ற பாவம் வேண்டாம், அவரிடம் ஏதும் கேட்டு தொலைத்துவிடாதீர்கள்

ரஜினி மகா தில்லாக சொல்கின்றார்

ரஜினி மகா தில்லாக சொல்கின்றார், அவருக்கு தேர்ந்த திட்டம் இருக்கலாம், வலையினை விரித்து வைத்து பொறியும் வைத்து சத்தமாக சொல்கின்றார் “ஆமாடா. பெரியார் செய்ததைத்தான் சொன்னேன், மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது”

அதில் பகுத்தறிவு கோஷ்டி வசமாக சிக்கிவிட்டது.

இது தமிழ்நாட்டுக்கு புதிது, 1950களில் இருந்து புதிது, 70 வருட தமிழ்நாட்டுக்கு நிச்சயம் புதிது, ஒருவித திருப்பம்

காரணம், நாங்கள் ஆண்டவனையே கேள்வி கேட்பவர்கள் என நின்ற கூட்டம் அது, எம்.ஆர் ராதாவின் நாடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்சமல்ல‌

அதுவும் கீமாயண நாடகத்தில் கையில் மதுவும் இன்னொரு கையில் மாமிசமும் ஏந்தி ராதா ராமன் வேடமிட்டு கேவலபடுத்தியபொழுது கைதும் நடந்தது

ஆனால் நான் இதே வேடத்தில் கையில் மாமிசமும் கள்ளுமாக வருவேன் என நடந்து ரோடெல்லாம் நடந்து ராமரை அவமானபடுத்தினார் ராதா

இதெல்லாம் வெறும் எடுத்துகாட்டுகள், இன்னும் என்னென்ன ஆட்டமெல்லாமோ ஆடினார்கள்

ஆனால் ஆடிவிட்டு நாங்கள்தான் செய்தோம் , பிள்ளையாரை உடைத்தோம், அம்மனை மிதித்தோம், ராமனை எரித்தோம் என மகா அழுத்தமாக நின்றார்கள்

மதசார்பற்ற இந்தியா இதை அனுமதித்தது, ராஜா குமாரசாமி, ராஜாஜி , காமராஜர், பக்தவத்சலம் என எல்லோரும் இந்த குரங்கு கூட்டத்தை கண்டு தயங்கினார்கள்

அக்கூட்டம் பூமாலைபோல ராமாயணத்தை கிழித்தெறியும், சாத்வீக கட்டுபாடுகளை பிராண்டும், இந்துக்களின் நம்பிக்கையினை கடித்து வைக்கும், கேட்பார் இலர்

எல்லாம் செய்துவிட்டு ஆண்டவனையே அடக்கிவிட்டோம் என கூக்குரலுமிடும்

ராமசந்திரனும் ஜெயலலிதாவும் நேரடியாக இவர்களை அடிக்கமாட்டார்கள் ஆனால் எங்கே அடிக்கவேண்டுமோ அங்கே அடிப்பார்கள், இவர்கள் வலிக்காதது போல் நடிப்பார்கள்

வரலாற்றில் முதல் முறையாக ரஜினி ராமர்படம் செருப்பால் அடிக்கபட்டது என்கின்றார், திராவிட இம்சைகள் முதல் முறையாக நாங்கள் செருப்பால் அடிக்கவில்லை என பதறுகின்றது

எவ்வளவு பெரும் திருப்பம்?

ஒரு காலத்தில் ராமனை செருப்பால் அடித்தோம் என கொக்கரித்து அதற்கு விளக்கமும் அளித்த கோஷ்டி இன்று பம்முகின்றது

ரஜினி பேசியது 3 வரிகள்தான்

1971ல் ராமன் படம் எரிக்கபட்டது
சொன்னது உண்மை
மன்னிப்பு கேட்கமாட்டேன்

இந்த 3 வரிகள்தான் 70 வருட இரும்பு கோட்டையினை தகர்த்து அவர்களை அலற வைத்திருகின்றது

சரி, ஏன் இப்படி புலம்பி அஞ்சுகின்றார்கள், ராமன் படத்தை செருப்பால் அடித்தோம் எனும் மாபெரும் வீரசம்பவத்தை ஏன் ஒப்புகொள்ள அஞ்சுகின்றார்கள்

கொள்கைவாதியாக இருந்தால் ஏற்பாற்கள், இவர்கள் சந்தர்ப்பவாதிகள் அல்லவா? இதனால் வருங்காலத்தில் தங்களுக்கு வருமானமும் இன்னும் பலவும் இழந்துவிடும் அல்லவா? அதனால் அஞ்சுகின்றார்கள்

அவர்கள் பகுத்தறிவு எப்பொழுதும் பல்லை காட்டும்தான், ஆனால் மகா கேவலமாக பல்லை காட்டுவது இப்பொழுதுதான்

தலைவியின் குரல்

வாவ்…………

எங்கிருந்தோ ஒரு சிங்கம் உறுமுகின்றது அது எந்த சிங்கத்தின் குரல் என கேட்டால் அது தலைவியின் குரல்

திரைதுறையில் இருந்து முதல் குரலாக, திகவுடன் கள்ள கூட்டு வைத்திருந்தாலும் காங்கிரசின் முதல் குரலாக வருகின்றது தலைவியின் குரல்

ஆம், நீதி நேர்மை நியாயம் உண்மை தைரியம் வீரம் தன்னபிக்கை மதிநுட்பம் இவை கலந்த அஷ்ட நாயகி எம் தலைவி

தலைவி சில காலம் பெரியாரிஸ்டாக இருந்தார், அதன் அசிங்கமான உள்நோக்கத்தை ஆபத்தான வேர்களை கண்டபின் வெளியேறினார்

இதோ சரியான நேரத்தில் சரியான வார்த்தையினை சொல்லிவிட்டார்

தலைவி சொன்னதால் கோடான கோடி ரசிக கண்மணிகளை கொண்ட குஷ்பு சங்கம் ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்கின்றது

மேலதிக உத்தரவுகளை தலைவியிடம் இருந்து எதிர்பார்த்து சங்கம் போருக்கு தயாராக இருக்கின்றது

ஆக ரஜினி ரசிகர்களே, உங்களுக்கான கூடுதல் பலம் தலைவியால் கிடைத்தாயிற்று, ரஜினி பக்கம் ஆண்டவன் இருக்கின்றான், அவன் ஒருபக்கம் இருக்கட்டும்,

இப்பொழுது தலைவி அவருடன் நிற்பதுதான் ஆண்டவனுக்கே பலம்..

சாமிதோப்பில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானவை

சாமிதோப்பில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானவை

வீரமணியின் வருகையினை உண்மையில் யாரும் எதிர்க்கவில்லை, அவர் நம் விருந்தினராக வருகின்றார் வரவேற்போம் என்றுதான் காத்திருக்கின்றார்கள்

அதாவது அவர் சாமிதோப்புக்கு வரட்டும் ஆனால் இந்துவாக வரட்டும், கறுப்பு சட்டையில் அனுமதிக்கமுடியாது இது போக சாமிதோப்புக்கு வருபவர்களை வரவேற்க சில சம்பிரதாயம் உண்டு அதை செய்யலாம்

வீரமணிக்கு காவிவேட்டி கட்டி , தலையில் மரியாதை தலப்பாகையினை காவி கலரில் கட்டி நெற்றியில் விபூதி இட்டு அவரை மரியாதையுடன் அழைத்து சென்று வைகுண்டர் சந்நிதானத்தில் நிற்க வைக்கத்தான் காத்திருந்தார்களாம்

வீரமணி வந்து இந்து உடையினை ஏற்று திருநீறு இட்டு அய்யா உண்டு என சொல்லி அதன்பின் பிரஜாபதியினை வாழ்த்தி வாயில் அவியலை ஊட்டினால் என்ன தகறாது?

விஷயம் வீரமணிக்கு கசிந்திருக்கின்றது, இதெல்லாம் எங்கள் சம்பிரதாயம் இல்லை என சொல்லியிருக்கின்றார்

அப்படி எங்களுக்கும் சம்பிரதாயம் உண்டு வந்தால் கதற கதற ஏற்க வைப்போம், அடித்து கூட காவி வேட்டி கட்டுவோம் என்று பதில் வந்திருக்கின்றது

அடி அடிக்கடி வாங்குவதுதான் ஆனால் இதென்ன விபரீதமான பதிலடி என தவித்த வீரமணி சென்னையில் முடங்கிவிட்டார்

வீரமணியின் குமரி பயணம் முடங்கிய மர்மம் இதுதான் என்கின்றார்கள்

ஒருவிஷயம் நாம் இதில் சொல்லிகொள்கின்றோம், சாமிதோப்பு நாடார்கள் கட்டுப்பாடு ஸ்தலம்

அங்கு பிராமணனும் ஆரியனும் எவனும் கிடையாது

இந்துமக்கள் விரட்டி அடித்திருகின்றார்கள், ஆனால் நாளையே ஆரிய சதி, பிராணிய சதி, பார்பானிய எதிர்ப்பு பாசிசம் என அங்கிருந்து அறிக்கைவரும் அதை யாரும் நம்பாதீர்கள்.

ஒரு விஷயம் இந்த ஊடகங்களல் மறைக்கபட்டிருக்கின்றது

ஒரு விஷயம் இந்த ஊடகங்களல் மறைக்கபட்டிருக்கின்றது, அது எந்த அளவு கறுப்பு சட்டைகளின் பிடியில் ஊடகம் சிக்கியிருக்கின்றது என்பதை காட்டுகின்றது

ஆக்டோபஸ் போல் அல்ல, அந்த காளிகன் போல ஆயிரம் கரங்களில் கறுப்பு சட்டை மற்றும் இந்து எதிர்பு சக்திகளின் கையில் அவை சிக்கியிருக்கின்றன‌

விஷயம் அப்படியானது

அய்யா வைகுண்டரின் தலமை பதியின் அதிபதி பாலபிரஜாபதி எனும் திருட்டு சாமியின் பிறந்தநாளுக்கு கறுப்பு சட்டை வீரமணி நேரில் வாழ்த்த வருவதாக உலகெல்லாம் அண்ட சராசரமெங்கும் செய்தி பரப்பபட்டது

பாலபிரஜாபதியும் தன்னை புட்டபர்த்தி சாய்பாபா போல நினைத்து கொண்டு வீரமணியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் கழுத்தையும் காதையும் கொடுத்து குனிந்து நின்றார்

இந்நிலையில் புனிதமான பதிக்கு நாத்திக இம்சை வருவது எப்படி என எதிர்ப்பு எழுந்தாலும் பிரஜாபதி வீரமணியில் பெருமாளையே கண்டு அவர்போக்கில் இருந்தார்

இந்நிலையில் சாமிதோப்பில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து பிரஜபாதி நிலையினை சிக்கலாக்கியிருகின்றார்கள்

அவர் உட்சிறையில் வைக்கபட்டு இளைஞர் சிலர் கம்பும் கட்டையுமாக வீரமணி வரும்பாதையில் அமர்ந்திருக்கின்றனர்

விஷயம் எல்லை மீறுவதை அறிந்து வீரமணியின் வாழ்த்து பயணம் ரத்து செய்யபட்டிருக்கின்றது

குமரி ஆன்மீக மண் என்பது உறுதிசெய்யபட்டிருக்கின்றது, அய்யா வைகுண்டரின் புனிதமான பதி சில அழுக்கு கால்களில் இருந்து தப்பியிருக்கின்றது

இதை ஒரு ஊடகமும் சொல்லாது, ஆனால் நாம் கேள்விபட்டதை சொல்லிவிட்டோம், இன்னும் சந்தேகமிருந்தால் சாமிதோப்பு பக்கம் விசாரியுங்கள்

வீரமணியினை விரட்டிய வீர கன்னியாகுமரி இந்துக்களுக்கு நன்றி, அவர்களுக்கு மானமும் அறிவும் உணர்ச்சியும் இருக்கின்றது

இந்துக்களுக்கு அஞ்சி தலைதெறிக்க ஓடினார் என நேற்று கன்னியாகுமரி வரலாறு பொறித்து கொண்டது