கொள்கையாவது மயிராவது..

“இவ்வளவு நடக்குது

ஒரு பய நம்மகிட்ட வந்து, அண்ணே ரஜினி உங்க கம்பெனி படத்துல நடிக்க கூடாது, படத்தை நிறுத்துங்கன்னு சொல்றானா?

அட கட்சி தலைவர் சொல்றாரா இல்ல உதயநிதி சொல்றாரா?

இவனுக நடத்துற நாடகத்தை பார்த்து சிரிப்பு சிரிப்பா வருது, நம்ப படத்துல இந்த கறுப்பு சட்டைக்கு 4 டயலாக் நச்சுன்னு இருக்குண்ணு விளம்பரபடுத்தி இன்னும் சில கோடி சம்பாதிப்போம்

நம்ம தொழிலே அரசியல் செஞ்சி சம்பாதிக்கிறதுதானே, தாத்தாவும் அப்பாவும் அப்படி கற்றுகொடுத்துட்டு போயிருக்காங்க,

மற்றபடி கொள்கையாவது மயிராவது..”

உயிராபத்து மிரட்டல் வந்துகொண்டிருக்கின்றது

மாரிதாஸ் தனக்கு உயிராபத்து மிரட்டல் வந்துகொண்டிருக்கின்றது என்கின்றார்

இன்னும் சிலரின் பாதுகாப்பும் சொல்லிகொள்வதாக இல்லை

நமக்கும் நிலமை சரியில்லை, கையில் கிடைத்தால் கரும்பாக பிழிந்துவிடுவார்கள்

ஒரு பயலையும் விடாமல் எல்லோரையும் வம்பிழுத்தால் இப்படித்தான் நடக்கும், ஆனாலும் நீதி நேர்மை நியாயம் நாட்டுபற்று நமக்கு முக்கியம்,

நம்மையும் சிலர் குறித்து வைத்திருக்கலாம், இந்தியா பக்கம் வருவதாக இருந்தால் பலத்த யோசனையுடன் முன்னேற்பாடு பல செய்துவிட்டுத்தான் வரவேண்டும் போலிருக்கின்றது

என்ன செய்யலாம்?

அங்கிள் சைமன் தன் வியப்பும் திகைப்பும் மிக்க கொழும்பு பயணத்தில் சொன்னபடி மரு வைத்து, கூலிங்கிளாஸ் போட்டு, தலையில் தொப்பி எல்லாம் வைத்து மாறுவேடத்தில்தான் வரவேண்டும்

ஆனால் என்னை குறித்து வைத்திருக்கும் அன்பர்களே, நான் 200ரூபாய்க்கு அல்ல, 200 டாலர்க்கு எழுதினேன், என்பதை பகிரங்கமாக ஒப்புகொள்கின்றேன்

அப்படி எழுதி கிடைத்த பில்லியன் டாலரில் சல்லி டாலரும் எடுக்காமல் தலைவி குஷ்புவின் கோவில் செலவுக்காக சுவிஸ் வங்கியில் மகா பத்திரமாக வைத்திருக்கின்றேன்,

சமீபத்தில் ஈரான் அரசு தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் பெரும் வட்டி தருவதாகவும் சொல்லியும் நாம் கொடுக்கவில்லை, காரணம் ஆலய வேலை எப்பொழுதும் தொடங்கபடலாம்

பதிவுக்கு 200 டாலரை தந்து எழுத சொன்னது வேறு யாருமல்ல Devi Somasundaram என்பவர்தான்

இதுவரை ஒரு டாலரும் பாக்கியில்லை, அந்த அளவில் அவள் மிக நல்லவள்

ஒரு சிலமுறை போனஸ் கூட யூரோவிலும்,தினாரிலும் கொடுத்திருக்கின்றாள்

அதனால் அம்பான என்னைவிட்டுவிட்டு என்னை எய்த அவளை எங்கேணும் கண்டுபிடிக்கமுடிந்தால் பிடித்து சாத்துங்கள்,

முடிந்தால் கொல்லுங்கள்

என்னை விட்டுவிடுங்கள், நான் ஒரு அப்பாவி.

தலைவி குஷ்புவே கண்டுகொள்ளா எம்மை நீங்களும் கண்டுகொள்ளாமல் விடுவதுதான் உங்களுக்கு அழகு,

உங்கள் தகுதிக்கும் அழகு..

மூட நம்பிக்கை

கேரளாவின் மலப்புரம் அக்காலத்திலே தெற்கு பாகிஸ்தான் கேட்ட பகுதி

இப்பொழுது தெற்கு ஆப்கானிஸ்தானாக மாறிகொண்டிருக்கின்றது

குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி, போலியோ மருந்து என எதுவும் கொடுக்கமாட்டோம் என 4 லட்சம் குடும்பங்கள் அவற்றை தவிர்த்திருக்கின்றன, இது பெரும் சர்ச்சையாகின்றது

தடுப்பு மருந்து கொடுப்பது தங்கள் கலாச்சாரத்துக்கும் நலனுக்கும் எதிரானது என்ற மூட நம்பிக்கையினை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்

இந்த மூட நம்பிக்கையினை அகற்ற , வைக்கம் வீரரின் நேரடி சீடரான மானமிகு அறிவுமிகு வீரமணியும் கோவை பெரியாரிஸ்டுகளும், கொளத்தூர் மணியும் அங்கு அனுப்பபட்டு அவர்களுக்கு அறிவு வரவைப்பார்கள் என நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன

முட்டாளுக்கு முட்டாளே தலைவன்

எதிரியிடம் ஒரு சொட்டு நீரும் கேட்கமாட்டேன் என சிறையில் தாகத்தால் மானத்தோடு செத்தான் சேரன் இரும்பொறை

மகன் ஒருவார்த்தை சொல்லிவிட்டான் என்பதற்காக வடக்கிருந்து உயிர்நீத்தான் மானமிக்க கோப்பெருஞ்சோழன்

நீதிதவறியபின் என்ன ஆட்சி என கண்ணகி முன்னாலே செத்தான் நெடுஞ்செழியன்

தனக்கு நிகழ்ந்த அவமானத்தின்பின் சோழநாட்டிலே கால்வைக்கவில்லை கம்பன்

மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் என குறளே எழுதினான் வள்ளுவன்

ஒன்றா இரண்டா தென்னாட்டு இனமான வரலாறு

சேரன் காலமுதல் கட்டபொம்மன் காலம் வரை, மருதுபாண்டியர் காலமுதல் வாஞ்சிநாதன் காலம் வரை, ஏன் பிரபாகரன் காலம் வரை இங்கிருக்கும் மானமும் வீரமும் என்ன?

தன்மானமும் திமிரும் என்ன?

அட வந்திருப்பது ஆண்டவன் என தெரிந்தும் அவன் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்ற தன்மான நக்கீரன் வாழ்ந்த பூமி இது

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ..” என என்றோ தன்மான குரல் ஒலித்த மானமிக்க பூமி இது

அப்படிபட்ட வீரமிக்க மானமிக்க இனத்துக்கு ஈரோட்டு ராம்சாமிதான் மானம் கற்று கொடுத்தானாம், சுயமரியாதை சொல்லிகொடுத்தானாம்

ராம்சாமிக்கு முன்னால் எவனுக்குமே மானமில்லையாம்

பெண் விடுதலையினை ராம்சாமி தொடங்கினானாம்

கண்ணகியும், வீரமங்கை வேலுநாச்சியாரும் வலம் வந்த மண் இது, பெண்களுக்கான பெருமை எக்காலமும் இங்கு உண்டு, இங்கு எக்காலமும் பெண்களுக்கு அதிகாரமுண்டு, கடவுளையே அம்மன் என போற்றி பெண்ணாக வணங்கும் கலாச்சாரம் இது

ஒரே நிபந்தனை அவள் நல்ல மங்கையாக இருத்தல் வேண்டும், தறுதலைகளை இந்த மண் கொண்டாட விரும்பாது

அப்படிபட்ட தர்மமிக்க மண்ணுக்கு, சிறு பெண்ணையும் தாயே என அழைக்கும் தர்மமிக்க இனத்துக்கு பெண் விடுதலையினை ராம்சாமி கொடுத்தானாம்

இந்த இனத்தின் தன்மானமும் சுயமரியாதையும் என்ன?

மானம் கெட விடுவதில்லை, கெட்டபின்பு வாழ்வதில்லை எனும் கர்வத்தின் உச்சியில் இருந்த இனம் இது

ஆகசிறந்த தன்மான, சுயமரியாதை வீரர்களை கட்டபொம்மன் புலித்தேவன் மருதுபாண்டியர் மருதநாயகம் என இங்கேதான் கண்டு வியந்திருக்கின்றான் ஆங்கிலேயன்

தமிழனின் தன்மானம் அப்படி இருந்திருக்கின்றது

நாமும் அரசியலை புரட்டுகின்றோம், 1967க்கு முன் எல்லா முதல்வருக்கும் மானம் இருந்திருக்கின்றது

மானம் கெட்ட அரசியலை தொடங்கியது அண்ணாவும் கருணாநிதியும்

அந்த மானம்கெட்ட, அறிவுகெட்ட, பணத்துக்காய் பல்லிளிக்கும் அவமான அரசியல் இன்றுவரை தொடர்கின்றது, சொல்ல தயக்கமில்லை பன்னீர்செல்வம் வரை தொடர்கின்றது

ஆக மானமும் வீரமும் சுயமரியாதையும் மிக்க ஒரு இனத்துக்கு மானம்கெட்ட அரசியலை சொல்லிகொடுத்திருக்கின்றான் ராமசாமி

ஒரு இனத்தையே மானம்கெட்ட இனமாக மாற்றியிருகின்றான்

ஆனால் இந்த அடிப்பொடிகளோ தமிழனின் வீரவரலாறை மறந்துவிட்டு மானமே இங்கு ராம்சாமி கொடுத்தது என கதையளக்கின்றார்கள்

சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாத கூட்டத்துகு சுய அறிவாவது உண்டா என்றால் நிச்சயம் இல்லை

சுய அறிவு இருந்தால் பண்டைய தமிழனின் தன்மானத்தை நினைத்து இந்த ராம்சாமியின் போலி சுயமரியாதையும் அவனையும் தூக்கி போட்டு மிதித்திருக்கும்

முட்டாளுக்கு முட்டாளே தலைவன் , அதிலொன்றும் ஆச்சரியமில்லை

இப்படித்தான் இருக்கும்..

“டேய் கொலை செய்தியா இல்லையா

கத்தியால குத்தி கொலை செய்தோம்ணே

அதைத்தானடா நானும் சொன்னேன்

அண்ணே நீங்க கத்தி கைப்பிடியில‌ உறைய எடுத்துட்டு குத்துனீங்கண்ணு சொல்றீங்க அது பொய்

டேய் குத்தினீங்களா இல்லியா

அண்ணே குத்தினோம், கொன்னோம் அதெல்லாம் வேற விஷயம். ஆனா கத்தியில் கைபிடியில‌ உறை இருந்து , கைபிடியில உறை இல்லண்ணு சொல்றீங்க அது பொய்

டேய் கொலை நடந்தா இல்லியா

அது விஷயம் இல்லண்ணே, நாங்க கொன்னோம்னு ஊருக்கே தெரியும், ஆனா கத்தி கைபிடியில உறை இருந்தது உண்மை , நீங்க பொய் சொல்றீங்க‌

அப்போ கொலை செஞ்சது நீங்கதான்

அட ஆமாண்ணே, ஆனா கத்தி கைபிடி உறையோடதான் குத்தினோம். செத்தவன பார்க்காதீங்கண்ணே உறை இருந்தா இல்லியா அத மட்டும் சொல்லுங்க

டேய் கொன்னீங்களா இல்லியா

அது கிடக்கட்டும் , கத்தி கைபிடியில உறை இருந்திச்சு, நீங்க பொய் சொல்லிட்டீங்க, மரியாதையா மன்னிப்பு கேட்ருங்க‌

டேய் நீங்க கொலை செஞ்ச பாவிங்கடா

அது கிடக்கு, இப்பொ பொய் சொன்னதுக்கு மன்னிப்பு கேளுங்க, கைபிடியில உறை இருந்திச்சி”

( இப்படித்தான் ராமர் படத்தை எரித்தோம், செருப்பால் அடித்தோம் ஆனால் அம்மணமாக சிலை இல்லை என சொல்லிகொண்டே இருக்கின்றன திக திமுக கோஷ்டிகள்

அதாவது அவர்கள் செருப்பால் அடித்தது உண்மையாம், ராமர் படத்தை கொளுத்தியது உண்மையாம் ஆனால் சிலை அம்மணமாய் இருந்தது பொய்யாம்

இப்படி ராமன்படத்தை கொளுத்தியதை ஒப்புகொள்ளும் அறிவார்ந்த கூட்டத்தை எங்காவது கண்டீர்களா?

முரசொலி படித்தாலே அறிவு மங்கும், இதில் விடுதலை பத்திரிகையும் படித்தால் அறிவு எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்.. )

வாழ்வில் முதல் முறையாக தும்பிகள் சந்தோஷமாய் இருக்கின்றன

கன்னடத்துகாரனான ராம்சாமியினை கன்னடத்தில் இருந்து வந்த ரஜினி தோலுரித்து தொங்கவிட‌…

அந்த கன்னட நாயக்கனுக்கு தெலுங்கு பாசமிக்க திமுக முட்டுகொடுப்பதை ஆனந்த கண்ணீருடன் பார்த்துகொண்டிருக்கின்றன “நாம் தமிழர்” தும்பிகள்…

அந்த பரவசத்தில் வாய்விட்டு “எல்லாம் பிரபாகரன் ஆவி செய்யும் பழிவாங்கல் ” என்கின்றன‌

இன்னும் சாகாத பிரபாகரன் ஆவி எப்படி பழிவாங்கும் என்றால் , போகர் சீமானுக்கு கற்றுகொடுத்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தை பிரபாகரனுக்கு சீமானால் உபதேசிக்கபட்டது என சிரிக்காமல் சொல்கின்றன தும்பிகள்

வாழ்வில் முதல் முறையாக தும்பிகள் சந்தோஷமாய் இருக்கின்றன , பாவம் இருந்துவிட்டு போகட்டும்

இந்து அடையாளங்களை கொண்டு வந்துவிட்டீரா இல்லையா?

தன் படபிடிப்பு காட்சிகளை அடிக்கடி கசியவிட்டு ஒருமாதிரி கள்ள விளம்பரம் செய்வார் மணிரத்னம்

ஆனால் “பொன்னியின் செல்வன்” டைட்டில் காட்சிமட்டும் விட்டார், ஆளாளுக்கு இந்து அடையாளம் எங்கே என்றதும் மவுனமானார்

பின் ஒரு யானையினை காட்டினார், அதற்கும் திறுநீறு இல்லை. சோழர்களின் யானை விபூதியின்றி வந்ததில்லை

அதற்கும் சில எதிர்ப்புகள் எழுந்தன‌

பொதுவாக மணிரத்னம் இப்படி இருக்கும் நபர் அல்ல, அதுவும் 800 கோடிரூபாய் பட்ஜெட் படத்துக்கு அடிக்கடி விளம்பரம் வேண்டும் , எதிர்பார்ப்பினை எகிற வைக்க வேண்டும்

ஆனால் மணிசார் அமைதி, ஏன்?

ஏதோ அவசர கோல்மால் செய்துகொண்டிருக்கின்றாரா? இல்லை மொத்தமாக படத்தை இந்து அடையாளமின்றி திரைக்கு அனுப்பி வீரமணி துணையுடன் ஓட வைக்கலாமா என்ற மிதப்பில் இருக்கின்றாரா என்பதுதான் தெரியவில்லை

மிஸ்டர் மணிசார், முரசொலி படித்தது போதும், படம் என்னாயிற்று? இந்து அடையாளங்களை கொண்டு வந்துவிட்டீரா இல்லையா?

யாரை எதிர்த்து நடத்தினார்?

ஈரோட்டு ராம்சாமிஎவ்வளவு போராட்டம் நடத்தினார், உருண்டார் , புரண்டார் , தொங்கினார் என சொன்னால் அதன் உள்நோக்கம் கவனிக்கதக்கது

யாரை எதிர்த்து நடத்தினார், ?

பிராமணனை எதிர்த்து

அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தது யார்?

பிரிட்டிஷ்காரன்

சமூக கொடுமை இருந்ததென்றால் அதை களைய சட்டமியற்ற சொல்லவேண்டுமா இல்லை தெருவில் உருண்டு புரள வேண்டுமா?

சட்டம் இயற்ற சொல்ல வேண்டும்

சட்டம் யார் இயற்றமுடியும், அதிகாரம் யாரிடம் இருந்தது?

வெள்ளையனிடம் இருந்தது

பின் ஏன் வெள்ளையனை எதிர்க்காமல் அவனிடம் அடிமையாக இருந்த பிராமணனை எதிர்த்தார்?

அதுதான் யாருக்கும் புரியவில்லை, ராம்சாமி வெள்ளையன் அடிமையாய் இருந்தால் தவிர இப்படி பைத்தியமாய் புலம்ப வாய்ப்பே இல்லை

சதி எனும் உடன்கட்டை வழக்கம், குழந்தை திருமணம் எல்லாம் தடுக்க வெள்ளையனை சட்டமியற்ற வைத்தான் ராஜாராம் மோகன்ராய்

சட்டபடி சமூக கொடுமையினை தடுத்தான் அவன்,

ராம்சாமி ஏன் அதை செய்யவில்லை அல்லது செய்ய துணியவில்லை?

ராஜாராம் மோகன்ராய்க்கு 800 வருடங்களுக்கு முன்பே கன்னட பசவய்யா எனும் சீர்திருத்தவாதி இருந்தான்,லிங்காயத் பிரிவு அவன் தொடங்கி வைத்தது

சமூகத்தை சீர்திருத்தினான், பெண் அடிமைதனம் ஒழித்தான்இன்றும் அங்கு பெண்கள் ஆண்களுக்கு தாலிகட்டுவார்கள்

ஆனால் கடவுள் இல்லை என காட்டுமிராண்டிதனம் செய்யவில்லை , கிளைகளை செம்மைபடுத்தினாரே தவிர வேரினை வெட்டவில்லை

இன்னும் எவ்வளவோ சீர்திருத்தவாதிகள் வந்தனர், எதை செய்ய வேண்டுமோ அதை செய்தனர், குளம் கெட்டுவிட்டால் பழைய நீரை வெளியேற்றி புதுநீர் பாய்ச்சவேண்டும் , இவர்கள் அதைத்தான் செய்தார்கள்

ஈரோட்டு ராம்சாமி குளத்தை மூடி மண்மேடாக்கினான், குளத்தின் பலன்களை அவன் நினைக்கவே இல்லை

, அறிவுள்ளவன் அச்செயலை செய்வானா? அதை செய்தவன் எவ்வளவு பெரும் மூடனாக இருத்தல் வேண்டும்?

பசுவய்யா, ராஜாராம் மோகன்ராய் போன்றோருக்கு அறிவு இருந்தது, எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது எனும் தெளிவும் ஞானமும் இருந்தது

காரணம் அவர்கள் தூய இந்துவாய் நல்லறிவாளனாய் இருந்தார்கள் , உண்மையான சமூக நோக்கமும் புரட்சி மனப்பான்மையும் முற்போக்கு மனமும் அவனுக்கு இருந்தது

ஈரோட்டு ராம்சாமிக்கு வெறுப்பும் விரக்தியும் வெறுப்பும் முட்டாள்தனமுமே இருந்தது, அதனால் தெருவிலே புரண்டு அழுதான்,

எதை செய்யவேண்டுமோ அதை செய்யவில்லை கடைசி வரை வெள்ளையனை அவன் எதிர்க்கவே இல்லை மாறாக சக அடிமையாக இருந்த பிராமணன் மேல் கம்பு சுற்றுவதிலே காலம் கடத்தினான்,

இதன் பெயர்தான் சிந்தனை, புரட்சி, புண்ணாக்கு என சொல்லிகொண்டிருந்தால் அவர்கள் முரசொலி மட்டும் தொடர்ந்து படிக்கட்டும்

வெற்று பிம்பம் உடைந்து கொண்டிருக்கின்றது

பார்பானுக்கு 2000 வருட காலம் அடிமையாக இருந்தோம் அதை மாற்றினார் பெரியார் : ஈரவெங்காயங்கள்

2000 வருடம் முன் யார் ஆண்டார்கள்?

மூவேந்தர்கள்

அதில் எவ்வளவு பார்ப்பான் உண்டு?

யாருமில்லை

1300 ஆண்டுக்கு பின் யார் ஆண்டார்கள்?

நாயக்கர்கள்

அதில் யார் பார்ப்பான்?

யாருமில்லை

1500ல் இருந்து யார் ஆண்டார்கள்?

நவாப்புக்கள்

அதில் யார் பிராமணன்

யாருமில்லை

1700ல் இருந்து யார் ஆண்டார்?

வெள்ளையன்

அதில் யார் பார்ப்பான்?
யாருமில்லை

பின் பெரியார் என்ன கிழித்தார்? யாரிடமிருந்து விடுதலை வாங்கி தந்தார்?

தெரியவே இல்லை…

ஆக ஈரோட்டு ராம்சாமி வரலாற்று மோசடியாளன், ஜனநாயக தமிழ்நாட்டில் வோட்டுக்காக சுமக்கபடும் வெற்று பிம்பம், அது உடைந்து கொண்டிருக்கின்றது

தலைவியினை விட்டுவிடு..

பர்மாவுக்கு சென்ற தங்க தலைவி பற்றி மேலதிக தகவல் இல்லை

பர்மாவின் தென் எல்லை கடத்தலுக்கு பெயர்போன பகுதி என்பதால் சங்கம் பெரும் வருத்தம் கொள்கின்றது, அச்சம் மேலோங்குகின்றது

ஒருவேளை 200 டன் பகோடாவின் தங்கத்தை விட விலைமதிப்பற்றவர் தலைவி என யாரும் கடத்திவிட்டார்களோ என்னமோ

பர்மா சீனாவின் கட்டுப்பாடு நாடு என்பதால், அருணாசல பிரதேசத்தை கொடுத்தால்தான் குஷ்புவினை விடுவிப்போம் என சீனா ரகசியமாக மிரட்டவும் வாய்ப்பு இருக்கின்றது

“ஏ கடத்தல்காரனே

தலைவியினை விட்டுவிடு, பர்மாவுக்கு தங்க கோபுரங்கள் உண்டு. தமிழ்நாட்டுக்கு எங்கள் தலைவியினை விட்டால் யார் உண்டு..?

ஏ ஜின்பெங்கே.

. மாமல்லபுரத்து சிற்பங்களை விட தலைவி பொக்கிஷம், இதனால் இந்திய அரசு கண்டிப்பாய் வழிக்கு வரும் என்றுதானே கடத்த சொன்னாய், உங்கள் நாட்டில் வேறு கெரோனா வைரஸ் பரவுகின்றதாம்

தயவு செய்து மாமல்லபுர சிற்பங்களை வைத்துகொள், தலைவியினை விட்டுவிடு..”