ஈரோட்டு ராம்சாமியின் சாதனைகள் என்ன?

ஈரோட்டு ராம்சாமியின் சாதனைகள் என்ன?

ராம்சாமி சாதியினை குழிதோண்டி புதைத்தார், இன்று அரசு பட்டியலில் மட்டும் 350 சாதிகள் இருக்கின்றன, சாதியினை சட்டபூர்வமாக்கியது ராம்சாமி

ராம்சாமி கள்ளை ஒழிக்க தென்னைமரத்தை வெட்டினார்

கள் இல்லாவிட்டால் தேங்காய் காய்க்கும், ஆனாலும் ராம்சாமி அறிவு அள்ளவுதான், ராம்சாமி கள்ளை ஒழித்த தமிழ்நாட்டில் இன்று அரசே மது விற்கின்றது

ராம்சாமி பெண் விடுதலைக்கு பாடுபட்டார்

ஜெயாவும் கனிமொழியும் அரசியலுக்கு வந்து சிறைக்கும் சென்றனர், சசிகலா சிறையிலே இருக்கின்றார்

ராம்சாமி பிள்ளையார் சிலையினை உடைத்தார்

தெருவுக்கு ஒரு பிள்ளையாரும், விநாயக சதுர்த்தி விமரிசையும் தமிழ்நாட்டுக்கு வந்தது

ராம்சாமி ராமர் உருவத்தினை எரித்து ராம்லீலா கொண்டாடினார்

இன்று ராமருக்கே கோவில்கட்டபடுகின்றது, தமிழ்நாட்டில் இருந்து பொருட்கள் செல்கின்றன‌

ராம்சாமி மூடநம்பிக்கையினை ஒழித்தார்

சமாதியில் கருணாநிதி தயிர்வடை உண்டு பால் குடித்துவிட்டு முரசொலி படிகின்றார், கருணாநிதி குடும்பம் கோவில் கோவிலாக அலைகின்றது, உபிக்கள் பாதுகாவலுக்கு செல்கின்றன

நேதாஜி, அவர்தான் உண்மையான பெண் விடுதலையினை சொன்னார்

ஆணுக்கு பெண் சராசரியாக நடத்தபட வேண்டும் பெண் விடுதலை முக்கியம் என ஈரோட்டு ராம்சாமி ஊருக்கு சொல்லிவிட்டு மணியம்மையினை தனக்கு சமைத்துபோடவும் மூத்திரசட்டி தூக்கவும் வைத்து கொண்டார்

ராணி அம்மாள் அண்ணாவுக்கு சமையலறை அடிமையாய் இருந்தார், கருணாநிதி இரு பெண்களை அப்படி அடிமையாக்கி வைத்து கொண்டு பெண்விடுதலை பேசிகொண்டிருந்தார்

ஆனால் பெண்களை மதித்து அவர்களை சரிக்கு சரி போராளிகளாக்கி தன் ராணுவத்தில் நிறுத்தியிருந்தார் நேதாஜி, அவர்தான் உண்மையான பெண் விடுதலையினை சொன்னார், ஆனால் விளம்பரம் தேடி அரசியலாக்கவில்லை

அப்படி அவர் படையில் இருந்தார் அந்த ராஜாமணி எனும் வீரதமிழச்சி

இத்தேசத்தின் மிகபெரும் தியாகி அவர், எந்த போராளிக்கும் குறையாத தியாகம் அவர் செய்தது. வரலாற்றில் வாழும்பொழுது மறைக்கபட்ட பெரும் தியாகி, இத்தேசம் இன்னும் அவரை அங்கீகரிக்கவில்லை

அவர் பர்மாவின் மிக செழிப்பான குடும்பத்தில் பிறந்தார் அப்பொழுது அவருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது. பர்மாவில் நேதாஜி நிதி திரட்டியபொழுது நகை, வைரம் என தன் வீட்டில் இருந்த அனைத்து செல்வங்களையும் கொட்டி கொடுத்தவர் அவர்

அஞ்சிய நேதாஜி அவர் வீட்டுக்கே சென்று, உங்கள் மகள் சிறுமி விவரம் தெரியாமல் அள்ளிகொடுத்துவிட்டாள், இதனை ஏற்றுகொள்ளுங்கள் என சொன்னார், ஆனால் ராஜாமணி தீர்க்கமாக மறுத்தார், வீட்டில் உள்ளோரும் அதனை ஆதரித்தனர்

இவ்வளவிற்கும் பர்மாவிலே பிறந்து வளர்ந்தவர் ராஜாமணி இந்தியாவின் விடுதலை அவருக்கு அவசியமே இல்லாதது, ஆனாலும் இந்திய ரத்தம் அவரை போராட அழைத்தது

அவர் கொட்டி கொடுத்த வைரம் அன்றே பல லட்சம் பெறுமானம் உள்ளவை

அதன்பின் ராஜாமணி நேதாஜியினை விட்டு அகலவில்லை, நேதாஜிபடையில் இணைந்தார், உளவுபடையில் பணியாற்றினார், ஆண் வேடமிட்டு பிரிட்டிசாரை உளவுபார்த்து அவர் கொட்டிய தகவல்கள் ஆச்சரியமான ரகம்

அந்த அளவு மிக சிறந்த உளவாளியாக இருந்தார்

பின் ஒரு கட்டத்தில் அவர் சிக்கிகொள்ள வெள்ளையர் சுற்றினர், காலில் துப்பாக்கி குண்டுபாய அட்டகாசமாய் தப்பி வந்தவர்

நேதாஜியுடன் இறுதிவரை போராடிய மிக சிலரில் அவரும் ஒருவர், ஜான்சி ராணி படை எனும் பெண்கள் படையில் இருந்தார்

இரண்டாம் உலகபோரில் ஜப்பான் தோற்றதும், நேதாஜி மர்மமானபின் ராஜாமணியின் குடும்ப சொத்துக்கள் எல்லாம் பிடுங்கபட்டு அகதியாய் சென்னை வந்தார் ராஜாமணி

ஆம் சுதந்திர இந்தியாவில் அவர் அகதியாகத்தான் வந்தார், எந்த இந்தியா சுதந்திரத்திற்காக போராடினாரோ அந்த இந்தியா அவரை தொடக்கதில் ஆதரிக்கவில்லை

இங்கேயே ஏக குழப்பத்தில் இருந்தது தேசம், பின்பு அவருக்கான பென்சன் வந்தது

மிக ஏழ்மையில் வசித்த அவரைபற்றி பின்பு செய்திகள் வந்தபொழுது ஜெயலலிதா அவருக்கு நிதி உதவி செய்தார், அதுவும் எப்படி?

சுனாமி நிதி என தள்ளாடிய வயதில் சில ஆயிரங்களை கொண்டு ஜெயாவிடம் கொடுத்தார் ராஜாமணி, இந்திய வரலாற்றின் உருக்கமான காட்சிகள் அவை

சுனாமி நிதிக்கு தன் சேமிப்பினை எல்லாம் இவர் கொடுத்தபொழுது பலரின் கண்கள் கலங்கின.

இத்தேசத்த்ற்காக நீர் கொடுத்தது போதாதா? போராடியது போதாதா? 80 வயதிலுமா கொடுக்க வேண்டும்? அப்படி இத்தேசம் உங்களுக்கு என்ன செய்தது? ஏன் இப்படி ஒரு அக்கறை? என கேட்டபொழுது அது நேதாஜி எமக்கு கற்றுகொடுத்த பாடம் என அவர் சொன்ன பொழுது, ஜெயாவின் இதயமே கலங்கிற்று

ஆம் நேதாஜியின் பெண் விடுதலை போதனை அப்படி இருந்திருக்கின்றது

அதன்பின் ராஜாமணி பற்றிய செய்திகள் இல்லை

( இப்படி இன்னும் ஏராளமான தியாகிகள் உள்ள நாட்டில்தான் “தியாக தலைவி” சின்னம்மா என்றொரு கோஷ்டியும் கிளம்புகின்றது, காவிய தலைவி கனிமொழி என இன்னொரு கோஷ்டியும் கிளம்புகின்றது

இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம் )

சில வருடங்களுக்கு முன் முன் நேதாஜி மர்மம் பற்றிய போராட்டத்தில் 90 வயதில் முதல் ஆளாக நிற்கும்பொழுது கண்கள் கலங்கின‌

காந்திக்கு தில்லையாடி வள்ளியம்மை மன உறுதி கொடுத்தார் என்றால், நேதாஜிக்கு வலிமை கொடுத்தது இந்த சரஸ்வதி ராஜாமணி எனும் பர்மா தமிழச்சி

தன் சொந்த வைரத்தை நாட்டிற்க்காக அள்ளிகொடுத்துவிட்டு அவர் அகதியாய் வந்த சென்னையில்தான் இன்று வருமானவரிதுறையினர் தங்கம் பதுக்கல், வைரம் பதுக்கல் என தேடுகின்றார்களாம்

எவ்வளவு பெரும் கொடுமை இது? நமக்கே கோபம் வருகின்றது அந்த அம்மணி இதனை எல்லாம் எப்படி தாங்கிகொண்டாரோ தெரியாது

இந்த நாட்டிற்காக தன் இளமையினை தொலைத்த, வாழ்வினை செல்வத்தை எல்லாம் தொலைத்த அந்த மூதாட்டி , தேசத்திற்காக வாழ்ந்த அந்த மூதாட்டி இன்று இல்லை

ஒரு அரசு மரியாதை இல்லை, அஞ்சலி இல்லை, அனாதையாக தகணம் செய்யபட்டிருக்கின்றார் அந்த வீர தமிழச்சி

எப்படிபட்ட நன்றிமிக்க தேசம் இது? எப்படி நன்றிமிக்க ஊடகங்கள் இவை, அப்படிபட்ட நாடு இது

மணியம்மையினை விட பல கோடி மடங்கு உயர்ந்தவர் ராஜாமணி, திராவிட போலி பிம்பங்களை விட பன்மடங்கு பெண்விடுதலையினை சத்தமின்றி செய்தவர் நேதாஜி

காக்கை கூட்டம் கத்தும் ஆனால் கழுகுகள் கத்துவதில்லை

குப்பைமேட்டுக்கும் கோபுரங்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்

இதுதான் திராவிட புரட்சியின் சித்தாந்தம்

கருணாநிதி எவ்வளவு கொள்கை பிடிப்போடு இருந்தார், இதோ பாருங்கள் அவரின் பேரன் ரஜினி படத்தை வைத்து சம்பாதிக்க போகின்றாராம்

தன் குடும்பத்தின் வாளான முரசொலியினை பற்றி பேசியபின்பும், நிலமை பற்றி எறிந்தபின்பும் இப்படிஎல்லாம் ரஜினி வைத்து வியாபாரம் செய்ய எப்படி ஒரு அடிமை புத்தியும், சொரணை கெட்ட தனமும் இருக்க வேண்டும்?

உதயநிதியும் சொற்றால் அடித்த பிம்பமா?

இதில் ஏதோ ஆரிய பார்பானிய சதி இருக்கலாம், பிராமண சூது இருக்கலாம்

சரி இதைகண்ட உடன்பிறப்புகள் என்ன செய்யும்? பொங்கி எழுந்து அவரை மறித்து என்ன கேட்கும் தெரியுமா?

ரஜினி படத்தை நீங்கள் விற்றுகொள்ளுங்கள், தியேட்டரில் முறுக்கு பாப்கார்ன் விற்கும் உரிமையினை எங்களுக்கு கொடுங்கள் இல்லாவிட்டால் மோடி பார்பானிய இந்துக்களுக்கு அதை கொடுத்துவிடுவார், அந்த சதியினை நீங்கள்தான் தடுக்க வேண்டும்

இதுதான் திராவிட புரட்சியின் சித்தாந்தம்

ஆக பெரியார் இல்லாவிட்டால் என்னாயிருக்கும் தெரியுமா?

உதயநிதி சினிமா விற்க முடியாது, உபிக்கள் முறுக்கு விற்க முடியாது

இந்த நன்றியினை மறந்தால் தமிழகம் உருப்படாமலே போகட்டும்

பெரியார் இல்லாவிட்டால் ஐடி தொழிலும் இல்லையாம், ஆம் சென்னையில் இத்தனையாயிரம் ஐடிதொழிலாளிகள் இருக்க பெரியார்தான் காரணமாம்

ஆக பில்கேட்ஸும், ஐபிஎம் போன்ற கம்பெனிகளும் , இந்த ஆப்பிள் நிறுவணர் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் பலர் காரணமே அல்ல‌

முழு காரணம் பெரியார், ஈரோட்டு ராம்சாமி இந்துமதத்தையும், தமிழ் செய்யுளையும் புறந்தள்ளிவிட்டு 1930களிலே புரோகிராம் எழுதியிருக்கின்றார்

1935ல் அண்ணா துரையும் அவருடன் கருணாநிதியும் சேர்ந்து திராவிட புரோகிராம் எழுதியிருகின்றார்கள்

அந்நேரம் 1940களில் ஹிட்லரிடம் இருந்து உலகை காக்க கிளம்பிய அமெரிக்காவின் கண்ணில் இது பட்டுவிட்டது

முரசொலி, விடுதலை, திராவிட நாடு ஆகிய பத்திரிகைகளின் விஞ்ஞான பக்கங்களின் இருந்த ஆய்வுமுடிவுகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் செயல்படுத்தின‌

அதில் கால்குலேட்டர், கணொபொறி என என்னவெல்லாமோ உருவாயின‌

அட தமிழனின் மூளை எவ்வளவு சிறந்தது, பாப்ர்பண பிராமணன் இதை எல்லாம் சூத்திரன் என அடக்கி வைத்திருக்கின்றான் என எண்ணிய நாசாவும் மைக்ரோசாப்டும் திமுகவினரை ஊக்குவித்தன‌

அண்ணா ஏல் பல்கலைகழத்தில் அன்றே இணைய பயன்பாட்டை சொன்னார், அதிலிருந்துதான் இண்டர்நெட் தோன்றிற்று

தொடர்ந்து திராவிட கருத்துக்களில் இருந்து அமெரிக்கா பல விஷயங்களை கொடுத்தது, முரசொலிமாறனின் அரிய முயற்சியில் செப்போன் உருவானது

ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபொழுதுதான் ஆப்ஸ் பற்றி சொல்லி அவை பிரபலமாயின‌

நெல்லுக்கு பாய்ந்த நீர் புல்லுக்கும் பாய்ந்து பெங்களூர் ஐதராபாத் போன்றவை கணிணி நகர்களாயின‌

ஒன்றா இரண்டா திராவிடதின் சாதனை?

சென்னையில் தமிழன் இருப்பது முதல் அங்கு கடலும் துறைமுகமும் விமான நிலையமும் ஆட்டோ நிலையமும் கூவமும் இருப்பது வரை எல்லாமே திராவிட சாதனையே

சென்னைக்கு கணிபொறி வந்து இணையம் வந்தது எல்லாமே அவர்கள் சாதனையே, அவர்கள் இல்லையென்றால் சென்னை அந்தமானின் சென்டில் தீவுபோல இருக்கும், தமிழன் ஆடையின்றி வில் அம்போடு சுற்றிகொண்டிருப்பான் அய்யகோ

இந்த நன்றியினை மறந்தால் தமிழகம் உருப்படாமலே போகட்டும்

எவ்வளவு பெரிய உண்மை வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றது..

எவ்வளவு பெரிய உண்மை வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றது..

திராவிடம் எவ்வளவு விஞ்ஞான களஞ்சியம்?

பெரியார் எவ்வளவு பெரும் விஞ்ஞானி, ஈரோட்டில் பெரியர் 1900களிலே ராக்கெட் விட்டு ஆடியிருக்கின்றார்.

அந்த மாபெரும் கண்டுபிடிப்பினை பிராமணர் அலட்சியம் செய்ததுதான் அவரின் பிராமண வெறுப்புக்கு காரணம்..

1903ல் ரைட் பிரதர்ஸ் விமானம் கண்டுபிடிக்கும் முன்பே விமானம் கண்டறிந்தது பெரியார் & கோ

படுபாவி வெள்ளைக்காரன் அந்த நுட்பத்தை விமானத்தை ராக்கெட்டை கடத்திகொண்டு ஓடிவிட்டான்

பெரியார் வைத்திருந்த விமான நுட்பத்தை வெள்ளையனுக்கு திருட்டுதனமாக கொடுத்தது பார்ப்பான், அது பார்பானிய சதி

அந்த நன்றிக்கே வெள்ளையன் பிராமணனுக்கு மட்டும் ஆங்கிலம் சொல்லிகொடுத்து அரசு பணியில் வைத்திருந்தான்

அதன் பின் பெரியாரோடு அண்ணா வந்தார் , அவர் மாபெரும் ஏவுகனை விஞ்ஞானி

இருவரும் உலகின் முதல் ஏவுகனையினை காஞ்சிபுரத்தில் செய்தார்கள்

அந்த நேரம் படுபாவி ஹிட்லர் வந்து அந்த நுட்பத்தை பிராமணன் மூலம் கடத்தி சென்று வரலாற்றின் முதல் ராக்கெட் நான் செய்தது என உலகை மிரட்டினான்

அத்தோடு விட்டதா திராவிடம்?

அசையவில்லையே, அது முயற்சியினை தொடர்ந்தது, அண்டவெளியில் திராவிட கிரகம் படைக்கும் ஆவலில் இருந்தது

அண்ணாவோடு மாபெரும் அணுசக்தி மற்றும் ஏவுகனை விஞ்ஞானி கருணாநிதி என்பவர் சேர்ந்தார், அவர் வெளிபார்வைக்கு எழுத்தாளர் என பேனாவோடு சுற்றினார், ஆனால் அதில் இருந்தது செயற்கைகோள் ரிமோட்

ஆம் அவரும் அண்ணாவும் கோபாலபுரத்திலும் பெரியார் திடலிலும் 1950களில் செயற்கைகோள் செய்தார்கள், வான்வெளியில் திராவிட கோள் படைக்கும் ஆய்வு அது

அந்த விஞ்ஞானிகள் கூட்டத்தில் இதர மாபெரும் வானியல் மேதைகள், விஞ்ஞான கலாநிதிகளான நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன் எல்லோரும் உண்டு

இவர்கள்தான் ராக்கெட்டின் பூஸ்டர் உட்பட பலவற்றை வடிவமைத்தவர்கள்

அவர்களிடம் இருந்து அனுபவ கல்வியினை கற்றவர் இன்றைய பிரபல விஞ்ஞானியும் அடிக்கடி நாசாவுக்கும் மாஸ்கோவுக்கும் ராக்கெட் நுட்பங்களை சரிபார்க்க செல்லும் அந்த வீரமணி.

இதில் இன்னொரு பிரதான விஞ்ஞானி உண்டு, அவர் எம்ஜி ராம சந்திரன்.

மின்னலில் இருந்து சக்தியினை பிரிக்க முடியும் என மாபெரும் கண்டுபிடிப்பினை அவர்தான் நிகழ்த்தினார் அதை கடத்த நினைத்த அசோகன் எனும் அந்நாளைய தாவூத் இப்ராஹிமை எல்லாம் பந்தாடி ரகசியம் காத்தார்

கிரையோஜெனிக் எந்திரம் அவர் வடிவமைத்து கொடுத்தது.

இப்படி எல்லோரும் உழைத்து திராவிட செயற்கை கிரகம் படைத்து விண்ணில் நிறுத்தும் நேரத்தில்தான் படுபாவி சோவியத் யூனியன் உள்ளே வந்தது

மொத்த நுட்பத்தையும் பெரியார் சோவியத்துக்கு சென்றபொழுது மிரட்டி வாங்கி கொண்டது போதா குறைக்கு அண்ணாவினை கடத்தி சென்று ஸ்புட்னிக், லூனார் என என்னவெல்லாமோ செய்தது

எல்லாம் சோவியத் உளவுதுறை கேஜிபியின் விளையாட்டு, எங்கு எதை கடத்தி செல்ல வேண்டுமோ அதை அட்டகாசமாக செய்தார்கள் , துணை போனது பார்பானிய சமூகம்

உலகின் முதலில் விண்வெளிக்கு சென்றிருக்க வேண்டிய முரசொலிமாறனுக்கு பதிலாக யூரி ககாரின் சென்றார்

முதல் விண்வெளி மங்கையாக வந்திருக்க வேண்டிய மணியம்மைக்கு பதிலாக ரஷ்ய தெரஸ்கோவா சென்றார், எல்லாம் பிராமண சதி.

விடுமா அமெரிக்கா?

அது டாக்டர் மில்லரை அனுப்பி அண்ணாதுரைக்கு சிகிச்சை என ஒரு பக்கமும், ஏல் பல்கலைகழகம் மூலம் டாக்டர் பட்டம்ம் கொடுத்து அந்த நுட்பத்தை வாங்கியது

அதன் பின்பே நாசா உருவானது, முதலில் அது நாதி அதாவது நாங்கள் திராவிடர்கள் என்றுதான் பெயர் இருந்ததாம், பின்பு நாங்கள் சாமான்யர்கள் என மாற்றிகொண்டார்களாம்

இங்கே முதலில் நிலவுக்கு செல்ல பட்டுகோட்டை அழகிரியினைத்தான் யார்படுத்தினார்கள், ஆனால் நுட்பத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் களவாடியதால் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றுவிட்டார்

இல்லாவிட்டால் பட்டுகோட்டை அழகிரியோ இல்லை முக ஸ்டாலினோதான் முதலில் நிலாவுக்கு சென்றிருப்பார்கள்

ஆக அமெரிக்காவும் ரஷ்யாவும் திராவிட பெரியார் சீடர்களின் ராக்கெட்டை திருடி பெயர்பெற்றிருகின்றன‌

இன்று இந்தியா ராக்கெட் செலுத்தவும் திராவிடமே காரணம்

(உலகில் ராக்கெட் நுட்பம் வந்தது 1950க்கு பின் அதுவும் 1960களில்தான் அது வேகமாக வளர்ந்தது

சுதந்திர இந்தியாவில் கல்வி வளர்ந்து இன்று பெண்களும் விஞ்ஞானியாகிவிட்டார்கள்

இதில் பெரியாரும் அண்ணாவும் எங்கிருந்து வந்தார்கள்?

பகுத்தறிவும் திராவிட மானமும் உணர்வும் உள்ளவன் வரலாற்றில் எப்பொழுதும் ராக்கெட் விடலாம் போல..

திராவிட அல்ட்ராசிட்டிஸ்

பெரியார் பெண்விடுதலைக்கும் கல்விக்கும் பாடுபட்டார் : திராவிட அல்ட்ராசிட்டிஸ்

மணியம்மையினை அன்றே அமெரிக்காவுக்கு அனுப்பி 14 பிஎச்டி பட்டங்களை வாங்க உதவினார் பெரியார், அச்சாதனை பின்பு மன்மோகன்சிங்கால் முறியடிக்கபட்டது

பெரியாருக்கு மட்டும் சோறுபொங்கவும், ஊட்டிவிடவும் வீடுவாசல் பராமரிக்கவும் ஒரு பெண் வேண்டும், அதே வேலையினை மற்ற வீட்டு பெண்கள் செய்தால் அதன் பெயர் பெண் அடிமைத்தனம்..

மணியம்மை, ராணி அண்ணாத்துரை , தயாளு, ராசாத்தி எல்லாம் படிக்கமாட்டார்கள் மாறாக ஒழுங்காக வீட்டை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வாசல்படி தாண்டாமல் குடும்பம் நடத்துவார்கள்

ஆனால் ஊரான் வீட்டு பெண்கள் எல்லாம் புரட்சி செய்ய வேண்டும்

அதுவும் ஒரு மனைவிகட்டி வீட்டில் வைத்தாலே அடிமைதனமாம், அந்த கோஷ்டி செய்தது இரண்டும் மூன்று உலகறிந்த திருமணம், தனி கணக்கு வேறு

ஆக பெண் அடிமைத்தனம் எங்கே இருக்கின்றது? நிச்சயம் அங்கேதான் இருக்கின்றது

வெட்கமும் வேதனையும் துக்கமும் துயரமும் பட்டுகொள்கின்றேன்

அகத்தியனுக்கு தமிழ் சொல்லிகொடுத்தது பெரியார்

ராஜராஜசோழன் கிழக்காசியாவினை ஆளும்பொழுது போர் படை தளபதி அண்ணா

சோழன் தஞசை கோவிலை கட்டும்பொழுது கல் செதுக்கி கட்டி கொடுத்தவர் கருணாநிதி, உளியின் ஓசை அதுதான்

சீனிவாச ராமானுஜத்துக்கு நம்பர் தியரி சொல்லிகொடுத்தது பெரியார்

சர்.சிவி ராமனுக்கு நிறப்பிரிகை பற்றி கற்றுகொடுத்தது அண்ணா..

அந்த திராவிடம் கொடுத்த கல்வியாலே சீனிவாச ராமானுஜம் மாபெரும் கணித மேதையானான்,

ர்.சிவி ராமன் நோபல் பரிசெல்லாம் பெற்றார் அந்த விஸ்வேஸ்ரய்யா என்பவருக்கு கூட திராவிடமே அணை கற்ற கட்டுகொடுத்து அவர் கிருஷ்ணராஜ சாகர்,

மேட்டூர் அணை எல்லாம் கட்டியிருக்கின்றார் இந்த திராவிட சாதனைபற்றியெல்லாம் இவ்வளவுகாலம் தெரியாமல் இருந்ததற்கு வெட்கமும் வேதனையும் துக்கமும் துயரமும் பட்டுகொள்கின்றேன்

பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றன

திராவிடம் தமிழகத்தை வளர்த்தது சென்னையின் வளர்ச்சிக்கெல்லாம் அதுதான் உழைத்தது, பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றான்.

அன்றிலிருந்தே தமிழகம் உலகிற்கு விருப்பமான இடம், சாலமோன் அரசனின் கப்பல்கள் இங்கு வந்திருக்கின்றன. ரோமர்கள் முத்து தேடி வந்திருக்கின்றனர்,சீன பட்டுக்கு நிகராக காஞ்சி பட்டும் இருந்திருக்கின்றது

மாலிக்காபூர் முதல் எத்தனையோ பேர் தமிழக செல்வங்களை தேடி வந்திருக்கின்றனர், நாயக்கர்கள் தமிழகத்தில் சம்மணம் போட்டு அமர்ந்தே விட்டனர்.

நவீன தமிழகம் வெள்ளையன் காலத்திலே தொடங்கிற்று

1600களில் இந்தியா வந்த பிரிட்டிசாரே நவீன வளர்ச்சிக்கு வழிகோலினர். அதற்கு முன் வந்த போர்த்துகீசியர் உல்லாச பேர்வழிகள், பிரெஞ்ச்காரர்கள் அவர்களுக்கு அடுத்த உல்லாச விரும்பிகள்

அதனால்தான் இன்றளவும் போர்ச்சுகீசிய கோவாவும், பிரெஞ்சுக்காரர்களின் பாண்டிச்சேரியும் “தனித்த” அடையாளத்தோடு நிற்கின்றன, உலகெல்லாம் அவர்கள் காலணிகள் இன்றும் அப்படித்தான்

ஆனால் பிரிட்டிசார் சிறந்த நிர்வாகிகள். பம்பாய், சென்னை, கல்கத்தா என மிகசிறந்த துறைமுகங்களை அடையாளம் கண்டு அவற்றை மிக நன்றாக வளர்த்தனர்

சென்னையின் வளர்ச்சி 1700களிலே தொடங்கிற்று, சென்னை கோட்டை முதல், துறைமுகம் , மவுண்ட் ரோடு ரயில், நிலையம் இன்னும் ஏராளமான விஷயங்களை அவனே செய்தான்

அதாவது அடுத்த 200 ஆண்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அவன் உருவாக்கிவிட்டே சென்றிருந்தான்.

1950களிலே சென்னை பெருவளர்ச்சி பெற்றிருந்தது, அந்நேரம் பெங்களூர், திருவனந்தபுரம், ஐதரபாத், விசாகபட்டினம் எல்லாம் கொஞ்சமும் வளர்ச்சியற்ற பகுதிகள்

வளர்ச்சியடைந்த மாநிலமாகவே தமிழகத்தை அவன் விட்டு சென்றான், வடக்கே நிலை மிக பரிதாபம்

பின்னர் வந்த காங்கிரஸ் அரசில் 1967 வரை அணைகளும் , ஆலைகளும் பெருகின, மிக முக்கியமான ஆலைகள் எல்லாம் , அணைகள் எல்லாம் காமராஜர் காலத்தில் வந்தவை

ஆக அன்றே தமிழகமும் சென்னையும் முன்னிலையில்தான் இருந்தது, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதெல்லாம் வெற்று கோஷங்கள்

இந்த சென்னையில்தான் 1967ல் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தன‌

அன்று ஐதரபாத், பெங்களூர், திருவனந்தபுரம் என எந்த தென்னக அடையாளம் இல்லாத காலங்களிலே, சென்னைக்கு பெரும் அடையாளம் இருந்தது

அவைகள் எல்லாம் நோஞ்சான் குழந்தைகள் என்றால், சென்னை அப்பொழுதே முரட்டு வாலிபன் போன்று இருந்தது

பின் அவைகள் எல்லாம் மிக வேகமாக வளர்ந்து இன்று சென்னையினை நெருங்கிவிட்டன, சில மிஞ்சிவிட்டன. ஆனால் சென்னை அப்படியேதான் இருக்கின்றது

அதாவது சென்னை அன்றே ஒலிம்பிக் சாம்பியனாக ஓடிகொண்டிருந்தது, அதன் பின் நடக்க தொடங்கிய மற்ற மாநில நகரங்கள் எல்லாம் இன்று சென்னைக்கு சமமாக ஓடுகின்றன‌

2 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில் பின்னர் வந்த பேட்ஸ்மேன் அடித்து ஆடினால் அது ஆட்டம், ஸ்கோரை 200க்கு கொண்டுவந்தால் அது ஆட்டம், மற்ற மாநில ஸ்கோர் அப்படி உயர்ந்தது

பெங்களூர், விசாக் எல்லாம் அப்படி அசுர வேகத்தில் வளர்ந்தன. அமராவதி எனும் நகரத்தை சீனாவின் குவாங்சூ போல திட்டமிட்டு உருவாக்குகின்றது ஆந்திரா

கேரளமும் , கன்னடமும், ஆந்திராவும் கிழிக்காத எந்த கிழிப்பினை தமிழகம் கிழித்துவிட்டது? அங்கெல்லாம் திராவிட கட்சிகளா ஆள்கின்றது?

200 ரன்களை ஒருவன் எடுத்து, நல்ல அடித்தளம் விட்டு சென்றிருக்கும் பொழுது, அடுத்து வருபவன் 20 ஓவருக்கு 10 ரன் எடுத்து 210 என நின்றால் எப்படி?

திராவிட கட்சிகளின் தமிழகம் வளர்ச்சி இப்படியானது

எது வளர்ச்சி? அவைகள் வளர்ந்ததா? தமிழகம் வளர்ந்ததா?

அவைகள் பெரும் வளர்ச்சி காட்டியிருக்கின்றன, அவற்றிற்கு ஈடாக 3 மடங்கு வேகம் காட்டியிருக்கவேண்டிய சென்னை 10% கூட காட்டவில்லை

எப்படி?

இடிந்துவிழும் விமான நிலையம் முதல் கூவம் வரை சொல்லிகொண்டே செல்லலாம்

50 ஆண்டுகளாக சென்னையினை ஆண்டது யார்? அதேதான் “திராவிடம் “, ஐதரபாத், பெங்களூரை , விசாக்கினை வளர்த்தது யார்? சத்தியமாக திராவிடம் அல்ல‌

திராவிடம் என்ன செய்தது? வெள்ளையன் சாலைக்கு அண்ணா நாமமிட்டது, அவன் கட்டிய பல்கலை கழகத்திற்கு அண்ணா நாமமிட்டது (உண்மையில் அதற்கு கணிதமேதை ராமானுஜம் பெயர்தான் வைக்கபட்டிருக்கவேண்டும்) இப்படி தமிழகத்திற்கு அண்ணா நாமம் சூட்டியதை தவிர அது ஒன்றும் செய்யவில்லை

கட்டியதெல்லாம் அவன், நாமம் சூட்டியது இவர்கள்

ஆக சென்னையின் வளர்ச்சிவேகத்தை திராவிடம் குறைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்

சரி ஆந்திரர்கள் சென்னை எங்களுக்கு என்றபொழுது திராவிடம் என்ன சொன்னது? எங்கிருந்தால் என்ன, திராவிட நாட்டில் இருக்கின்றது என அமைதியானது

ம.பொ.சியின் போராட்டத்தாலே சென்னை மீண்டது

ஆனால் இன்று முளைத்த திராவிட குஞ்சுகளிடம் கேளுங்கள், சென்னை கோட்டை, ரிப்பன் மாளிகை எல்லாமே திராவிட அரசு கட்டியது என்பார்கள், சிரிக்காமல் சீரியசாக சொல்வார்கள்

பெண் கல்வி நிலை என்ன?

200 ஆண்டுகளுக்கு முன்பே நெல்லையில் பெண் கல்வி தொடங்கிற்று, திராவிட இயக்கம் தோன்றுமுன்னே டாக்டர் முத்துலட்சுமி போன்ற பெண் மருத்துவர்கள் இருந்தார்கள், 1930 க்கு முன்னமே பெண் கல்வி தொடங்கிற்று

ஆக இந்த விவரமறியா திராவிட குஞ்சுகள் அள்ளிவிடும் கதை கொஞ்சமல்ல‌

விரைவில் கல்லணை முதல், தஞ்சை கோயில் முதல் சென்னை கோட்டை, ரயில் நிலையம் என எல்லாம் திராவிட அரசு கட்டியது என சொல்வார்கள், நிச்சயம் சொல்வார்கள்

எனக்குட் தெரிந்து திராவிட என்றால் அதனை சொல்லலாம்

அதாவது 50 வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் மது என்பது அருவெருப்பானது, குடித்தாலும் ஒளிந்து மறைந்து குடிப்பார்கள். ஒன்று பெரும் வரி கட்டி குடிக்கவேண்டும் அல்லது மறக்கவேண்டும்

சமானியர்களுக்கு அது எட்டா விஷயமாயிருந்தது

இந்த 50 வருடத்தில் தமிழகத்தில் எங்கும், எப்பொழுதும், யாரும், எந்நேரமும் குடித்துகொண்டே இருக்கலாம் எனும் அளவிற்கு நிலை மாறியிருக்கின்றது,

அன்று தமிழகத்தில் மது ஆலைகள் இல்லை, இப்படி 6 ஆயிரம் மதுகடைகள் இல்லை

கோவில் வேண்டாம் என்ற திராவிட கட்சிகள் மதுகடை வேண்டாம் என சொன்னதா? இன்று தமிழக கோவிலகளை விட மதுக்கடை அதிகம். மறுக்க முடியுமா? அதுவும் அரசே நடத்தும் மதுக்கடை

இதுதான் “திராவிடத்தின்” மகத்தான சாதனை, அடுத்து சினிமாவினை கலந்து அரசியலை கெடுத்தது

இன்று ரஜினிகாக பொங்கும் திராவிடர்கள், அதே சினிமாக்காரன் ராமசந்திரன் முகம்காட்டி அண்ணா வோட்டு கேட்டதை மறக்கின்றார்கள்.

அவ்வளவு செய்த வெள்ளையனோ, ஓரளவேனும் தாங்கிநின்ற காமராஜர் வரையிலான அரசுகளுக்கும் அந்த விளம்பரம் இல்லை

ஆக திராவிட என்பது சமூக இயக்கம், அது ஆட்சிக்கு வந்து என்ன செய்தது? என எழுதுங்கள். சில இருக்கலாம் ஆனால் அந்த சிறிய திட்டங்களுக்கு இவர்கள் கொடுக்கும் விளம்பரம் மகா கொடுமையானது

ஆனாலும் சமூக திட்டங்களுக்கு திமுக முன்னுரிமை கொடுத்திருக்கின்றது, அதனை எழுதுங்கள் , சில தமிழ் அடையாளங்களை கொடுத்தது அதனை எழுதுங்கள்

மாறாக கல்லணை கட்டியது திமுக, சென்னையினை வளர்த்தது திமுக, ரயில் விட்டது திமுக, பெண் கல்வி தொடங்கியது திமுக என அள்ள்விட்டுகொண்டிருந்தால் பார்ப்போர் சிரித்துவிடுவர்

பெண்களுக்கான கல்வி 150 ஆண்டுகளுக்கு முன்பே நெல்லை பக்கம் தொடங்கபட்டு அந்த கல்வி நிலையங்கள் இன்றும் நடக்கின்றன‌

எத்திராஜ் கல்லூரி, இன்னும் சில மகளிர் கல்லூரிகள் எல்லாம் தொடங்கபட்டது எப்பொழுது?

பெண்களுக்கான பிரசவ மருத்துவமனை ஐடா ஸ்கேடர் எனும் பெண்மணியால் திராவிடத்திற்கு 70 வருடத்திற்கு முன்பே என்றோ தொடங்கபட்டாயிற்று

கூவம் போல் திராவிட அரசியலுக்கும் சில அடையாளம் உண்டு, அதனை கிளற வேண்டாம். தாங்காது.

தமிழுக்கு திராவிடம் என்ன செய்தது? திருகுறள் மட்டும்தான் இலக்க்கியமா? அதுவும் இவர்கள் எழுதியதா?

கம்பராமாயணம் இந்த ஆட்சியில் எந்த இடம் சென்றது, ஆழ்வாரின் அற்புத பாடல்கள் என்னானது? பாரதியார், உ.வே சாமிநாதய்யரின் தமிழ்தொண்டு என்ன ஆனது

மதம், சாதி என தமிழையும் பாகுபாடு காட்டிய இன்னொரு முகம் திராவிட ஆட்சியில் உண்டு, மறுக்கமுடியுமா?, சீனிவாச ராமானுஜம் எனும் பெரும் விஞ்ஞானிக்கு இந்த அரசு செய்த அங்கீகாரம் என்ன?

பிரமாணன், மதம் என இவர்கள் தமிழர்களை ஒதுக்கியது கொஞ்சமல்ல, பண்டைய மன்னர்களின் ஆலயங்கள் என்ன? அவற்றின் அற்புத சிலைகள் என்ன? இந்த சிலைகளுக்காவது ஒரு கணக்கு உண்டு?

ஏதாவது ஒரு கோயில் இவர்கள் ஆட்சியில் சீரமைக்கபட்டிருக்கும், மதத்தை தாண்டி அவை தமிழர் அடையாளம் அல்லவா?, ஆனானபட்ட திருகுறளே மதுரை கோயில் குளத்தில்தானே குளித்தது

மத அடையாளம் என்பதற்காக் பண்டைய தமிழ் ஆலயங்களை இவர்கள் சீரழியவிட்டதை ஒரு காலமும் ஏற்கமுடியாது, அதுவும் தமிழனாக சுத்தமாக ஏற்கமுடியாது.

இப்படி ஏகபட்ட குறைகள் திராவிடம் 50ல் உண்டு, ஏன்? காவேரி நீரும், தற்போது மணலும் போனது யார் ஆட்சியில்?

பேச வைக்காதீர்கள், அது உங்களுக்கு நல்லது அல்ல.

பிரிட்டிஷாரின் ஸ்மார்ட் சென்னையினை, போர்ச்சுகீசியரின் கோவா போல ஆக்கிவிட்டதை தவிர திராவிட சாதனை என்ன சொல்லிவிடமுடியும்?

விட்டால் தமிழகம் தோன்றியதே திராவிட ஆட்சியில்தான் என்ற அளவிற்கு எழுதுவார்கள் போலிருக்கின்றது.

எங்கே இருந்தது பெண் அடிமைதனம்?

இந்து மதத்தில், இந்தியாவில் ,தமிழகத்தில் பெண் அடிமைத்தனம் இருந்தது , ராம்சாமி அதை உடைத்தார் என பலர் கிளம்பி இருக்கின்றார்கள்

எங்கே இருந்தது பெண் அடிமைதனம்?

மனைவி தவிர எல்லா பெண்களையும் ஏன் அவள் சிறுமி என்றாலும் “தாயே” என அழைத்த மிக பெரிய பாரம்பரியம் இந்தியாவினுடையது, இன்றும் அது இந்திய கிராமங்களில் உண்டு

இந்து மதம் பெண்ணை கடவுளாக போற்றியது, யூதமும் இஸ்லாமும் பெண்ணை அடக்கி வைத்த காலத்தில் பெண்ணை சக்திவடிவமாக அதுவும் சிவனில் பாதியாக வைத்து பூஜித்தது

அதை தவிர எந்த மதம் உலகில் பெண்ணை கொண்டாடியது?

இந்திய இலக்கியம் புராணத்தின் உச்சமான ராமாயணத்தில் சீதைக்கு அவளின் கணவனை தேர்ந்தெடுக்க முழு உரிமை வழங்கபட்டிருக்கின்றது

இந்த சுயவரம் என்பது அதுதான், அது வேறு எந்த நாட்டு இலக்கியத்தில் இருந்தது? வாழ்வியலில் இருந்தது?

பாஞ்சாலிக்கு அவள் விரும்பியபடி கணவர்களுடன் வாழ முழு சுதந்திரம் அளிக்கபட்டிருக்கின்றது

நளன் கதை சொல்வதும் அதுவே

பண்டைய இந்தியா பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் அளித்தது என்பதற்கு இவற்றைவிட என்ன சாட்சி வேண்டும்?

நளவெண்பாவில் தமயந்தி அந்த உரிமையினை பெற்றிருக்கின்றாள்

பெரும்பான்மை இலக்கியங்களில் நாயகிகளே பெண்கள்தான், கதை அவர்களை சுற்றித்தான் அமைக்கபட்டிருக்கின்றது

ராமயணத்து பிராதனமே கூனி, கைகேயி, சீதை, சூர்ப்பநகை எனும் பெண்களே

மகாபாரத கதையே பாஞ்சாலி சபதம் என்பதில்தான் வருகின்றது, அவளுக்காக நடந்ததே யுத்தம்

அவளின் கூந்தலை முடியத்தான் மாபெரும் யுத்தம் நடந்தது, அவளுக்கு மதிப்பு அப்படி இருந்திருக்கின்றது

அகநானூறு முழுக்க ஒரு பெண் சுதந்திரமாக பேசும் இலக்கிய செய்திகள் உண்டு, “அப்பன் சொன்னபின்பே கணவனை நோக்குவேன்” எனும் இம்சை எல்லாம் அங்கு இல்லை

“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என முனிவரை மிரட்டிய பெண் இங்குள்ள இலக்கியத்திலேதான் நிற்கின்றாள்

சாவித்திரி எனும் பெண்ணுக்காக கடவுளே இறங்கி வரம் கொடுத்தார் என சத்தியவான் கதையே சொல்கின்றது

இன்னும் ஏராளமான சான்றுகளை சொல்லிகொண்டே செல்லலாம்

இலக்கியத்தை விட்டு அரசியல் என எடுத்தாலும் ருத்ரம்மா தேவி முதல் தஞ்சை குத்தவை தேவிவரை பெரும் அரசியல் பிம்பங்களை காண முடியும்

இந்திய இலக்கியங்கள் எதுவும் பெண்ணடிமைதனம் கொண்டதல்ல, மாறாக அதன் மதமும் இலக்கியமும் பூரண பெண் சுதந்திரம் கொண்டவை

சாகுந்தலா முதல் பல அழியா இலக்கியங்களின் அடிநாதம் அது

பெண்ணாக தாயின் பெருமையினை பாரதம் சொன்ன அளவு இன்னொரு நாட்டு இலக்கியங்கள் எங்கே சொன்னது?

இன்றும் மனைவி அல்லா பெண்ணை அம்மா என்றும் தாயீ என அழைப்பதும் இந்திய பாரம்பரியம், மறுக்க முடியுமா?

பெண்ணடிமைதனம் என்பது மேற்காசியாவில் தொடங்கிய மதங்களிலே இருக்கின்றது, இன்னமும் இருக்கின்றது

அப்படி இருக்க, பெரியார் பெண்ணுரிமையினை நிலைநாட்டினார் என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது

பண்டைய பெண்ணுரிமை எதில் பாதிக்கபட்டது?

இத்தேசம் பல போர்களை கண்டது, பெண்கள் கடுமையாக பாதிக்கபட்டனர்

இத்தேசத்தில் மட்டுமல்ல, அரபு தேசங்கள் யூத இனம் இன்னும் பல இடங்களில் பெண்களை குறிவைத்து நடத்தபட்ட கொடுந்தாக்குதலை குறைத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவே கட்டுபாடுகள் வந்தன‌

ஆம் எது மகா முக்கியமோ அதை பாதுகாப்பது மானிட வழக்கம், பெண் என்பவள் சந்ததி கொடுக்கும் மாபெரும் சக்தி அவளின்றி தொடராது சந்ததி என்பதால் பாதுக்காக்கபட்டாள்

இயற்கையின் விதிப்படி பெண்கள் பாதுகாக்கபட வேண்டிய பொருளுமாயினர்

போர்க்கால பெண்கள் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான், தைமூர், கோரி அட ஜெர்மன் மேல் பாய்ந்த சோவியத் படை, சீனாவின் மேல் பாய்ந்த ஜப்பானிய படை, அட அவ்வளவு ஏன் பிரிவினையின் பொழுது பஞ்சாப் மற்றும் வங்க எல்லையின் பெண்கள் நிலையினை கண்டாலே தெரியும்

இயற்கை பெண்ணுக்கு கொடுத்த வரம் அல்லது சாபம் அப்படி

அந்த பாதுகாப்பே பின்னாளில் சிறையானது, சீர்திருத்தவாதி குருநாணக் கூட பெண்கள் முக்காடு இடவேண்டும் என்றார்

அது அடிமைதனம் அல்ல, பாதுகாப்பு

18ம் நூற்றாண்டில் தொழில்புரட்சியில் ஐரோப்பாவில் பெண்களும் உழைக்க வேண்டிய கட்டாயம் வந்தபொழுது வேறு வழியின்றி பெண்களும் உழைக்க வந்தனர், வாழ்வியல் நெருக்கடி அது

அந்த நெருக்கடி அங்கு பெண் விடுதலையானது, அந்த வாழ்வில் ஊறிவிட்ட நிவேதிதா போன்றோருக்கு இந்தியா வந்தபொழுது இங்குள்ள தன்மை வித்தியாசமாக பட்டது

பெண்கள் பொதுவாழ்வுக்கு ஏன் வருவதில்லை வந்தால் போராட்டம் சமூகம் பலம்பெறும் என அவளால் பாரதிக்கு போதிக்கபட்டது

பாரதி அதன் பின்பே பெண் விடுதலை பேசினான்

பெரியார் உலகெல்லாம் சுற்றிய அனுபவத்தில் வெளிநாட்டு பெண்களையும் உள்நாட்டு பெண்களின் நிலையினையும் ஒப்பிட முடிந்ததே தவிர அவரின் சொந்த சரக்கு அல்ல‌

காலமாற்றத்தில் எல்லாமும் மாறும்

இதோ சவுதி அரேபிய பெண்களுக்கு சலுகைகள் கிடைக்க தொடங்கியிருக்கின்றன, அங்கெல்லாம் பெரியார் இருந்தாரா? இல்லை சீன சமூகத்து பெண் விடுதலையினை பெரியார் தொடங்கி வைத்தாரா?

பெண்ணை கடவுளாகவும், சக்தியாகவும் , தெய்வமாகவும் கொண்ட நாடு இது

அன்றே சொத்துரிமை, அரசுரிமை, தனக்கான துணைவனை தெர்ந்தெடுக்கும் உரிமை என எல்லாமும் இருந்தது, வழிபடவும் தடை இல்லை, மீரா, ஆண்டாள் அவ்வை என எத்தனையோ பேரை சொல்லமுடியும்

இடையில் வந்த போர்காலங்கள் பாதுகாப்புக்காக பெண்களுக்கு கட்டுபாட்டை விதித்தன, தங்கம் வைரம் போல பெண்ணும் பத்திரமாக பாதுகாக்கபட்டாள்

அதைத்தான் அடிமைத்தனம் ஐயகோ பெரியார் இல்லையென்றால் என கிளம்பிவிட்டார்கள்

வரலாற்றில் பண்டைய இலக்கியங்களில் எல்லாவற்றுக்கும் பதில் இருக்கின்றது, அதை படிக்காமல் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பெரியார் புரட்சியாளர் அபூர்வம் என தெரியலாம்

மாபெரும் நீண்ட வரலாற்று நதியில் பெரியார் ஒரு சிறு புல்லுக்கு கூட வரமாட்டார்

இங்கு முதலில் பெண்களுக்கு எல்லா உரிமையும் இருந்தது, கொடிய போர்காலங்கள் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய சில கட்டுபாடுகளை விதித்தன‌

பெண்ணின் தகப்பனாக, அண்ணனாக இல்லை நல்ல கணவனாக இருந்தால் அந்த பாதுகாப்பின் அவசியம் ஒருவனுக்கு தானாக புரியும் , தன் வீட்டு பெண் அரைமணி நேரம் தாமதமாக வந்தால் ஒரு பரிதவிப்பு தானாக வரும் அல்லவா?

அதுதான் அந்த கடமையும் பொறுப்புமே ,
அதுதான் அடிமைதனம் என்றானது

காலம் கொடுத்த அடிமைதனத்தை காலமே உடைத்தது ..

ஏக அழிச்சாட்டியம்

பெரியார் இல்லாவிட்டால் நீ ஆடுமேய்ப்பாய், மீன் பிடிப்பாய், தக்காளி பறிப்பாய், படிப்பே பெரியார் கொடுத்தது, ஏ நன்றி கெட்டவனே அவர் இல்லை என்றால் ஏடு எடுத்திருப்பாயா? எழுதுகோல் பிடித்திருப்பாயா என ஏக அழிச்சாட்டியம்

இங்கே கல்வி என்ன பெரியார் காலத்திலா தொடங்கிற்று? வரலாறு தெரியாத மடையர்கள் என்னமோ சொல்கின்றார்கள்

இங்கு நவீன கல்வியினை தொடங்கி வைத்தது கிறிஸ்தவ மெஷினரிகள் 1700களிலே நாயக்க மன்னர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் கல்வி கொடுத்தார்கள்

முதலில் கொடுத்தது கத்தோலிக்கர்கள் குறிப்பாக இயேசு சபை துறவிகள், அதன் பின் பிரிவினை கிறிஸ்தவர்களும் தொடங்கினர்

சந்தேகமில்லை, அந்த கல்வியும் அதன் பின் மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு தாவுவதும் நடந்தது

இந்தியா இலங்கை என்ற இரு நாடுகளிலும் இது நடக்க சுதாரித்த இந்துக்கள் அன்றே அதாவது 1800களிலே கல்வி நிலையங்கள் தொடங்கினர்

இந்து பள்ளிகள், இந்து கல்லூரிகள் இப்படித்தான் தொடங்கின‌

ஆதீனங்களும் இன்னும் பல பெரும் இந்து தொழிலதிபரளும் அப்படி அள்ளி கொடுத்தனர்

நெல்லையில் பாரதி பணியாற்றிய இந்து கல்லூரி அன்றே இருந்தது, பெரியாரிடம் வரும் முன் அண்ணா படித்த பச்சையப்பா கல்லூரி அன்றே இருந்தது

இன்னும் ஏராளம்

வெள்ளையர் பள்ளி கல்வியில் நிற்க இந்துக்களோ பல்கலைகழகம் கல்லூரி என சென்றனர், பின்னர் மிஷினரிகளும் கல்லூரி தொடங்கினர்

சேவியர்ஸ், லயோலா என்ற கல்லூரிகள் இப்படி முளைத்தன‌

செட்டியார்களும், ஆதீனங்களும் கல்வி பணிக்கு அள்ளி கொடுத்தது கொஞ்சமல்ல..

அண்ணாமலை செட்டி, அழகப்ப செட்டி போன்றோரும், மதுரை, திருவாடுதுறை ஆதீனம் எல்லாம் அதில் முக்கியமானவை

இஸ்லாமியரில் பலரும் முன்வந்து கல்வி நிலையம் தொடங்கினர், வடக்கே அலிகார் முதல் இங்கும் ஏகபட்ட இஸ்லாமிய கல்வி நிலையங்கள் உருவாகின‌

இப்படி கிறிஸ்தவ மெஷினரிகளும், இந்து அமைப்பினரும் , இஸ்லாமியரில் பலரும்கல்வி கொடுத்தபொழுது பெரியார் பிறக்கவே இல்லை

பள்ளி கல்லூரி பெருகி கொண்டிருந்த காலத்தில் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதிகொண்டு சம்பாதித்தார்

நீதிகட்சி பெரியாருக்கும் மூத்தது , அந்த நீதிகட்சியிலே தாழ்தத்தபட்டவன் பன்னீர்செல்வம் வழக்கறிஞராக இருந்து லண்டன் மாநாட்டில் பேசிய காட்சி எல்லாம் வரலாற்றில் இருக்கின்றது

பெரியாரா பன்னீர்செல்வம், பிட்டி தியாகராஜர், பனகல் அரசரை எல்லாம் படிக்க வைத்தார்?

அன்றே பள்ளிகள் இருந்தன‌

நெல்லையில் மட்டும் 150 ஆண்டுக்கு முந்தைய பள்ளிகள் ஏராளம, சிறிய கிராமான வடக்கன் குளத்திலே இருக்கின்றது

பச்சையப்பா கல்லூரி, யாழ்ப்பாண இந்து கல்லூரி இன்னும் இந்தியாவின் பல இந்து கல்லூரிகளுக்கு வயது பெரியாரை விட அதிகம்

இதெல்லாம் கடந்து சுதந்திர இந்தியாவில் கிராமம் எல்லாம் பள்ளி தொடங்கியவன் காமராஜர்

பெரியார் இல்லை என்றால் நான் படித்திருக்க முடியாது என சொல்லும் பதர்கள் எல்லாவற்றிற்கும் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன்

நான் படித்த நிறுவணம் எல்லாம் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதி, காசியில் சுற்றிய காலத்திலே தொடங்கபட்டவை

பெரியாருக்கு முன்பே இங்கு கல்வி இருந்தது

சும்மா ராஜாஜி குலகல்வி அதை பெரியார் தடுத்தார் என்பதெல்லாம் வாக்கு அரசியல்., அரசியல் குப்பை பொய்கள்

பெரியாரிடம் வரும்பொழுதே அண்ணா இரு எம்.ஏ முடித்திருந்தார். பெரியார் படிக்க வைத்தாரா?

இன்னும் நீதிகட்சி பன்னீர்செல்வம் போல ஏகபட்ட தாழ்த்தபட்டவர்கள் பெரும் பிம்பமாக உருவானார்கள்

கருணாநிதி 7ம் வகுப்பில் பெயிலாகி பெரியாரிடம் ஓடியவர், அவர் படித்திருந்தால் நிச்சயம் படித்திருக்கலாம்

ஏன் கலாம் படிக்கவில்லையா? பெரியார்தான் படிக்க வைத்தாரா?

இங்கு திறமையும் தகுதியும் உள்ள தாழ்த்தபட்டவன் மேலே வர கல்வியும் இன்னபிற வாய்ப்பும அன்றே இருந்தன‌

அருள் எனும் தாழ்த்தபட்டவன் அன்றே ஐ.ஜி ஆகவில்லையா?

கலைதுறையில் தாழ்த்தபட்ட என்.எஸ்.கே கலைஞர் எல்லாம் சம்பாதிக்கவில்லையா? சாதி தடுத்ததா?

சும்மா பெரியார் இல்லாவிட்டால் மரமேறுவோம் , மீன்பிடிப்போம், கோழிமேய்ப்பொம் என்பவன் எல்லாம் இன்றும் கோழிமேய்க்க மட்டும் தகுதி உள்ளவன்

நீங்கள் இருக்கும் மாநிலத்தில் ஏன் டாஸ்மாக் பெருகாது? ஏன் ஏமாற்றுகாரன் ஆளமாட்டான், ஏன் மாநில கடன் 4 லட்சம் ஆகாது?

உங்கள் அறிவுக்கு பழனிச்சாமி ஆட்சி கவிழ்ந்தால்தான் ஆச்சரியம், நீடிப்பதில் ஆச்சரியமே இல்லை

சும்மா இருந்தால் பெரியார் இல்லாவிட்டால் ரயில் வந்திருக்காது, விமானம் பறந்திருக்காது, மொபைல் வந்திருக்காது, இணையம் வந்திருக்காது என கிளம்பி விடுவார்கள் போல