Happy Birthday …Michelle Pauline

காலங்கள் எவ்வளவு வேகமாக இறக்கை கட்டி பறக்கின்றது என்பது பெற்ற பிள்ளைகளை பார்க்கும் பொழுதுதான் தெரிகின்றது

அதற்குள் 8 வருடம் ஓடிவிட்டது, ஏதேதோ நடந்து எல்லாமே கனவு போலாயிற்று

வாழ்வு என்பது கனவுபோல் ஓடிவிடும் மாயை என்பது மெல்ல புரிகின்றது

அன்று இதே தை அம்மாவாசை, சீனர்கள் புத்தாண்டை தொடங்கியிருந்த நேரம் முதல் முதலாக மகளை கையில் ஏந்தினேன்

யாருடனும் அதிகம் ஒட்டாதவனும், பந்த பாசம் ரத்தபாசம் இதிலெல்லாம் அதிக நம்பிக்கையில்லாதவனுமான எனக்கு அந்த நொடியே புத்திர பாசத்தின் தன்மை விளங்கிற்று

பெண்குழந்தை தேவதையின் சாயல் என்பதும், அதோடு வாழும் வாழ்வு சொர்க்கம் என்பதும் மெல்ல விளங்கிற்று..

அதன்பின் அவளில்லா நாளில்லை, இப்பொழுது கொஞ்சமாதம் பிரிவாயிற்று, அவளும் 3ம் வகுப்புக்கு வந்துவிட்டாள்

தகப்பனுக்கு பெண் பிள்ளைமேல் தனிபாசம் உண்டு என்பது அக்காலத்தில் இருந்தே எல்லா இனமும் மதமும் சொல்லும் தத்துவம், அது உண்மைதான் போலிருக்கின்றது

ஏன் அக்கால அரசர்கள் மகள்கையில் மாலை கொடுத்து சுயம்வரம் நடத்தினான் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது, மகளின் மகிழ்ச்சி அவனுக்கு அவ்வளவு முக்கியமாய் இருந்திருக்கின்றது

வாழ்வில் நான் அடைந்த வரங்களில் முதல் நல்வரம் அவள்தான்

தெய்வம் எனக்கு தந்த ஆறுதலுக்கு மகிழ்ச்சிக்கும் இன்று பிறந்த நாள்

“அப்பா, இப்போ நான் வளர்ந்துட்டேன் , அடுப்பு எட்டுது. சப்பாத்தி எல்லாம் செய்றேன், நீங்க வாங்கப்பா செஞ்சிதாரேன், எனக்கு எவ்வளவு நாள் செஞ்சி தந்தீங்க..” என அவள் சொல்லும் பொழுது வாழ்வின் கட்டம் அழகாக புரிந்தது

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.”

தன் குழந்தை சின்ன கைகளால் கரைத்த கூழ், அமிழ்தைவிடவும் சிறந்த சுவையுடையதாக இருக்கும் என்ற வள்ளுவனின் குறள் முக்கால உண்மையானது

பெண் பிள்ளை இல்லாதோன் வாழ்வு நிறைவில்லாதது என்பார்கள், அதுவும் உண்மை போலிருக்கின்றது

காந்தி 4 மகன்களை பெற்றார் என்னாயிற்று, நேருவுக்கு ஒரே மகளால் உலக புகழ் கிடைத்தது.

“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.”

பெற்ற பிள்ளைகள் என்பது அவரவர் பூர்வ வினைபயன் என்ற வள்ளுவனின் வார்த்தைக்கு அவளே பொறுப்பு

பிள்ளைகள் வழியாகவே பெற்றோர் அறியபடுவர் எனும் யூதபழமொழி என்வாழ்வில் அவள் கையில்தான் இருக்கின்றது

தை அம்மாவாசை முன்னோருக்கு உகந்த நாளாம், ஏதோ முன்னோரின் தொடர்ச்சியாக அவள் என் கரங்களுக்கு வந்திருக்கலாம்

அவளின் பாட்டி வாழா வாழ்வினை அவள் வாழட்டும், எல்லா தெய்வங்களும் அவளை ஆசீர்வதிகட்டும்

Happy Birthday …Michelle Pauline

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s