கொரோனாவுக்கு சித்த மருந்து பயன்படுத்தி பார்க்கலாமா?

கொரோனாவுக்கு சித்த மருந்து பயன்படுத்தி பார்க்கலாமா என உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டு அரசை கேட்டு கொண்டது அதன் பின் தகவலே இல்லை

நிச்சயம் பயன்படுத்தி பார்க்கலாம், காரணம் சித்த மருந்து பக்க விளைவுகள் இல்லாதது. நாம் அதை மட்டும் கொடுக்க வேண்டும் என சொல்லவில்லை, அதையும் கொடுத்து பார்ப்பதில் தவறே இல்லை

அது காலத்தின் கட்டாயம்

மூலிகையின் மகத்துவம் ராமாயணத்திலே சொல்லபட்டிருக்கின்றது, இலங்கை போரில் இந்திரஜித்தன் இந்த கொரோனா வைரஸை போல மறைந்திருந்து தாக்குகின்றான், ராமனுக்காக‌ லட்சுமணன் மூர்ச்சையாகின்றான்

( அந்த ஆயுதம் நெருப்பல்ல, இரும்புமல்ல, மரமுமல்ல ஒரு வகையான விஷவாயு தாக்குதல் போல் இருந்திருக்கின்றது..)

பெரும் அவதாரமான ராமனே வசமாக சிக்கி கொள்கின்றார், எத்தனையோ அரக்கர்களை ஒழித்தவரும் பெரும் பலசாலியும் தனி அருளாளனுமான அவருக்கே உதவி தேவைபடுகின்றது

அந்த நேரம் அனுமான் மூலிகை தேடிகொண்டிருக்க நேரமின்றி மலையினையே தூக்கி வந்தான்

ஆம் அந்த விஷயம் கவனிக்கதக்கது, அந்த களத்தில் அனுமனும் இருந்தான் இந்திரஜித்தனின் பாணங்கள் ராமனின் சேனையினை கட்டுபடுத்தியது, அலறவிட்டது. மொத்த சேனையும் மயங்கி கிடந்தது

மிக சிலரையே அந்த இந்திரஜித்தனின் ஆயுதம் ஒன்றும் செய்யவில்லை அல்லது முடியவில்லை அதில் அனுமனும் ஒருவன்,

அவனாலே அந்த மகா இக்கட்டான நிலையில் இருந்து ராமனின் சேனை மீண்டது, தர்மம் வாழ்ந்தது

ராமாயண போர் கண்ணுக்கு தெரியாத மாய சக்தியால் நிறுத்தபட்டு ராமனே சிக்கலில் இருந்தபொழுது அனுமனே அவரை மீட்டான்

அந்த அனுமனை இப்பொழுது நினைவு கூர்ந்து வணங்குதல் நலம், கண்ணுக்கு தெரியா சக்திகள் மானிட குலத்தை அழிக்கும்பொழுது அதை காக்கும் வழிகளை அறிந்தவன் அனுமனே

அன்று ராமனை காத்த அனுமன் இப்பொழுது ராமனின் தேசத்தையும் காக்கட்டும்

உரிய காரணமின்றி அனுமானுக்கு மாபெரும் இடத்தையும் நித்திய சஞ்சீவி வரத்தையும் இந்துமதம் கொடுக்கவில்லை

காலமதோறும் பல ஆபத்துக்களில் இருந்து மக்களை காக்கும் கடப்பாட்டோடே அவன் நிறுத்தபட்டான்

ராமநவமி நெருங்கும் நேரமிது, ராமன் ஆலயம் கட்டபடும் நேரம் புது உற்சாகத்துடன் தேசம் அந்நாளை நோக்கியிருக்கும் நேரம் இந்த கொரொனா இந்திரஜித்தனின் வேலையினை காட்டி கட்டிபோடுகின்றது

தேசம் அனுமனை அழைக்கட்டும், அனுமனால் அந்த ஆபத்து நீங்கி தடைகள் தெளிந்து மக்கள் இயல்பாகட்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s