அண்ணன் ஒரு கோவில்..

சிக்கலில் தவித்த தம்பி அனில் அம்பானிக்கு கரம் கொடுத்து தூக்கிவிட்டிருக்கின்றார் முகேஷ் அம்பானி

“அண்ணன் ஒரு கோவில்..” என பழைய படங்கங்களில் ரெங்கராவினை நோக்கி அழும் பாலையா போல ஆனந்த கண்ணீரில் இருக்கின்றார் அனில் அம்பானி

அது என்னவோ தெரியவில்லை எல்லா வீட்டிலும் மூத்த குழந்தைகளுக்கே இளையவனுக்கு விட்டு கொடுத்து உதவவேண்டும் என்ற பொறுப்பு வருகின்றது

இளையவன் அண்ணனை காப்பாற்றினான் என்ற வரலாறு எங்குமே இல்லை, ராமனும் ராவணனும் இன்னலுற்றது இளைய‌ உடன்பிறப்பாலே

இந்த பொதுவான தத்துவமான , தம்பிகளுக்கு பாசம் குறைவு எனும் தத்துவத்தை மிக அழுத்தமாக சொல்லி கண்களை துடைத்து கொண்டிருக்கின்றார் மு.க அழகிரி