பாசிக பாஜக ஒழிக‌

பாசிக பாஜக ஒழிக‌

அப்படி என்ன பாசிசம் கண்டாய்?

ம்ம் தெரிலண்ணே ஆனால் பாசிச பாஜக ஒழிக..

டேய் பாசிசம்னா என்னென்னு தெரியுமா?

அதெல்லாம் தெரியாதுண்ணே ஆனா பாசிச பாஜக ஒழிக‌

டேய் சர்வாதிகாரத்துல அப்படி என்னடா பாஜக பண்ணிட்டாங்க சொல்லு, அவங்க சர்வாதிகாரத்துல ராமர் கோவில் கட்டிட்டாங்களா?

இல்லை

வேற மசூதி ஏதும் இடிச்சாங்களா?

இல்லை

ஏதும் பெரும் கலவரம் நடத்தி உன்னை எல்லாம் தூக்கி கடல்ல போட்டாங்களா?

இல்லை

இல்ல இனி தேர்தலே கிடையாது மோடி அதிபர்னு சட்டத்தை திருத்திட்டாங்ளா?

இல்ல‌

வேற என்னடா பாசிச மனப்பான்மையில செஞ்சாங்க‌?, ஒரு யுத்தம் கூட உருப்படியா பண்ணலியேடா? அவங்களா பாசிஸ்ட்?

அண்ணே அவங்க நீட் தேர்வு, ஜிஎஸ்டி எல்லாம் கொண்டுவந்தாங்க‌

அடேய் அது காங்கிரஸ் ஆட்சி திட்டம்டா, அந்த அரசு இருந்தாலும் வந்திருக்கும்

அது எப்படிண்ணே, இவங்க ஆட்சிலதான வந்திச்சு இதுதான் பாசிசம்

சரி நீட் தேர்வு இந்தியா முழுக்க இருக்கு, தமிழகம் மட்டும் வேண்டாம்னா எப்படிடா? வேற யாருமே எதிர்க்கலியே ஏன்?

அவங்கல்லாம் அடிமை புத்தி , மானம் கெட்டவனுக . நாங்க மானமுள்ளவனுக பாசிச பாஜக ஒழிக‌

அட நீங்க கத்துனாலும் மாணவன் கேரளா முதல் ராஜஸ்தான் வரை போய் எழுதினானே?

சின்னபுள்ளைங்க பாவம்ணே ஒண்ணும் தெரியாது

சரி சொல்லு பாசிச பாஜகன்னா எப்படி? அப்படி என்ன பாசிசம் பார்த்துட்ட நீ?

அண்ணே கருப்புபணம் ஒழிச்சாங்க, அதுல மக்கள் எலலாம் தவிச்சாங்க‌

டேய் அது பலநாட்டுல நடந்தது, இவனுக அதை செய்ய தெரியாம செஞ்சாங்க, பாவம்டா பரிதாபபடனுமே தவிர பாசிசம் எங்கே இருந்துடா வந்து?

அண்ணே தூத்துகுடில சுட்டாங்க‌

அது தமிழ்நாட்டு காவல்துறை, அதன் அமைச்சர் பழனிச்சாமி, எங்கே பாசிச பழனிச்சாமி சொல்லு பார்ப்போம்

ஹிஹிஹிஹி அவர் கொன்னுபுடுவார்னே, சொல்லமாட்டேன். ஆனாலும் பழனிச்சாமி அரசை கலைக்காம வச்சது பாசிசம்ணே

இதுல என்னடா பாசிசம், ஒரு ஆட்சி டிஸ்மினா ஆயிரம் காரணம் வேண்டும், இங்க சட்டம் ஒழுங்கு எல்லாம் நல்லா இருக்கு, அரசுக்கு சிக்கலே இல்லை, பாரு அந்த ஆளு பேட்மிட்டன் எல்லாம் விளையாடுறாறு பின்ன எப்படி?

ம்ம் அதாணே பாசிச பாஜக‌

அடேய் அவனுகளே பெரும் பலம் இருந்தும் ராமர் கோவிலுக்கு ஒரு செங்கல் கூட வைக்கமுடியாம மாடு உண்டு சாணி உண்டுன்னு அலையுறானுக அவனுக பாசிஸ்டா

இல்லண்ணே அவங்க பாசிஸ்ட்

அடேய் புரட்சிங்கிற வார்த்தையத்தான் இங்கே பலருக்கு வச்சி கேவலபடுத்துனீங்க, இப்போ பாசிஸ்ட்டுங்கிற பெயரையும் கேவலபடுத்த வந்தாச்சா ஓடுறா

அண்ணே 8 வழி சாலை, கைது எல்லாம் அவங்க திட்டம்

டேய் உத்தரவு கொடுத்தது மாநில அரசு, சொல்லுபார்ப்போம் பாசிஸ்ட் பழனிச்சாமி ஒழிகன்னு

அட இல்லண்ணே இவனுக அவங்க கையாள், அடியாள் நாங்க நேரடியா அவங்களத்தான் சொல்லுவோம்

இல்ல முதல்ல அடியாளை சொல்லு, அப்புறம் மேல இருக்கிறவனை சொல்லலாம் பாசிஸ்ட் பழனிச்சாமி ஒழிக சொல்லு பார்ப்போம்

அண்ணே வேணாம்னே பயமா இருக்குண்ணே

இத சொல்ல தெரியல, ஆனா பேச்சு ரேஸ்கல்.. பழனிச்சாமி ஆட்ச்சிக்கு நெருக்கடி கொடுக்க தெரியாதவனெல்லாம் பாசிஸ்ட் பாஜகன்னு அலையுறீங்க,

ஹிஹிஹி

ஆனா உருப்படியா ஒண்ணும் செய்யாட்டாலும் பேர் வைக்கிறதுல நீங்க கில்லாடிடா, என்னா ரைமிங், பாசிஸ்ட் பாஜக‌

டிரம்பிற்கு எப்டிடா

டிராமா டிரம்புண்ணே

கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும்

அண்ணே நீங்க திமுகவினை சாடுகின்றீர்கள், கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும் என சொல்லவந்தது ஒரு ரத்த துளி

அவனுகளாவது கொள்கை என்று ஒன்றை வைத்திருப்பார்கள், உங்கள் கொள்கை எது என கேட்டால் மனிதர் சீறிவிட்டார்

அவர் சொன்னதிலும் சில கருத்துக்கள் இருந்தன‌

“கொள்கை எல்லாம் ராஜாஜி காலத்திலே போய்விட்டது, வெள்ளையனொடு அதையும் அனுப்பியாயிற்று

(பெரியார் மண் எல்லாம் கணக்கிலே வராது, வந்திருந்தால் வீரமணி பெரும் சக்தி ஆகியிருப்பார்..)

அதன் பின் நடப்பதெல்லாம் அரசியல். அண்ணாவின் எழுத்துக்கும் கலைஞரின் சுவாரஸ்யத்தையும் மீறி ராமசந்திரனுக்கு மக்கள் அபிமானம் இருந்தது

இதை கணகிட்ட டெல்லி அவரை பிரித்து காமராஜருடண் இணைக்க முயற்சித்தது கிட்டதட்ட ஆந்திர சிரஞ்சீவி ஸ்டைல்

ஆனால் காமராஜருக்கு தயக்கம் இருந்தது, காமராஜரிடம் ஒருவித மோசமான குணம் இருந்தது, அதாவது அரசியலில் நேர்மையாளர் சந்தேகமில்லை ஆனால் கட்சிக்குள் இன்னொருவரை வளரவிட மாட்டார்

ஈவிகேஎஸ் சம்பத் எல்லாம் இப்படித்தான் காணாமல் போனார், ராமசந்திரனை இணைக்கவும் தயக்கம் இருந்தது

இதனால் தனிகட்சி கண்டார் ராமசந்திரன் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை ஆனால் தமிழகம் அவரை கொண்டாடியது

அண்ணே அவருக்கு அரசியல் தெரியாது, திராவிடம் புரியாது ஆனால் தன்னை நம்பியவர்களுக்கு கொடுத்தார்

யார் யாரை எல்லாமோ தூக்கிவிட்டார், தமிழகம் அவரை கொண்டாட அதுதான் காரணம், கட்சிக்குள் புதிதாய் வந்தவரை எல்லாம் அமைச்சர் ஆக்கினார், பெரும் பொறுப்பு கொடுத்தார்

அதிமுகவில் சேர்ந்தால் சீக்கிரம் பொறுப்பு கிடைக்கும், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நிலைக்கு அது கியாரண்டியான கட்சியாக இருந்தது அவர் முதல்வராகவே இறந்தார்

பின் ஜெயா அப்படி வந்தார், அவரும் அப்படியே புதுமுக எம்.எல்.ஏ எல்லாம் அமைச்சராக முடிந்தது, பெரும் பொறுப்பு பெற முடிந்தது

காலில் விழுந்தொம், டயரை நக்கினோம் என்பதெல்லாம் வேறுகதை, அவனவன் கம்பெனியில் முதலாளி முன் குனியவில்லையா? குட்டிகரணம் அடிக்கவில்லையா அப்படி

ஆனால் அவர் முன்னால் குனிந்தோமே தவிர கட்சிக்குள் நிமிர்ந்தோம் , யாரும் எப்பொழுதும் அமைச்சராகலாம் எந்த பதவிக்கும் வரலாம் என்ற நிலை இருந்தது

அதே நேரம் மாவட்ட செயலாளரோ வட்டமோ அமைச்சரோ ஏதும் நிரந்தரம் என நினைத்தால் முதுகில் மிதிக்கபட்டு விரட்டவும் பட்டார்கள்

புதுமுகங்களை தூக்கிவிட்டதுதான் அதிமுகவின் வெற்றிக்கு காரணம், சாகும் பொழுதும் ஜெயா முதல்வராகவே மறைந்தார்

இப்பொழுதும் பாருங்கள் ஜெயாவிற்கு பின் கட்சி தலமையாக பன்னீர் செல்வம், பழனிச்சாமி என யாரோ வரமுடிகின்றது

திமுகவில் இதெல்லாம் முடியுமா? அதிமுகவில் இருக்கும் இம்மாதிரி விஷயங்கள் திமுகவில் நடக்குமா?

ஒருகாலமும் நடக்காது

அங்கு தலமை முதல் மாவட்ட செயலலாளர் வரை 50 வருடமாக எல்லாம் விளம்பரம்

ஒப்புகொள்கின்றோம் அவர்களுக்கு கொள்கை உண்டு, வரலாறு உண்டு இன்னபிற அடையாளம் உண்டு

ஆனால் மக்கள் பெரும் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்றால் எல்லாமே அங்கு நிரந்தரம், அடுத்து இவர்தான் என எளிதாக கணிக்கபடும் விஷயம் இன்னபிற‌

ஆனால் அதிமுகவில் சுவாரஸ்யமே அடுத்தவர் யாரென தெரியாது, அடுத்தது நாம் என ஆளாளுக்கு துடிப்பார்கள் அதில் சிலருக்கு வாய்ப்பும் கிடைக்கும்

இதுதான் அதிமுகவின் வெற்றி, இன்னும் நிலைத்து நிற்கும் காரணம்

இப்பொழுதும் பாருங்கள் பழனிச்சாமி அமைதியாக ஆட்சி புரிகின்றார், டெல்லி காக்கின்றது மோடி பிடி கொடுக்கின்றார் என்பதெல்லாம் இன்னொரு பக்கம்

ஆனால் தமிழக அரசியல்வாதியாக பழனிச்சாமி உருவாகின்றார், அவர் இன்னும் சில வருடங்களை நிறைவு செய்துவிட்டால், வெற்றிகரமாக முடித்துவிட்டால் தனி அடையாளம் பெற்றுவிடுவார்

பழனிச்சாமிக்கே வாய்ப்பு அப்படி என்றால் நமக்கும் வராதா என ஆளாளுக்கு அவர் பின் வருவார்கள், காரணம் யாரும் முதல்வராக வாய்ப்பு உள்ள கட்சி அதிமுக‌

இது நிச்சயம் நடக்கும் இருந்து பாருங்கள், அடிதட்டு தொண்டனும் மிக உயரிய இடத்திற்கு வருவது பாஜகவிலும், அதிமுகவிலும் மட்டுமே சாத்தியம்

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

அவை ஆளும் கட்சியாக வலுவோடு இருப்பது இதனால்தான், ஊழல் குற்றசாட்டு தீர்ப்பு இன்னபிற விஷயங்கள் நடந்தும் ஜெயா நிலைத்து நின்றது இந்த நுட்பத்தில்தான்

நிச்சயம் இரண்டும் கொள்கை பிடிப்போ, கோட்பாடோ கொண்ட கட்சி அல்ல, காமெடி ரகம் சந்தேகமில்லை

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் மரியாதை கொடுக்கும் கட்சி, தொண்டனுக்கு அதிசய வாய்ப்புகளை கொடுக்கும் கட்சி

இதனால்தான் இவை ஆளும் கட்சியாக நிற்கின்றது, காங்கிரசும் திமுகவும் வாரிசு அரசியல், உட்கட்சி வாரிசு அரசியலால் தவிக்கின்றன‌

திமுகவில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அடுத்த தலைவர் யார் என இப்பொழுதே எல்லோராலும் சொல்லமுடியும், காங்கிரசிலும் சொல்ல முடியும் , பிரியங்காவிற்கும் குழந்தைகள் உண்டு

ஆனால் அதிமுகவில் அடுத்த தலைவர் யாரென சொல்ல முடியுமா? யாரும் வரலாம்

எங்கள் கட்சி அசைக்கமுடியா இடத்தில் இருக்க இதுதான் காரணம்

அடுத்த தேர்தலிலும் பாருங்கள் எங்களுக்கும் குறிப்பிட்ட இடம் கிடைக்கும், காரணம் இது லக்கி பிரைஸ் கட்சி அதிர்ஷ்டம் யாருக்கும் அடிக்கலாம் எனபதால் உற்சாகமாக உழைக்க வருவார்கள்

மற்ற கட்சிகளில் எல்லாமே நிரந்தரம் என்பதால் தங்கள் எல்லை அவர்களுக்கு தெரியும் என்பதால் சுணங்குவார்கள்

எதிர்கட்சிகள் இப்படி இருக்கும் வரை எங்களுக்கு என்ன கவலை, அரசியல் கொள்கை வேறு, யாதார்த்த களம் வேறு

களத்தில் நாங்கள்தான் ஹீரோ

பாருங்கள் ராமசந்திரன் இறந்தார் ராமாவரத்தில் ஒருமாதம் அன்னதானம் வழங்கினார்கள், அறிவாலயத்தில் ஒரு பிஸ்கட் கொடுப்பார்களா என்றால் இல்லை, காரணம் அவர்கள் அப்படித்தான்

திமுகவின் சரிவு இதுதான் , இதே பிஸ்கட் கொடுக்காத கதைதான் கட்சி பதவிகளிலும் இருக்கின்றது, அதன் இயக்கத்திலும் இருக்கின்றது

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

இருந்து பாருங்கள் இன்னும் வெல்வோம், முகநூலில் உங்களை சீண்டி பின்னூட்டமும் நீ சங்கி என திட்டுகின்றார்களே அவர்களால் கட்சிக்கு 5 பைசா லாபமுமில்லை, லாபம் வந்தாலும் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்க போவதுமில்லை

அதனால் அந்த இம்சைகளை கண்டுகொள்ளாமல் உங்கள் போக்கில் எழுதுங்கள்

அவர்களை நினைத்தால் எங்களுக்கே பாவமாகத்தான் இருக்கின்றது, விட்டு தள்ளுங்கள்”

குலகல்வின்னா என்னடா?

Image may contain: 1 person, textஅண்ணே ராஜாஜி பற்றி, அவரோட குலக்கல்வி பற்றி உங்களுக்கு தெரியாது

அப்படியா

குலகல்வின்னா என்னடா?

அப்பன் வேலைய மகனே செய்யணும், அப்படி விவசாயி மகன் விவசாயி, கூலிக்காரன் மகன் கூலிக்காரன், நெசவாளி மகன் நெசவாளின்னு அவர் செய்ய சொன்னார், ஆரிய சூது பிடிச்சவர்ணே அந்த ஆளு

ஏண்டா பள்ளிகூடம் போக மீதி நேரம்தான செய்ய சொன்னார், இப்போ வரைக்கும் விவசாயி வீட்டு பிள்ளைகள் அப்படித்தானடா வேலை செஞ்சிட்டு இருக்காங்க‌

இல்லண்ணே, அது ஆரிய சூது அப்பன் வேலைய மகன் செய்யணும்ங்குற ஆரிய தந்திரம், பெரியார்தான் அதை முறியடிச்சாரு

ஒஹோ

ஆமாண்ணே இல்லண்ணா எல்லோரும் அப்பன் வேலையத்தான் செஞ்சிட்டு இருப்போம், இது தெரியாம நீங்க அவனுகளுக்கு முட்டு கொடுக்கிறீங்க‌

அப்படியா

ஆமாண்ணே அப்பா வேலையின மகன் செஞ்சா எப்படிண்ணே? பெரியார் திமுக எல்லாம் அதை போராடி மாத்திட்டாங்க, புரட்சிண்ணே

சரி கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் கட்சி தலைவர் ஆனது, அதாவது அப்பன் வேலையினை மகன் செய்றது குலகல்வி இல்லையா? இதில் கனிமொழி வேற‌

அண்ணே அது வேற‌

என்னடா வேற, பெரியார் அறக்கட்டளைக்கு வீரமணிக்கு பிறகு அவர் மகன் வந்தது எப்படிடா?

அண்ணே அது வேற , குலகல்வி வேற‌

என்னடா வேற, திமுகவிலும் திகவிலும் மட்டும் அப்பன் வேலை மகனுக்கு, ஆனா வேற யார் செஞ்சாலும் சமூக நீதிக்கு ஆபத்து அப்படித்தான?

அண்ணே நீங்க ஆரிய அடிவருடி, சங்கி கும்பல்

அண்ணே.. கேரள வெள்ள நிவாரணம் மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு

Image may contain: 1 person, outdoor

அண்ணே நீங்க சங்கி ஆயிட்டீங்க, கேரள வெள்ளத்துல மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு, அதெல்லாம் அவங்க புட்டு சாப்பிட கூட காணாதுண்ணே

அப்படியா

ஆமாண்ணே வெறும் 500 கோடி கொடுத்துட்டு ஓடிபோறது திராவிட விரோதம், தென்மாநில வெறுப்பு, வடக்கு வளர தெற்கு தேய செய்யும் இந்துத்வா வெறி

ஏன் அப்படி

இங்க பாஜக இல்லங்கிறதுக்காக மோடி அரசு திட்டமிட்டு பழிவாங்குது

சரி வெள்ளத்துல கேரளாவுல எதெல்லாம் அழிஞ்சிருக்கு

நிறையாண்ணே, ஏகபட்டது

விமான நிலையம்?

அது மூழ்கிருச்சின்னே, இன்னும் நிறைய செலவு இருக்கு

இந்த தேசிய நெடுஞ்சாலை

ஆமாண்ணே எல்லாம் அரிச்சிட்டு போயாச்சி

இந்த ரயில்வே தண்டவாளம் இன்னபிற‌

அட ஆமாண்ணே எல்லாம் போயிட்டு

இதெல்லாம் யார் செலவு பண்ணுவா?

சென்ட்ரல் கவர்மென்டுண்ணே அவங்கதான் செய்யணும்

எவ்வளவு கோடி ஆகும்?

அது ஆகும்ணே பல நூறு கோடி

பின்ன ஏண்டா வெறும் 500 கோடின்னு கத்துறீங்க? அதையும் சேர்த்து சொல்லுங்கடா

அண்ணே அது எவ்வளவுண்ணு தெரியலண்ணே

அடேய் கேரளாவில துறைமுகம், விமான நிலையம், சாலை இன்னும் ஏகபட்ட விஷயம் மத்திய அரசு கையிலதான் இருக்கு, அவங்க கோடிகணக்குல செலவழிச்சாதான் இனி கேரளா இயங்கவே முடியும்

அப்படியாண்ணே

சும்மா 500 கோடி கொடுத்துட்டு ஓடிட்டாங்கண்ணு சொல்லாத, அவங்களுக்கும் அங்க ஏகபட்ட செலவு இருக்குண்ணு சொல்லு

அதெல்லாம் மாட்டோம்னே

ஏன்?

இங்க மத்திய அரசு எதை எல்லாம் செய்யும்ணு எங்களுக்கு சொல்லவே மாட்டாங்க, பூரா மாநில அரசு சாதனைன்னு போஸ்டர் ஓட்டுவாங்க‌

போடா போ, முதல்ல மத்திய அரசு எதை எல்லாம் நிர்வகிக்கும்ணு பாரு அப்போதெரியும் எத்தனை ஆயிரம் கோடி கேரளாவில் அவங்களுக்கு செலவுண்ணு

இருங்கண்ணே படிச்சிட்டு வாரேன்

வராத, அப்படியே ஓடு”

அண்ணே மறுபடியும் பொய் சொல்றீங்க

Image may contain: 1 person, sittingஅண்ணே மறுபடியும் பொய் சொல்றீங்க, காமராஜர் ரொம்ப உத்தமர், நல்லவர், தியாகி இந்த கருணாநிதிதான் அவர ஏமாத்தி தோற்கடிச்சாரு, அப்படியே தமிழ்நாட்டை நாசமாக்கிட்டாரு, அவரை பற்றி எல்லாம் எழுதாதீங்கண்ணே

ஒஹோ காமராஜர் நல்லவரு அப்படித்தானே?

இதுல எண்ணண்ணே சந்தேகம், அவர் ஆட்சி பொற்கால ஆட்சி

அவர் என்ன கட்சி

காங்கிரஸ்னே?

அது நல்ல கட்சியா?

என்னண்ணே இப்படி கேட்டுபுட்டீங்க, மத துவேஷம் இல்லாத இந்தியா ஒருமைபாட்ட காக்குற கட்சின்னே இந்த இந்துத்வா மாதிரி இல்ல‌

அப்போ காங்கிரஸ் ஆட்சிதான் வரணும்

வந்தா நல்லதுண்ணே

சரி அதுக்கு நீ என்ன முயற்சி பண்ணினே

இனிதான் பண்ணனும்

அடேய் நீ சைமன் தும்பில்ல‌

ஆமாண்ணே அதுக்கென்ன‌

டேய் காங்கிரஸ் ஈழ மக்களை கொன்ன கட்சிடா, முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்த கட்சிடா

அய்யோ ஆமாண்ணே மறந்துட்டேன் தமிழர் விரோத காங்கிரஸ் ஒழிக‌

இன்னொருக்கா சொல்லு

Image may contain: 1 person, textதமிழர் விரோத, தமிழர் உரிமை கொடுக்காத காங்கிரஸ் ஒழிக‌, அந்த காங்கிரஸ்தான் அமைதிபடை அனுப்பிச்சி , அந்த காங்கிரஸ்தான் ஈழம அமையாம தடுத்திச்சி, மோசமான கட்சி, தமிழன அதுக்கு பிடிக்கவே பிடிக்காது

ஆக காங்கிரஸ் தமிழருக்கு எதிரான கட்சி

கண்டிப்பாண்ணே

அடேய் இதத்தான் இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சின்னு அன்னைக்கே கலைஞர் சொன்னார், நீ இப்போ சொன்னா சரி, கலைஞர் அன்றைக்கே சொன்னால் தவறா

என்னனெண்ணே இப்படி குழப்பி விட்டீங்க‌

ஈழம், பிரபாகரன்னு அந்நிய நாட்டு தீவிரவாதி படம் பிடிக்கிற நீயெல்லாம் இந்திய தேசியவாதி காமராஜரை கலைஞர் தோற்கடிச்சிட்டாருன்னு பேசுற, உங்களுக்கு எதிரான காங்கிரஸை அவர் அன்னைக்கே தோற்கடிச்சாருடா

ஆமாண்ணே

அப்போ நீ திமுகவிற்கு நன்றி சொல்லணுமா வேண்டாமா?

ஒரு மண்ணும் புரியலண்ணே குழப்பமா இருக்கு, என்னண்ணே பண்ணுறது?

நேரே விருகம்பாக்கம் போ, அங்க மூலவியாதி வந்தவன் மாதிரி ஒருத்தன் கை, கால் எல்லாம் ஆட்டி ஆட்டி கத்திட்டு இருப்பான் அவன்கிட்ட போய் கேளு

அந்த ஆளுதாண்ணே எங்கள இப்படி ஆக்கிட்டாரு

முதுகில மிதிச்சி கேளு போடா..”

அய்யா நாங்க ஈழத்தவர்கள்

அய்யா நாங்க ஈழத்தவர்கள்

சொல்லுங்க‌

இப்போ நாங்கள் முள்ளிவாய்க்காலை விட பெரிய துன்பத்தை சகித்துகொண்டிருக்கோம், உங்கட்ட சொல்லணும் போல தோணுது

என்ன சார்? மறுபடியும் சிங்களன் அடிக்கின்றானா?

அதெல்லாம் இல்லைய்யா, இந்த பாரதிராஜா என்பவர் சீமான் அடுத்த பிரபாகரன்னு சொல்லும்பொழுது அவனை கொன்றுவிட்டு சாகணும் போல வெறுப்பா இருக்கு

ஏன் அய்யா ஏன்? அவர்கள் உணவாளர்கள்

தம்பி உங்களுக்கு தெரியாததில்ல, பிரபாகரன் 1985 வரை தமிழ்நாட்டுல இருந்தவர் அவர் எப்பொழுதாவது பாரதிராஜாவினை பார்த்தாரா? பேசினாரா?

எமக்கு தெரிந்து இல்லை

இதுகள் பெரிய பொய் சொல்லி திரியிதுகள், புலியள் பாரதிராஜாவினை மயிருக்கு கூட மதிக்கலை

சரி, பின் ஏன் இவர்களை இலங்கைக்கு புலிகள் அழைத்தனர், சிங்களன் எப்படி விசா கொடுத்தான்?

அய்யா இங்கே சிங்களனுக்கும் புலிகளுக்கும் பல புரிதல் உண்டு, விசா எல்லாம் சிக்கல் இல்லை அது அமைதிகாலம்

சரி எதற்கு பாரதிராஜாவும் சைமனும் வந்தனர்

அய்யா வந்தது இவர்கள் மட்டுமல்ல மகேந்திரன், அவரின் மகன் உட்பட ஒரு குழுவே வந்தது அதில் இந்த இரு பைத்தியங்களும் அடக்கம்

பிரபாகரன் இவர்களுடன் அரசியல் பேசினாராம் அப்படியா?

அய்யா ஒன்னு விளங்கணும், பிரபாகரனுக்கு சேரன் மேல் அபிப்ராயம் இருந்தது அவர் வரயில்லை, மூத்த இயக்குநர் மகேந்திரன் மீது புலியளுக்கு பிரியம் அவரைத்தான் 4 மாதம் தங்க வைத்து திரைபடம் பயின்றனர்

புலிகளுக்கு தேவை துப்பாக்கி, எதற்கு கலை?

கலை மூலம் தங்கள் வலியினை உலகிற்கு சொல்லலாம் என இயக்கம் முடிவு செய்தது, கன்னத்தில் முத்தமிட்டால் எங்கள் வலியளை சொல்லவில்லை, தெனாலி எஙகளை கேவலபடுத்தியது,இதனால் நல்ல வலிமிக்க படம் எடுக்க இயக்கம் ஆசைபட்டது

எடுத்தார்களா?

முயற்சி செய்தார்கள் சிலை கலை படங்களுக்கான முயற்சி நடந்தது

சரி பிரபாரகன் என்ன பேசினார்? அரசியல் பேசினாரா? தமிழகத்தில் இயக்கம் வளர்க்க சொன்னாரா?

அய்யா ஒண்ணு விளங்கணும், எங்களுக்கு இந்தியா ஈழம் அமைக்க உதவும்ணு நம்பிக்கை இல்ல, பிரபாகரன் இதனால இந்திய அனுதாபம் போதும் உதவி வேண்டாம் என்பதில் கவனமாக இருந்தவர்

பின் என்ன பேசினார்?

அவர் இவர்கள் யாரிடமும் பேசவில்லை, மகேந்திரனிடம் மட்டும் கொஞ்ச நேரம் பேசினார் அதில் துளியும் அரசியல் இல்லை, ஆயுதம் இல்லை. யாரிடம் என்ன பேசவேண்டும் என்பது அவருக்கு தெரியும்

அப்படியானால் சீமான்?

அவர் வந்ததிலிருந்தே விசிறு பிடிச்சவன் போல பேசிகொண்டிருந்தவர், தமிழன் பெருமை என்றார் முப்பாட்டன் வம்சம் என்றார், பிரபாகரன் பற்றி எங்களுக்கே சொல்லி கொடுத்தார்

உங்களுக்கா?

ஓம், எங்களுக்கு பிரபாகரனை பற்றி தெரியாததெல்லாம் இந்த மயிராண்டிக்கு தெரியுமாம், கனத்த கோவம் ஆயிட்டு

பின் என்னாச்சு?

அவர் போக்கிலே காமெடி செய்தார், எல்லோரும் சிரிச்சி தொலைச்சு போக சொன்னோம், அண்ணன பாக்கணும்னு அடம்பிடிச்சு அழுதார்

பார்த்தாரா?

புலியள் உடையில் பார்க்கணும்னார், அதற்கு அனுமதி இல்லை என்பதால் 1 நிமிடம் மட்டும் பார்த்துவிட்டு கிளம்பினார்

பிரபாகரனுக்கு இவரை பற்றி என்ன அபிப்ராயம் இருந்தது

அப்படி ஒருவன் புலம்புவதே அவருக்கு தெரியாது, உண்மையில் சைமன் யார் என்றே அவருக்கு தெரியாது

இல்லை இவர் என்னவெல்லாமோ பேசுகின்றாரே?

நேரம் அய்யா, பழைய இறுக்கமும் காலமும் இருந்திருந்தால் அவனை கட்டிவந்து உரிச்சி தொங்கவிட்டிருப்போம், ஈழசிக்கலில் இந்தியா நிலை எங்களுக்கும் தெரியும், அதனால் ஒரு கட்டம் தாண்டி உதவ இயலாது, எங்கட போராட்டத்தை நாங்கதான் பார்க்கோணும்

அப்படியானால் சைமன்?

ஒண்ணு சொல்றேன் கெளுங்கோ, இந்திய உளவுதுறை சாதாரணம் அல்ல, தமிழ்நாட்டிலே ஏதாவது ஒரு ஈழகுரல் வோணும், அப்பதான் கொழும்பு கூட அவங்க பேசமுடியும்

அப்படியா?

இதெல்லாம் உலக அரசியல், ஆனா கூறுகெட்ட உங்க உளவுதுறை இந்த கிறுக்கன பிடிச்சி பேச வச்சிருக்கு, டம்மி பீஸ் அவன் கூட பாரதிராஜா வேற‌

எங்களுக்கும் இம்சை தாளல சார், ஒரே பொய்

ம்ம் அடிச்சி கொல்லுங்கோ சனியனே

இந்த கடல் கடந்து வந்து கொல்றதுல்லாம் உங்க ஸ்டைல் பிளீஸ் செய்யுங்கள், எமக்கு அதெல்லாம் வராது

அவனை எல்லாம் சும்மா கொல்ல கூடாது அய்யா, பிடிச்சி வாயில குத்தி ஆக்சன்ல பேசவச்சி அடிச்சி அடிச்சி துவைக்கணும்

எப்போ செய்வீங்க..

காலம் வரும் மொத்த ஈழமக்களும் வெளிநாட்டு ஈழமக்களும் அவனையும் பாரதிராஜாவினையும் பார்த்துட்டே தான் இருக்கோம் வசமா சிக்காமயா போய்ருவானுக‌, சிக்கிற அன்னைக்கு பிரபாகரனின் தம்பி யாருண்ணு 2 பேருக்கும் நல்லா தெரியும் அய்யா.

கண்டிப்பா செய்வீர்களா? நம்பலாமா

அய்யா தமிழக சினிமாகாரங்க தமிழ்நாட்டை கெடுத்தவனுக அழிச்சவனுக, தமிழ்நாட்டையும் அதன் வரலாறையும் மாற்றி பேசி அழிச்சவனுக, இப்போ எங்கட நாட்டையும் கெடுக்கலாம் புலியள் பெயரை சுத்தமா அழிக்கணும்னு திரியுறானுக விட மாட்டோம்

நல்லது சீக்கிரம் செய்ங்கோ

புலியள் துணுக்காய்ங்கிற இடத்தில துரோகிகளை போட்டு அடிக்க ஒரு இடம் வச்சிருந்தாங்கள், கொஞ்சம் சித்திரவதை எல்லாம் உண்டு, நாய் கூடுக்குள்ளே போட்டு எல்லாம் அடைப்பாங்கள்

ஒஹோ

அதைவிட மோசமா ஒண்ண ரெடி பண்ணிட்டு இதுகளை தூக்கணும்னு பார்த்துட்டு இருக்கோம்

முள்ளிவாய்க்கால்லண்ணே.. மொத்த ஈழமும் அங்கதான் இருந்து

Image may contain: one or more people and people standingஅண்ணே ஆயிரம் சொல்லுங்கண்ணே கலைஞர் 2009ல் போரை நிறுத்தி இருக்கணும், இனம் காப்பாற்றபட்டிருக்கும்

இனம் எங்கே இருந்திச்சி

முள்ளிவாய்க்கால்லண்ணே மொத்த ஈழமும் அங்கதான் இருந்து

அடேய் யாழ்பாணம், மட்டகிளப்பு கொழும்பெல்லாம் எங்கே இருக்கு? அங்கெல்லாம் இனம் இல்லையா?

அதெல்லாம் தெரியாதுண்ணே இனம் முள்ளிவாய்க்கால்ல அழிஞ்சி கலைஞர் கண்டுகொள்ளலை சுயநலம் பிடிச்சவர்னே

அவர் என்ன பண்ணிருக்கணும்

மத்திய அரசு ஆதரவை வாபஸ் வாங்கிருக்கணும்

வாங்கிருந்தா?

மத்திய அரசு அஞ்சி ஈழத்தில போரை நிறுத்த சொல்லியிருக்கும்

நம்ம சொல்லி அவன் ராமேஸ்வரம் படகையே விடமாட்டான், போரை எப்படிடா நிறுத்துவான்?

ம்ம் நம்ம ராணுவத்த அனுப்பிருக்கணும்

எதுக்கு கற்பழிக்க வந்தாங்கண்ணு 1987ல பட்டபாடு போதாதா? 1500 இந்திய வீரர் செத்தாங்க, ஏண்டா நாங்கதான் சிங்கள அடிச்சி வீரத்துல கிழிப்போம்னு சொன்னீங்களே செஞ்சா என்னடா?

ம்ம் அண்ணே கதைக்கு வாங்க, கலைஞர் ஆதரவ விலக்கிருந்தா மத்திய அரசு கவிழ்ந்திருக்கும்

கவிழ்ந்தாலும் எப்படிடா போர் நிற்கும்?

கவித்துட்டு தமிழ்நாட்டுல மாணவர்கள், மீணவர்கள், எங்களை போன்ற சிங்கங்களை எல்லாம் போராட அழைச்சிருக்கணும், காட்டு காட்டியிருப்போம்

யாழ்பாணம், மட்டகிளப்பு, கொழும்பு இங்கெல்லாம் தமிழனே இல்லையா? எவனாது ஒருவன் பொங்கினானா? இல்லை தீகுளிச்சானா? சொல்லு

அவனுக எல்லாம் அடிமைகள்னே மானம் இல்லாதவனுக , நாங்க மானதமிழனுக ஒரு காட்டு காட்டியிருப்போம்

ஏண்டா நீங்க காட்டு காட்டும்போது டெல்லி தமிழ்நாட்டு அரசை டிஸ்மிஸ் பண்ணிட்டா என்னடா செய்வீங்க? எப்படிடா அங்க போர் நிற்கும்

ஹிஹிஹி எங்க ஆசையே அதாணே அவர் பதவிலே இருக்க கூடாது, அவர் துரோகி

அப்படி என்னடா பண்ணினார்?

ஈழத்துல போரை நிறுத்தல‌

அடேய் அவர் அரசு டிஸ்மிஸ் ஆனா எப்படிடா அங்க போர்நிற்கும்

அண்ணே அதான் வேணும், அவர் பதவில இருக்க கூடாது அவர் துரோகி, ஊழலாதி

சரி எந்த ஊழல்ல அவரை பிடிச்சி உள்ள போட்டீங்க?

அது அவர் விஞ்ஞான முறையில பண்ணுவார்ணே

அடேய் விஞ்ஞானம்னா ஆதாரம் வேணும்டா, ஆதாரம் எங்கே

அது.. அண்ணே ஈழத்துல நம்ம இனம் செத்துச்சி

அதான் நாயே, அவர் ஆட்சி டிஸ்மிஸ் ஆயிட்டா, இல்ல அவர் ராஜினாமா பண்ணிட்டா எப்படி போர் நிற்கும் சொல்லு

அந்த போர் நின்னா என்ன நிக்காட்டி என்ன, தமிழ்நாட்டை தமிழினத்தை அழிச்ச கலைஞர் பதவில இருக்க கூடாது

எண்டா சுய அறிவோடத்தான் பேசுறியா?

இப்படித்தாண்ணே சொல்ல சொல்லிருக்காங்க, வேற ஒன்னும் பேச தெரியலண்ணே, ஒருவேளை தப்புண்ணா யார்கிட்டேயும் சொல்லாதிங்கண்ணே, ஒரு இனபுரட்சி வேடத்துல சுத்துறேண்ணே, பாவம்ணே விட்டுருங்கண்ணே

நில்லுடா

இல்லண்ணே விடுங்க‌

எத்தனை தடவடா அந்த சனியனுக்காக திமுக ஆட்சியினை இழக்கும்?

தெரியலண்ணே

ஏண்டா காப்பாத்தி விட விட அவன் என்னடா செஞ்சான்?

யாருக்குண்ணே தெரியும், நான் என்ன அவரோட ஆமைகறியா தின்னேன்.

அந்த பாம்பு காப்பாத்தி விட்டாலும் நாளைக்கு கலைஞருக்கே குறி வைக்கும்டா

அது எப்படிண்ணே?

டேய் பிரபாகரன் வரலாறு என்ன? தன்னை காத்த அல்லது நம்பிய யாரை கொல்லாமல் இருந்தான்

யாரண்ணே?

அடேய் அமிர்தலிங்கம், ராஜிவ், பிரேமதாச , பத்மநாபா இப்படி எப்பாருமே அவன் உயிரை காத்துவிட்டு அவனாலே கொல்லபட்டவர்கள், பின் அந்த சனியனை யார் காப்பாற்றுவார் யார் நம்புவார்?

ம்ம் ஆனாலும்

பலபேர் பாலூற்றி வளர்த்த பாம்பு அது, பாலூற்றிய எல்லோரையும் கொன்றது ,கடைசியாக மொத்தமாக போட்டு சாத்தினார்கள்

அண்ணே, ஆனாலும் அந்த மக்கள் பாவம்ல‌

ஏண்டா சென்னையில் கிட்டதட்ட 400 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கலைஞர் காப்பத்தணுமா, அந்த மக்களை பிடிச்சி வச்சிருந்த பிரபாகனுக்கு பொறுப்பு இல்லையா

ஹிஹிஹிஹ் இதெல்லாம் யோசிக்கலண்ணே

மக்கள் மக்கள்னு யாரை காப்பாத்த நீங்கெல்லாம் சத்தம் போட்டீங்கணு யாருக்குடா தெரியாது, மக்கள் போராளின்னா அந்த பிரபாகரன் மக்களை விட்டுவிட்டு தனியா சண்டை போட்டுருக்கணும்டா

அண்ணே தனியா போனா மண்டையிலே போட்டுருவாங்க‌

இப்போ மட்டும் போடாமலா விட்டாங்க, அவனால பல ஆயிரம் பேர் செத்ததுதான் மிச்சம்

ம்ம்ம் இருக்கலாம்ணே என்ன விட்ருங்கண்ணே…

இந்த ஒண்ணுக்கும் பதில் சொல்லு

கேளுங்கண்ணே

30 வருஷமா பிரபாரன் என்ன ஜெயிச்சான்

தெரியலண்ணே

யாழ்பாணத்த திரும்ப பிடிச்சானா

இல்லண்ணே

எங்காயவது சிங்கள அடக்கி வழிக்கி கொண்டுவந்தானா

இல்லண்ணே

கடைசியா எங்க இருந்தான்

ஏதோ வன்னிகாடுன்னு சொல்றாங்க‌

அடேய் அவன கொஞ்சம் கொஞ்சமா அடிச்சி கலைச்சி கிழக்கு நோக்கி கொண்டுபோய் கரெக்டா சுத்தி வளச்சி கொன்னுருக்கானுக, பிரபாகரனை சிங்களன் கொல்ல தேடி அவன் ஓடி ஒளிஞ்ச கதைதான் ஈழபோராட்டம்

ம்ம் யோசிக்க வேண்டிய விஷயம்ணே

அதை காவேரி ஆஸ்பத்திரி முன்னால போய் மன்னிப்பு கேட்டுட்டு யோசி போடா..”

நீ கால்பந்து பார்ப்பாயா?

Image may contain: 1 person, beard

“அரே பையா, உன்னே மாதிரி இந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி, நிய்மார் எல்லாம் எனக்கு சேலஞ்ச் பண்ணிச்சுன்னா நம்பிள் ஒரே நாளைல வெல்ட் பேமஸ் ஆய்ருவான், ஆனா அவனுக நம்பிளை கண்டுக்க மாட்டான், வெரி சேடா இருக்கு

நீங்க மைக் டைசன் கிட்ட சேலஞ்ன்ச் பண்ணுங்க ஜீ, நாடு நல்லா இருக்கும்”


“நீ கால்பந்து பார்ப்பாயா?

ஆமாம்

உனக்கு ஐரோப்பிய அணி பிடிக்குமா? இல்லை லத்தீன் அமெரிக்க அணிபிடிக்குமா?

ஆட்டம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருப்பதால் அவர்களைத்தான் பிடிக்கும்

இல்லை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்பதால் பிடிக்கின்றது

ஒஹோ

ஆமாம் நீ மதவெறியன், அதனால்தான் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் என பேசிகொண்டே இருக்கின்றாய்

அப்புறம்?

நீ மதவெறியன் என்பதை ஒப்புகொள், இந்தமாதிரி வெறியன் இந்தியாவிற்கு ஆபத்து

சரி ஒன்று செய்யுங்கள்?

என்ன?

இந்த யோகாசன கோஷ்டி, சங்க் பரிவார கோஷ்டி, ஆர்.எஸ்.எஸில் இருந்து ஒரு காவி அணியினை அனுப்புங்கள், அவர்களை ஆதரித்துவிடலாம்

அனுப்புவோம் நிச்சயம் அனுப்புவோம்

எப்பொழுது?

மோடியின் அடுத்த ஆட்சியில்

அந்த ஆட்சியே வீட்டுக்கு அனுப்பபட போகின்றது, இவர் கால்பந்து அணி அனுப்ப போகின்றாராம், ஓடுறா

நீ மதவெறியன், ஆண்டி இந்தியன், நல்ல இந்தியன் என்றால் அந்நிய மத அணிகளை ஆதரிக்காதே, அவர்கள் பிதா சுதன் அடையாளமிடாவிட்டால் நீ பார்க்கவே மாட்டாய்”


மன்சூர் அலிகான் உள்ளே

Image may contain: 1 person, smiling

அண்ணே சேலத்தில் வளர்மதி தைரியமாய் கைதாகியிருக்கு, மன்சூர் அலிகான் உள்ளே போயிருக்கார். ஆனா நீங்க முன் ஜாமின் கேட்டு கோர்ட்டு வாசல்ல நிக்குறீங்க, பிரபாகரன் தம்பியாண்ணே நீங்க?

தம்பி ஒரு விஷயம் நுட்பமா விளங்கிடனும், தனு ராஜிவினை வெடித்து கொன்றாள் இன்னும் ஏகபட்ட தம்பி தங்கைகள் ஈழத்துல வீரமா செத்தாங்க‌

ஆனால் அண்ணன் பிரபாகரன் பங்கருக்குள் பத்திரமாக இருந்தார், பிரபாகரன் வழின்னா இதுதான் தம்பி, இது புரியாம பேசிட்டு ஹிஹிஹீஹிஹி.. போங்க தம்பி”

 
 

அடேய் அண்ணன் யாருடா?

Image may contain: text

அடேய் அண்ணன் யாருடா?

10 ஆயிரம் சிங்களன் சுற்றி நின்று சுட, கடலில் இருந்து சிங்கள கப்பல் பீரங்கி குண்டு வீச, வானத்திலிருந்து கிபீர் ரக விமானங்கள் ஏவுகனைகளை வீச அதன் நடுவே குடை கூட பிடிக்காமல் நடந்து சென்று பிரபாகரனை சந்தித்தவர்

சிறை அண்ணனை என்ன செய்யும்? என்ன செய்யும்?