நீ கால்பந்து பார்ப்பாயா?

Image may contain: 1 person, beard

“அரே பையா, உன்னே மாதிரி இந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி, நிய்மார் எல்லாம் எனக்கு சேலஞ்ச் பண்ணிச்சுன்னா நம்பிள் ஒரே நாளைல வெல்ட் பேமஸ் ஆய்ருவான், ஆனா அவனுக நம்பிளை கண்டுக்க மாட்டான், வெரி சேடா இருக்கு

நீங்க மைக் டைசன் கிட்ட சேலஞ்ன்ச் பண்ணுங்க ஜீ, நாடு நல்லா இருக்கும்”


“நீ கால்பந்து பார்ப்பாயா?

ஆமாம்

உனக்கு ஐரோப்பிய அணி பிடிக்குமா? இல்லை லத்தீன் அமெரிக்க அணிபிடிக்குமா?

ஆட்டம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருப்பதால் அவர்களைத்தான் பிடிக்கும்

இல்லை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்பதால் பிடிக்கின்றது

ஒஹோ

ஆமாம் நீ மதவெறியன், அதனால்தான் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் என பேசிகொண்டே இருக்கின்றாய்

அப்புறம்?

நீ மதவெறியன் என்பதை ஒப்புகொள், இந்தமாதிரி வெறியன் இந்தியாவிற்கு ஆபத்து

சரி ஒன்று செய்யுங்கள்?

என்ன?

இந்த யோகாசன கோஷ்டி, சங்க் பரிவார கோஷ்டி, ஆர்.எஸ்.எஸில் இருந்து ஒரு காவி அணியினை அனுப்புங்கள், அவர்களை ஆதரித்துவிடலாம்

அனுப்புவோம் நிச்சயம் அனுப்புவோம்

எப்பொழுது?

மோடியின் அடுத்த ஆட்சியில்

அந்த ஆட்சியே வீட்டுக்கு அனுப்பபட போகின்றது, இவர் கால்பந்து அணி அனுப்ப போகின்றாராம், ஓடுறா

நீ மதவெறியன், ஆண்டி இந்தியன், நல்ல இந்தியன் என்றால் அந்நிய மத அணிகளை ஆதரிக்காதே, அவர்கள் பிதா சுதன் அடையாளமிடாவிட்டால் நீ பார்க்கவே மாட்டாய்”


மன்சூர் அலிகான் உள்ளே

Image may contain: 1 person, smiling

அண்ணே சேலத்தில் வளர்மதி தைரியமாய் கைதாகியிருக்கு, மன்சூர் அலிகான் உள்ளே போயிருக்கார். ஆனா நீங்க முன் ஜாமின் கேட்டு கோர்ட்டு வாசல்ல நிக்குறீங்க, பிரபாகரன் தம்பியாண்ணே நீங்க?

தம்பி ஒரு விஷயம் நுட்பமா விளங்கிடனும், தனு ராஜிவினை வெடித்து கொன்றாள் இன்னும் ஏகபட்ட தம்பி தங்கைகள் ஈழத்துல வீரமா செத்தாங்க‌

ஆனால் அண்ணன் பிரபாகரன் பங்கருக்குள் பத்திரமாக இருந்தார், பிரபாகரன் வழின்னா இதுதான் தம்பி, இது புரியாம பேசிட்டு ஹிஹிஹீஹிஹி.. போங்க தம்பி”

 
 

அடேய் அண்ணன் யாருடா?

Image may contain: text

அடேய் அண்ணன் யாருடா?

10 ஆயிரம் சிங்களன் சுற்றி நின்று சுட, கடலில் இருந்து சிங்கள கப்பல் பீரங்கி குண்டு வீச, வானத்திலிருந்து கிபீர் ரக விமானங்கள் ஏவுகனைகளை வீச அதன் நடுவே குடை கூட பிடிக்காமல் நடந்து சென்று பிரபாகரனை சந்தித்தவர்

சிறை அண்ணனை என்ன செய்யும்? என்ன செய்யும்?

 
 

குலகல்வின்னா என்னடா?

Image may contain: 2 people, drink

அண்ணே திமுக இல்லண்ணா ராஜாஜி குலகல்வின்னு கொண்டுவந்து நம்ம எல்லாரையும் அழிச்சிருப்பார்னே

குலகல்வின்னா என்னடா?

கொஞ்சநேரம் படிக்கிறது, அப்புறம் அப்பன் தொழிலை மகன் கத்துகிறது.இது சமூக அநீதின்னே

எப்படி??

அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல, அது தொடர்ந்திருந்தா இந்நேரம் விவசாயி புள்ள விவசாயியா இருக்கும், சலவை தொழிலாளி புள்ள துணிவெளுக்கும், திமுகதான் இதனை மாற்றிற்று

ஒஹோ, குலகல்வின்னா இதுதானா?,

ஆமாண்ணே அது கொடுமையான விஷயம்

அதாவது அப்படி இருந்தா அப்பன் வேலையே மகன் செய்வான் அது சமூக ஆபத்து அப்படித்தானே?

பின்ன, அடுத்தவங்களுக்கு எப்படின்னே வாய்ப்பு கிடைக்கும், ராஜாஜி விஷம்ணே

சரி கலைஞருக்கு பின் அவர் மகன் திமுக தலைவரா வந்துட்டார், அடுத்தால பேரன் வந்துருவார்னு சொல்றாங்க, இதெல்லாம் எப்படி? குலவாரிசு கட்சிக்கு மட்டும் சரியா?

அண்ணே நீங்க பிராமண பயலுககிட்ட ஏமாந்துட்டீங்க, உங்கள நல்லா ஏமாத்திட்டானுக, பார்ப்பான் சகவாசம் வேண்டாம்னு சொல்றது இதுக்குத்தான்

சொல்லிட்டு போடா, பெரியாருக்கு பின்னால அவர் சொத்துக்கு வீரமணி வந்ததெல்லாம் என்ன வகைடா?

நீங்க சமூக நீதிக்கு ஆபத்தான ஆளுண்ணே, உங்ககிட்ட எல்லாம் பேசவே கூடாது”

சரி ரஞ்சித் என்ன சொல்ல வாராரு?

Image may contain: one or more people, people standing, mountain, outdoor and nature

“அண்ணே, உங்க உறவே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், நீங்க சாதிவெறி பிடிச்சவரு, உங்க மனசெல்லாம் வஞ்சகம்

அப்படி என்னடா பண்ணிட்டேன்

ரஞ்சித் ஒரு தலித்னு அவர ஒருமாதிரி எழுதுறீங்க, அதுனாலதான் அவர் படம் உங்களுக்கு பிடிக்கல்ல, தலித் எது செஞ்சாலும் உங்களுக்கு பிடிக்காது

டேய் இளையராஜா தாழ்த்தபட்டவர் அவர் பாட்டு யாருக்கு பிடிக்காது? நடிகர் பார்த்திபன் மாதிரி கலைஞர்களை ஏதாவது யாராவது சொல்றாங்களா? இதெல்லாம் அவங்க அவங்க கொடுக்குற பில்டப்பில வாங்கி கட்டிக்கிறது

அண்ணே இல்லண்ணே, தலித் மக்கள் ஒடுக்கபடுறாங்க, அவங்க உயரணும் வாழணும் அதுக்கு ரஞ்சித் போராடுறாறு

டேய் இந்த நாட்டு சட்டம் தலித்துக்கு எதிரா இருக்கா?

இல்ல‌

இட ஒதுக்கீடு இருக்கா இல்லியா?

நிறைய இருக்கு

தலித் தொழில் தொடங்கினா யாரும் தடுக்குறாங்ளா?

இல்ல‌

அரசியல், சினிமா, அரசுதுறைன்னு எல்லா இடத்துக்கும் வந்துட்டாங்க யாரும் தடுக்குறாங்களா?

பின்ன என்னடா ஒடுக்குறாங்க, மிதிக்கிறாங்கண்ணு

அப்படித்தாண்ணே சொல்லிகிட்டாங்க, அத விடுங்கண்ணே காலா படம் புரட்சி படம்ணே, மக்கள் போராடிட்டே இருக்கணும்னு சொல்ற படம்னே

அதில உங்க ரஞ்சித்தர் என்னடா சொல்ல வந்தார்?

அதிகார உலகம் உன் நிலத்தை பிடுங்க வரும், அத போராடாம தடுக்க முடியாதுண்ணு சொன்னாருண்ணே

அடேய் மும்பை அந்தேரியினை எவனாவது வாங்க போவானா?

அண்ணே முடியாதுண்ணே பணக்கார ஏரியா

இந்த நாவி மும்பை?

அண்ணே அங்கெல்லாம் ஏகபட்ட விலை

பின்ன ஏன் இங்க வாரானுக‌

இதெல்லாம் குடிசை வீடுண்ணே, ஒருமாதிரி ஏரியா அதனால ஏழ்மை ஒழிக்க வாரோம்ணு ஒரு மாதிரி வருவாங்க விட கூடாதுண்ணே

ஏழையா யார் வச்சிருக்கா?

தெரியலண்ணே

சரி ரஞ்சித் என்ன சொல்ல வாராரு?

அதாவது நம்ம குடிசைய காப்பாத்த நாம போராடணும்

சரி அந்த குடிசைய மாளிகையாக்க வழி சொன்னாரா?

இல்லண்ணே

மக்கள் என்ன செஞ்சா முன்னேறலாம்னு வழி சொன்னாரா

அதுவும் இல்லண்ணே

பின்ன இதுக்கு என்னதாண்டா முடிவு?

அண்ணே எல்லாத்திலியும் உரிமை வேணும் அப்படி இருந்தா நாங்க முன்னேறிருவோம்

எல்லாத்தையும்தான் சுதந்திர இந்தியாவில திறந்து விட்டுருக்கேடா உங்களுக்கு, படிப்பு, வேலை அது இதுன்னு அள்ளி கொடுத்தாச்சி இப்பவும் முடியலண்ணா இனி தனிநாடுதான் கொடுக்கணும் வாங்குறியா?

அப்படியாண்ணே எவ்வளவு பெருசா தருவாங்க?

செவிட்டில தருவாங்க, சொல்லுடா எல்லாம் திறந்து, வாய்ப்பெல்லாம் கொடுத்தும் இன்ன்னும் அழுதுட்டே இருந்தா யார் தப்புடா?

தெரியலண்ணே?

ஒரு சமூகம் எப்படா உருப்படும்

நல்லா படிக்கணும், ஒழுங்கா உழைக்கணும் நல்லா சிந்திக்கணும்

தெரியுதுல்ல அதை செய்ங்கடா, இவனுக தலித் ஏழை குடிசை, புரட்சின்னு அழுவானுகளே தவிர உருப்பட சொல்லிகொடுக்கவே மாட்டானுக‌

ஆமா, அது ஏண்ணே

தலித் காலம்வரை கஷ்டபட்ட தலித்தா இருந்தாதான் அவனுக பொழப்பு ஓடும், இல்லண்ணா கஷ்டம்

புரியுதுண்ணே

அதனால அம்பேத்கர் சொன்னபடி இந்த நாடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடுத்தாச்சி இன்னும் அது சரியில்ல இது சரியில்லண்ணு அவர் படம் பிடிச்சிட்டு வந்தா என்னடா அர்த்தம்?

குழப்பமா இருக்குண்ணே

அதாண்டா சாதி பெயரை சொல்லி கட்சி அரசியல் செய்து நல்லா செட்டில் ஆனவனுகள பார்த்துட்டு இந்த ரஞ்சித் பயலும் புரட்சி அது இதுன்னு சொல்லிட்டு இருக்கான், இவனுகளுக்கு தூண்டிவிட தெரியுமே தவிர ஒரு நாளும் தீர்வு தெரியாது

அப்படியாண்ணே

சரி அந்த ரஞ்சித்கிட்ட போய் இதுக்கு என்ன முடிவுண்ணு கேட்டுபாரு தெரியும்

அட அவருக்கு எங்கண்ணே தெரியுது, அவர் படத்தையே குழப்பமா முடிக்கிறாறு

அததானடா நாங்களும் சொல்றோம், தீர்வே தெரியாதவன் நான் புரட்சியாளன்னா எப்படிடா?

ஆமாண்ணே, அந்த ஆளுகிட்ட கேட்டுட்டு வாரேன்

கேட்டுட்டு இங்க வராதா, காலா போஸ்டர் எங்காவது இருந்தா கிழிச்சி போட்டுட்டு போ”


Image may contain: 7 people, people smilingஉண்மையான தமிழின விரோதி இந்த போஸ்டர் அடித்த கும்பல்தான்..

இந்த நிபா, எபோலா மாதிரி வைரஸ்களை பரப்பி இந்த போஸ்டர் அடித்த‌ கும்பலை அழித்துவிடுவது நல்லது

நள்ளிரவில் பின்லேடனை சுட்டது போல் இவர்களை சுட்டுகொன்றாலும் தப்பே இல்லை

(எஸ்.ஏ சந்திரசேகர் யார்? தெய்வத்தின் தெய்வமோ?? )


 

அண்ணே நீங்க கிறிஸ்தவர்ங்கிறதால பேசுறேன்

Image may contain: 4 people, sunglasses and close-up

அண்ணே நீங்க கிறிஸ்தவர்ங்கிறதால பேசுறேன், தூத்துகுடி கலவரத்துக்கு என்ன காரணம்னு நினைகிறீங்க?

ஸ்டெர்லைட் மூடிட்டா என்னடா பிரச்சினை, அதுதான் காரணம்

அதெல்லாம் இல்லை

நக்சலைட்?

அதுவும் இல்லை

பின் யார்டா காரணம்?

அசுத்த ஆவிகள்

டேய் ஆமாடா, ஸ்டெர்லைட்டால் காற்று மாசுபட்டுத்தான் பல நோய்கள் வருகின்றன சரிதான், அதனால் மக்கள் பொங்கிவிட்டார்கள்

அந்த ஆவி இல்லண்ணே, பொல்லாத ஆவி

அடேய் அது என்னடா?

அண்ணே இது கடைசி காலம், பாவம் பெருகிற்று. இதனால பொல்லாத ஆவிகள் எல்லாம் சேர்ந்து கலவரத்தை தூண்டி பலரை கொல்லுதுண்ணே

ஓஹோ

இதற்கு நாம் வல்லமையாய் ஜெபிக்கணும், அமைதி திரும்பும்

ஆக எங்க கலவரம் வந்தாலும் அசுத்த ஆவிதான்

கண்டிப்பாண்ணே, நாம ஜெபிக்காவிட்டால் அது பெரும் கலவரத்தை கொண்டுவந்து நாசமாக்கிரும்

அப்போ நீ போய் ஏண்டா 13 பேரை காப்பத்தல‌

அண்ணே கடவுள் விருப்படிதான் எல்லாம் நடக்கும், சோ அவங்க சாகட்டும்னு விட்டுட்டேன், ஆனா இனி யாரும் சாகமா நாம ஜெபம் பண்ணி தடுக்கணும் அல்லேலூயா

உலகெல்ல்லாம் இதே நிலவரமா? இங்கு மட்டுமா

அண்ணே முதல்ல இங்க ஜெபிப்போம் , பின் உலகத்திற்காக உபவாசம் இருந்து ஜெபிப்போம், இயேசப்பா வெற்றி கொடுப்பார், அல்லேலூயா

சரிடா இப்போ என்ன செய்யணும்

அண்ணே மோடி அரசு ஒழியணும். அதுதான் பிரச்சினை அது ஒழிய நாம ஜெபம் செய்யணும், வாங்கண்ணே வந்து ஜெபம் பண்ணுங்க.

நீ பண்ணுடா நான் அப்புறன் சேர்ந்துக்குறேன்

ஓ லார்ட் இன் ஹெவன் எங்கள் தந்தையே, அப்பா, தகப்பனே ராஜா ஸ்ஸ்ஸ் புஷ்ஷ்ஷ்ச் டிரம்ப் புட்டீன் அக்கிதோ ஜிங்க் பிங்க் டமமாம்ட் ஆககக ஹீஇஃபீ ஜோஓச்ச்ஜாஆ

அடேய் இது என்னடா?

பரலோக பாஷைன்னே உங்களுக்கு புரியாது

அத பரலோகத்துல போய் பேசுடா, இப்போ எனக்கு புரியிறமாதிரி தமிழ்ல்ல பேசு

அண்ணே மோடி அரசு ஒழியணும்னு கடுமையா ஜெபிச்சேன்

அவர விடுடா, இந்த பழனிச்சாமி அரசு ஒழிய வேண்டாமா?

அண்ணே அவரே அப்பாவிண்ணே , அந்த ஆள போட்டுகிட்டு என்னெண்ணே இருக்கு? மோடி ஓழியணும்னே வாங்க ஜெபிப்போம்

அடேய் இப்போ தமிழ்நாட்டை பிடிச்சிருக்குற அசுத்த ஆவி பழனிச்சாமிடா, அவரை விரட்டுவோம்டா

அட போங்கண்ணே, அப்பாவிய போட்டுகிட்டு. மோடி ஒழியணும் அதுக்காக நாம ஜெபிக்கணும்

அப்போ பழனிச்சாமி இருந்தா பரவால்லியா

அதுல எண்ணெண்ணெ தப்பு?

அடேய் உலகத்திலே மோசமான ஆவி உன்கிட்டதாண்டா இருக்கு, இன்னைக்கு சுடுகாட்டுக்கு கொண்டு போய் உன்ன சிலுவையில் அறையாம விட மாட்டேண்டா”

 

அண்ணே நீங்க விஜயாகாந்த் பற்றி சொன்னது ரொம்ப சரி

அண்ணே நீங்க விஜயாகாந்த் பற்றி சொன்னது ரொம்ப சரி, சில நேரம் நீங்க சரியாத்தான் சொல்றீங்க‌

அப்படியா

ஆமாண்ணே அவர் தோற்றுபோயிருக்க கூடாது, அப்படி ஒரு ஆள் இருந்தா நல்லாத்தான் இருக்கும். தூத்துகுடியில அவர் ஜெயிச்சிருந்தா இந்த சிக்கல் வந்திருக்காது

ஓஹோ

ரொம்ப வருத்தம்ணே, சரி இப்படி அப்பப்போ எழுதுங்கண்ணே , நான் போறேன்

நில்லு இத கேட்டுட்டு போ

சொல்லுங்கண்ணே

விஜயகாந்த விரட்டிடீங்க, இன்னொருத்தங்க இருக்காங்க அவங்க விஜயகாந்தவிட 100 மடங்கு தைரியம், அவங்களையாவது ஜெயிக்க வச்சி உருப்படுற வழிய பாருங்க, இல்ல இப்படித்தான் பின்னாடி அழனும்

யாருண்ணே அது?

தலைவி குஷ்புடா

இதுக்குத்தான் உங்ககிட்ட பேசுறதே இல்ல, தூத்துகுடியில யாரையோ சுடுறாங்க, உங்கள சுட யாருமில்ல. ஒரு நாள் நானும் சுந்தர்.சியும் துப்பாக்கியோட வந்து சுட்டுருவோம்ணே. எனக்கே இவ்வளவு கோபம்ணா அவருக்கு எவ்வளவு இருக்கும்?, அதுக்குள்ள திருந்திருங்க”

%d bloggers like this: