அய்யா வைகுண்டர்

தென்னக பெண்களுக்கு குறிப்பாக கன்னியாகுமரி பகுதி நாடார் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமையினை பெற்று கொடுத்தது திராவிடம் என்றொரு கும்பல் கிளம்பி இருக்கின்றது
இதற்கு பதிலாக எடிசனையும், ஐன்ஸ்டீனையும் உருவாக்கியது திராவிடம் என சொல்லிவிடலாம்
அந்த காலம் கடுமையானது, அதன் வரலாறு இன்னும் மோசமானது, சிக்கல் எங்கிருந்து தொடங்கிற்று?
நிச்சயம் அது தொடக்கத்தில் இருந்து வந்ததல்ல, மாறாக நாயக்கர் கால படையெடுப்பு இங்கு பல மாற்றங்களை கொண்டுவந்தது, வளமான பகுதியில் இருந்த பலர் தேரிக்காடுகளுக்கும் இன்னும் பல பகுதிகளுக்கும் ஓடியது அப்பொழுதுதான்
அதில் எல்லா சாதியும் இருந்தது
அப்பொழுது கன்னியாகுமரி பக்கமும் ஓடினார்கள், அங்கு அப்பொழுது பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை எல்லாம் இல்லை திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆரல்வாய்மொழி வரை இருந்தது
18ம் நூற்றாண்டில் அங்கு பல கொடுமைகள் உச்சத்தில் இருந்தன, நாடார் உட்பட பல சாதிகளுக்கு ஆளும் சாதி பல வரிகளை சுமத்தியது
அது ஒன்றும் புதிதல்ல, வரலாற்றில் எல்லா அரசுகளும் ஒரு கட்டத்தில் குடியேறிய மக்களை அடிமைகளாக வைப்பது என்பது ராஜநீதி
பைபிளில் யூதர்கள் எகிப்தில் அப்படித்தான் இருந்தனர்
காரணம் குடியேறிகளை வளரவிட்டால் சொந்த அடையாளத்தை இழந்துவிடுவோம் என்பது அரச திட்டங்களில் ஒன்று
திருவாங்கூர் சமஸ்தானமும் அந்த நீதிக்கு தப்பவில்லை, அம்மக்களை வரிமேல் வரிபோட்டு அடிமைகளாக வைத்திருக்க முடிவு செய்தது
தலைப்பாகை அணிய கூடாது, மேலாடை கூடாது, மாடி வைத்து வீடு கட்ட கூடாது என ஏகபட்ட கூடாதுகள், அப்படியே நாடார் இனம் உட்பட பல தாழ்ந்த சாதிகள் மேலாடை அணிய கூடாது
மார்பக வரி என்பது சில கேரள சாதிக்குத்தான் விதிக்கபட்டது, நாடார் இன பெண்களுக்கு வரி கட்டினாலும் மார்பகத்தை மறைக்கும் உரிமை கிடையாது
ஆனால் 17ம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையனிடம் சிக்கிய அப்ப்குதியில் கிறிஸ்துவத்திற்கு மாறிய பெண்களுக்கு அவ்வுரிமை கிடைத்தது, இந்து பெண்களுக்கு இல்லை
18ம் நூற்றாண்டில் இந்த அடிமைதனத்தை எதிர்த்து யார் போராடினார், வெற்றிபெற்றார் என்றால் நிச்சயம் பெரியார் இல்லை ஏன் அவர் தந்தை வெங்கட நாயக்கரே அப்பொழுது பிறக்கவில்லை
நீதிகட்சி அதன் பின் 120 ஆண்டுகள் கழித்தே தோன்றியது
அதற்காக போராடியவர் ஒரு இந்து, அய்யா வைகுண்டர் எனும் அவதாரமே அவர்
அவரின் வாழ்வும் போதனையும் அவர் பெற்றுகொடுத்த உரிமையும் மகா அதிசயமும் ஆச்சரியமுமானவை, பைபிளில் மோசஸ் என்பவன் யூத மக்களை எகிப்திலிருந்து விடுவித்தது போன்ற சாகசம் அது
அவரின் போதனையும் , போராட்டமும் அவரை பலமுறை அரசன் கொல்லமுயன்று அதிசயமாய் அவர் தப்பிய கதையும், இன்னும் ஏராள சம்பவங்களும் அவர் அவதாரம் என்பதை காட்டுகின்றது
இந்து மதம் சாதிபிரிவுகளைகொண்டதுதான், ஆனால் நாராயணன் அவதாரமாகவே வைகுண்டரை அவர்கள் கண்டார்கள்
அவரின் தீரா போராட்டத்தில்தான் பெண்களுக்கு மார்பை மறைக்கும் உரிமை, ஆண்களுக்கு மேலாடை அணியும் உரிமை என் பல உரிமைகளும் வாழும் வழிகளும் திறக்கபட்டன‌
அய்யா வைகுண்டர் எந்த அளவு அப்பகுதியில் தாக்கம் எற்படுத்தினார் என்பதற்கு அக்கால கிறிஸ்தவ மிஷினரிகள் வாடிகனுக்கும், இன்னும் பல நாடுகளுக்கும் எழுதிய கடிதங்களே சாட்சி
என்ன எழுதினார்கள்?
“தென்னிந்தியாவின் கடைசி பகுதியில் சில குறிப்பிட்ட இந்து இனங்கள் உரிமை இன்றி இருக்கின்றார்கள், அவர்களை கிறிஸ்துவத்திற்கு திரும்பினால் உரிமை எல்லாம் கிடைக்கும் என மதம் மாற்றி வந்தோம்
ஆனால் இப்பொழுது இந்துகளுக்குள்ளே ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது, வைகுண்டர் என்பவரை அம்மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். ஆச்சரியமாக அவரே போராடி உரிமைகளை எல்லாம் பெற்றும் கொடுத்துவிட்டார்
இனி நாம் பெருமளவு மக்களை மாற்ற முடியாது, வைகுண்டர் என்பவர் நமக்கு இங்கு மிகபெரும் இடைஞ்சல் அவர் இருக்கும் வரை இனி இங்கு நமது பணி சிரமமே”
ஆக அந்த பெரும் கொடுமையில் இருந்து அப்பகுதி மக்களை மீட்டது அய்யா வைகுண்டர் எனும் நாராயணனின் அவதாரமே அன்றி வேறல்ல என்பது வரலாறு, அவர் ஒரு இந்து என்பதும் இந்து அடையாளமாக வாழ்ந்தவர் என்பதும் வரலாறு
ஆனால் இப்பொழுது திடீரென முளைத்திருக்கும் தோசை, சட்னி திராவிடர்கள் நாடார் இன பெண்களுக்கு உரிமை பெற்று தந்தது திராவிட இயக்கம் என கிளம்பியிருக்கின்றார்கள்
அய்யா வைகுண்டர் அந்த உரிமையினை பெற்று கொடுத்தபொழுது திராவிட இயக்கத்து பெரியாரின் முன்னோர்களே பிறக்கவில்லை என்பதுதான் உண்மை
இன்னும் என்னவெல்லாம் சொல்ல போகின்றார்களோ தெரியாது, விரைவில் ஆபிரகாம் லிங்கனுக்கு கடிதம் எழுதியும் அவர் கேட்காமல் அமெரிக்காவிற்கே சென்று அவரை தடியால் அடித்து அடிமை முறையினை அகற்றியவர் பெரியார் என கிளம்புவார்கள்
அதற்கும் முட்டு கொடுக்க சிலர் வருவார்கள் [ October 29, 2018 ]

============================================================================