இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்…

அந்த திருமுருகன் காந்தி என்ன நாட்டிற்காக பல ஆண்டு சிறையில் இருந்துவிட்டா வருகின்றான்?

ஏதோ சீனாவுடன் யுத்தம் புரிந்து அதில் அகபட்ட கைதி 14 வருடம் சிறையிருந்து வருவது போலவும், பெரும் தேசபக்தன் ஒருவன் சிறைமீள்வது போலவும் ஏகபட்ட பில்டப்புகள்,

என்ன கிழித்துவிட்டான் என்று இவருக்கு இவ்வளவு பில்டப்? சிறை சென்றுவிட்டாராம்.

ஆட்டோ சங்கர் கூட சிறையில்தான் இருந்தான், வீரப்பன் கூட்டாளிகள் இன்னும் சிறையில் இருக்கின்றனர்.

தேசத்திற்கு எதிரான வழக்கில் உள்ளே சென்றுவிட்டு வருபவருக்கு ஏன் ஆர்பாட்டம்?

மே 17ல் முள்ளிவாய்க்காலில் செத்தார்கள் என கடலுக்கு மெழுகுவர்த்தி பிடித்ததை விட அவர் இத்தேசத்திற்கு செய்தது என்ன?

அதுவும் செத்தது அடுத்தநாட்டுக்காரர்கள்

மே17க்கு முன்பு இந்தியா அந்த ஈழவிவகாரத்தில் எவ்வளவு இழந்தது என்பது பற்றியெல்லாம் திருமுருகன் பேசினாரா என்றால் இல்லை.

மாறாக சும்மா மே 17 , பங்குனி 17 என ஒப்பாரி வைத்துகொண்டே இருப்பது.

பிரபாகரனோடு பழகிய ப.சிதம்பரம் முதல் பண்ருட்டி ராமசந்திரன் வரை எத்தனையோ பேர் தமிழகத்தில் உண்டு. அவர்கள் எல்லாம் சும்மா இருக்க, இவர் குதிப்பாரம்.

அதுவும் மெரினாவில் மே 17 என ஓலமிடுவது அதற்கு சற்று தள்ளி இருக்கும் ராஜிவ் நினைவிடத்தை அப்படியே மறந்துவிடுவது. இதன் பெயர்தான் நினைவேந்தல், இதனை செய்யும் திருமுருகன் ஒரு போராளி.

முதலில் இலங்கையில் புலிகளால் கொல்லபட்ட 1500 இந்திய வீர்களுக்கு மெரீனாவில் ஒரு நினைவு தூண் கட்டபடவேண்டும்

அதன் பின் எவன் மே 17 என மெழுகு பிடிக்கின்றான் என பார்க்கலாம்

மெழுகுவர்த்தி பிடித்தவன் எல்லாம் தமிழின தியாகி எனும் அளவிற்கு தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கின்றது.

இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்…

Advertisements

ரஜினியினை எப்பொழுது பாராட்ட போகின்றீர் மிஸ்டர் சைமன்?

விஜயகாந்தும் நானும்தான் மக்களுக்காக கட்சி தொடங்கினோம், நான் அவரை மிக மதிக்கின்றேன் : சீமான்

இப்படி ஒரு பல்டியினை யாராவது அடிக்க முடியுமா? ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரர்களால் கூட முடியாது.

அந்த விஜயகாந்தினை தெலுங்கன், வந்தேறி என்றெல்லாம் எப்படி எல்லாம் தூற்றினார் சீமான். அதுவும் விஜயகாந்த் கட்சியின் மைக்கேல் ராயப்பனை அதிமுக கவ்விகொண்டு போக, அப்பொழுது விஜயகாந்திற்கு பதில் கொடுத்தது எல்லாம் சீமான் தான்.

அதிமுக அப்பொழுது அமைதியாக இருந்தது, அதன் பிரதிநிதியாக கத்திகொண்டிருந்தார் சைமன்.

வைகுண்டராஜனை விஜயகாந்த் குற்றம்சாட்டிய பொழுதெல்லாம், அவர் வீட்டு புல்டாக் நாயாக கத்தியது இந்த சீமானே.

விஜயகாந்தினை எப்படி எல்லாம் திட்டினார் என்பதற்கு அவரின் முன்னாள் பேச்சுகளே சாட்சி

இப்பொழுது அவர் விஜயகாந்தினை மிக மதிக்கின்றாராம், அவரை பாராட்டுகின்றாராம்.
அதாவது ஜெயலலிதா இல்லை, நடராஜன் கும்பல் அரண்டு போயிற்று, தாதுமணல் சிக்கலில் வைகுண்டராஜனுக்கும் தலைவலி.

முன்பு போல அங்கிருந்து கொட்டபடவில்லை, இனி அவர்களுக்கும் எதிர்காலமில்லை.

அன்னார் அதனால் நைசாக விஜயகாந்த் பக்கம் நூல்விட்டு பார்க்கின்றாராம்..

ரஜினியினை எப்பொழுது பாராட்ட போகின்றீர் மிஸ்டர் சைமன்?

இதெல்லாம்……………….

காவேரியினை மீட்டதா? : தமிழிசை

காவேரி பிரச்சினைக்கு 18 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியிலும், பல ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? காவேரியினை மீட்டதா? : தமிழிசை

அப்படி கேளுங்கள் அக்கா, அவர்கள்தான் துரோகிகள், சுயநலவாதிகள், தமிழகத்தை சீரழித்தவர்கள்

அந்த 18 ஆண்டில் வாஜ்பாய் காலமும் உண்டு மேடம், அப்படியானால் பாஜகவும் காவேரியில் துரோகம் செய்தது என சொல்வீர்களா?

சரி 3 ஆண்டுகளாக உங்கள் மோடி என்ன செய்கின்றார்? நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? கன்னடத்திலும் பாஜக ஆட்சி நடந்தது, காவேரியினை மீட்டு வந்தால் என்ன?

திமுக 18 ஆண்டுகள்இருந்தே முடியவில்லை, எங்களுக்கு 25 ஆண்டாவது அவகாசம் வேண்டும் , அப்பொழுதுதான் காவேரி வரும் என மட்டும் சொல்லிவிடாதீர்கள், பயங்கர கோபம் வரும் ஆமாம்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

இந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட பல வழக்குகளில் சென்னைக்கு புகழ்மிக்க வழக்கறிஞர்கள் எல்லாம் வருகின்றார்கள்.

கபில் சிபல் வருகின்றார், இன்னும் இந்தியாவின் முண்ணணி வழக்கறிஞர்கள் எல்லாம் வந்து ஆஜராகின்றார்கள்.

அழைத்துவருவது யார்? இங்குள்ள கட்சிகள்.

ஆனால் காவேரி வழக்கிற்கோ, அனிதா வழக்கிற்கோ இவர்களை அமர்த்தினார்களா என்றால் இல்லை. அங்கெல்லாம் தேங்காய் மூடி வக்கீல்களை வைத்து வாதாடிவிட்டு இங்கு குதிப்பார்கள்.

ஆனால் இவர்கள் வழக்கு என்றால் என்ன பணம் செலவழித்தும் பெரும் வக்கீல்களை அழைத்து வருகின்றார்கள்?

அது அதிமுகவோ, திமுகவோ இரண்டும் அப்படித்தான்.

சொத்துகுவிப்பு, ஸ்பெக்ட்ரம் இதோ இந்த இந்த சுயநல வழக்கிற்கு அள்ளி செலவழிப்பவர்கள், நீட் காவேரி உட்பட தமிழக‌ பொதுநல வழக்கில் ஒரு பைசா செலவழிப்பதில்லை.

ஏன் நீட் தேர்வில் அனிதாவிற்காக இந்த கபில் சிபலை திமுக வைத்து வாதாட கூடாதா? பால் நரிமனை அமர்த்தியிருக்க முடியாதா?

அனிதா செத்தவுடன் அள்ளி கொடுப்பவர்கள், அவள் தரப்பு நியாயத்தை வைக்க நல்ல வழக்கறிஞரை அமர்த்தினார்களா என்றால் இல்லை, ஏன் என்றால் அப்படித்தான்

ஆனால் அனிதா செத்துவிட்டாள் என ஒப்பாரி வைத்ததும் இவர்களே..

இதோ காவேரி வழக்கு நடக்கின்றது, யாரோ ஒரு வண்டு முருகன் உளறிகொண்டிருக்கின்றார்.

ஆனால் கபில் சிபல் திமுக சார்பாக உள்ளூர் பிரச்சினைக்கு சென்னையில் ஆஜராகின்றார்.

இதனை சொன்னால் நீ பக்தாள், நீ ஆரிய அடிவருடி, நீ திராவிட எதிரி, தமிழின துரோகி என பல பட்டம் சூட்ட பொங்கிகொண்டு வருவார்கள்.

“ஏ வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளே…”

Image may contain: 2 people, people smiling, people standingஇயேசுநாதர் காலத்தில் இஸ்ரேல் நாடு ரோமர் ஆளுகையில் இருந்தது, அதனை எதிர்த்து பல கலகம் நடந்தது

அதாவது கடவுளின் நேரடி மக்களான யூதர்களுக்கு கடவுளே அரசன், அவர் ஒருவருக்குத்தான் அவர்கள் வரி செலுத்தி வணங்கவேண்டும், அதனால் பலர் ரோமரை ஏற்க தயங்கினார்கள், பல கலவரம் நடந்தது.

அப்பொழுது இயேசு போதித்துகொண்டிருக்க அவரிடம் கேட்டார்கள், “நாம் ரோமருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?”

அது அவரை சிக்கவைக்கும் கேள்வி, வரி செலுத்துங்கள் என்றால் அவர் கடவுளை அவமதித்ததாகும், இயேசு போலிச்சாமி ஆகிவிடுவார்

வரி செலுத்தாதீர்கள் என்றால் அப்படியே கட்டி தூக்கி ரோமரிடம் உங்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துகின்றான் கொல்லுங்கள் என கொடுத்துவிடலாம்

இயேசு அமைதியாக சொன்னார், “கடவுளையதை கடவுளுக்கும், அரசனுடையதை அரசனுக்கும் செலுத்துங்கள்”

அதாவது அரசை பற்றி ஏன் கவலைபடுகின்றீர்கள்? அவன் ஜஸ்ட் காவல்காரன், அவனுக்குள்ளதை கொடுத்துவிடுங்கள், நாம் பரலோக கடவுளின் மக்கள் என்பதால் அதற்கேற்ப வாழுங்கள் என்பது பொருள்

எந்த அரசன் ஆண்டால் என்ன? அரசியல் நமக்கு தேவையில்லா விஷயம், நம்முடைய பணியும் வாழ்வும் வேறு என அன்றே சொன்னார் இயேசு, அதுவும் தன் சொந்த பூமியில் சொன்னார்.

இங்கோ திருச்சி பாதிரிகளுக்கு, இந்தியாவினை ஆளும் கட்சியினை கண்டு கவலை வந்திருக்கின்றது. அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக கட்சி சேர்க்கின்றார்களாம்

ஒரு பெரும் பிரிவினைவாதியினை, குழப்பக்காரனை அழைத்து வந்து பேசசொல்லி அருகிலிருந்து ரசிக்கின்றார்கள்.

இது கிறிஸ்துவுக்கே பொறுக்காத, பிடிக்காத விஷயம். ஆனானபட்ட இயேசுவே ரோமருக்கு எதிராக அரசியல் செய்தவர் அல்ல.

இந்த வெள்ளையுடை சாமிகள் அதனை செய்கின்றார்கள்

முன்பு வெள்ளை ஆடை புனிதமானதாக கருதபட்டது, அரசியல் முதல் ஆன்மீகம் வரை அது சீருடையானது

முதலில் அரசியலால் வெள்ளை ஆடை அசிங்கபட்டது, இப்பொழுது இந்த போலிசாமிகளால் அசிங்கபடுகின்றது

இயேசுவின் வார்த்தைதான் இது, இவர்களுக்கு பொருந்தும்.

“ஏ வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளே, உங்களுக்கு அய்யோ கேடு”

 

அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி

வேலையில்லா திண்டாட்டத்தால் தான் மோடியும், டிரம்பும் பதவிக்கு வந்தனர்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி

அமெரிக்காவினை விடுங்கள், ஆனால் இந்தியாவில் இதற்கு முன்பு ஆண்டது யார்? மம்மி வழிகாட்டலில் மன்மோகன் சிங் அல்லவா 10 ஆண்டுகள் ஆண்டார்

அப்படியானால் மன்மோகன் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது என ஒப்புகொண்டுவிட்டீர்கள் என்றாகிவிடாதா?

இப்படியா சிக்குவீர்கள் ராகுல்காந்தி…

இதற்குத்தான் “அவர்” உடல்நலத்தோடு இருக்கும்பொழுதே கோபாலபுரத்தில் கோச்சிங் கிளாஸ் செல்லவேண்டும் என்பது.

எடப்பாடி புனித நீராடல்… சன்னிலியோன் மழை நீராடல்

“எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது” : முதல்வருக்கு எதிராகச் சீறுகின்றார் தினகரன்

நாம் சற்றுமுன் சொன்னதை தினகரனும் சொல்லியிருக்கின்றார், அதாவது முதல்வர் பழனிச்சாமி புனித நீராடியதை அப்படி சொல்லியிருக்கின்றார்.

ஆனால் முன்பு கும்பகோணம் மகாமகத்தில் ஜெயா,சசிகலா குளிக்கபோய் ஏராளமானோர் செத்து, பலர் காயமடைந்து மருத்துவமனையில் இருக்க அவர்களை பார்க்க கூட செய்யாமல் திரும்ப வந்த அந்த பாவம் எந்த நதியில் மூழ்கினால் தீரும் என்பதை தினகரன் சொல்லவில்லை.


பாவங்களை போக்கும் மகா புஷ்கரத்தில் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஆகியோர் புனித நீராடினர்

பன்னீர் செல்வம் ஏன் செல்லவில்லை என்பது தெரியாது, ஒருவேளை எந்த நீரில் ஆடினாலும் தன் பாவம் தீராது என அவருக்கு தெரிந்திருக்கலாம்

ஆனால் பழனிச்சாமிக்கும், சபாநாயகருக்கும் தெரியவில்லை.


ஹிந்தி பிக்பாஸ் நிகழ்சியில் சன்னிலியோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழையில் ஆடினார்.

இந்த செய்தியினை படிக்கும் பொழுதே வயிறு எரிகின்றது, கண்கள் சிவக்கின்றன‌

என்ன கொடுமை இது? தமிழன் எப்படி எல்லாம் ஏமாற்றபட்டு கொண்டிருக்கின்றான்.

தமிழிலும் பிக்பாஸ் நடத்துகின்றனரே கிராதகர்கள், அவர்களை எல்லாம் புளுவேல் ஆடவைத்து கொல்லவேண்டும்

மும்தாஜினை அழைத்துவந்தாவது ஆடவிட்டிருக்க வேண்டாமா?