அப்படியும் இருக்கலாம்

முதல் தடவையாக தன் மிகபெரும் எதிரி என்றும் சொல்லபோனால் உண்மையான எதிரி என்றும் சொல்லபடும் இந்து மதத்தை மிக தீவிரமாக தமிழக மண்ணில் திமுக எதிர்கொள்கின்றது என்கின்றது ஒரு தரப்பு

இருக்கலாம், திமுக பகுத்தறிவு பேசிய காலங்களில் அவர்களுக்கு எதிரி மதரீதியாக இல்லை

காங்கிரஸ் என்ற கட்சியினை எதிர்த்தே அவர்கள் அரசியல் இருந்தது, அதில் சினிமாவினை இன்னபிற விஷயங்களை கலந்து அடித்து ஜெயித்தார்கள்

தனி திராவிட பகுத்தறிவில் அவர்கள் ஜெயிக்கவில்லை, சினிமாவும் கண்மூடிதனமான இந்தி, காமராஜர் எதிர்ப்பு இன்னும் பலவும் அவர்களுக்கு அன்று கைகொடுத்தது

அதன் பின் அவர்களுக்குள்ளாக மோதினார்களே தவிர ஆரம்ப கால எதிரி அவர்களுக்கு இல்லை

இப்பொழுது இந்துக்களிடம் ஒருவித எழுச்சி இருப்பது கண்கூடு, வைரமுத்துவே சாட்சி

பழைய பகுத்தறிவாளர்கள் போன்ற பலமிக்கவர்களும் இப்பொழுது அங்கு இல்லை

இதனால் சில கணிப்புகள் இப்படியும் வருகின்றன, இது பாசிசத்திற்கும் திராவிடத்திற்குமான போர் என திமுக தரப்பு சொல்ல, இது ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்குமான போர் என எதிர்தரப்பு சொல்ல தொடங்கிவிட்டது

அப்படியும் இருக்கலாம், வாய்ப்பும் இருக்கின்றது

கூட்டணிகளை நோக்குங்கள் அப்படித்தான் இருக்கின்றது

கடவுள் இல்லை எனும் திமுகவும் கம்யூனிஸ்டும், கடவுள் இல்லை என்றாலும் இருந்தாலும் சரி எனும் காங்கிரசும் ஓரணி

தெய்வத்தை மனமார நம்பும் மற்ற கட்சிகள் எல்லாம் எதிரணி

ஒரு தீவிர பகுத்தறிவு நாத்திக கட்சியும் ஒரு பூரண ஆத்திக கட்சியும் நேருக்கு நேர் நிற்கின்றது

இதன் முடிவு தெரிய 1 மாதம் காத்திருக்க வேண்டும்