அர்ஜூன் சம்பத் எனும் அரைமனிதர்

ஒரு குரங்குக்கு பெத்தடின் போட்டு 4 கிளாஸ் வெளிநாட்டு சரக்கை ஏற்றிவிட்டு அப்படியே கொஞ்சம் கஞ்சாவினை கசக்கி உள்ளே தள்ளினால் என்ன செய்யும்?

அதைத்தான் அர்ஜூன் சம்பத் எனும் அரைமனிதர் செய்துகொண்டிருக்கின்றார்

அதாவது எங்கு பிராத கட்சிகளின் சார்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவ வேட்பாளர் நிறுத்தபட்டாலும் அவர் எதிர்ப்பாராம்

ஏன் பாஜக நிறுத்தினாலும் எதிர்ப்பராம்

பாஜகவில் இஸ்லாமியரும் சீக்கியரும் உண்டு, அதெல்லாம் அன்னாருக்கு தெரியாவிட்டால் இனி உடனே தெரிந்துகொண்டு செத்துபோனால் நன்று

இப்படிபட்ட ஆபத்தான பைத்தியங்களை வெளியே விட கூடாது, அதுவும் தேர்தல் நேரத்தில் மகா ஆபத்து

இந்திய அரசியல் சட்டம் இங்கு எல்லோரும் எல்லா பதவிக்கும் வருவதற்கே வழிசெய்கின்றது, ஜாதி மத பிரிவினை எல்லாம் இல்லை

இந்தியன் எனும் ஒற்றை தகுதி போதும்

அன்னார் உண்ணும் உணவில் இருந்து, அவர் இயக்கும் வாகனத்திற்கான பெட்ரோல் அவரின் வெளிநாட்டு தொழில்நுட்ப கார் என எல்லாமோ கிறிஸ்தவ இஸ்லாமிய நாட்டு மக்களால் வழங்கபடுபவை

அவர் வைத்திருக்கும் விபூதி தவிர அவரின் போனின் பாகங்கள் கூட அந்நிய மதத்தினரால் செய்யபட்டவை

மானமுள்ள இந்து அதை தொடலாமா? டிவி தொடலாமா? இணைய பக்கம் வரலாமா? ஏன் மைக்கில் பேசலாமா?

அதெல்லாம் இந்து கொடுத்ததா அப்பனே?

எல்லையில் மானம் காத்த மிராஜ் வகை விமானம் கொடுத்த பிரான்ஸ் என்ன நாடு? அதற்கான பெட்ரோல் கொடுத்த ஈரான் எந்த நாடு அய்யனே?

கலாம் எனும் இஸ்லாமியர் இத்தேசத்திற்கு செய்திருக்கும் சேவை என்ன? டெய்சி தாமஸ் எனும் கிறிஸ்தவ பெண் செய்து கொண்டிருக்கும் சாதனை என்ன?

அந்த ஏவுகனைகளை எல்லாம் இவர் கடலில் எறிவாரா?

சீக்கிய சகோதர்களின் பெரும் அர்பணிப்பு என்ன? அவர்களை எல்லாம் விரட்டிவிடுவாரா?

இம்மனிதர் ஜெய்ஸ் இ முகமது மசூத் அசாரைவிட மகா ஆபத்தானவர் என்பதால் உடனே அடைத்து வைப்பது நாட்டுக்கு நன்று

அப்பொழுதும் இந்துதான் என்னை கைது செய்யவேண்டும், இந்துக்கள் இருக்கும் சிறையில்தான் நானும் இருப்பேன் என அடம்பிடிப்பார் அது சாத்தியமில்லை

இஸ்லாம் கிறிஸ்துவத்தை எதிர்ப்பவர் அந்நாடுகளிலிருந்து வரும் நல்ல விஷயங்களையும் தொட கூடாது அல்லவா?

பின் என்ன செய்வார்? ஆதிகால வாழ்க்கைக்கு திரும்புவார்

அதனால் ஆளே இல்லா இந்தோனேஷிய தீவு ஒன்றில் அன்னாரை விட்டுவிட்டால் தமிழக சமூக அமைதிக்கான ஆபத்து நீங்கும்