அறிவின்மை

ஒரு சினிமாவுக்கு ஆயிரகணக்கில் செலவழிக்கும் தமிழன், ஒரு திருவிழா இன்னபிற சமாச்சாரங்களுக்கு பல்லாயிரங்களை செலவழிக்க தயாராகும் தமிழன் வாக்கு செலுத்த மட்டும் சில நூறுக்கும் ஆயிரத்திற்கும் விலை போவது மாபெரும் வினோதம்

கிரிக்கெட் வீரர்கள் பணம் வாங்கிகொண்டு ஆடினால் மட்டும் தமிழனுக்கு அவ்வளவு கோபம் வருகின்றது, ஆனால் இவன் மட்டும் வாக்களிக்க வாங்கலாமாம்

கண் காணா கடவுளுக்காக பல்லாயிரத்தை காணிக்கையாய் செலுத்த தயாராக இருப்பவன், கண் முன்னால் தன்னை ஆளபோகும் தலைவனை தேர்ந்தெடுக்க காசை வாங்கிகொண்டு வாக்களிப்பது அறிவின்மையன்றி வேறேன்ன?