சிரித்தாவது மகிழும்..

ஏம்பா கமலஹாசா

உமக்கு நடிக்க தெரியுமேயன்றி ஒரு நல்ல படம் கூட இயக்க தெரியாது

நீர் இயக்கிய அல்லது தலையிட்ட படங்களை எல்லாம் பாரும், அதெல்லாம் குப்பைமேட்டில் கிடக்கும், காரணம் உங்களது அதிமேதாவிதனம்

நிச்சயம் நீர் அறிவாளி, மிகபெரும் அறிவாளி ஆனால் சாமான்யமக்களோடு ஒட்டமுடியாத அறிவு வீணாகவே போகும்

எப்படி நீர் இயக்கிய படமெல்லாம் உமக்கு மட்டும் புரிந்து பெட்டிக்குள் முடங்கியதோ
அப்படியே உமது கட்சியும் முடங்கி கொண்டிருக்கின்றது

இங்கு இருப்பது சாமான்ய மக்கள், இவர்களுக்கு தேவை முட்டாள் அரசியல்வாதிகள், ஆம் அதுதான் இவர்கள் விருப்பம், அதுதான் யதார்த்தம்

அதனால் உங்கள் மிகபெரும் அறிவாளிதனமெல்லாம் இங்கு ஒத்துவராது, தயவு செய்து நடிக்க திரும்பவும்

ஆம் நடிக்க மட்டும் செய்யவும், அங்கும் இயக்கம் என சென்று படத்தை கொல்ல வேண்டாம். உமது அறிவார்ந்த படங்கள் இங்கு யாருக்கும் புரியாது

விக்ரம் படமே இப்பொழுதுதான் ஓரளவு புரிகின்றது, இன்னும் மேற்படி படங்கள் புரிய பலநூறாண்டு ஆகும்

அப்படியாக உங்கள் அரசியல் புரிய இங்கு இன்னும் சில நூறாண்டு இங்கு ஆகும்

அதனால் சொல்கின்றோம், இந்த ஸ்ரீபிரியா கோவை சரளா நாசர் போன்றோரை அழைத்து சென்று சதிலீலாவதி பார்ட் டூ, அவ்வை சன்முகி பார்ட் டூ என ஏதாவது எடுக்கவும்

இப்பொழுது கடும் கடுப்பில் இருக்கும் தமிழகம் அப்பொழுது சிரித்தாவது மகிழும்..