திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி

“ஒமுங் குமார் இயக்கியுள்ள ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம், கட்சி சார்ந்த கதையைக் கொண்டது. அதில் தற்போதைய பிரதமரின் அரசியல் வாழ்க்கை இடம்பெறுகிறது. திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி. அது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்”

இப்படி சொல்லி நீதிமன்றம் செல்கின்றது திமுக‌

அந்த வரியினை கவனியுங்கள் //திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி//

எந்த திமுக?

வேலைக்காரி, பராசக்தி தொடங்கி சினிமாவினை தன் கட்சி விளம்பரத்திற்காக பயன்படுத்திய அந்த திமுக‌

கொஞ்சமா திரைபடத்தில் ஆடினார்கள்? அன்று காங்கிரஸை எதிர்க்கின்றேன், பகுத்தறிவு பேசுகின்றேன் என அவர்கள் எழுதியது கொஞ்சமா

சினிமா மக்களுக்கான ஊடகம் என சொன்னவர் அண்ணா, கலைஞர் அதை பல இடங்களில் சொன்னார்

இவர்கள் பெரியார் படமெடுத்து மகிழ்ந்தால் அது மக்களுக்கான் ஊடகம்

ஆனால் மோடியின் கதையினை எடுத்தால் “திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி”

இதெல்லாம் திமுகவின் நியாயங்கள்

காந்தி, காமராஜர் வாழ்க்கை வரலாறு சினிமாவாக வந்த இந்தியாவில் மோடியின் வாழ்க்கை சினிமாவுக்கு தடை என்றால் எங்கணம் நியாயம்

மன்மோகன் சிங் கதையே சினிமாவாக வந்ததே? அது என்ன?

ஆனாலும் திமுகவினருக்கு தனி நியாயம்..

“தடை கோர சொல்பவர்கள், ஆம் நாங்கள் எங்கள் பகுத்தறிவு கடவுள் மறுப்பு திராவிடம் போன்றவற்றை சினிமாவில் விளம்பரம் செய்தோம்,

ராமசந்திரனை அப்படித்தான் உருவாக்கினோம்

பாஜகவும் அப்படி செய்வார்கள் என அச்சமாக இருக்கின்றது என ஒரு வரி சேர்த்திருக்க வேண்டுமா இல்லையா?..”