தேர்தல் துளிகள் 12/03/2019 (1)


அங்க உங்கள விட்டா யாரு இருக்கா?”

அட போடா கிறுக்கு பயலே..

என்ன கொண்டாடின அளவுக்கா உன்ன தமிழ்நாட்டு பய கொண்டாடிட்டான்? எப்படி எல்லாம் என்ன இந்த தமிழ்நாடு கொண்டாடிச்சின்னு உனக்கு தெரியுமா? எம்ஜிஆரை விட எனக்கு ரசிகன் அதிகம்ப்பூ..

எனக்கு தேர் என்ன? 60 பவுணுல சங்கிலி என்ன? எப்படி எல்லாம் இருந்தேன் தெரியுமா?

வீட்டை விட்டு நான் வெளியே வந்தா, கன்னியாகுமரி வரை அதே கூட்டம் இருக்குமே , எனக்காக கலையாம இருக்குமே, அந்த காலமெல்லாம் உனக்கு தெரியுமா?

ஆனா அரசியல்னு வந்துட்டா ஒரு பய வோட்டு போடலியே ஏன்?

அதுதாம்ம்பா இமேஜூங்குறது, நாம ரெண்டு பேருமே கஞ்சனுக, அடுத்தவன் பாக்கெட்டில இருந்து எடுக்குறவனுக., ஒரு நாளும் நம்ம கை நீளாது

இன்னும் ஏராளம் இருப்ப்பூ ரகசியம், பாதி எனக்கே தெரியல‌

நான் மட்டும் அரசியலுக்கு வந்து கேவலபடலன்னா, அந்த கல்யாணத்துல அப்படி அனாதையா நின்னுருப்பேனா? இல்ல அவமானபட்டிருப்பேனா?

என் பலம் என்னன்னு காட்டபோய் அடிவாங்கி நின்னேன், இல்லண்ணா அந்த சுதாகரனுக்கு எல்லாம் பேத்திய கொடுத்திருப்பேனா? அவன் மண்டையும் மொகர கட்டையும்

போச்சே.. 40 வருஷ சினிமா புகழ் அரசியல்ல போச்சே..எல்லாம் போச்சே எப்படிப்பூ?

அதுனால சொல்றேன், நான் எப்படி அரசியல்ல காணாமலே போனேனோ, நீயும் அப்படி ஆகத்தான் போற,

இல்ல ஆயிட்டே

அதனால இந்த மய்யமோ மண்ணாங்கட்டியோ அதை எல்லாம் தூக்கி போட்டுட்டு ஸ்டூடியோ பக்கம் போ..

போப்பா அந்த மருதநாயகம் படத்த எடு, மொத்த பயலும் அதத்தான் எதிர்பார்த்துட்டு இருக்கான்..

அரசியல விடுங்கப்பூ , போய் தமிழ் சினிமாவ காப்பாத்துங்க, உங்களத்தான நாங்க நம்பணும்ப்பூ..

அங்க உங்கள விட்டா யாரு இருக்கா?”

நான் 18 வயதில் இருந்தே அதிமுகவில் இருக்கின்றேன்: ஓபிஎஸ் மகன் ரவீந்திரன்

அடடே, அதிமுக பல தேர்தல்களில் வெற்றிபெற்ற ரகசியம் இப்பொழுதான் தெரிகின்றது.