தேர்தல் துளிகள் 26/03/2019

உடல்நலக்குறைவால் இன்றைய பிரசாரத்தை ரத்து செய்தார் முதல்வர்

ராமசந்திரன், ஜெயா என அந்த கட்சி முதல்வர்களுக்கு இந்த உடல்நலகுறைவு என்பது வழக்கமான ஒன்று

அந்த சென்டிமென்டுக்கு பழனிச்சாமியும் தப்பவில்லை என்பதுதான் ஆச்சரியம்

தஞ்சை கோவில் சென்டிமென்டை விட பயங்கரமானது அதிமுக முதல்வர் பதவி..

அரசியல் என கருதி இந்த ஹிர்திக் பட்டேல்
, கன்னையா குமார் போன்றவர்களை வளர்த்து விடுகின்றது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள்

இவை எல்லாம் பின்னாளில் பெரும் சீரழிவிலே முடியும், நாட்டுக்கு இவர்களால் பெரும் சிக்கலே மிஞ்சும்

காங்கிரஸ் வரலாறு அப்படியானது இந்த பிந்த்ரன் வாலே முதல் ஏராளமானோரை காட்டமுடியும்

அந்த தவறை மறுபடியும் செய்ய ஆரம்பிக்கின்றது சில கட்சிகள், நிச்சயம் இது கண்டிக்கதக்கது

இதை எல்லாம் முளையிலே கிள்ளி எறிவது நாட்டுக்கு நல்லது

திருப்பதி கோவிலுக்கு ஏன் பூட்டும் காவலும் என கேட்ட கனிமொழி இப்பொழுது எனக்கு ஏன் கும்பமும் மரியாதையும் என கேட்கவில்லை அல்லவா?

இதுதான் தேர்தல் காலம் என்பது

மழைமேகம் கண்டால் மட்டும் ஆடுமாம் மயில்..

திமுகவின் ஜகத்ரட்சகன் இலங்கையில் 28 ஆயிரம் கோடி முதலீடு செய்ததுபற்றி வாய்திறக்க வேண்டிய திமுக தலமை நயந்தாராவுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்கின்றது

தமிழக மக்களுக்குத்தான் எவ்வளவு மறதி..