தேர்தல் துளி – 21 பெப்ரவரி 2019 (1)

திமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது: முக ஸ்டாலின் பேச்சு

இதுவரை தோற்ற படு தோல்வி பற்றி கேளுங்கள், அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் என வடிவேலு பாணியில் பதில் வரும்

கூட்டணி உடன்பாடு

காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு

அந்த பத்து தொகுதியில் ஒன்றை தலைவி குஷ்புவிற்கு ஒதுக்க வேண்டியது காங்கிரசின் கடப்பாடு

கட்டாய திருமணம்

அதிமுக கூட்டணி கட்டாய திருமணம் : திருநாவுக்கரசர்

மிஸ்டர் திருநா, எத்தனையொ முறை தமிழக அரசு டெல்லி காங்கிரசால் டிஸ்மிஸ் செய்யபட்டது, அதெல்லாம் கட்டாய விவாகரத்தா?

அதிமுக கூட்டணி

ஜெயலலிதாவால் அமைக்க முடியாத கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது: செல்லூர் ராஜூ

அதாவது ஜெயா இருக்கும் வரை மிரட்டபடாத அதிமுக மந்தை அவர் இல்லா காலத்தில் நரி புகுந்த ஆட்டுமந்தையாகிவிட்டது என பொருள்

வலுவான கூட்டணி

என்னதான் மாங்காய் புளியங்காய் என கலாய்த்தாலும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசினாலும் இப்போதைக்கு வலுவான கூட்டணி அதிமுக கூட்டணி, அது இன்னும் வலுவான கூட்டணியாக மாறிகொண்டிருக்கின்றது

ஒரு அராஜக ஆட்சி நடப்பதாக சொல்லும்பொழுது எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கடப்பாடு பிரதான எதிர்கட்சிக்கு உண்டு கலைஞர் அதைத்தான் செய்தார்

எதிரியினை தனிமைபடுத்துவது அரசியலில் ஒரு சாணக்கியதனம்

இங்கோ எதிர்கட்சி தனிமைபடுத்தபட்டு ஆளும் கட்சி பல கூட்டணிகளோடு வீற்றிருக்கும் அதிசயம் அரங்கேறியிருக்கின்றது

இதன் விளைவு நல்லதாக இருக்க வாய்ப்பு குறைவு

இது முக்கோண போட்டி திமுக அதிமுக தினகரன் என மூன்று முக்கிய சக்திகள் களம் காணும் போட்டி

இதில் தினகரனால் தெற்கே ஏற்படும் சரிவை பாமக மூலம் வடக்கே ஈடுகட்ட துல்லியமாக திட்டமிட்டிருக்கின்றது பழனிச்சாமி தரப்பு

ஆக ஒரு எதிரி பலம்பெற விட்டுவிட்டது திமுக‌, இன்னும் யாரெல்லாம் பலம்பெற வாய்ப்பு கொடுப்பார்களோ தெரியாது, ஆனால் கொடுப்பார்கள்

செய்த தவறையும் செய்துவிட்டு அதை மறைக்க அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக தங்கள் பக்கம் வராமலே போக அவர்களை திட்டி தீர்த்து மாபெரும் தவறை மேலும் செய்கின்றது திமுக