தேர்தல் துளி – 26/02/2019 (1)

என்னய்யா செய்றது?

கூட்டணியில மட்டும் இல்லண்ணா அன்புமணி மாதிரி மோடி பிரஸ்மீட் வைச்சாரா? தைரியம் உண்டா? எடப்பாடி வச்சாரா? தைரியம் உண்டான்னு சட்டுன்னு கேட்டிரலாம்

இப்போ கூட்டணியில சிக்கிட்டோம்யா? கம்முண்ணு இருக்கணும்

இதோ அடுத்த சாணக்கியர்

இப்பொழுதெல்லாம் 1 சீட்டுக்காக கூட்டணி லாரியில் தொங்கி கொண்டு செல்வது சாணக்கியதனமாகிவிட்டது

இதோ அடுத்த சாணக்கியர்

அடடட.. நாட்டுல சாணக்கியனுக தொல்லை தாங்க முடியலடா சாமி…

(அதெல்லாம் இருக்கட்டும், சத்திரியனா உங்களை யார் சார்? எப்பொழுது பார்த்தார்கள்? )

மாபெரும் காமெடியான தேர்தல்

வைகோ, ஸ்டாலின், அன்புமணி, விஜயகாந்தின் மகன், தினகரன், தமிழிசை இப்படி மாபெரும் காமெடியாளர்கள் ஒருபுறமிருக்க‌

இபிஎஸ், ஓபிஎஸ் என சீரியஸ் காமெடியாளர்கள் இன்னொருபுறமிருக்க‌

சீமான் கவுதமன் என குறுக்குசால் காமெடிகர்களும் இருக்க மிக காமெடியான தேர்தல் களைகட்டுகின்றது

முதன் முறையாக மாபெரும் காமெடியான தேர்தல் தமிழகத்தில் அரங்கேற இருக்கின்றது, 2 மாதத்திற்கு மாபெரும் நகைச்சுவை கொண்டாட்டம் ரெடி

ஆதரவினை தெரிவிக்காதவர்கள்

நடிகர் கார்த்திக் கூட களத்திற்கு வந்து அதிமுக ஆதரவினை சொல்லிவிட்டார்

இன்னும் தங்கள் ஆதரவினை தெரிவிக்காதவர்கள் இருபெரும் அரசியல்வாதிகள், அவர்கள் முடிவுக்காக பாரதமே காத்திருக்கின்றது

ஒருவர் கி.வீரலட்சுமி இன்னொருவர் சுப உதயகுமாரன்

புரட்சியாளர் ரஞ்சித் இந்த தேர்தலை புறக்கணிக்கின்றாராம்

பரிதாபமே மிஞ்சுகின்றது

விஜயகாந்த் மகனின் பேச்சினை கேட்கும் பொழுது பரிதாபமே மிஞ்சுகின்றது

தன் கட்சி தன் முன்னால் அழிந்து போவதை காணும் யோகம் வெகு சிலருக்கே வாய்க்கும், விஜயகாந்திற்கும் அது வாய்த்திருப்பது தமிழக சாபம்