தேர்தல் துளி – 27/02/2019 (1)

போர் வாள்

“கலைஞரால், `போர் வாள்’ என்றழைக்கப்பட்டவர் வைகோ. தொண்டர்களால், ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டவன் நான். தற்போது தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தைக் காக்கவே” : முக ஸ்டாலின்

அதே கலைஞர் வைகோ வெளியேறியபொழுது “வாள் துருபிடித்துவிட்டது அதனால் வீசிவிட்டோம்” என சொன்னது ஸ்டாலினுக்கு மறந்திருக்கலாம், தமிழகத்திற்கு மறக்காது

துருபிடித்த வாளினை வைத்துகொண்டா போருக்கு செல்வார் தளபதி?

நான் தேர்தலில் போட்டியிடுவேன்; தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: தமிழிசை தகவல்

அக்கோவ் , நல்லா இருப்பீர்கள், இங்கே நடக்கும் காமெடியே சிரித்து கடக்க முடியாதவை

தயவு செய்து வட இந்தியாவில் எங்காவது போட்டியிடவும், இல்லாவிட்டால் பாகிஸ்தான் இந்துமக்களின் பிரதிநிதியாக போட்டியிடவும்

இங்கு நின்றால் உங்களால் சிரித்தே பலபேர் செத்துவிடுவான் என்பதால் தயவு செய்து தொகுதியினை மாற்றவும்