நாம் தமிழர்ணே சும்மா அலறவிட்டோம்ல‌

அண்ணே எங்க ஆடியோ கேட்டீங்கல்ல, நாம் தமிழர்ணே சும்மா அலறவிட்டோம்ல‌

என்னடா அலறவிட்டீங்க, ஏதோ சின்னபசங்க கபடி ஆடுறமாதிரி சண்டையெல்லாம் போட்டு காமெடியா இல்ல‌

அண்ணே, எனக்கு கோபம் வந்துரும். இது வேற‌

என்னடா?

அண்ணே எந்த கட்சியில இது சாத்தியம்? தலைவன் நேரடியா தொண்டர்கிட்ட பேசுறதும், வெளியே போங்குறதும். தலைவன் போடான்னு சொன்னாலும் முடியாதுன்னு நிக்குறோம்ல, இதுதாண்ணே கெத்து மானமுள்ள கட்சிண்ணே, இத பார்த்து மத்த கட்சி எல்லாம் பயந்து போய் இருக்கு , இது ஒரு புரட்சிண்ணே

அடேய் இது என்னடா புரட்சி? பின்ன எதுக்குடா மாவட்டம் வட்டம்னு அமைப்பு, ஆளாளுக்கு எல்லா தொண்டனும் இவருக்கு சீட்டுன்னு நின்னா எப்டிடா?

அதெல்லாம் இருக்கணும்ணே அதுதான் உட்கட்சி ஜனநாயகம், எங்க கட்சில அது நிறைய இருக்கு

அதுக்காக தலைவன இப்படி எல்லாம் எதிர்த்து பேசலாமா இல்ல அவர்தான் கட்சி விட்டு போன்னு சொல்லலாமா?

அட தப்புண்ணா தட்டி கேப்போம்ணே அதுதான் நாம்தமிழர் மானப்படை

தட்டின்னா? எப்படிடா அடிச்சா?

ஆமாண்ணே போன்லயே இப்படின்னா நேர்ல எப்படி, அண்ணன் சீமானே தப்பு செஞ்சாலும் இழுத்து போட்டு அடிப்போம்ணே

அட அவ்வளவு நேர்மையா?

உட்கட்சி சுதந்திரம் , தலைவர் மேல தப்புண்ணா தட்டி கேட்போம் மிதிச்சும் கேட்போம்

சீக்கிரம் மிதிச்சி உட்கட்சி ஜனநாயகத்த காப்பாத்துங்கடா

கண்டிப்பாண்ணே, சீக்கிரம் ஒரு நாள் இழுத்து போட்டு அவர அடிப்போம் பாருங்க, அப்போவாது எங்க கட்சிய நம்புங்கண்ணே

கண்டிப்பாடா.. அதுக்கப்புறம் நம்பாம எப்படி, சரி எப்போ அடிப்பீங்க‌

சிக்காமலா போயிருவாரு, சீக்கிரம் இருக்கும்ணே”