ஸ்டாலினை சாட‌ கொஞ்சமும் தகுதி கொண்டவர் அல்ல

என்ன இருந்தாலும் அந்த கட்சியில் தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து இருப்பவர் ஸ்டாலின்

ஒரு சலூன் கடையில்தான் திமுக இளைஞரணியினை அவர் தொடங்கினார், வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, அதுதான் அவரை கட்சிக்குள் பலமாக கொண்டுவந்தது

கட்சியினை ஒரு நொடியும் பிரியாமல் அதோடு வளர்ந்தவர் ஸ்டாலின்

மிசா காலத்தில் சிறையில் ஸ்டாலின் அடிவாங்கியபொழுது கமலஹாசன் என்பவர் பரதநாட்டியம் ஆடிகொண்டிருந்தார்

இந்திராவினையும் ராமசந்திரனையும் திமுக எதிர்த்த காலங்களில் கமலஹாசன் ஏராளமான பெண்களோடு கிசுகிசுக்கபட்டுகொண்டிருந்தார்

ஸ்டாலின் அரசியலில் போராடிகொண்டிருந்தபொழுது கமலஹாசனுக்கு நடனமும் சினிமாவும் உணவும் நீருமாயிருந்தது

1990களில் ஜெயலலிதாவினை எதிர்த்து ஸ்டாலின் அரசியல் செய்ய தொடங்கியபொழுது கமலஹாசன் சரிகாவின் பார்வைக்கு தவமிருந்தார்

சென்னை மேயராகவும், பல தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ஏராளமான பணிகளை ஸ்டாலின் செய்தபொழுது கமலஹாசன் கவுதமி பக்கம் பார்வையினை திருப்பியிருந்தார்

ஒரு இடத்திலாவது சமூகத்தை பற்றியோ அரசியல் பற்றியோ கமல் பேசியதே இல்லை

அப்படிபட்ட கமலஹாசன் இன்று திடீரென வந்து முக ஸ்டாலினை கேள்வி கேட்பதெல்லாம் ஏற்றுகொள்ளமுடியாத விஷயம்

ஸ்டாலின் அரசியல் கடலிலே நீந்தியவர் இன்னும் நீந்துபவர். ஆனால் கமல் திடீரென அரசியலில் குதித்த கரடி

எந்த இடத்திலும் ஸ்டாலின் தான் அரசியலை விட்டு செல்வதாக சொன்னதே இல்லை, கமலஹாசனோ இரு வருடம் முன்பு வரை அரசியலுக்கு வருவதாக சொன்னதே இல்லை

இவ்வளவுக்கும் கலைஞருக்கு நெருக்கமாகவும் அடுத்த இடமாகவும் இருந்தவர் முரசொலிமாறன், மாறன் இருக்கும்வரை ஸ்டாலின் தொண்டனே

இப்பொழுதும் மாறன் இருந்திருந்தால் ஸ்டாலின் தலைவராகியிருக்க முடியாது

ஒரு சில இடங்களில் ஸ்டாலின் தடுமாற அதுதான் காரணம், ஆம் மாறனே கலைஞரின் அரசியல் வாரிசு. ஸ்டாலின் மாறனாகி கலைஞராக சில தடுமாற்றம் வரத்தான் செய்யும்

கலைஞர் இல்லா இடம் என்பதை விட, முரசொலிமாறன் இல்லா இடத்தைத்தான் ஸ்டாலின் நிரப்பினார், அதுதான் சரி.

இந்த கமலஹாசன் என்பவர் ஸ்டாலினை சாட‌ கொஞ்சமும் தகுதி கொண்டவர் அல்ல, ஒரு காலமும் அந்த தகுதி வரவும் வராது