பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பந்த்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக இன்று மிகபெரிய பந்த் இந்தியாவில் நடக்கின்றது

இந்த கடும் உயர்வுக்கும் அரசின் அந்த பிடிவாத கொள்கைக்கும் காரணம் என்னவென்றால் விஷயம் வித்தியாசமானது

ஸ்டான்டர்ட் ஆயில் என இந்திய ஆயில் கார்பரேஷன் இருந்தபொழுது இங்கு பெட்ரோல் பயன்பாடு பணக்காரரிடம் மட்டும் இருந்தது, டீசல், லாரி போன்றவற்றில் இயங்கும் பேருந்துகள் பணக்காரர்களிடமே இருந்தது

(பின்பு தொழில்முறையில் பயன்படுத்தும் மீனவர்கள் போன்றவர்களுக்கு மானியம் எல்லாம் வழங்கபட்டது)

பெட்ரோலை அதிகம் பயன்படுத்தியது அன்று வரிகட்டும் பணக்காரர்கள், வெளிநாட்டில் இருந்து கார் பைக் எல்லாம் வாங்கி வந்து வரிகட்டும் பெரும் பணக்காரர்கள் என்பதால் அவர்களிடம் வசூலிப்பதில் தவறில்லை என பெட்ரோலுக்கு பெரும் வரி விதிக்கபட்டது

அன்று கச்சா எண்ணெய் விலையும் சில டாலரில் இருந்தது, இந்திய பணமும் பெரும் சரிவில் இல்லை

சிக்கல் எப்பொழுது வந்ததென்றால் அரபு இஸ்ரேலிய போரின் தொடர்ச்சியில் எண்ணெய் விலை எகிறவும், இந்தியாவில் மக்களின் வாங்கும் சக்தி அதிகமானதும் காரும் பைக்கும் சாலைகளை நிரப்ப தொடங்கவும் வந்தது

பணக்காரர் விஷயமாக இருந்த காரும் பைக்கும் எல்லோருக்கும் கிடைத்தது, ஆனால் அரசோ பணக்காரருக்கு விதித்த அதே வரியினை சாதாரண மக்களுக்கும் விதிப்பதை தொடர்ந்தது

இதுதான் பிரச்சினையின் மூலம்

மாறிவிட்ட இந்தியாவில் பணக்காரர், சாமானியர் எல்லோருக்குமான பெட்ரோல் வரியில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இது

ஆனால் செய்யமுடியாத சிக்கல், செய்தால் அரசின் வரி குறையும் பணியாளர் சம்பளம் குறையும், மாநில அரசும் தன் பங்கிற்கு குறைக்க வேண்டி இருக்கும்

ஆக இது சிக்கலான பிரச்சினை, பொருளாதார நிபுணர்களும் கலந்து மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப விலையினை நிர்ணயிக்க வேண்டும்

இல்லாவிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும், காரணம் பெட்ரோல் என்பது நாட்டின் ரத்தம் தேசம் அதில் இயங்குகின்றது, அது விலை ஏறும் பட்சத்தில் எல்லா பொருளும் விலை எகிறும்

எப்படியோ புதிய பெட்ரோல் கொள்கை வகுக்க வேண்டிய நேரம் இது

இந்த போராட்டத்திற்கு இந்தியாவின் 21 கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன, சிவசேனாவும் மம்தா பார்ட்டியும் சத்தமில்லை

பாஜகவினை இந்தியாவினை விட்டு விரட்டுவோமெ என முழங்கும் ஸ்டாலினின் திமுக இதில் ஆதரவு மட்டும் தெரிவிகின்றது

முன்பெல்லாம் திமுக இப்படி இல்லை

பருப்பு விலை கூடினால் கூட “பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி” என கோஷமாக கிளம்புவார்கள்

அரியலூர் ரயில் விபத்தில் “அரியலூர் அழகேசா நீ ஆண்டது போதாதா, நாங்கள் மாண்டது போதாதா” என கிளம்புவார்கள்

திமுகவின் ஸ்பெஷாலிட்டியே இம்மாதிரி கோஷமும் போராட்டமுமே

ஆனால் அது இப்பொழுது சுத்தமாக மாறிவிட்டது, எல்லாம் கலைஞரோடு போய்விட்டது

“பெட்ரோல் விலை ஏற்றிய பெருமாளே” “கண்ணீரில் கார் ஓடுமா?” என்றெல்லாம் கிளம்பியிருக்க வேண்டிய திமுகவினர் இப்பொழுது சும்மா அறிக்கை மட்டும் விடுகின்றார்கள்

எதற்காக?

அன்று திமுக பாட்டாளி இயக்கமாக இருந்தது, பொங்கினார்கள். இன்று பணக்க்கார கட்சியாகிவிட்டது எல்லோருக்கும் ரெய்டு பயம் இன்னபிற‌

தமிழக அரசோ எப்படியாவது இந்த ஸ்டைரைக்கை முறியடித்து மோடி விசுவாசத்தை காக்க தலைகீழாக நிற்கின்றது