அக்கா கேட்ட கேள்வி

அக்கா தமிழிசையினை எப்படி கலாய்த்தாலும் இப்பொழுது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு காங்கிரசாரிடமே பதில் இல்லை

ராகுலை நோக்கி அவர் எழுப்பிய கேள்விகள் நிச்சயம் காட்டமான ஆனால் படுநியாயமான கேள்விகள்

பழைய வரலாறுகள் குறிப்பாக இனதுரோகி என உங்களை அழைத்த சக்திகளுடன் உங்களுக்கு கூட்டணி ஏன் என்பதெல்லாம் காங்கிரசார் கேட்க வேண்டிய கேள்விகள் ஆனால் பாஜக தலைவரான தமிழிசை கேட்டிருக்கின்றார்

அக்கா கேட்ட கேள்வியில் மிக அருமையான கேள்வி காமராஜரை ஏன் காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது? என்பது இதற்கு ராகுலிடமும் பதில் இல்லை

(அதைவிட முக்கியமாக அக்கா கேட்க மறந்த கேள்வி, காமராஜரை படு தீவிரமாக எதிர்த்த திமுகவுடன் எப்படி காங்கிரஸ் கைகோர்த்தது என்பது..)

அக்கா ஏன் இவ்வளவு உக்கிரமாகிவிட்டார்?

ஆம் குமரி அனந்தன் காமராஜரின் சீடராக இருந்தவர், காமராஜர் கண்ட அவமானங்களை நேரில் உணர்ந்தவர்

அவர் வீட்டில் அதை சோகமாக உருக்கமாக பகிர்ந்தது அன்று சிறுவயதாக இருந்த தமிழிசையினை பாதித்திருக்குமோ?

என் அப்பா சோகத்திற்கு காரணமான காங்கிரஸ் திமுகவினை சும்மா விடமாட்டேன் என அன்றே சபதம் எடுத்திருப்பாரோ

இருக்கலாம், அக்காவுக்கு அப்படி ஒரு பிளாஷ் பேக் இருக்கலாம்

எப்படி ஆயினும் இப்பொழுது அக்கா கேட்டிருக்கும் நியாயமான கேள்விக்கு கைதட்டி வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது

அதை படித்து பாருங்கள், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சொல்லாமல் ஆதாரத்தோடு சொல்ல ஸ்டாலினிடமே பதில் இல்லை

எமது யூகம் சரியாக இருக்குமென்றால் விரைவில் பத்திரிகையாளர் கூட்டமெல்லாம் நடத்தி பல அதிரடிகளை காட்ட போகின்றார் அக்கா..