வெளிகிரக வாசிகள் உண்டா

ஒரு விஷயம் உலகை புரட்டி போட்டிருக்கின்றது, அதுவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார்கள்
இந்த விண்வெளியில் மனிதனை தவிர ஏதும் உயிரினம் உண்டா என்பது பல்லாயிர ஆண்டுகளாக கேட்கபடும் கேள்வி அது மனிதன் ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு சென்றபின் அதிகமாயிற்று
வெளிகிரகத்தின் மனிதன் போன்ற உயிரினம் உண்டு என்பது நம்பிக்கை, நாத்திகர்கள் ஒருபடி மேலே போய் அவர்களைத்தான் உலகம் கடவுள் என சொல்கின்றது என சொல்வார்கள்
அதாவது இந்துமத புராணங்களிலும் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இந்த வெளிகிரக வாசிகளின் வாகன சாயலில் பல விஷயங்களை காணமுடியும் என்பதால் அது அவர்களுக்கு தோதாயிற்று
கோவில் கோபுரமே ராக்கெட் வடிவம என்பதும், இன்றும் கருவறைக்கு மேற்பகுதி விமானம் என்றும் சொல்லபடுவது முதல் பல விஷயங்களை எடுத்து போடுவார்கள்
யூதர்கள் என்பவர்கள் உலகை அழிக்க பயன்படுத்தபட்ட இனம் என்பதும் அவர்களின் கடவுள் ஒரு அழிவு சக்தி ஏலியன் என்பதும், அவர்தான் அவர்களுக்கு அறிவினை கொடுத்தார் அதனால் அவர்களால் குழப்பம் அதிகமாகும் இன்னொரு வகை செய்தி
இன்றுவரை யூதர்கள் அதை நிரூபித்தும் வருகின்றார்கள் என்பது வேறுவிஷயம், இன்னொரு உலகபோர் கூட அவர்களால் வரலாம்
எனினும் இதுவரை அறிவியலால் நிரூபிக்க முடியா விஷயம் வேற்றுகிரக மனிதர்களை பற்றியது, ஆதாரம் ஏதுமில்லை
பறக்கும் தட்டுக்கள் என்பார்கள், அதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் செய்த உளவு விமானங்கள் என்பதும் அதில் இருந்த குள்ள மனிதர்கள் எல்லாம் திசை திருப்பும் காரியங்கள் என்பதும் வேறு விஷயம்
ஹிட்லர் செய்ய முனைந்த வேகமான வட்ட வடிவ விமானத்தின் மாடலை கைபற்றி இருநாடுகளும் செய்த அட்டகாசம் அவை
ஆனால் உண்மையில் வெளிகிரக வாசிகள் உண்டா என்றால் உண்டு என்கின்றது பல ஆய்வுகள், அன்றிலிருந்தே அவர்கள் அடிக்கடி பூமிக்கு வந்திருக்கலாம்
எகிப்து பிரமீடுகள் உட்பட பல விஷயங்களுக்கு கணித சூத்திரங்களை கொடுத்திருக்கலாம் ஆப்ரிக்கர்களுக்கு பல விண்வெளி ரகசியங்களை சொல்லி இருக்கலாம் என்கின்றார்கள்
ஆம் இன்று விண்வெளி விஞ்ஞானிகள் சொல்லும் பல முடிவுகள் ஆப்ரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் அன்றே தெரிந்ததில் அதிர்ந்து நிற்கின்றது விண்வெளி ஆராய்ச்சி உலகம்
ஏன் அடிக்கடி வரவில்லை என்றால் ஆய்வாளர்களாக முடிவுக்கு வருவார்கள், அவை நம்மை விட அறிவில் மிக சிறந்த இனமாக இருக்கலாம் அவை தேடியது கிடைக்கா பட்சத்தில் இங்கு வருவதை தவிர்க்கலாம்
உதாரணமாக நாம் ஹெலிகாப்டரில் பறக்கின்றோம், ஒரு ஊருக்கு ஏதோ விஞ்ஞானம் தேடி செல்கின்றோம் அங்கே கட்டுவண்டி கட்டி காளைமாடு பூட்டி இருந்தார்கள் அதுதான் அவர்களின் உச்சகட்ட வளர்ச்சி என்றால் திரும்பி பார்ப்போமா?
இல்லை, அப்படித்தான் நம்மை விட அறிவான இனம் ஒன்று இங்கு வந்திருக்கலாம் என்கின்றார்கள்
இது போக அமெரிக்கருக்கும் ஐரோப்பியருக்கும் விஞ்ஞானத்தின் சில தத்துவங்களை அவர்கள் சொன்னதாகவும் அதில்தான் அந்நாடுகள் படுவேகமாக வளர்ந்ததாகவும் சில‌ தியரி
ஹிட்லருக்கு கூட அவர்களோடு தொடர்பு இருந்தது என்பது ஆதாரமில்லா தியரி
ஏன் அவர்களுக்கு அந்நிய கிரகத்தார் அறிவினை கொடுத்தார்கள் என்றால் உலகம் அழியட்டும் என நினைக்கின்றார்கள் என்பது இன்னொரு ஆராய்ச்சி
(சொல்லமுடியாது இந்த வானத்து தேவர்கள் வந்து சென்றார்கள் என எல்லா மதமும் சொல்கின்றது
ஆக பூமி சண்டையிட்டு அழியட்டும் என்பது அவர்கள் ஏற்பாடாக இருந்தாலும் இருக்கலாம்)
இதெல்லாம் யூகமும், மர்மமும் மட்டுமே எதுவும் முடிவல்ல. ஆனால் உலகின் மர்ம பக்கங்கள் ஏராளம்
ஐன்ஸ்டீன் முதல் பல விஞ்ஞானிகள் இதில் தலையினை பிய்த்தனர், ஹாலிவுட் படங்கள் எல்லாம் கொடூர உருவமே ஏலியன்ஸ் என சொல்லி சம்பாதித்தன‌
ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் மட்டும் சொன்னார், சினிமாவினை பார்த்து முடிவுக்கு வராதீர்கள் அது இயக்குநர் கற்பனை
உண்மையில் அந்நிய கிரகத்தார் நம்மை விட அழகாக இருக்கலாம் இல்லை பூச்சியாக கிருமியாக இருக்கலாம், ஏன் கண்ணுக்கு புலபடாத வகையில் நம் அருகிலே இருக்கலாம், ஆனால் பரந்த விண்வெளியில் அவர்கள் இருக்க சாத்தியம் அதிகம் என்றார்
இன்று நாம் விண்வெளி கிரகங்களில் தங்கம் உண்டா? மீத்தேன் உண்டா என இயற்கை வளங்களை தேடுவது போல அவர்கள் எதையோ தேடி இங்கும் வரலாம், நீரை கூட தேடி வரலாம் என பல விஷயங்களை சொன்னார்
அவரின் சிந்தனையும் முடிவுகளும் ஆச்சரியமான உண்மைகள் என்பதால் அதை ஒதுக்கிதள்ளவில்லை உலகம் பரீசிலனையில் வைத்திருக்கின்றது
இந்நிலையில்தான் அந்த செய்தி வந்திருக்கின்றது
ஆம் இதுவரை விண்வெளி கலனை யாரும் கண்டதில்லை, அதோ வருகிறார் இயேசு, இதோ வருகிறார் இயேசு என்பது போல அங்கே பறந்தது, இங்கே விழுந்தது இங்கே வேகமாக கடந்தது என்பார்களே தவிர் ஆதாரம் ஏதுமில்லை
அமெரிக்காவின் ரோஸ்வெல் பகுதியில் ஒரு பறக்கும் தட்டு கைபற்றபட்டதாகவும் ஒரு நட்சத்திர குள்ளனை பிடித்ததாகவும் செய்திகள் உண்டு ஆனால் ஆதாரமில்லை
முதன் முதலில் பறக்கும் தட்டு பற்றிய ஆதாரம் வந்திருக்கின்றது
ஹவாய் பக்கம் பறந்த அது சிக்கி இருக்கின்றது, இந்த ஹாரிஸ் ஜெயராஜின் பல்லவி போல ஒன்னுமாவாவா என பெயர் வைத்திருக்கின்றார்கள்
அமெரிக்க விண்வெளி நிலையம் அந்த படத்தை தெரிவித்திருக்கின்றது, சர்கார் படத்தை தமிழக அரசியல்வாதிகள் பார்ப்பது போல சதா சர்வ காலமும் விண்வெளியினை நோக்கி தவமிருக்கும் நிலையம் அது
அதாவது வேற்றுகிரக வாசிகள் உண்டா என்பது பற்றிய ஆய்வு நிலையம் அது
அவர்கள் அதை கண்டிருக்கின்றார்கள், ஏதோ எரிகல் அல்லது பாறை என கருதியவர்களுக்கு அதன் நேர்த்தி ஒரு கவனத்தை கொடுத்திருக்கின்றது, நிச்சயம் அது வாகனம் ஆனால் எரிகல் போலவே தயாரிக்கபட்ட வாகனம் என்ற முடிவிற்கு வந்தார்கள்
அது மணிக்கு 50ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தை தாண்டி செல்வதுதான் அவர்களுக்கு பெரும் வியப்பு, அது வாகனமேதான் சந்தேகமில்லை ஆனால் எப்படி இவ்வளவு பெரும் வேகம் சாத்தியம் என தொடர்ந்து ஆராய்ந்தார்கள்
அது அணுசக்தியில் இயங்கவில்லை , கோளின் ஈர்ப்பு விசையும் காரணம் இல்லை பின்னர் எதுதான் காரணம் என ஆய்ந்தவர்களுக்கு இருந்தது அதிர்ச்சி
ஆம், அது சூரியன் போன்ற கிரகங்களின் ஒளியில் இருந்து சக்தி எடுத்து பறக்கின்றது, மானிட குலத்தில் இந்த முன்னேற்றம் எல்லாம் இன்னும் 400 ஆண்டு காலம் ஆனாலும் வராது
ஆக மிகபெரும் அறிவார்ந்த ஒரு உயிரினத்தால் மிக கவனமாக விண் கல் போன்றே உருவாக்கபட்ட விண்வெளி கலம் வழிதவறியோ இல்லை நோட்டமிடும் எண்ணத்திலோ இப்பக்கம் வந்திருக்கலாம் என்கின்றது மேற்குலகம்
அவ்வளவு அறிவார்ந்த இனம் எதை தேடி வந்தது என்ற ஆய்வில் அவர்கள் இருக்கின்றார்கள், நம்மை தேடி வந்தவர்கள் என்றால் நிச்சயம் தகவல் கொடுத்திருக்கலாம் ஆனால் என்பதால் இரண்டே விஷயம் சாத்தியம்
ஒன்று அவர்களுக்கு நாம் தேவையே இல்லை, இன்னொன்று வழிதவறிய கலம் வந்திருக்கலாம், எப்படியோ அது பூமியினை கடந்து சென்றாயிற்று
ஆனால் சங்கம் இதுபற்றிய கனத்த ஆராய்ச்சியினை முடித்து ஆய்வினை அமெரிக்காவிற்கு அனுப்பியாயிற்று
என்ன முடிவு அது?
அந்த வேற்றுகிரகவாசிகள் அந்த ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் சொன்னபடி வேற்றுகிரக வாசிகள் நம் மானிட இனத்தை விட அழகானவர்களாக இருக்கலாம் அல்லவா? அப்படி ஒரு கலம் அன்றே வந்து அதிலிருந்த குழந்தை மும்பை பக்கம் விழுந்திருக்கலாம்
இன்று தலைவி குஷ்புவாக அது ஜொலித்திருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது, தலைவி நிச்சயம் பூலோக அழகு அல்லவே அல்ல அவர் வேற்று கிரக அழகு
ஆக அந்த வழிதவறி விழுந்த குழந்தையினை தேடி அவரின் சொந்த இனம் வந்திருக்கலாம் அதை அமெரிக்க டெலஸ்கோப்கள் படமாக எடுத்திருக்கலாம்
இதை தவிர வேறு வாய்ப்பே இல்லை, சங்கத்தின் முடிவினை அமெரிக்க நிலையமும் அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும், அவர்களும் வேறு முடிவுக்கு வரவே முடியாது
(உலகின் வேகமான விஷயம் ஒளி என்றார் ஐன்ஸ்டீன், ஆனால் மகாபாரதம் அதை விட முக்கியமான விஷயத்தை சொல்கின்றது
தர்மன் ஒரு சோதனையில் உலகிலே வேகமான விஷயம் எண்ணங்கள் என்கின்றார்
அதுதான் மகா உண்மை, இந்த மர்ம கலம் அந்த வேகத்தில்தான் பயணிக்கின்றது, நினைத்த மாத்திரத்தில் அதனால் நினைத்த இடத்திற்கு செல்லமுடிகின்றது, மனதால் இயக்கும் கலன்கள் சாத்தியம் எனும் தியரிக்கு மேற்குலகம் சென்றுகொண்டிருக்கின்றது
இதற்கு அடிபப்டை பாரதத்தில் தர்மன் சொன்ன அந்த ஒருவார்த்தை என்பதில் மாற்றுகருத்தில்லை..)
[ November 9, 2018 ]
Image may contain: water
Image may contain: night

நாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்

Image may contain: 1 person, text

450 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் நாஸ்ட்ரடோமஸ் என்றொருவர் இருந்தார், அடிப்படையில் ஜோதிடர்தான் ஆனால் அதனையும் மீறி வருங்காலத்தை மிக துல்லியமாக சொல்லும் ஆற்றல் அவரிடம் இருந்தது.

அவர் யூத வம்சாவளி, என்னதான் ஒரே கடவுள் , எங்கள் சொந்த கடவுள் ஜகோவா என்றாலும் யூதர்களுக்கு கபாலா எனப்படும் அதர்வண வேத சாயலும், ஜோதிடத்தின் மேலும் அபார நம்பிக்கை உண்டு

மாமன்னன் சாலமோன் அதில் கரை கண்டிருந்தார், அவர் மிகபெரும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர் என்பதும். இன்று இஸ்ரேலியர் அடையாளமாக வைத்திருக்கும் நட்சத்திரம் என்பது அவர் உருவாக்கிய ஒரு மாதிரி தாயத்து யந்திரம் என்பதெல்லாம் வரலாறு

அப்படிபட்ட யூத வம்சத்தில் வந்த ஜோதிடர் நாஸ்டரடாமஸ், கோள்களின் அசைவினை வைத்து கண்ணில் பட்ட மிருகம் முதல் நாடுகளின் எதிர்காலம் வரை மிக துல்லியமாக கணிக்கும் ஆற்றல் இருந்தது

எதிர்கால உலகினை மிக துல்லியமாக கணித்தார், அதாவது அமெரிக்க வல்லரசு உருவாவது, போப்பாண்டவர் வீழ்ச்சி, நெப்போலியன் எழுச்சி, உலகப்போர்கள், பின்லேடன் (அது பற்றிய சர்ச்சை உண்டு), ஹிட்லர், கோமேனி, சோவியத் யூனியன் வீழ்ச்சி, அறிவியல் முன்னேற்றம் , அணுகுண்டு, மூன்றாம் உலகப்போர் என அடுத்த 1000 ஆண்டுகளை சொல்லி சென்றவர்.

அவர் சொன்னபடி உலகத்தில் எல்லாம் நடந்ததால் அவர் தீர்க்கதரிசனம் மீது மக்களுக்கு அச்சம் கலந்த பயம் உண்டு, அப்படியே படித்துகொண்டிருக்கும் பொழுதுதான், அமெரிக்க இரட்டை கோபுரம் இடிக்கபட்டு, நாஸ்டோராடாமஸ் கடும் புகழடைந்தார்.

அதாவது அவர் தனது குறிப்புக்களை கிறிஸ்தவ போப்புக்கு அஞ்சி, கலைஞரின் வசனம் போல மகா குழப்பமாக பிரெஞ்ச் மொழியில் கவிதையாக எழுதியிருந்தார்,

அப்படி இரு சகோதரர்கள் மீது இரும்பு பறவைகள் மொதும், உலகில் பல இடங்களில் நெருப்பு கிளம்பும் என சொல்லியிருந்தார்.

அது போன்றே இரட்டை கோபுரத்தில் நடந்தும் விட்டதால், சகலரும் அவர் குறிப்புக்களை படித்தனர், பாதிதான் புரிந்தது. புரிந்ததை புத்தகமாக இட்டனர்.

அதில் ஒரு புதுநாடு புகழடையும் என்றிருந்த வரி அமெரிக்காவிற்கா அல்லது இஸ்ரேலுக்கா என பட்டிமன்றமே நடப்பது வேறுகதை.

இப்படியான நாஸ்ரடாமஸ் இந்தியாவினை பற்றி இப்படி சொல்லியிருந்தார் மொத்தமே 20 வரிகளுக்குள் அடங்கி விடும்.

மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டநாட்டில் ஒரு அகிம்சாவாதி கொல்லபடுவார், பின் ஒரு இரும்புபெண்மணியால் அத்தேசம் எழும், ஆனால் இடையில் அவர் கொல்லபடுவார், அவருக்கு அடுத்தவரும் வழிப்பறி கும்பலால் கொல்லபடுவார், நாடு தத்தளிக்கும்.

ஆனால் 5 நதிகள் கூடும் இடத்திலிருந்து ஒருவர் வருவார், நீல நிற தலைப்பாகையோடு பதவிக்கு வரும் அவர், பின்னாளில் உலகினை மிரட்டுவார், அத்தேசம் உச்சம் பெறும் என சொல்லியிருந்தார்.

அப்படியே உலக மதங்களை பற்றி சொல்லும்பொழுது, ஐரோப்பா கிறிஸ்தவ மதத்தினை இழந்து சுதந்திரமாகும், உலகின் ஆதி மதம் எழுச்சிபெறும், அம்மதத்தின் ஒரு ஒளியினை உலகம் கொண்டாடும் என முடித்திருந்தார்.

இவ்வளவுதான் அவரின் குறிப்பு, இதற்குள் மோடிதான் அந்த குறிப்பிடபட்டவர் என்றும், இந்துமதமே அந்த எழுச்சி என்றும் தினமலர் பத்திரிகை போட்டு மோடி புகழ் பாடிய கொடுமை எல்லாம் நடந்தது

எவ்வளவு பெரிய பொய்?

நாஸ்ராடாமஸ் சொன்னபடி பார்த்தாலும் கூட, 5 நதி கூடும் இடம் பஞ்சாப். மிக சிறியபகுதி, சிறுபான்மையினர். மக்களாட்சி நடக்கும் நாட்டில் அது சாத்தியமில்லை, ஒருவேளை ராணுவபுரட்சியில் அது சாத்தியமாகலாம் என உலகம் யோசித்துகொண்டிருந்த வேளையில்தான் மாண்புமிகு பன்னீர் செல்வம் முதல்வராகி 2002ல் ஒரு நம்ப்பிக்கை ஒளி வீசினார்.

மகா ஆச்சரியமாக மன்மோகன்சிங் பிரதமராகும் பொழுது, உலகம் நாஸ்ராடாமஸ் குறிப்பு, நீல தலைப்பாகை பார்த்து சிந்திக்க ஆரம்பித்தது, மன்மோகன்சிங் உலகை மிரட்ட போகும் இந்தியர் என சொன்னது

ஆனால் நாஸ்ராடாமஸ் காவேரி கரை திருகுவளை கிராமத்தை பற்றியோ அந்த குடும்பம் அரசில் பங்குபெறுவது பற்றியோ ஒன்றும் குறிப்பிடாமலே, ஸ்பெக்டரம், உரம் என சகல சிக்கலிலும் சிக்கி மன்மோகன்சிங் ஒரு கட்டுக்குள் அகபட்டு இன்று பதவிவிட்டும் சென்றாகிவிட்டது.

இன்று மகா பச்சை பொய்யாக மோடியினை நாஸ்ரடாமஸ் சொன்னார், அவர் ஆட்சியில் இந்தியா பெரும் இந்துநாடாக மாறும் என சொன்னார், ராமர் ஆட்சி பற்றி சொன்னார் என இல்லாத பொய்களை எல்லாம் அப்பத்திரிகை அள்ளி விடுகின்றனர் சிலர்

பாகுபலியில் சத்யராஜிடம் கதைகேட்டும் போராளிகளாக, அக்கட்சியினரும்ம் முழங்காலிட்டு நிற்கின்றனர், எவ்வளளவு பெரும் ஏமாற்றுவேலை இது.

இந்தியாவிற்கு முதல்தேவை விவசாய முன்னுரிமை, இரண்டாம் தேவை ஊழல் ஒழிப்பு இவை இல்லாமல் இந்தியா வளர்ச்சி சாத்தியமே இல்லை.

இந்துமதத்தின் ஒளி என நாஸ்ரடாமஸ் சொன்னது நடந்தது, அது விவேகானந்தர், அவரின் முழக்கத்திற்கு அப்படி ஒரு மரியதை இருந்தது உண்மை.

ஆக நாஸ்ட்ராடாமஸ் சொன்னதில் பாதி கூட முழுமையாக புரியாது, புரிந்தது மாகா சொற்பம். அவற்றில் இந்தியா பற்றி சொன்னது இவ்வளவே.

இதனை கூட மறைத்து எப்படிபட்ட பிரச்சாரம் செய்யும் பத்திரிகைகளை படித்தால் எப்படி மக்களிடம் சிந்திக்கும் திறன் வளரும்.

உண்மையில் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு இக்காலம் வரை தவறவில்லை, தவறவும் தவறாது

இந்தியா ஒரு சீக்கிய தலமையில் பெரும் வல்லரசாக உலகை மிரட்டும் என்று அவர் எழுதியிருப்பது என்றாவது ஒருநாள் நடந்தே தீரும்

இப்பொழுதும் மோடிக்கு நீலதலைப்பாகை அணிந்துவிட்டால் அவர் நாஸ்டர்டாமஸ் சொன்ன அவதாரம் ஆகமாட்டாரா? அவ்வளவுதான் விஷயம் என பக்தர்கள் நீல தலைப்பாகை தேடலாம்

நரிக்கு வேடமிட்டால் சிங்கம் ஆகாது

உலகின் எதிர்கால கணிப்புகளை சொன்னவர்களிலும், அது பலித்த விதத்திலும் பெரும் முத்திரை பதித்தவர் நாஸ்டர்டாமஸ்

அந்த மகா அசாத்திய ஜோதிடனுக்கு இன்று நினைவு நாள்

உண்மையில் ஜோதிடகலை என்பது அபூர்வமானது, உண்மையாக கற்றவர்கள் முறைப்படி பயன்படுத்தினால் அது பலனளிக்கும்

பகுத்தறிவு என அதை மறுக்க முடியாது, ஆனானபட்ட இயேசு பிறக்கும்பொழுதே ஜோதிடர்களால் கண்டறிந்து ஓடி சென்று வணங்க முடிந்திருக்கின்றது

ஜோதிடம் ஒரு மதத்திற்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் உரியதல்ல அது ஒரு கலை

சிக்கல் என்னவென்றால் இந்த அரைகுறை ஜோதிடர்களால் வரும் ஆபத்து, “எண்ட அம்மையே நிங்கள் இன்னும் 4 திங்களில் இந்திய நாட்டோட பிரதம மந்திரியாயானு” என சொல்லி சொல்லி ஜெயலலிதாவினை கடைசியில் அப்பல்லோவிற்கு அனுப்பினார்கள் அல்லவா?

அம்மாதிரியான அரைகுறை ஜோசியர்களால்தான் ஆபத்து

ஜோதிடம் ஒரு வரம், ஒரு கலை. என்று அதை ஒருவன் காசுக்கு விற்க தொடங்குகின்றானோ அன்று அது பலனளிக்காது என்கின்றது சாஸ்திரம்

அது உண்மையும்கூட‌

கோள்களின் சஞ்சாரத்தை கொண்டு உலக வரலாற்றின் எதிர்கால பக்கங்களை எல்லாம் சொல்லி சென்ற அந்த நாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்

அவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

(என்னதான் உலகம் அவரை பற்றி நிறைய சொன்னாலும், சங்கம் ஏற்பதாக இல்லை

காரணம் தங்க தலைவி குஷ்பு பற்றியோ அவர் பெறப்போகும் பெரும் எதிர்காலம் பற்றியோ ஒன்றுமே நாஸ்டர்டாமஸ் சொல்லாததால் அவர் மீது சங்கம் பெரும் சந்தேகம் கொண்டு அவரை புறக்கணிக்கின்றது)

 

நாஸ்ட்ராடாமஸ் பற்றிய தொடர்

Image may contain: 1 person

நாஸ்ட்ராடாமஸ் பற்றி தொடர் எழுது என சிலர் சொல்கின்றார்கள்

அவரை பற்றி எழுதலாம், அவர் ஒரு யூத கிறிஸ்தவர். 1500 களில் பிரான்சில் வசித்தவர். யூதரிலும் ஜோதிடம் உண்டு அப்படியாக இவருக்கும் வந்திருக்கின்றது, பின்பு வருங்காலம் உரைக்கும் ஆற்றலும் வந்திருக்கின்றது

கோள்களை பற்றிய தீவிர ஆய்வில் இறங்கிய அவர், இப்படி எல்லாம் கிரகம் சஞ்சரிக்கும்பொழுது இப்படி எல்லாம் சக்தி மிக்கவர்கள் வருவார்கள், இதெல்லாம் நடக்கும் என கணித்ததாக அவர் வரலாறு சொல்கின்றது , கோள்களின் சஞ்சாரமே உலகை இயக்குவதாக நம்பி கணித்தார் நாஸ்டர்டாமஸ்

ஆச்சரியமான கணிப்புகள் அவை

அமெரிக்க உருவாக்கம், நெப்போலியன், ஹிட்லர், இங்கிலாந்து பேரரசு, ரஷ்ய புரட்சி, உலகப்போர், சீன எழுச்சி, இந்திரா படுகொலை என எல்லாவற்றையும் எழுதினார்

உலகமகா தீவிரவாதி ஒருவன் வருவான் என்றார், அது பின்லேடனும் இல்லை ஒருவேளை வடகொரிய தக்காளியாக இருக்கலாம்

ஒரு சிக்கல் என்னவென்றால் அவர் காலத்து மதவாதிகள் இதனை அனுமதிக்காததால் கமலஹாசனின் தமிழ்போல எழுதிவைத்துவிட்டார், அதனால் பல விஷயம் புரியாது

இன்னொன்று போலிகளும் சிலவற்றை கலந்துவிட்டனர், ஜெயமோகனின் மகாபாரதம் போல் ஆகிவிட்டது அவரின் நூல்

எனினும் அவர் கணிப்புகளில் பல சுவாரஸ்யம் உண்டு, நன்றாக படித்துவிட்டு எழுதலாம்,

முதலில் நன்றாக கவனமாக படிக்க வேண்டும்

ஏனென்றால் இவ்வளவு பெரும் பிரபலங்களை கணித்த நாஸ்டர்டாமஸ் நிச்சயம் குஷ்புவினையும் கணித்திருப்பார், அதை மறைத்துவிட்டனர் அல்லது குறிப்பால் அறியமுடியவில்லை

ஆக படித்துவிட்டு எழுதலாம்

ஒருவேளை குஷ்பு பற்றி நாஸ்டர்டாமஸ் சொல்லவில்லை என்றால் மனிதர் போலி ஜோதிடர் என முடிவுசெய்துவிடலாம்