மானிட மனம் மாறாமல் இங்கு எந்த வெற்றியும் சாத்தியமில்லை, அது நிலைப்பதுமில்லை

Image may contain: one or more people and outdoor

இயேசு கடவுளின் அவதாரம் பாவிகளை மீட்க உலகுக்கு ஓடிவந்தார் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அது அவரை முழுக்க நம்புபவர்களின் நம்பிக்கை

ஆனால் மனிதன் தெய்வமாகலாம், தன்னலமற்ற அன்புடன் அடுத்தவருக்காக வாழ நினைக்கும் மனிதனுக்கு எல்லாமும் கைகூடும் என்பதை அவர் வாழ்வில் அறியலாம்

அவர் தொடக்கத்தில் யூத வெறியன் அதுவும் யூத சட்டங்களை 12 வயதிலே விவாதித்த மிக பெரிய மத வெறியன், ஆம் பைபிள் அதைத்தான் சொல்கின்றது

ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு மக்கள்பால் அன்பு பொங்கிற்று, சாதாரண அன்பு அல்ல அது. கங்கையின் பிரவாகம் போன்ற மாபெரும் அன்பு, கொஞ்சமும் தன்னலமில்லா பேரன்பு

அதை எளிதாக அவருக்கு கிடக்கவுமில்லை, மனிதர் தவமிருந்திருக்கின்றார், தவம் என்றால் கடுமையான தவம்

பைபிள் அதை ஜெபம், விரதம்,சோதனை என சொன்னாலும் நம் தார்மீக தத்துவபடி தவமே. அந்த தவத்தில் அவர் சோதிக்கபட்டிருக்கின்றார்

சுவையான உணவு முதல் பெண்கள், சுகபோகம், பெரும் அரசு என எல்லாமும் அவர்முன் காட்டபட்டிருக்கின்றது, ஆனால் அவர் அதிலெல்லாம் வென்றார், அழிந்து போகும் இதெல்லாம் வேண்டாம் மானிடர் ஞானமும் உண்மையும் அறிவும் பெற வேண்டும், அன்பே உலகை மாற்றும் சக்தி என்பதை அவர் உணர்ந்தார்

அதுதான் அவருக்கு வல்லமையும் ஞானமும் பலமும் கொடுக்க இறைவனால் சித்தமானது.

இஸ்ரேல் ஒரு காலமும் ஆயுத பலத்தால் ரோமையரை வெல்லமுடியாது, வென்றாலும் நீடிக்க முடியாது, அன்பு அது ஒன்றே பகைவனை வெல்லும் வழி, அஹிம்சை ஒன்றே பகைவனை நிரந்தரமாக ஒழிக்கும் வழி என உணர்ந்தார்

“மனிதனின் அரசான யூத அரசனை தேடாதீர்கள், பரலோக அரசை தேடுங்கள் அது அன்புமயமானது, ஆக மனந்திரும்புங்கள்” என அவர் போதிக்க தொடங்கினார்

மனம் திரும்புங்கள் என்பதற்கு அன்பு வழிக்கு வாருங்கள் என்பது அன்றி வேறு பொருள் இல்லை

அதில்தான் மோசே கொடுத்த 3600 கட்டளைகளை “உன்னை போல் பிறரை நேசி” எனும் ஒருவரியில் அவரால் அடக்க முடிந்தது,

அந்த ஒருவரி பாவம் செய்யாது, கொடுமை சிந்தியாது, அன்பு ஒன்றையே உருவாக்கும்

பாவிகளை மீட்க இயேசு வந்தார் என்பதன் பொருள் என்ன? அன்பின் உச்சத்தில் வாழும் மனம் தன்னை போல் அடுத்தவனை நேசிக்கும், அவனுக்கெதிராக எதையும் செய்யாது

பின் எங்கிருந்து பாவம் வரும், ஆம் அன்பே பாவத்தில் இருந்து ஒருவனை மீட்கும் வழி..

அதைத்தான் திரும்ப திரும்ப சொன்னார் இயேசு

அந்த ஞானி நிச்சயம் பெரும் மகான், அந்த யூத குலத்து விடுதலையும் அவர்களின் அடிமையற்ற சுதந்திர வாழ்வும் அன்பு ஒன்றாலே நிலைக்கும் என கண்டார்

அந்த அன்பே அவரை புதுமைகளையும் அற்புதங்களையும் செய்ய வைத்தது

அந்த அன்பே அவரை சிறைச்சாலை, பாவிகள், ஓடுக்கபட்டோ, ஏழை, ஊனமுற்றோர், நோயுற்றோர் என தேடி தேடி ஓட சொன்னது

3 ஆண்டுகளில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கான அன்புமழையினை பொழிந்திருந்தார் இயேசு, கொல்லபடுவோம் என தெரிந்து அந்நாளுக்காகவும் எதிர்பார்த்திருந்தார்.

எவ்வளவோ அற்புதங்களை அவர் செய்ய வைத்தது மக்கள்பால் கொண்ட அன்பு.

அவர் காசுக்கு செய்தாரா? தான் அரசராக செய்தாரா? புகழுக்கு செய்தாரா? இல்லை மதத்துக்கு செய்தாரா?

எல்லாம் மானிடர் மேல் கொண்ட அன்பு ஒன்றால் செய்தார்

அந்நாளில் கொடும் சிலுவையில் அறையபட்டார், மரித்தார். உயிர்த்தார் என நம்புபவர்கள் நம்பட்டும். சில இந்திய யோகிகள் கூட இயேசுவினை போல உயிர்த்ததாக அவர்களின் வரலாறு சொல்கின்றது

ஆனால் சாவின் கடைசி நொடிவரை அவரின் அன்பு மாறவில்லை, மிக அன்போடே அடிவாங்கினார், ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கினார், அபொழுதும் அந்த அன்பு மாறவில்லை

தாளமுடியா வலியில் கிழிந்த உடலோடும் சிலுவையோடும் தள்ளாடி நடக்கும் பொழுதும் அந்த அன்பு மாறவில்லை

சிலுவையில் அடிக்கும் பொழுதும் “அப்பா.. இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள் , மன்னியும்” என அந்த மகா உயர்ந்த அன்பு பொங்கி வழிந்ததே தவிர குறையவில்லை

கடைசி சொட்டு ரத்ததிலும் ஒரு குருடனை குணமாக்கும் அளவு அவருக்கு அன்பிருந்தது.

ஆம் அந்த மானுடம் அன்பில் வாழவேண்டும் என்ற தெய்வ உணர்வு கலந்த ரத்தம் கடைசியிலும் அற்புதம் செய்தது

இயேசு வாழ்ந்ததை விட அவரின் சாவுக்கு பின்னரான காலங்கள்தான் ஆச்சரியமானவை

“இயேசுவினை கொல்ல உத்தரவிட்ட பிலாத்து இவனின் ரத்தத்துக்கு நான் பழியல்ல” என சொல்லி தன் கரங்களை கழுவினான், அவனுக்கு மேல் கழுகு சின்னம் கம்பீரமாய் இருந்தது

ஆம் ரோமரின் சின்னம் கழுகு

யூதரோ “இவனின் ரத்தம் எங்கள் மேல் மட்டுமல்ல எங்கள் பிள்ளைகள் மேலும் இருக்கட்டும்” என சாபத்தை தேடி வாங்கினார்கள்

இயேசுவும் தனக்காக அழுத பெண்களிடம் “அம்மா எனக்காய் அழவேண்டாம், உங்களுக்காக உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள்” என அந்நிலையிலும் அமைதியாய் சொன்னார்

குற்றமற்ற நல்லவர்களின் ரத்தம் சிந்தபட்ட மண் அமைதியாய் வாழா..அதற்கு மிக சிறந்த உதாரணம் இயேசு

இயேசு இறந்தார், எந்த ஆலயத்தையும் யூதரையும் காக்க திட்டமிட்டு அவரை கொன்றார்களோ அந்த ஆலயம் ரோமையரால் இடிக்கபட்டு யூதர் உலகெல்லாம் விரட்டபட்டனர்

இயேசு எந்த ஜெருசலேமுக்காக கண்ணீர் விட்டாரோ அது நாசமானது, அட கண்ணீரை விட ரத்தம் கனமானது அல்லவா? அந்த ரத்தம் விழுந்த இடம் எப்படி இருக்கும்?

அழிவு, மகா அழிவு, இரண்டாயிரம் வருடமாக ரத்தம் மட்டும் ஓடும் ஒரு நகரமென்றால் அது ஜெருசலேம் ஒன்றே

அங்கு அமைதி என்றால் ஓடிய ரத்தம் வற்றுகின்றது அல்லது பெரும் ரத்த ஆறு ஓட போகின்றது எனும் சிறிய கோடைகாலமே அன்றி வேறல்ல‌

ஆம், ரோமர் ஓட வைத்தார்கள், அதிபயங்கர அடி, ரத்தமும் சதையுமாக ஜெருசலேம் நாறி கிடந்தது

எந்த ரோமை அரசு கிறிஸ்துவின் ரத்தத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றதோ அவர்கள் கைக்கு அதிகாரம் கிடைத்தது, ரோமை அரசே கிறிஸ்துவத்தை ஏற்றான்

எந்த யூதர் இயேசுவின் ரத்தம் எங்கள்மேல் இருக்கட்டும் என்றார்களோ அவர்கள் இரத்தம் சிந்திகொண்டே இருந்தனர், தலமுறை தலைமுறையாய் சிந்தினர்

ரோமை அரசன் பின்னாளில் போப் என மாறியதும் சிலுவை போர்கள் என ஆரம்பித்தது அடுத்த காலம், 7 போர்கள், ஒவ்வொரு போரின் முடிவிலும் ரத்தத்தில் நீந்தி கடந்தன குதிரைகள்

மிகை இல்லை சரித்திரம் சொல்லும் உண்மை இது, மூன்றால் சிலுவை போரின் முடிவில் குதிரையின் இடுப்புவரை மனித ரத்தம் நின்றதாம்

அதில் ஒரு மகா சுவாரஸ்யத்தை காணுங்கள், அங்கு ரத்த ஆறு ஓடவிட்டதெல்லாம் ரோம் , இயேசு கொல்லபட்டதில் இருந்து பிரிட்டன் எழும்பும் வரை அவர்கள்தான் பேரழிவினை ஏற்படுத்தினார்கள்

பின் அமெரிக்கா வந்தது, அமெரிக்கா என்ன முத்திரையில் வந்தது தெரியுமா? அதே ரோமரின் கழுகு முத்திரை

ஆம் ரோமருக்கும் அமெரிக்கருக்கும் சின்னம் கழுகு

நிச்சயம் இயேசு எனும் மகா ஞானியின் வாக்கும் சிந்தனையும் ஒன்று கூட பொய்க்கவில்லை, யூத இனம் தனி அரசாக நீடிக்க வேண்டுமென்றால் அது அன்பு ஒன்றாலே சாத்தியம்

ஆம் இன்று இஸ்ரேல் என ஒரு தேசம் இருந்தாலும் அது அமெரிக்காவின் அடிமை தேசமே, அவர்கள் சொன்னதைத்தான் இவர்கள் செய்யமுடியும், இல்லாவிட்டால் என்றோ அல் அக்சாவினை இடித்து தேவாலயம் கட்டி இருப்பார்கள்

இன்றும் அவர்கள் அடிமையே, ஒருவேளை தனி வல்லமையான நாடு என்றாலும் ராணுவ பலம் எக்காலமும் கைகொடுக்காது

இன்று புனித வெள்ளி

அன்று அந்த புனிதமான இயேசுவின் ரத்தம் சிந்தபட்ட ஜெருசலேமில் இன்றுவரை 2000 ஆண்டுகளாக ரத்த நதி ஓடிகொண்டே இருப்பது ஏன்?
உலகில் எங்குமில்லாமல் ஜெருசலேம் மட்டும் இரண்டாயிரம் காலமாக ரத்தத்தில் குளித்து பிணங்களை கிழித்து பூசிகொள்வது ஏன்?

அந்த யூத கூட்டம் வன்முறையால் அரசை அமைக்கலாம், நீடிக்கலாம் என எண்ணியது, இப்பொழுதும் எண்ணுகின்றது, ஆயுதமும் பணமும் எல்லாம் சாதிக்கும் என எண்ணுகின்றது

இயேசு அன்பே வலிமையான ஆயுதம் அதை தேடுங்கள் என அன்றே சொன்னார்..

ஆனால் இயேசு சொன்னது மிக மிக சரி என என்பதை இரண்டாயிரம் ஆண்டுகள் தெளிவாக சொன்னது, இன்னமும் சொல்லிகொண்டிருக்கின்றது

யூத இனம் தங்கள் அறிவால் பலத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைத்தால் அது கொஞ்ச நாளைக்கு வெற்றி என தோன்றும் , பின் அவர்கள் வாங்கும் அடி மிக பலமாய் இருக்கும்

அவர்களுக்கு எதிரிகள் வெட்ட வெட்ட முளைப்பார்கள், இயேசுவின் ரத்தம் கொடுத்த சாபம் அது. ரோமையர், பைசாண்டியர், போப் , இஸ்லாமியர், ஸ்பெயின், ரஷ்யர், ஹிட்லர் வரிசையில் நம் தலைமுறையில் நாம் பார்ப்பதுதான் பாலஸ்தீனிய போராளிகளும் மேற்காசிய சிக்கலும்

நாளையே பாலஸ்தீன் சிக்கல் தீர்ந்தாலும் இன்னொரு பெரும் எதிரி எங்காவது இருந்து வந்து அவர்களை துடைத்தொழித்து விரட்டுவான், அதை நம் வருங்கால சந்ததி காணும்

ஆம் இயேசுவின் ரத்தம் எங்கள் மேலும் எங்கள் தலைமுறைமேலும் இருக்கட்டும் என சொல்லி அவர்கள் இயேசுவினை கொன்றது சாதாரண சாபம் அல்ல‌

அதுவும் அந்த புனிதமான ரத்தம் சிந்தபட்ட ஜெருசலேமில் பரிகாரம் தேடாமல் எங்களுக்கே அந்நகர் என ஆட்டம் போடுவதும் சரியல்ல, எங்கிருந்து அமைதி வரும்

அன்பு வழிக்கு அவர்கள் மனம் திரும்பாமால் இஸ்ரேலியன் எங்கிருந்தாலும் வாழமுடியாது, நிம்மதியாக வாழவே முடியாது

இன்று இஸ்ரேல் பலமான தேசமாக இருக்கலாம், நிம்மதியான யூதன் என ஒருவனை காட்டுங்கள், நிச்சயம் முடியாது

ஆம் பலாத்காரமும், வன்முறையும் அச்சத்தில் ஒரு மாய வெற்றியினை கொடுக்குமே தவிர, நிரந்தர நிம்மதியினை மகிழ்வினை கொடுக்காது

மேற்காசியாவில் அமைதி நிலவ வேண்டுமானால் அந்த யூத இனம் கிறிஸ்து சொன்னபடி அன்பு வழிக்கு மாறுவதே வழி , இல்லையேல் சாபம் தொடரும்

அன்பே என் தந்தையின் கட்டளை என போதித்தார் இயேசு, அன்பே சிவம் என்கின்றது இந்துமதம்

மூலம் ஒன்றே, எக்காலமும் எந்நிலையிலும் அன்பு ஒன்றே மானிடம் செழிக்கும் வழி

அதை போதிக்க வந்தவர்கள் எல்லோரும் வரலாற்றில் நிற்பார்கள் இயேசுவினை போல, எக்காலமும் உலகம் அவர்களை வணங்கி கொண்டே இருக்கும், அன்பின் சக்தி அது. அதன் முன் எந்த ஆயுதமும் எக்காலமும் நிற்க முடியாது, தோற்று கொண்டே இருக்கும்

மானிட மனம் மாறாமல் இங்கு எந்த வெற்றியும் சாத்தியமில்லை, அது நிலைப்பதுமில்லை

அன்பின் சக்தி உணரபடா இடத்தில் ரத்த ஆறும் , கண்ணீரும் ஓடிகொண்டே இருக்கும், ஜெருசலேமில் ஓடுவதை போல..

(கிறிஸ்தவின் சீடன் அல்லது கிறிஸ்தவன் என ஒருவன் சொன்னால் அது பைபிளை பிடித்து கத்துவதோ ஊளையிடுவதோ அல்லது மதத்துக்காக சாவதோ அல்ல‌

அவன் சக மனிதன் மேல் கொண்ட அன்புக்காக வாழ வேண்டும், அந்த மனிதனுக்காக வாழ்ந்து சாக வேண்டும். மதம் இனம் மொழி கடந்து மானிட சமூகம் என ஒன்றுக்காக அதன் மேல் அன்பு கொண்டு தன்னலமற்று வாழவேண்டும்

உணராதோர் கொன்றால் அவர்கள் கையாலே மகிழ்வோடு சாகவும் வேண்டும், அந்த மகா மகா உயர்ந்த அன்பே கிறிஸ்தவம்

அப்படி அவருக்கு பின் யாரும் இல்லை என்பதால் ஒரே ஒரு கிறிஸ்து என வரலாறு குறித்து கொண்டது, எத்தனை ஆயிரம் பேரையோ கொன்ற சிலுவை, இயேசு எனும் அன்பின் வடிவத்தை சுமந்ததால் அது மகா பெரும் அடையாளமும் ஆயிற்று

கொலைகார சிலுவைக்கும் பெரும் அடையாளம் கொடுத்தது இயேசுவின் அன்பு, அதை விட அவரை விளக்கி புரியவைக்க முடியாது….)

பெரிய வியாழன் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் யூதாசும் நினைவுக்கு வருவான்.

Image may contain: 3 people

அந்த யூதாஸை துரோகி என சொல்வதை எல்லாம் நாம் ஆதரிப்பதில்லை, சீசரை கொன்ற புரூட்டஸுக்கும் கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பனுக்கும் உள்நோக்கம் கெடுதலாய் இருந்தது, தெரிந்தே கொன்றார்கள்

ஆனால் யூதாஸ் அப்பாவி, தெரியாமல் சிக்கி கொண்டவன், அந்த வலி காரணமாகவே அவன் செத்தான். தான் ஏமாற்றபட்டதாலே தற்கொலை செய்தான் இல்லையேல் ஒரு வட்டிகடை முதலாளியாக வாழ்ந்திருப்பான்

இயேசுவின் காலம் அவர்கள் ரோமருக்கு அடிமையாய் இருந்த காலம், இன்று பாலஸ்தீனில் இருக்கும் போராளி குழுக்கள் போல அன்றும் ஏராளமான ஆயுத கோஷ்டிகள் இருந்தன‌

இயேசுவின் கோஷ்டி இதில் சேரவில்லை என்றாலும் கூட்டம் அவரை அப்படி தொடர்ந்தது, காரணம் அதுவரை யூத குலத்து இறைவாக்கினர்கள், கடவுளின் கைப்பாவை எல்லாம் பெரும் கெத்து காட்டின, அரசவையிலும் ஆலயத்திலும் மட்டும் அவை கம்பீரமாய் வீற்றிருக்கும்

ஆனால் இயேசு இந்துக்களின் சித்தர் சாயலை காட்டினார், அந்த யூத குலத்துக்கு அது புதிது, மகா புதிது

அப்படி ஒரு வல்லமையுள்ள மனிதன் தங்களோடு தங்களாக திரிவதிலும் நோயினை குணபடுத்தி , பாவிகள் ஒதுக்கபட்டோரோடு இந்த எம்ஜி ராமசந்திரன் போல் இயேசு இயல்பாக கலந்ததிலும் அவர்களுக்கு அவ்வளவு ஆச்சரியம், அவரை கொண்டாடினார்கள்

பெரும் கூட்டம் கூடி இவரே இஸ்ரேலின் மீட்பர் என கொண்டாடினார்கள், அவரை அரசனாக்கவும் முயற்சிகள் நடந்தன‌

இதை யூத மேலிடம் வேறுமாதிரி கவனித்தது, அதாவது இன்றைய பாலஸ்தீனில் அராபத் பின்னால் இண்டிபாதா நடந்தபொழுது இஸ்ரேல் எப்படி அஞ்சியதோ அப்படி அஞ்சியது

காரணம் ரோமருக்கு யூதர்மேல் ஒரு கண் அல்ல இரு கண்ணும் இருந்தது, அந்த இனம் ரோமை அரசனுக்கு அடங்காத இனம், கடவுளின் மக்கள் எனும் இறுமாப்பும் மமதையும் கொண்ட இனம் என்றும் அவர்களை அடிக்கடி தட்டி வைக்க வேண்டும் எனவும் எண்ணியது

ரோமை அரசும் ஒரு தந்திரம் செய்தது, எங்களுக்கு எதிராக ஜெருசமேலில் காரியங்கள் நடந்தால் ஏரோது மன்னன் கட்டிய இரண்டாம் ஆலயத்தை அழிக்கவும் தயங்கமாட்டோம் என மிரட்டி இருந்தது

ஆம் யூதன் எனும் பூதத்தை அடக்கும் விளக்கு அந்த ஆலயம்

இங்கோ மக்கள் இயேசுவினை அரசனாக்கும் அளவு கொண்டாடினார்கள்

யூத மேலிடம் கடுமையாக யோசித்தது, இயேசுவினை ஒரு நல்ல யூதனாக கூட அவர்கள் கருதவில்லை ஆனால் மனிதர் சக்திமான், சரி அது இருக்கட்டும் இவரால் குழப்பம் வந்து ரோமையர் வந்து கோவிலை அழித்தால் .. எத்தனை வருடம் கழித்து வந்த மாமணி அது?

இதனால் அன்றைய தலமை குரு சொன்னார் “நம் இனத்தை விட நம் ஆலயத்தை விட ஒரு மனிதன் அழிதல் நல்லது”

முதலில் மக்களிடம் இருந்து இயேசுவினை பிரிக்க வேண்டும், மக்களும் ரோமையரும் சேர்ந்து அவரை கொல்லவேண்டும், அவரின் சீட கோடிகளை தொலைக்க வேண்டும், யூத இனமும் ஆலயமும் காக்கபட வேண்டும், அட்டகாசமான ரஜதந்திரம் இது

வசதியாக இயேசுவின் போதனைகளில் இருந்து குறிப்பும் வைத்தார்கள் “இவன் கடவுளின் அரசு என சொல்லி ரோமரின் அரசுக்கு எதிராக சதி செய்கின்றான்

மகா முக்கியமாக ஜெருசலேம் ஆலயம் இடிந்து போகும் என்கின்றான்” இன்னும் சில உண்டு

ஆழ கவனித்தால் இதன் சதி புரியும், முதலாவது வரி ரோமானியர் கொந்தளிக்க , இரண்டாம் வரி யூத மக்கள் கல் எடுக்க‌

இதற்கு முதலில் இயேசுவினை கை காலை கட்டி தூக்கி வரவேண்டும், ஆனால் இயேசு யார் எப்படி இருப்பார்?

ஆம் அவர்களுக்கு தெரியாது ஆலயத்திலும் அரண்மனையிலும் உலவிய அந்த கூட்டத்துக்கு அது தெரியாது, அவரின் படம் உருவம் என எதுவுமில்லை

இயேசுவும் “யாவே அழைகின்றார்” என தன் படம் போட்டு பேனர் வைக்கவில்லை, “யாவே விடுவிக்கின்றார்” என கையில் தோரா சகிதம் ஜெருசலேம் மதிலில் போஸ்டராக இருக்கவில்லை

அது போக தன் சீடரில் 12 பேரை தவிர பலரை தயார் செய்து போதிக்க அனுப்பினார், 12 பேரில் கூட யார் இயேசு என்பதை கண்டறிய சிரமம், மகா சிரமம்

இயேசுவின் புகழும் வல்லமையும் தெரியுமே அன்றி அவர்களுக்கு இயேசுவினை தெரியாது

சுருகமாக சொன்னால் இன்றைய ஆப்கனில் எல்லாம் தாடியும் முகமூடியுமாக அலையும் அல்லவா? அதில் முல்லா ஓமரை கூட கண்டறியாமல் அமெரிக்கா திணறியதல்லவா?

அமெரிக்கா காந்தகாரில் முல்லாவினை தேடிய பொழுது அவர் அமெரிக்க படைகளிடம் மணி என்ன என கேட்டுவிட்டு கூட நடந்தார் என்பார்கள்

அப்படித்தான் இயேசு கூட்டத்தின் நடமாட்டமும் இருந்தது

இதனால் அவரை அடையாளம் காட்ட யூதாஸை வளைத்தார்கள், அவரை கொல்வோம் என சொன்னால் உயிரே சென்றாலும் யூதாஸ் காட்டிகொடுத்திருக்க மாட்டான்

மாறாக அவன் இயேசு கோஷ்டியில் காசாளர் எனும் கேஷியராக இருந்தான், நன்கொடை என 30 வெள்ளி காசுகளை கொடுத்து அவனை வளைத்தார்கள், “அந்த நபர் அரசராக மாட்டார் நாங்கள் அவரை அரசராகக் திருவுளம் கொண்டோம், இதை சொல்லாதே தப்பி ஓடிவிடுவார், நாங்கள் எங்கள் ஆட்களை அனுப்புவோம் பிடித்து கொண்டுவந்து பட்டாபிஷேகம் செய்யலாம், அங்கும் நீதான் நிதி அமைச்சர் என்ன சரியா?”

(இது பைபிளில் இல்லை என்றாலும் அதுதான் நடந்தது என்கின்றது கிரேக்கர் ரோமானியர் எழுதிய குறிப்புகள்)

இதில்தான் மயங்கி இயேசுவுக்கு நல்லது செய்வதாக நினைத்து காட்டி கொடுத்தான் யூதாஸ்

சூழ்ச்சியில் மிக மிக வல்லவர்களான யூதரின் கொடூர சூழ்ச்சி அவனுக்கு புரியாது, இவ்வுலகில் அன்றிலிருந்து மாறா விஷயம் சூரியன் சந்திரன் மட்டுமல்ல யூதரின் இந்த குறுக்கு புத்தியும் கூட‌

அப்படி இயேசு அகபட்டதும் அவரை யூத அரசன், ரோமையின் பிலாத்து என நிற்க வைத்து விசாரித்தார்கள், அதிலும் பிலாத்து அவரை விடுவிக்க எண்ணிணான்

ஆனால் யூத குருக்களின் தந்திர சங்கிலி அவனை அட்டகாசமாக கட்டியது, உண்மையில் தேர்ந்த தந்திரம் அது, அதே இரு வரிகளை எடுத்து வீசினார்கள்

“பிலாத்துவே இவன் கடவுளின் அரசு என சொல்லி ரோமரின் அரசுக்கு எதிராக சதி செய்கின்றான். ஏ மக்களே இவன் முக்கியமாக ஜெருசலேம் ஆலயம் இடிந்து போகும் என்கின்றான்”

பிலாத்து வசமாக சிக்கினான் இயெசுவினை விடுவித்தால் அது சீசருக்கு எதிரான சதி , ரோமை செனட் தொலைத்தே விடும் என்ன செய்யலாம் எதற்கும் இயெசுவினை அடித்து மன்னிப்பு கேட்க சொல்லலாம் என அடித்தும் பார்த்தான்

ஆனால் பிலாத்தின் உட்குறிப்பை உணர்ந்த யூத குருக்கள் மக்களை தூண்டி விட்டார்கள் “ஏ கடவுளின் இனமே, உன் கடவுளின் ஆலயத்தை இடிப்பேன் என சொன்னவன் சாக வேண்டாமா?” சொல்லிவிட்டு தன் ஆடையினை கிழித்தார் மதகுரு

குருவின் ஆடை கிழிந்தால் ஒருவன் சாக வேண்டும் என சட்டம் உண்டு, குறிப்பால் அதை தந்திரமாக உணர்த்தினார் குரு

அவ்வளவுதான் கூட்டம் சட்டென இயேசுவினை கொல் கொல் என எக்காளமிட்டது, அதிர்ந்த பிலாத்து இயேசுவினை கொல்ல உத்தரவிட்டு கை கழுவினான்

இதில் பிலாத்துவுக்கே எச்சரிக்கை சொன்னது யூத கூட்டம் “பாத்தாய பிலாத்து, எங்கள் ஆலயத்துக்கு ஒன்று என்றால் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள், உன் அரச குறிப்பில் எழுதி ரோமுக்கு அனுப்பு”

இயேசுவினை தொலைத்து, ரோமையருக்கு எச்சரிக்கை செய்து, மக்களாலே இயேசுவினை கொல்லவைத்து இந்த ராஜதந்திர கண்ணிகள் யூதரை தவிர இன்னொரு இனத்துக்கு சாத்தியமே இல்லை

இயேசுவினை மன்னராக்குவார்கள் என எதிர்பாத்த யூதாஸ் நடப்பதை கண்டு மனமொடிந்து அந்த வஞ்சக கூட்டத்திடம் அழுதான்

அவர்களோ இது உன்பாடு என்றார்கள், அவர்களின் கோர முகத்தில் அந்த 30 காசுகளையும் எறிந்துவிட்டு விரக்தியில் இருந்தான் யூதாஸ்

இனி அவனால் இயேசு முகத்தில் விழிக்க முடியாது, சீடர்கள் விடமாட்டார்கள், யாருக்கும் எதுவும் புரியவைக்கவும் முடியாது

வேறுவழி? அவன் தற்கொலை செய்தான்

யூதர்களோ அவன் பணத்தை தொடாமல் பிணங்களை அடக்கம் செய்ய நிலம் வாங்க சொல்லி ஒதுங்கினார்கள், ஆம் இயேசுவின் ரத்த பணம் அது எனும் அச்சம் அவர்களுக்கு நிறைய இருந்தது

ஒரு விதத்தில் பார்த்தால் யூதாஸ் அப்பாவி, அவனுக்கு துரோகம் செய்யும் மனமெல்லாம் இல்லை, அப்படி ஒரு திட்டமே இல்லை ஆனால் விதி மயக்கியது

அவன் என்ன? இயேசுவுக்கே தன்னை கொல்ல போவது தெரியும், அவரும் கெத்சமணியில் கதறித்தான் பார்த்தார், ஏன் சிலுவையில் கூட கதறினார்

ஆனால் இது கடவுளின் விதி என்பது அவருக்கும் புரிந்தது எனினும் அந்த மானிட சுபாவம் அவரையும் வாழ சொல்லி உள்ளூர கெஞ்சியது

யூதாஸை இயக்குவது கடவுளே என்பதும் அவருக்கும் புரிந்தது, கடவுளின் விதிப்படியே யூதாஸ் தன்னை காட்டி கொடுப்பான் என்பதை என்றோ உணர்ந்தவர் அவர், ஆயினும் யூதாஸோடே சுற்றினார் ஏன்?

கடவுளின் திட்டம் அதுவானால் யூதாஸ் என்ன செய்யமுடியும்?

நிச்சயம் யூதாஸ் தவறு செய்தான் ஆனால் அறியா தவறு, அவன் சாக எண்ணாமல் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் அந்த கருணா மூர்த்தி அவனை மன்னித்திருப்பார்

அவனும் இன்று பீட்டர், பால் போல பெரும் அப்போஸ்தலனாக இருந்திருப்பான், ஆனால் அவன் இயேசு மன்னிக்கவே மாட்டார் என எண்ணி செத்துவிட்டான் பாவம்

பெரிய வியாழன் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் யூதாசும் நினைவுக்கு வருவான், யூத கூட்டம் எவ்வளவு பொல்லாதது என்பதும் நினைவுக்கு வரும்

ஆனால் யூதாஸை புரிந்து கொள்ளா கிறிஸ்தவ கூட்டம் அவன் வஞ்சகன், பேராசைகாரன் என சொல்லும் உண்மை அது அல்ல‌

அவன் வஞ்சகனாயிருந்தால் ஏன் காசை விட்டு எறிய போகின்றான், ஏன் சாக போகின்றான்?

நிச்சயம் அவன் நல்லவன், மனசாட்சியுள்ள்ள நல்லவன்

இயேசுவுக்காய் முதலில் செத்த கிறிஸ்தவன் அவனே, சாட்சியாய் செத்த முதல் அப்போஸ்தலன் அவனே

ஆனால் அவனுக்கோர் கோவிலுமில்லை, அவனை நினைவுகூர்வார் யாருமில்லை, மாறாக தூற்றுகின்றார்கள்

அன்று இயேசுவின் தலமை சீடர் பேதுரு என்பவனே யூதருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தார், ஆனால் யூதாஸ் இயேசு கொல்லபடுவதை காண சகிக்காமல் அவருக்கு முன்பே செத்தான்

இயேசுவின் சீடர்களில் மகா நல்லவன் அவனே

கடவுளின் நாடகத்தில் அவன் வெறும் கருவி, கொஞ்சமும் சுயநலமின்றி தன் விசுவாசத்தினை காட்ட அறியாமல் சிக்கி கொண்ட ஒரு அப்பாவி

நிச்சயம் அவனுக்கும் நாலு சொட்டு கண்ணீர் விட வேண்டும், அறியா பாவத்துக்காக அறிந்து செத்த அந்த மனசாட்சி கொண்ட நல்லவனுக்காக ஒரு ஆலயம் எழுப்பபடவும் வேண்டும், அவனின் பெயர் கிறிஸ்துவத்தில் நல்லோர் பட்டியலில் சேர்க்கபடவும் வேண்டும்

இனியாவது கிறிஸ்தவம் அவனை பழிக்காமல் இருக்கட்டும்.

பெரிய வியாழகிழமை அவனுக்காகவும் சில சொட்டு கண்ணீர் விட்டால் நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கும் மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்