கிறிஸ்தவ புனிதர்களுக்கான நாள்

கத்தோலிக்க பாரம்பரியப்படி இன்று அனைத்து கிறிஸ்தவ புனிதர்களுக்கான நாள் கொண்டாடபடுகின்றது
கிறிஸ்தவ புனிதர்கள் என்றால், இயேசுவின் கொள்கைகளுக்காக உண்மையாக வாழ்ந்தவர்கள் என்று பொருள், இன்றைய எஸ்ரா சற்குணம், பால் தினகரன் இம்சைகள் எல்லாம் இந்த வகையில் வராது,
இரண்டாயிரம் வருட கத்தோலிக்க பாரம்பரியம் ஏராளமான புனிதர்களை கொண்டிருக்கின்றது, அவர்களில் மிக குறிப்பிட்டு சொல்லகூடிய ஒருவர் புனித அந்தோணியார்
அவருக்கென்று ஏராளமான ஆலயங்கள் உலகெல்லாம் உண்டு, தமிழகத்திலும் உண்டு, கச்சதீவில் உண்டு
இன்றும் அவரிடம் உண்மையாக மனமுருகி கேட்கும் வேண்டுதல் கிடைக்கும் என்பது நம்பிக்கை,
அதில் எனக்கும் மனமார்ந்த நம்பிக்கையும் அனுபவமும் உண்டு.
அவரின் ஆலயத்தில் வேண்டிகொள்ள கிறிஸ்தவனாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ஞானஸ்நானம் வாங்கி கிறிஸ்தவனாக மாறியே நன்மை அடைய முடியும் என்ற வியாபாரமில்லை,
ஒரே தகுதி மனிதனாக இருந்தால் போதும், அவர் முன் சென்று கஷ்டத்தில் வேண்டினால் போதும்
எம்மதம், எந்த இனம், எந்த நாடு என்ற எந்த எல்லையும் அவருக்கு இல்லை, ஒரு மனிதனுக்கு தேவை என்றால் வரமருளும் புனிதர் அவர். பிரதிபலன் எதுவும் அவர் செய்ததாகவோ, இந்த கிணற்றிலோ கடலிலோ விழுந்து கிறிஸ்தவனாக மாறு என அவர் கட்டளை இட்டதாகவோ ஒரு தகவலுமில்லை.
மேகம் எல்லோருக்கும் மழைபொழிவது போல புனிதர் எல்லா மக்களுக்கும் அருள்மழை பொழ்ந்துகொண்டே இருக்கின்றார்.
அப்படி தென்னகத்தின் பல அந்தோணியார் ஆலயங்களை பார்க்கின்றோம், எல்லா மதத்து மக்களும் வந்து வணங்குகின்றார்கள், நன்றிகடன் தீர்ப்பார்கள்
இன்னும் கிடா வெட்டுதல், மொட்டை அடித்தல் என தமிழ் கலாச்சாரத்துடனே அவரை கொண்டாடுவார்கள், புனிதரும் அதனை மகிழ்வாக ஏற்றுகொள்கின்றார் , இது பைபிளில் எம்பெருமான் இயேசு சொல்லாதது என அவர் அலறி அடித்து ஓடவில்லை.
தன் பக்தன் தனக்கு பிடித்ததை அல்ல, அவனுக்கு பிடித்ததை தனக்காக செய்யும்பொழுது தெய்வங்கள் மகிழ்கின்றன‌
(சுத்த சைவமான சிவபெருமானுக்கு கண்ணப்பன் தன் கண்களை குருதி கொட்ட கொடுத்தபொழுது அவர் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து திரும்ப வரமளித்தார் என்கிறது புராணம் )
உடனே இந்த பிரிவினை கிறிஸ்தவர்களுக்கு பொத்துகொண்டு வரும், ஏய் இது உருவ வழிபாடு, இது இந்துக்கள் முறை பைபிளில் சொல்லபடவில்லை என குதிப்பார்கள்
எது உருவ வழிபாடு?
ஏக இறைவனுக்கு ஒரு உருவம் அமைப்பது அவ்வகையில் வரும், அப்படி பரம்பொருளை யாரும் கண்டதுமில்லை, அவருக்கு சிலை வைக்கபோவதுமில்லை
இது நினைவு கூறல், இப்படி ஒரு மனிதர் வசித்தார், கிறிஸ்து இயேசு அவர் கைகளில் குழந்தை வடிவில் தவழ்ந்தார். இப்படி எப்பொழுதும் ஜெபமாலை இருந்தது, இந்த மாதிரி துறவி உடை உடித்தியிருந்தார், தலையினை கூட அலங்கோலபடுத்தி வைத்திருந்தார் என்பதை சொரூபம் வடிவில் நினைவு கூறுகின்றார்கள்.
சொரூபம் என்றால் வடிவம் என பொருள்
4 வரிகளில் எழுத்தில் இருப்பவர்
இருப்பதை, சிலை எனும் வடிவில் காண்பது தவறே அல்ல,
அவரை கடவுள் என சொல்லவும் இல்லை. இறைவனிடம் வாழ்ந்த காலமெல்லாம் இணைந்திருந்தவர், இன்றும் அற்புதங்களை செய்கின்றார் என நம்புகின்றோம், ஜெபிக்கின்றோம்
இதனை உடனே டேய் இறைவனுக்கும் உனக்கும் இடையில் ஆள் எதற்கு என்ற அந்த பிரிவினைகள்தான், பின்பு பால் தினகரன் முன்பும் இன்ன பிற பாஸ்டர்கள்முன்பும் எங்களுக்காக ஜெபியுங்கள் அய்யா என கதறுவார்கள், விசித்திரமானவர்கள்
இன்னும் இறந்தவன் கடவுளிடம் ஜெபிக்கமுடியாது என்பார்கள், ஆனால் பைபிளில் கடவுள் தன் சீடர்களுக்கு வானலோகத்தில் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் நீங்கள் வரலாம் எனும் பைபிள் வரியினை நம்புவார்கள், கிறிஸ்து மரண நேரத்தில் தன் அருகிருந்த திருடனிடம் இன்றே என்னோடு பரலோகத்திலிருப்பாய் என்பதை மாய்ந்து மாய்ந்து வாசிப்பார்கள்.
இயேசு சொன்ன கதையில் வானத்தில் இருக்கும் ஆபிரஹாமிடம் ஒரு யூதன் ஜெபித்த கதையினையும் கவனமாக சொல்லி உருகுவார்கள்.
அதாவது கிறிஸ்துவே பரலோகத்தில் எல்லோரும் வரலாம், என்னோடு உறவாடலாம் என சொல்லியிருக்கும்போது இவர்கள் வேறு மாதிரி சொல்லிகொண்டிருப்பார்கள்
திருடனையே தன்னோடு அழைத்து செல்ல உறுதியளித்த இயேசு, தனக்காக வாழ்ந்தவர்களிடம் எவ்வளவு பரிவு கொண்டிருப்பார் என சிந்திக்கமாட்டார்கள்
எல்லாம் காணிக்கை படுத்தும்பாடு,
அதாகபட்டது புனிதர்களிடம் கத்தொலிக்கர்கள் வேண்டிக்கொள்வது பைபிளுக்கு எதிரானது,
ஆனால் இவர்கள் பாஸ்டர்களுக்கு காணிக்கையும், கல்லூரியும், பங்களாவும் கட்டிகொடுத்து, திருமணமும் செய்வித்து எங்களுக்காக குடும்பமாக ஜெபியுங்கள் என சொல்வது முற்றிலும் பைபிளுக்கு ஏற்புடையது
நம்பி தொலையுங்கள், அவர்களின் கிறிஸ்தவம் அப்படித்தானிருக்கின்றது, அந்நாளைய மிஷனரிகள் எல்லா மக்களுக்குமாக கட்டி வைத்த கல்வி நிலையங்களையும், மருத்துவ நிலையங்களையும் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் என்ற நிலையில் இவர்கள் செய்யும் அட்டகாசம் கிறிஸ்துவுக்கே அடுக்காது
அவை எல்லாம் அன்று இந்த தேச மக்களுக்காக அந்த பெருந்தன்மையான வெள்ளை கிறிஸ்தவர்களால் பிரதிபலன் பாராமல், பென்னிகுயிக் அணை கட்டியது போல கட்டியது.
இன்றோ இவர்களிடம் சிக்கி அவர்களுக்கு மட்டுமே பலன் தருவது போல சென்றுவிட்டது, நல்லவேளையாக பென்னிகுயிக் எனும் மகராசன் கிறிஸ்தவனாயினும் மத அடையாளங்களில் சிக்கவில்லை, சிக்கி இருந்தால் கேரளாவுக்கும் இல்லை, தமிழகத்திற்கும் இல்லை
விசுவாசி கட்டிய அணை விசுவாசிகளுக்கே என கிளம்பி இருப்பார்கள், ஒரு மாதிரியானவர்கள் அவர்கள்
அவர்கள் புனித அந்தோணியாரை போல இனம்,மதம், மொழி எல்லாம் கடந்து மனிதனை மனிதனாக பார்த்து, அவனுக்காக எந்நாளும் கடவுளிடம் வேண்டும் புனிதர்கள் அற்பமாகத்தான் தெரிவார்கள்,
அவர்களின் மூளைச்சலவை அப்படி
அவர்களை அவர்களின் கடிவாளமிட்ட பைபிள் காப்பாற்றட்டும், எங்களை மனிதாபிமானத்தோடு கூடிய, எல்லா மக்களையும் மானுட நோக்கில் காணும் கத்தோலிக்க முறை காப்பாற்றட்டும்.
புனிதரின் ஆலயம் எங்களுக்காக மட்டுமல்ல, எல்லா மக்களுக்குமாக திறந்தே இருக்கின்றது, ஆறுதல் தேடுவோரும், அல்லலுறுவோரும் யாராயினும் எந்த நிர்பந்தமும் இன்றி வந்து வணங்கலாம் நலம் பெறலாம்
இன்று எல்லா புனிதர்களுக்குமான நாள், ஆயிரம் நட்சத்திரம் உண்டெனிலும் மிக பிரகாசமாக விளங்கும் நட்சத்திரங்கள் உண்டு
அவ்வகையில் எம்மை ஆட்கொண்ட, எம்மை மட்டுமல்ல தன்னை வணங்கி நின்ற எல்லோரையும் ஆட்கொண்ட எம்பெருமான் புனித அந்தோணியாருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
Happy All Saints Day St. Antony
[ November 1, 2018 ]
Image may contain: 2 people