அதிரடி பாணி – இஸ்ரேல்

ஈரான் அணுகுண்டு செய்வதை தடுக்க இஸ்ரேல் கடும் பிரயர்த்தனத்தை 10 ஆண்டுகளாக செய்துவருவது உலகம் அறிந்தது

இஸ்ரேல் குண்டுவீசலாம் என அஞ்சிய ஈரான் அந்த அணுகுண்டு ஆலையினை பூமிக்க்கு அடி ஆழத்திலே அமைத்தது வேறுவிஷயம்

குண்டுவீசமுடியாவிட்டால் என்ன? விஞ்ஞானிகளை தூக்கிவிட்டால் வெற்று யுரேனியத்தை வைத்து ஈரான் என்ன செய்யும் என கருதிய இஸ்ரேல் மொசாத்தை களமிறக்கியது

கிட்டதட்ட 3 தலமை விஞ்ஞானிகளை ஒழித்தது இஸ்ரேல், அதெல்லாம் அதிரடி பாணி

விஞ்ஞானியின் கார் டிராபிக்கில் நிற்கும் எங்கிருந்தோ மோட்டார் சைக்கிளில் வரும் இருவர் சரியாக சிக்னல் விழும் நேரம் காந்த குண்டினை காரின் பெட்ரோல் பக்கம் ஒட்டிவிட்டு செல்வார்கள், கொஞ்ச நேரத்தில் கார் வெடிக்கும் விஞ்ஞானி காலி

இன்னும் ஒருவர் வெளிநாடு சென்றார் பிணமாக வந்தார்

இதன் பின் இன்னொருவர் பற்றி தகவல் இல்லை ஒன்று கொன்றவர் சொல்லவேண்டும் இல்லை செத்த தரப்பு சொல்லவேண்டும், இரண்டுமே மவுனம் என்றால் எப்படி?

நான்காவதாக ஒருவர் மிஞ்ஞ்சினார் அல்லவா? அவர்தான் இப்பொழுது விஷயம்

அவர் இப்பொழுது ஈரான் அணுகுண்டு தயாரிக்கின்றது என சொல்ல அமெரிக்காவில் தயாராகி கொண்டிருக்கின்றார் என்ற செய்தி கசிகின்றது

ஆம், அவரை ஈரானில் இருந்து கடத்தி துருக்கி வழியாக பிரான்ஸ் கொண்டு சென்று அங்கு ஒரு கோணிபையில் கட்டி படகில் போட்டு லண்டனில் சேர்த்துவிட்டது மொசாத்

லண்டன் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டது என்கின்றார்கள்

அவர் விடுமுறை கழிந்து வருவார் என எதிர்பார்த்த ஈரானுக்கு எங்கோ உதைத்தது , களத்தில் ஈரானின் உளவுதுறையினை இறக்கினால் விஷயம் வில்லங்கமானது புரிந்திருக்கின்றது

தங்கள் கட்டுபாட்டை மீறி ஈரானில் இருந்து அவர் கடத்தபட முடியாது என ஈரானின் புரட்சிபடையும் உளவுபடையும் அறுதியிட்டு சொல்லும்பொழுது இஸ்ரேல் தன் வழக்கமான மனநெருக்கடி கொடுக்கும் வேலையினை செய்கின்றது

ஒருவனை மனதால் குழப்பிவிடுவது அவர்களுக்கு கைவந்த வாய்வந்த கலை, பைபிள் காலமுதல் அப்படித்தான்

மனம் கலங்கிவிட்டால் மாவீரனும் வீழ்ந்துவிடுவான் அல்லவா? எந்த ஆயுதமும் அவனுக்கு பலனளிக்காது, மகாபாரதத்தில் கண்ணன் சொல்வது இதுதான்

கர்ணனை அப்படித்தான் வீழ்த்தினான், பீஷ்மரும் அப்படித்தான் வீழ்ந்தார், விதுரரும் அப்படித்தான் ஒதுங்கினார்

ஏன் துரோணரே அப்படி மனகுழப்பத்தில் இருக்கும்பொழுதுதான் கொல்லபட்டார்

இதே தந்திரம் கொண்டது இஸ்ரேல்

அணுவிஞ்ஞானி கடத்தபட்டார் என ஈரான் கவலை கொள்ள, அவர்களிடம் அந்த விஞ்ஞானியே மொசாத்தின் ஆள்தான், அவராகத்தான் மொசாத்திடம் வந்தார்

3 விஞ்ஞானிகளை கொல்ல உதவியதே அவர்தான் என ரகசியமாக விஷயத்தை கசியவிட்டிருக்கின்றது இஸ்ரேல்

இதை நம்ப முடியாமல், நம்பாலும் இருக்க முடியாமல் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது ஈரான்

பாருங்கள், இனி ஈரான் அணுகமிஷனில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை சந்தேகத்தோடு பார்ப்பார்கள், கடும் குழப்பம் அதிகரிக்கும் , அந்த அணுகமிஷன் இனி தளரும் ஈரானின் அணுகுண்டு கனவு கனவாகவே போகும்

இன்னொரு பக்கம் உண்மையிலே அவர் அமெரிக்காவிடம் இருக்கின்றாரா? இல்லை காணாமல் போன அவரை வைத்து இஸ்ரேல் ஏதும் ஆடுகின்றதா எனும் அடுத்த தலைவலியும் ஈரானுக்கு உண்டு

ஆம் காணாமல் போனவர் இன்னும் வாய்திறக்கவில்லை, அவர் ஈரான் அணுகுண்டு செய்கின்றது நானே சாட்சி என ஆதாரங்களை கொடுத்தால் ஒரே நிமிடத்தில் உலக நிலை மாறும்

ஆனால் அவர் இன்னும் வாய்திறக்கவில்லை

ஈரான் மிக பரபரப்பாக அந்த அறிக்கையினை எதிர்பார்க்கின்றது , ஆனால் வரவில்லை

உண்மையில் அந்த விஞ்ஞானி என்ன ஆனார் என தெரியவில்லை, மிக பெரும் துருப்புசீட்டான அவரை மொசாத் என்ன செய்தது என்று தெரியவில்லை

ஆக மொசாத் மாபெரும் காரியத்தை சாதித்துவிட்டு மகா அமைதியாக அடுத்தகட்ட நடவடிக்கையினை மகா மர்மாக செய்கின்றது என உலகம் அனுமானிக்கின்றது

சிரியா ஊடாக இஸ்ரேலின் எல்லையினை தொட்டு நின்ற ஈரான் இப்பொழுது மாபெரும் அதிர்ச்சியில் இருக்கின்றது

அடுத்த பரபரப்பான காட்சிகள் எப்பொழுதும் நடக்கலாம்

இதுதாண்டா மொசாத் : 04

Image may contain: 1 person, close-upவெறியோடு அலைந்த மொசாத்திற்கு ஒரு தகவல் நார்வேயில் இருந்து வந்தது, பொதுவாக மொசாத்தின் தகவல்கள் 100% துல்லியமானவவை, ஆனால் அம்முறை ஒரு உளவாளி சொதப்பிவிட்டான்.

அவர் இன்று தினகரன் எடப்பாடி அணிக்குள்ளும், எடப்பாடி தினகரன் அணிக்குள்ளும், சிலர் சொல்வது போல சசிகலாவின் உளவாளிகள் திமுகவில் இருப்பது போல உளவாளிகளாக இருந்திருக்கவேண்டும்.

ஒரு மனிதனை போல உலகில் 7 பேர் இருப்பார்கள் அல்லவா? அப்படி மீதி 6 பேர் எங்கிருந்தார்களோ தெரியாது, ஒருவன் அபு ஹாசன் போல மொராக்கோவில் இருந்தான்.

பிழைப்பிற்காக ஐரோப்பாவிற்கு சென்ற அவன் நார்வேயில் ஒரு ரெஸ்டாரண்டில் வெயிட்டராக இருந்தான், ஏதோ சூப் குடிப்பதற்காக அங்கு சென்ற மொசாத் ஏஜெண்டின் கண்ணில் சிக்கிவிட்டான்

அவ்வளவுதான், அபுஹாசன் நார்வேயில் இருப்பதாக தகவல் இஸ்ரேலுக்கு பறந்ததது. இரையினை குறிவைத்த கழுகு போல, தனியே பன்னீர்செல்வத்தை கண்ட தினகரனை போல பாய்ந்தது மொசாத்.

Image may contain: 1 person, close-upசிந்திக்க நேரமில்லை, மொசாத்தின் தகவல்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என சொல்லிகொள்வதால் தயக்கமின்றி காரியத்தில் இறங்கினார்கள், நார்வே தெருவில் தன் கர்ப்பிணி மனைவி கதற 4 முறை சுடபட்டு இறந்திருந்தான் அந்த மொரோக்காவின் அகமது பவுச்சிக்கி

ஏதோ கொலை என விசாரணையில் இறங்கிய நார்வே போலிஸுக்கு அதிர்ச்சி, பாம்பின் வாலை பிடித்து இருப்பது தெரிந்தது, செத்தது அபு ஹாசன் அல்ல, மொராக்கோ அகதி என்பதை அவர்கள் உறுதிபடுத்தினார்கள்

அதோடு மொசாத்தின் ஏஜெண்டுகள் 6 பேரை கைதும் செய்த்தார்கள், ஒரு கட்டத்தில் இஸ்ரேல் வகையாக சிக்கிவிட்டது, பெரும் ராஜதந்திர சிக்கல் ஏற்பட்டது, உலக அரங்கில் குற்றவாளியாய் நின்றது இஸ்ரேல், காரணம் மொசாத்தின் சொதப்பல்

எப்படி நிகழ்ந்தது தவறு?

Image may contain: 1 person, smiling, close-up

இந்த லெபனானிய அழகியும், அந்த லண்டன் சதிகார அழகியும் குஷ்பூ அளவிற்கு இல்லை

அவன் அரைகுறை ஆங்கிலம் பேசினான், அசல் அபு ஹாசனாக இருந்தான், ஒரு மாதிரி பயந்து பயந்து அலைந்தான், குறிப்பாக மனைவி அழகாக இருந்தார் என என்னென்ன சாக்குபோக்கெல்லாம் அந்த தகவல் கொடுத்தவன் சொல்லிகொண்டிருந்தான்.

இனி நீ மொசாத் ஏஜெண்டின் கால் ஷூவினை கூட துடைக்க தகுதி இல்லாதவன் என சொல்லிவிட்டு அடுத்த கூட்டத்தை போட்டது மொசாத்.

நடந்த தவறினை ஏதோ டெக்னிக்கல் பால்ட் என சொல்லிவிட்டு, இனி இப்படி நடக்க கூடாது. அடுத்தமுறை அபு ஹாசன் மட்டும் சாகவேண்டும் என அலட்டிகொள்ளாமல் கூட்டத்தை முடித்தார்கள்.

அதன் பின் அந்த ராஜதந்திர சிக்கலை இஸ்ரேல் எப்படி கையாண்டது என தெரியவில்லை, ஆனால் கடந்தது. எப்படி என்றால் அதுதான் இஸ்ரேல்

பின்னாளில் பாலஸ்தீன் போராளி தலைவரும், இன்று கத்தாரில் வசிக்கும் காலித் மிஷாலும் மொசாத்தின் கொலை முயற்சியில் இருந்து ஜோர்டான் மன்னரால் தப்பித்தார், மொசாத் சறுக்கிய மிக சில சம்பவங்கள் இப்படி உண்டு எனினும் நார்வே சம்பவம் அவர்கள் வரலாற்றில் மிக பெரும் சறுக்கல்

சறுக்கினார்களே தவிர, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என சொல்லிகொண்டு மொசாத் தீவிரமாக தேடியது.

இப்படி மொசாத் தீவிரமாக தேட, அந்த அபுஹாசன் எங்குதான் இருந்தான்?

அவன் அக்கால மிஸ் லிபியாவினை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தான், இதனை கண்டுபிடிக்க மொசாத்திற்கு 5 ஆண்டுகள் ஆகியிருந்தது

சிஐஏவிற்கும் அபுஹாசனுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு இதுதான் பெரும் ஆதாரமாக முன் வைக்கபட்டது, அபுஹாசனை கண்டுகொண்டார்களே தவிர கை வைக்க துணியவில்லை, நினைத்திருந்தால் அமெரிக்காவிலே முடித்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. பல காரணங்கள்

அபு ஹாசனோ நார்வேயில் இஸ்ரேல் வசமாக சிக்கிவிட்டது, இனி தன்னை இப்போதைக்கு தேடாது என எண்ணியிருந்தான், சுதந்திரமாக சுற்ற ஆரம்பித்தான் அவன் மீது குண்டூசி கூட படாமல் காத்தது சாட்சாத் மொசாத்

ஆம் தற்செயலாக ஏதும் நடந்தால் கூட அபுஹாசன் மொசாத் என பதுங்கிவிடுவான் எனும் எச்சரிக்கை அது.

கொஞ்சம் கொஞ்சமாக பயம் மறந்த அபுஹாசன் முதலில் பக்கத்து தெரு, பக்கது ஊர், பக்கத்து நாடு என சுற்ற ஆரம்பித்தான், ஆபத்தில்லை என்றவுடன் லெபனானுக்கே வந்தான்

இது லெபனான், எங்கும் நமது ஆட்கள். மொசாத் இனி இங்கு வரமுடியாது எனும் மிதப்பில், பெய்ருட்டில் ஒரு அப்பார்மெண்டில் குடியிருந்தான்.

அவன் பெய்ரூட் வர மகா முக்கியமான காரணம் அந்த , மிஸ் லெபனான். அவள் அவ்வளவு அழகி என்கின்றார்கள். குஷ்பூ அளவிற்கு சொல்லமுடியாது என்றாலும் அந்த லெபனானில் அவள்தான் அழகி.

அபுஹாசன் ஒரு விளையாட்டு பிள்ளை, ஏகபட்ட பட்டாம்பூச்சி அந்த அழகன் பின்னால் சுற்றிகொண்டிருந்தார்கள், 1980களில் இம்ரான்கான் போல 1970களில் நிச்சயமாக அபுஹாசன், அவன் ஜெர்மனியில் படிக்கும் பொழுதே நிறைய பெண்கள் சுற்றினார்கள், அப்படிபட்ட அபுஹாசனுக்கு அந்த அழகி சிக்கியது ஆச்சரியமில்லை

அவளை 1978ல்தான் திருமணம் செய்தான் ஹாசன், தன் பிள்ளை லெபனானில்தான் பெற்றெடுப்பேன் என அவள் சொன்னததாலும், பிள்ளைக்கு லெபனான் பாதுகாப்பு என்பதாலும் அங்கு வந்தான் அபுஹாசன்.

இம்முறை பல நூறுதடவை உறுதி செய்து அபுஹாசனை கொல்ல முடிவெடுத்தது மொசாத், பல வகை சோதனைகள், ஏகபட்ட தகவல்கள், போராளிகள் உள்ளே ஊடுருவி அவனை நேரில் கண்ட உளவாளி தகவல்கள், அபுஹாசனின் மனைவி செல்லும் மருத்துவமனை என பல தகவல்கள்

குறிப்பாக அபுஹாசனின் தாய், அவரும் பெய்ரூட்டில்தான் வசித்தார், அடிக்கடி அபுஹாசன் அவரை சென்று சந்திப்பது வழக்கம். தாயினை முதலில் உறுதிபடுத்தினார்கள், அப்படியானால் இவன் நிச்சயமாக நமது குறி என உறுதிபடுத்தினார்கள்.

மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்த தங்கள் தந்திர திட்டத்தை அரங்கேற்றினார்கள், அவள் மொசாத் ஏஜெண்ட், பெயர் எரிக்கா

அவள் லண்டன் பாஸ்போட்டில், லண்டனில் படித்த டிகிரியுடன் ஏதோ டிரஸ்ட் கொடுத்த லட்டருடன் பெய்ரூட் வந்தாள், பாலஸ்தீன அகதிகள் முகாமில் தொண்டு செய்ய வந்திருப்பதாக சொன்னாள்.

அங்கு அபுஹாசனும் வருவது வழக்கம், சும்மாவே பெண்களை கண்டால் ஏதாவது ஒரு அம்பை எடுத்து மன்மதன் ஹாசன் மீது எய்வது வழக்கம், அப்படி அவனுக்கு அடிக்கடி வேலை இருந்தது.

எரிக்கா விஷயத்தில் மொத்தமாக ஐவகை அம்பையும் எறிந்தான் மன்மதன். மொத்த விஷயத்தையும் கறந்தாள் எரிக்கா, பயிற்சி அப்படி.

இவ்வளவிற்கும் லெபனான் அரசின் பாதுகாப்பில் இருந்தான் அவன், அந்த எரிக்காவினை கூட முழுக்க விசாரித்து அவள் அடுத்த அன்னை தெரசா என சொல்லித்தான் அனுமதித்திருந்தார்கள்

அபுஹாசனின் மெய்காவல் படை கூட அவள் மீது சந்தேகமில்லை என சர்ட்பிக்கேட் கொடுத்திருந்தது

அபுஹாசன இனி எப்படி கொல்ல என சிந்தித்தார்கள் மொசாத், பல முயற்சிகள் திட்டமிடபட்டு கைவிடபட்டன, உதாரணம் அவன் செல்லும் ஜிம்மில் குண்டு வைப்பது, கிளப்பில் அவன் மீது ஊசி குத்துவது என நிறைய, ஆனால் எல்லாம் பலனளிக்கவில்லை

தகுந்த காலத்திற்காக பதுங்கினார்கள், ஒரு வாய்ப்பு வந்தது.

அந்த அப்பார்ட்மெண்டுக்கு பெயின்ட் அடிக்க தொடங்கினார்கள், அப்பொழுது தெரு எல்லாம் அலங்கோலமாக கிடக்கும் அல்லவா? ஆங்காக்கு பெயிண்ட் பாக்ஸ், வாகனங்கள், கிரேன்கள், சாரன்கள், லாரிகள் என நிறுத்தபட்டன.

பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிகளில் ஒரு மொசாத் ஏஜெண்டும் புகுந்தார், அவன் எப்பொழுது எந்த காரில் செல்கின்றார் எனும் தகவலை அவர்தான் சொல்வார் பெயிண்ட் அடித்தபடியே

அன்று தன் தாயின் பிறந்த நாளுக்காக செல்ல தயாரானான் அபுஹாசன், அவன் கார் கிளம்பியதும் பெயிண்டர் தகவலை சொன்னான்.

தெருவெங்கும் பல வாகனங்கள் நிறுத்தபட்டிருந்தன, அதில் ஒரு வேனும் நின்றிருந்தது, சும்மா அல்ல 100 கிலோ வெடிபொருள் இருந்தது.

நெரிசலில் மிக மெதுவாக அபுஹாசனின் கார் அந்த வாகனத்தை நெருங்கியபொழுது ரிமோட் கண்ட்ரோல் குண்டு வெடித்தது, அந்த ஏரியாவே அதிர்ந்தது. அபுஹாசனின் மெய்காவலர்கள் அங்கே செத்தனர், கடும் காயங்களோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட ஹாசன் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

அது ஜனவரி 1979.

கிட்டதட்ட 6 வருடம் காத்திருந்து தன் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தது மொசாத்.

அபுஹாசனின் மரணம் பெரும் கிளர்ச்சியினை உண்டு பண்ணியது, அவருக்கு எப்படிபட்ட மக்கள் அபிமானம் இருந்தது என்பதை அவரின் இறுதி ஊர்வலம் காட்டிற்று, யாசர் அராபத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், பெரும் மக்கள் திரள்.

39 வயதான அந்த அபுஹாசன் தான் முனிச் தாக்குதலுக்கு முதல் சூத்திரதாரி என்பது உலகிற்கு தெரிந்தது.

இஸ்ரேலியர் மீது யார் கைவைத்தாலும் அவர்கள் எங்கு இருந்தாலும் கொல்வோம் என மறுபடியும் நிரூபித்து தங்கள் “கடவுளின் பிரம்படி” எனும் ஆப்பரேஷனை வெற்றிகரமாக முடித்தது மொசாத்.

இன்னும் ஏராளமான சாகசங்கள் உண்டு , வாய்ப்பு கிடைத்தால் அவ்வப்போது பார்க்கலாம்.

 

இதுதாண்டா மொசாத் : 03

Image may contain: 1 person, close-up

படம் :  அபு ஹாசன், எவ்வளவு வசீகரம் !

எகுத் ஒல்மார்ட் குழுவினர் அப்பார்ட்மெண்டினை நெருங்கும் நேரம், எங்கிருந்தோ வந்த இளைஞன் அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான், கொஞ்ச நேரம் பொறுமையாக அவ்வை சன்முகி பாணியில் பதிலளித்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது யாரோ கொலை கொலை என கத்தும் சத்தம் கேட்டது, ஆம் போராளி தலைவர்கள், கருப்பு செப்டம்பர் சம்பவத்தில் தொடர்புடைய தலைவர்கள் செத்து கிடந்தனர்.

அவரசமாக வெளியேறிய ஒல்மார்ட் குழுவினர் சில குண்டுகளை வீசி புகையினை ஏற்படுத்தினர். மற்றவர்கள் எல்லாம் சுதாரித்தனர்

அதுவரை அங்கு ஹாய்,,டார்லிங், செல்லம் என பேசிகொண்டிருந்த மொசாதின் பெண் வேடமிட்டவர்களில் ஒருவர் நிலமையினை கண்டு தன் கைபையினை ஓங்கி தரையில் அடிக்க அங்கும் புகைமூட்டம்

மற்றவர்கள் எல்லோரும் சுதாரித்து ஓடினர்.

மற்றவர்கள் என்பது முன்பே மொசாத்தால் அனுப்பபட்டவர்கள், அதாவது எல்லா தாக்குதலிலும் மொசாத்தின் திட்டம் அப்படி. தகவல் ஒரு குழு தரும், இன்னொரு குழு முன்னே சென்று பதுங்கிகொள்ளும், கொல்லும் குழு இறுதியாக முகூர்த்த நேரத்திற்கு வந்து வாத்தியம் இசைக்கும்.

அந்த எல்லா மெம்பர்களும் (கிட்டதட்ட 10பேர் இருந்திருக்கலாம்) வீதிக்கு வர ,எங்கிருந்தோ வந்த கார்கள் அனைவரையும் அள்ளிபோட்டு, கும்ம்மிருட்டிலும் கடற்கரைக்கு சரியாக சென்றது.

அங்கிருந்த படகுகளில் ஏறி பத்திரமாக இஸ்ரேலை அடைந்தபொழுதுதான் லெபனானில் தெரிந்தது, கொல்லபட்டது பெரும் தலைகள் என.

இஸ்ரேலில் எகுத் ஓல்மர்ட் பெரும் ஹீரோவானார், வாழ்த்துக்கள் குவிந்தன, பின்னாளில் அரசியலில் அவர் பரிணமிக்க இதுதான் அடிப்படை சாதனை.

ஐரோப்பாவில் ஒருவரை கொல்வது எளிது, ஆனால் லெபானுக்குள் சென்று அசால்ட்டாக தூக்கினார்கள் அல்லவா? அங்குதான் மொசாத் குறித்த பயங்கர எச்சரிக்கை போராளிகளுக்கு வந்தது.

நிச்சயமாக இது பெரும் வெற்றி, துல்லியமாக நடந்த தாக்குதல்தான் ஆனால் மொசாத்தின் கூட்டம் மகிழ்ச்சியாக நடக்கவில்லை.

எல்லாம் சக்சஸ் எனிமும், மொசாத் தலைவர் அந்த கூட்டத்தில் சோகமாக கன்னத்தில் கை வைத்திருந்தார், மற்றவர்கள் கண்களில் அவமானம் பொங்கிற்று.

காரணம் கொல்லபட்டவர் அனைவரும் இரண்டாம் நிலை தளபதிகள், உச்ச தலைவர் ஒருவர் இருந்தார். அவர்தான் திட்டத்தின் சூத்திரதாரி.

அவர் சிக்காததுதான் மொசாத்திற்கு பெரும் அவமானமாக கருதபட்டது. அவர் அபு ஹாசன். சிரியா நாட்டவர், செல்லமாக சிகப்பு இளவரசர்.

காரணம் ஆள் அழகர் என்பது வேறு, வெறும் 30 வயதிலே இஸ்ரேலை அச்சுறுத்தினார். கிட்டதட்ட அமெரிக்காவிற்கு பின்லேடன் போல.

ஆனால் அபுஹாசன் வித்தியாசன்மானவர், லெபானானில் அமெரிக்கா செய்த பல நடவடிக்கைகளுக்கு அவர் ஆதரவளித்தார். அமெரிக்கா நம் நண்பன் ஆனால் இஸ்ரேல் எதிரி என்பது அவர் கொள்கை.

அவர் சிஐஏ உளவாளியாக டவுள் கேம் ஆடுகின்றார் என்ற தகவல் அந்தபொழுது, மொசாத் அதனை கேட்டு புன்னகைத்தது

அதற்கு வாய்ப்பும் இருந்தது, காரணம் உளவுதுறை உலகம் அப்படித்தான் யாரையும் நம்ப கூடாது என்பதே முதல்பாடம். அபு ஹாசன் அமெரிக்க கையாளாக இருக்க வாய்ப்பும் இருந்தது, இல்லாமலும் இருந்தது.

ஆனால் சிஐஏ லெபனானில் அன்று பெரும் நடவடிக்கைகளை செய்துகொண்டிருந்தது என்பது மட்டும் உண்மை, பின்பு ஹிஸ்புல்லா தலையெடுத்து அமெரிக்க உளவாளி, சிஐஏ அதிகாரி என தலைகளை எடுத்தபின்புதான் லெபனானில் அமெரிக்கா இல்லை.

அபு ஹாசனை பற்றி மைக்ரோ மீட்டர் தகவலும் மொசாத்திடம் இல்லை, அதுதான் அவர்கள் அவமானத்திற்கு காரணம்.

மொசாத் தீவிரமாக களமிறங்கியது, ஐரோப்பாவில் தொழில்முனைவோர் வேடத்தில் மொசாத் களமிறங்கியது.

தனி ஒருவன் படத்தில் யாரும் கேட்க கூடாத கேள்வி ஹீரோ எப்பொழுது தூங்குவார் என்பது. ஆனால் நிஜத்தில் அப்படி 24 மணிநேரமும் வெறியாக அலைந்து கொண்டிருக்கும் பொழுது மொசாத்தின் தலமையகத்திற்கு தகவல் வந்தது.

நார்வே நாட்டில் அபு ஹாசன் இருக்கிறார் உத்தரவு கொடுத்தால் மங்களம் பாடலாம், மொசாத் தாமதிக்குமா? உடனே கொடுத்தது உத்தரவு.

ஆனால் அபுகாசன் நார்வேயில் அல்ல, வேறு மறைவிடத்தில் இருந்தார்.

மாபெரும் சறுக்கலுக்கு தயாரானது மொசாத், ஆனைக்கும் அடி சறுக்கும் நேரமது..

தொடரும்…

 
 

இதுதாண்டா மொசாத் : 02

Image may contain: 1 person, suitமுதல் குறி டாக்டர் ஷம்சாரிக்கு வைக்கபட்டது, அவர் பிரான்சில் செல்வாக்காக வாழ்ந்துகொண்டிருந்தார், பிரென்ஞ் பெண்ணைத்தான் திருமணமும் செய்திருந்தார், அந்த ஏரியாவின் குறிப்பிடதக்க புள்ளி.

ஆனால் முனிச் படுகொலையில் அவர் சம்பந்தபட்டிருப்பதோ, அவரின் பெரும் தொடர்புகளோ வெளியே தெரியாது. அவர் செய்வதெல்லாம் ஐரோப்பிய பத்திரிகைகளி பாலஸ்தீன நியாயங்களை உணர்ச்சிகரமாக எழுதுவார், அவ்வளவுதான் உலகிற்கு தெரியும்,

மறுமுகத்தினை மொசாத் மட்டும் அறிந்திருந்தது.
நிச்சயமாக அவரை தெருவில் சுடமுடியாது, பிரச்சினை ஆகிவிடும். வீடு புகுந்தால் மனைவி பிரான்ஸ் குடிமகள் அதுவும் பிரச்சினை. அவரை முடிக்கவேண்டும் ஆனால் ஒரு தடயமும் கிடைக்க கூடாது.

மொசாத்திற்கு எப்படி அவருடன் பேசிபார்ப்பது என திட்டமிட்டார்கள், பொதுவாக மொசாத்திற்கு பேசபிடிக்காது, ஆனால் அடையாளங்களை சரிபார்க்க வேண்டுமல்லவா?
ஒரு பத்திரிகையிலிருந்து அழைப்பதாக அழைத்து, பாலஸ்தீன் பிரச்சினை பற்றி ஒரு கட்டுரை தரமுடியுமா? என இத்தாலிய மொழியில் கேட்டார்கள், அவர் பிறவிபயனே அதுதானே விடுவாரா? ஓடிவந்து மொசாத் அதிகாரி முன்னால் நின்றார்.

பாய்ந்து கழுத்தை கடித்து கொல்லும் வெறிதான் மொசாத்திற்கு, ஆனாலும் அடக்கி கொண்டு பாலஸ்தீன் கதை கேட்டார்கள், அவர் சொல்ல சொல்ல இவர்கள் அவரையும் அவரைபற்றி வந்த உருவ அமைப்பு இன்னபிற விவரங்களை சரிபார்த்தார்கள். எல்லாம் சரிபார்த்து முடிந்ததும் “பாலஸ்தீனில் இவ்வளவு கொடுமையா? என கண்ணீர் விட்டு ஷம்சாரியினை கட்டிபிடித்து அழுது வழியனுப்பி வைத்தார்கள்.

இதற்கு பின் மொசாத் ஏஜெண்டுகள் டெலிபோன் சர்வீஸ், கேஸ் பாய் என சகல வேடங்களிலும் அவ்வப்போது அவரின் வீட்டின் உள்புகுந்து ரகசிய போட்டோக்களாக எடுத்து மொசாத்தின் மேலிடத்திற்கு அனுப்பினர்.

மொசாத் அவரது சகல பர்னிச்சர்,எலெக்ட்ரானிக்ஸ் பொருள் மற்றும் கதவின் அமைப்பு வரை அலசி காயபோட்டு இறுதியாக முடிவெடுத்தது.

அவர் வீட்டு சோபா, அல்லது மேஜை அல்லது டெலிபோன் மேஜையினை குறித்து கொண்டார்கள். அச்சு அசலாக அதனைபோலவே ஒன்றை செய்தார்கள், ஒன்றே ஒன்றை மட்டும் கூடுதலாக சேர்த்தார்கள் அது வெடிகுண்டு.
அது டெலிபோன் டேபிள் அல்லது சோபா இரண்டில் ஒன்றுதான், எது என்பது மொசாத்திற்குத்தான் ரகசியம். ஆனால் அந்த பர்னிச்சர் அவ்வளவு அழகாக செய்யபட்டிருந்தது.

ஒரு நாளில் ஷம்சாரி குடும்பத்தோடு வெளியே சென்றிருந்த சமயம் வீட்டில் புகுந்து அவரின் டெலிபோன் அருகிருக்கும் பர்னிச்சரை மாற்றிவிட்டு வெடிகுண்டு பர்னிச்சரை வைத்துவிட்டார்கள். யாராலும் ஒரு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது, மொசாத்தின் கச்சிதம் அப்படி.

அப்படி அல்ல ஆளில்லா நேரம் உள்ளே புகுந்து டெலிபோன் இருக்கும் மேஜைக்கு அடியில் வெடிகுண்டை பொருத்தினார்கள் எனும் தியரியும் உண்டு.

எப்படியோ குண்டு வைத்தாயிற்று

எல்லாம் சரி, இனி குண்டு வெடிக்கவேண்டும் ஆனால் இவர் மட்டும் இருக்கும் நேரம் மட்டும் வெடிக்கவேண்டும் 
இல்லாவிட்டால் குடும்பம் காலி கூடவே மொசாத்தும் காலி.

இப்படியாக நன்றாக திட்டமிட்டுவிட்டு, காத்திருந்தார்கள், மறுநாள் மனைவி மகள் மட்டும் வீட்டைவிட்டு வெளியேறி காரில் செல்ல‌, மொசாத்தின் முகூர்த்தநாள் நெருங்கிற்று, அதாவது ஷ்ம்சாரி மட்டும் தனியாக இருந்தார். அது 1972 டிசம்பர் 8. அதாவது முனிச் படுகொலை நடந்த 3 மாதங்களுக்கு பின்னால்.

அந்த டெலிபோன் அடித்தது, ஷ்ம்சாரி எடுத்தார், “யேஸ் ஷ்ம்சாரி ஸ்பீக்கிங்..” அதுதான் அவரின் கடைசி வார்த்தை, குண்டு வெடித்தது, (ரிமோட் கண்ரோல் குண்டு அது)
உயிரோடு வீழ்ந்துகிடந்தார் ஷம்சாரி, ஆனால் மருத்துவமனையில் உயிர்விட்டார், அதோடு பாலஸ்தீன போராளிதலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அவகாசம் கொடுக்காமல் அடிப்பது மொசாத்தின் தனிகலை. அடித்தார்கள் இன்னொரு போராளி அல் பஷீர் மறுநாள் கட்டிலில் குண்டுவெடிக்க இறந்தார். எப்படி படுக்கையில் குண்டுவந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை, ஆனால் வெடித்தது கட்டில்.

ஒருவழியாக பாலஸ்தீன தலைவர்களுக்கு புரிந்தது, கொல்லபடுபவர்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு எல்லோரும் முனிச் படுகொலையில் சம்ப்ந்தபட்டவர்கள் என முடிவு செய்யும்பொழுதே பேராசிரியர் அல் குவைசி கொல்லபட்ட செய்தி வந்தது,

அவ்வளவுதான் ஐரோப்பாவின் அனைத்து பாலஸ்தீன் போராளிகளும் மகா சைலண்ட, கூடவே பரபரப்பு பயம்.
அனைவரும் அமைதியாகவே மொசாத்தின் பார்வை லெபனானுக்கு திரும்பியது, பாரீஸ் பொதுவான நாடு, போகலாம் கொல்லலாம் ஆனால் லெபனான் போராளிகளின் கோட்டை, எதுவும் சுலபமில்லை.

ஆனால் லெபனானின் புறநகர் பகுதியொன்றில் சம்பந்தபட்ட போராளிகள் மூன்றுபேர் தங்கி இருப்பததாக தகவல் வந்தது, லெபனான் இஸ்ரேலின் அண்டை நாடு, 4 மணிநேர பிரயாணம் கூட தேவையில்லை.

இந்த தாக்குதலுக்கு “இளமையின் வசந்தம்” என பெயரிட்டார்கள், அதன் தலைவர் யகுட் ஓல்மர்ட்.
இஸ்ரேல் பிரதமாராக இருந்து, 3ம் தேவாலயத்தை எருசலேமில் கட்டபோவதாக பரபரப்பினை ஏற்படுத்தி, பின்னாளில் ஒரு கம்பெனிக்கு முன்னுரிமை கொடுத்த குற்றத்தில் இன்று தண்டனை அனுபவித்துவரும் அதே எகுத் ஒல்மார்ட்.

உயிரை பணயம் வைத்து செய்யவேண்டிய காரியம் இது, எந்த நாட்டு வருங்கால பிரதமருக்கு சாத்தியம்? செத்துவிட்டால் பிரதமர் நாற்காலி என்னாவது? ஆவியாக வந்து அதில் அமர்ந்தாலும் என்ன பிரயஜோனம்? மந்திரவாதியோடு பேசவா?

ஆனால் இஸ்ரேல் இப்படித்தான், இன்றும் நாட்டிற்காக சாதித்தவர்கள் குடும்பம் மட்டுமே பிரதமர் நாற்காலியில் அமரமுடியும், இன்றைய நேதன்யாகு புகழ்பெற்றா உகாண்டா தாக்குதலில் உயிர்விட்டவரின் சகோதரர், இவரும் பெரும் முன்னாள் வீரர்.

அங்கு தலைவராக தகுதி வேண்டும், இப்படியாக‌ அவர்கள் கவனமாக பார்த்து பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள், தமிழக முதல்வர் ஆவதற்கு ஒரே தகுதி குறைந்தபட்சம் 70 படங்கள் நடிக்கவேண்டும் அல்லது வசனம் எழுதவேண்டும்.

இப்பொழுதெல்லாம் முதல்வர் வீட்டில் வேலைக்காரராக‌ இருந்த தகுதி போதும் என்கின்றார்கள்

பின் ஆட்சி எப்படி இருக்கும்? கனவிலே நன்றாக வாழ்ந்துவிட்டு எழுந்திருந்து புலம்பவேண்டியதுதான்.
நமது தலைவிதி அப்படி.

ஆனால் யகூத் ஒல்மார்ட் குழுவினரின் தலைவிதி வேறுமாதிரியாக இருந்தது.

3 அழகான பெண்கள் அந்த இரவு லெபனான் தெருக்களில் ஒரு அப்பார்ட்மெண்டினை நோக்கி நடந்து சென்றனர், அந்த பெண்களில் ஒருவர்தான் எகுட் ஒல்மார்ட், கனகச்சிதமாக வேடமிட்டிருந்தார்.

அழகுநடை நடந்து குறிப்பிட்ட வீட்டை அப்பெண்கள் நெருங்கினர்.

தொடரும்

 
 

இதுதாண்டா மொசாத் : 01

(மாவீரன் நெப்போலியனை பார்த்துகொண்டிருந்தோம், இடையில் இந்த முனிச் படுகொலைக்கு பழிதீர்த்த மொசாத் பற்றி பார்துவிட்டு அவர் பக்கம் வரலாம், நெப்போலியன் எங்கும் போய்விடமாட்டார்)

Image may contain: one or more peopleபலமுறை அவ்வப்போது நாம் பார்த்த மொசாத்தின் பராக்கிரமங்கள் உண்டு, அவ்வரிசையில் உலகினை மொத்தமாக மிரட்டி, அனைத்துலகும் ஆச்சரியமாக பார்த்த மொசாத்தின் ஆப்ரேஷன்களின் ஒன்றுதான் முனிச் படுகொலை பழிவாங்கல், அதாவது கருப்பு செப்டம்பர் சம்பவத்திற்கு திருப்பி அடித்தது.

கருவாகி உருவான நாள்முதலே எதிரிகள் அதிகமுள்ள தேசம் இஸ்ரேல், பல போர்களை சந்தித்தாலும் எதிரிநாடுகளிடமிருந்து கி.மீ கணக்கில் நிலங்களை பிடுங்கி முள்வேலி அமைத்திருக்முமே ஒழிய ஒரு சென்ட் நிலம் இழந்தவர்கள் இல்லை. பின் எதிரிகள் என்ன செய்வார்கள்?.

அதுதான் கொரில்லா தாக்குதல். அவர்கள் கொரில்லா என்றால் இவர்கள் ஓநாய், அதனால் உள்நாட்டில் ஒன்றும் செல்லுபடியாகவில்லை. விளைவு வெளிநாட்டில் யூத இலக்குகளை தீவிரவாதிகள் குறிவைத்தார்கள்.

அந்த போராளி அமைப்பு அந்நாளைய அரபு தாதா ஜோர்டானால் உருவாக்கபட்டது, சவூதி,குவைத்,ஈராக் எல்லாம் அப்பொழுது பணக்கார சட்டை தைத்துகொண்டிருந்தன, அதிகம் எதிலும் ஈடுபடமாட்டார்கள். அன்று லெபனான்,சிரியா,ஜோர்டான், எகிப்து இவர்கள்தான் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல், போராளிகளுக்கு அடைக்கலம் என சகலமும்.

ஆயுதம் ஒன்றும் இல்லை என்றால் பேரிச்சம்பழ கொட்டையாவது அல்லது ஓட்டக சாணியினையாவது இஸ்ரேல் மீது வீசி எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருப்பார்கள்.

அப்படி ஜோர்டான் மன்னரின் பரம ஆசியுடன் தொடங்கபட்ட இயக்கம் அது, பாலஸ்தீன போராளிகுழு. ராணுவத்தில் இஸ்ரேலியரை வெல்லமுடியாவிட்டாலும், ராணுவத்தினர் தனியாக வரும்பொழுது நொறுக்கிவிட வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்கள், ஆனால் எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

இஸ்ரேலை பொறுத்தவரை எல்லோருக்கும் ராணுவ பயிற்சி உண்டு, அதாவது நாம் ரேசன் கார்டுக்கோ அல்லது அதார் கார்டுக்கோ அலைவது போல அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக ராணுவபயிற்சிக்காக சென்றிருப்பர். யுத்தம் என்றால் எல்லோரும் துப்பாக்கி தூக்கி ஆகவேண்டும், மற்ற காலங்களில் வேறு வகை தொழிலில் ஈடுபடலாம்.

அப்படி இஸ்ரேலியர்கள், அதாவது பல போர்களில் பங்குபெற்ற ராணுவவீரர்கள் உள்பட பலர் இஸ்ரேல் சார்பாக ஓலிம்பிக் விளையாட அன்றைய மேற்கு ஜெர்மனிக்கு சென்றனர், அது 1972ம் வருடம் ஆகஸ்ட் 16 ‍ செபடம்பர் 11 வரையான காலம்.

அப்படியான இஸ்ரேல் குழுவினை கண்ணிவைத்து, பாலஸ்தீன போராளிகள் மேற்கு ஜெர்மன் சென்றது. அன்றைய காலத்தில் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பாலஸ்தீன் போராளிகளுக்கு அலுவலகமே இருந்தது, பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் அவ்வகை தீவிரவாதிகள் ஏதும் தாக்குதலில் ஈடுபடமாட்டார்கள், ஈடுபட்டால் ஒழித்துகட்டபடுவார்கள்.

தூக்கத்தை தொலைத்துவிட்ட அமைப்புத்தான் மொசாத், ஆனால் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில் இருந்த காலம், கொஞ்சம் அசந்தார்கள். ஆனால் பாலஸ்தீனர்கள் அசரவில்லை, நேரடியாக களம் இறங்கினால் மாட்டிவிடுவோம் என்பது தெரிந்ததால் அன்று ஒரு சாத்தானை உதவிக்கு அழைத்தார்கள், அதுவும் தரிசனமானது.

அதாகபட்டது ஹிட்லருக்கு பின்னும் அவருக்கு பெரும் ஆதரவு ஜெர்மனில் இருந்தது, அதில் சிலர் தீவிரமாக இணைந்து “நியோ நாசி” என்று, அதாவது புதிய நாஜிக்கள் என ஞானஸ்நானம் பெற்று, இயக்கம் வளர்த்தனர் (இயக்கம் ரகசியமாக இன்னும் உண்டு), ஹிட்லரே வழிகாட்டி, பின் எப்படி கோட்பாடுகள் இருக்கும்? அதேதான்,
ஆரியர் வாழ்க, ஆரியம் ஆள்க, கண்டிப்பாக யூதம் ஒழிக.

இவர்களும் பாலஸ்தீன போராளிகளும் இணைந்து, அங்கு விளையாட சென்ற‌ 11 இஸ்ரேலிய வீரர்கள், 5 பயிற்சியாளர்கள் என மொத்தம் 20 பேருக்குமேல் பிடித்து வைத்து, இஸ்ரேலுடன் பேரம் பேசினர்.

மொத்தமாக எல்லா கைதி போராளிகளை (கிட்டதட்ட 500 பேர்) விடுவிக்க வேண்டும், பணம் வேண்டும் என ஏகபட்ட கோரிக்கைகள். அதன்படி ஒரே ஒரு கோரிக்கை மட்டும்தான் அவர்கள் வைக்கவில்லை, அதாவது இஸ்ரேல் ராணுவத்தை கலைத்துவிடுங்கள்.

அன்று இஸ்ரேல் பிரதமர் கோல்டா மேயர், நமது இந்திரா காந்திக்கே பாடம் எடுக்க கூடியவர், கால அவகாசம் கேட்டு இழுத்துகொண்டிருந்தார். போராளிகளோ ஏதும் செய்து அதிர்ச்சி வைத்தியம் செய்யும் அவசரத்தில் அனைவரையும் கொன்றுவிட்டு “பாலஸ்தீனம் வாழ்க” என சொல்லிகொண்டு தப்பினர்.

Image may contain: one or more people, crowd and outdoorஅது “கருப்பு செப்டம்பர்” என இஸ்ரேலிய வரலாற்றில் பதிந்தும் போனது, தடைபட்ட ஒலிம்பிக் எப்படியோ ஒப்புக்கு நடந்தது. ஜெர்மனில் மீண்டும் யூத உயிர்கள் பறிக்கபட, உலகம் கண் கலங்கிற்று.

அன்று இஸ்ரேல் இல்லை, மொசாத் இல்லை, யூத ராணுவம் இல்லை ஜெர்மனியில் செத்தோம், இவ்வளவு வலிமை பெற்ற பின்னும் சாகவேண்டுமா? பின் எதற்காக இவ்வளவு பாடுபட்டு இஸ்ரேலை உருவாக்கி வைத்திருக்கின்றோம்? என ஏராளமான கேள்விகள் ஹீப்ரு மொழியில் கேட்கபட்டன.

அவமானத்தில் சிவந்தார் கோல்டா மேயர், அதன் சமீபத்தில்தான் இஸ்ரேல் போரில் தூள்பறத்தி இருந்தது. களத்தில் செய்யமுடியாததை முதுகில் செய்துவிட்ட அவமானம் அவருக்கு பெரும் துயரமானது.

ஒரு காலத்தில் சிங்கள அரசு இந்தியாவிடம் ஈழபோராளிகளை ஒப்படையுங்கள் என ஈனஸ்வர முணுமுணுப்பில் கேட்டது போலவோ அல்லது இந்திய அரசியல்வாதிகள் மைக்கினை கண்ட இடங்களில் எல்லாம் பாகிஸ்தான் சில தீவிரவாதிகளை ஒப்படையுங்கள் என முழங்குவதை போலவோ கோல்டா மேயர் மூக்கு சீந்தி அழவில்லை.

அது இஸ்ரேலில் சாத்தியமுமில்லை, அப்படி செய்திருந்தால அவருக்கு ஜெருசலேம் உணவகத்தில் ரொட்டி சுடும் வேலை கூட கொடுக்கமாட்டார்கள், பின் எப்படி பிரதமராக இருக்கமுடியும்? அதனால் உத்தரவிட்டு பதிலுக்காக காத்திருந்தார். மொசாத்திடம் பொறுப்பு ஒப்படைக்கபட்டது.

ஏராளமான போராளி குழுக்கள் பாலஸ்தீனத்தில் உண்டு. சம்பவம் நடந்தது மற்றொரு நாடு. ஒரு குண்டூசி தகவலும் இல்லை. மொசாத்தின் வலை அரபுலகில் மட்டுமே அன்று உண்டு. யார் என கண்டுபிடித்து எப்படி தண்டிப்பது?

மும்பை தாக்குதலில் கசாப்பை பிடித்து பல்லாண்டுகள் கழித்து தூக்கிலிடுவது, மும்பை தொடர்குண்டுவெடிப்பில் 20 ஆண்டுகாலம் கழித்து தூக்கிடுவது எல்லாம் மாமன்னன் ஹமுராபி காலத்துக்கு முன்பே உள்ள ஸ்டைல், அதாவது நமது பாணி.

யார் அடிமட்டமோ அல்லது எவன் அகபட்டானோ அவனை மட்டும் குற்றவாளி என நிறுத்தி வைத்து “நீதியினை நிலைநாட்டுவோம்”, பெருந்தலையினை எட்டி கூட பார்க்கமாட்டோம்.

ஆனால் மொசாத் அப்படி அல்ல, சுட்டவனை அது தேடவே இல்லை. ஆனால் சுட திட்டமிட்டு கொடுத்த கும்பலின் தலைவன் அவனது வலதுகை, இடதுகை, அல்லகக்கை என தேடி அலைந்தது.

தலைவனை வெட்டு படை சிதறும், வீணாக சிப்பாயோடு ஏன் சண்டை என்பது அவர்கள் சித்தாந்தம்.

அவ்வாறாக டாக்டர் ஷ்ம்சாரி இவர் பாரீஸ் பிரான்சில் இருந்தவர், இன்னும் சிலர் லெபனான், அந்நாளைய பின்லேடன் அபு ஹாசன் இவர் எங்கிருக்கின்றார் என்றே அன்று தெரியாது.

இவர்கள்தான் பெரும் தலைகள் என கண்டறிந்து உறுதிபடுத்தினார்கள், இனி இவர்களை அவர்களின் கோட்டைக்குள் புகுந்து தூக்கவேண்டும்.

ஷம்சாரி ஈழபுலிகளின் ஒரேபலம் ஆண்டன் பாலசிங்கம் போன்றவர், தொட்டால் பெரும் சிக்கல், லெபனான் அன்று கடும் பாதுகாப்பு தேசம் (இன்றும் அப்படியே), இன்னொருவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாது.
ஆனால் மொசாத் நம்பிக்கையோடு களமிறங்கியது, அது இன்று கிறிஸ்தவர்கள் சொல்லும் வசனம்தான், ஆனால் மாற்றி சொன்னார்கள்.

“இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மொசாத் உறங்குவதே இல்லை”, சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

ஓநாய் மொசாத் களமிறங்கியது, மோப்பம் பிடிக்க ஆரம்பித்து பின் தான் ஓநாய் அல்ல, புலி என நிரூபித்தது, எப்படி?

தொடரும்…

 
 
%d bloggers like this: