அதிரடி பாணி – இஸ்ரேல்

ஈரான் அணுகுண்டு செய்வதை தடுக்க இஸ்ரேல் கடும் பிரயர்த்தனத்தை 10 ஆண்டுகளாக செய்துவருவது உலகம் அறிந்தது

இஸ்ரேல் குண்டுவீசலாம் என அஞ்சிய ஈரான் அந்த அணுகுண்டு ஆலையினை பூமிக்க்கு அடி ஆழத்திலே அமைத்தது வேறுவிஷயம்

குண்டுவீசமுடியாவிட்டால் என்ன? விஞ்ஞானிகளை தூக்கிவிட்டால் வெற்று யுரேனியத்தை வைத்து ஈரான் என்ன செய்யும் என கருதிய இஸ்ரேல் மொசாத்தை களமிறக்கியது

கிட்டதட்ட 3 தலமை விஞ்ஞானிகளை ஒழித்தது இஸ்ரேல், அதெல்லாம் அதிரடி பாணி

விஞ்ஞானியின் கார் டிராபிக்கில் நிற்கும் எங்கிருந்தோ மோட்டார் சைக்கிளில் வரும் இருவர் சரியாக சிக்னல் விழும் நேரம் காந்த குண்டினை காரின் பெட்ரோல் பக்கம் ஒட்டிவிட்டு செல்வார்கள், கொஞ்ச நேரத்தில் கார் வெடிக்கும் விஞ்ஞானி காலி

இன்னும் ஒருவர் வெளிநாடு சென்றார் பிணமாக வந்தார்

இதன் பின் இன்னொருவர் பற்றி தகவல் இல்லை ஒன்று கொன்றவர் சொல்லவேண்டும் இல்லை செத்த தரப்பு சொல்லவேண்டும், இரண்டுமே மவுனம் என்றால் எப்படி?

நான்காவதாக ஒருவர் மிஞ்ஞ்சினார் அல்லவா? அவர்தான் இப்பொழுது விஷயம்

அவர் இப்பொழுது ஈரான் அணுகுண்டு தயாரிக்கின்றது என சொல்ல அமெரிக்காவில் தயாராகி கொண்டிருக்கின்றார் என்ற செய்தி கசிகின்றது

ஆம், அவரை ஈரானில் இருந்து கடத்தி துருக்கி வழியாக பிரான்ஸ் கொண்டு சென்று அங்கு ஒரு கோணிபையில் கட்டி படகில் போட்டு லண்டனில் சேர்த்துவிட்டது மொசாத்

லண்டன் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டது என்கின்றார்கள்

அவர் விடுமுறை கழிந்து வருவார் என எதிர்பார்த்த ஈரானுக்கு எங்கோ உதைத்தது , களத்தில் ஈரானின் உளவுதுறையினை இறக்கினால் விஷயம் வில்லங்கமானது புரிந்திருக்கின்றது

தங்கள் கட்டுபாட்டை மீறி ஈரானில் இருந்து அவர் கடத்தபட முடியாது என ஈரானின் புரட்சிபடையும் உளவுபடையும் அறுதியிட்டு சொல்லும்பொழுது இஸ்ரேல் தன் வழக்கமான மனநெருக்கடி கொடுக்கும் வேலையினை செய்கின்றது

ஒருவனை மனதால் குழப்பிவிடுவது அவர்களுக்கு கைவந்த வாய்வந்த கலை, பைபிள் காலமுதல் அப்படித்தான்

மனம் கலங்கிவிட்டால் மாவீரனும் வீழ்ந்துவிடுவான் அல்லவா? எந்த ஆயுதமும் அவனுக்கு பலனளிக்காது, மகாபாரதத்தில் கண்ணன் சொல்வது இதுதான்

கர்ணனை அப்படித்தான் வீழ்த்தினான், பீஷ்மரும் அப்படித்தான் வீழ்ந்தார், விதுரரும் அப்படித்தான் ஒதுங்கினார்

ஏன் துரோணரே அப்படி மனகுழப்பத்தில் இருக்கும்பொழுதுதான் கொல்லபட்டார்

இதே தந்திரம் கொண்டது இஸ்ரேல்

அணுவிஞ்ஞானி கடத்தபட்டார் என ஈரான் கவலை கொள்ள, அவர்களிடம் அந்த விஞ்ஞானியே மொசாத்தின் ஆள்தான், அவராகத்தான் மொசாத்திடம் வந்தார்

3 விஞ்ஞானிகளை கொல்ல உதவியதே அவர்தான் என ரகசியமாக விஷயத்தை கசியவிட்டிருக்கின்றது இஸ்ரேல்

இதை நம்ப முடியாமல், நம்பாலும் இருக்க முடியாமல் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது ஈரான்

பாருங்கள், இனி ஈரான் அணுகமிஷனில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை சந்தேகத்தோடு பார்ப்பார்கள், கடும் குழப்பம் அதிகரிக்கும் , அந்த அணுகமிஷன் இனி தளரும் ஈரானின் அணுகுண்டு கனவு கனவாகவே போகும்

இன்னொரு பக்கம் உண்மையிலே அவர் அமெரிக்காவிடம் இருக்கின்றாரா? இல்லை காணாமல் போன அவரை வைத்து இஸ்ரேல் ஏதும் ஆடுகின்றதா எனும் அடுத்த தலைவலியும் ஈரானுக்கு உண்டு

ஆம் காணாமல் போனவர் இன்னும் வாய்திறக்கவில்லை, அவர் ஈரான் அணுகுண்டு செய்கின்றது நானே சாட்சி என ஆதாரங்களை கொடுத்தால் ஒரே நிமிடத்தில் உலக நிலை மாறும்

ஆனால் அவர் இன்னும் வாய்திறக்கவில்லை

ஈரான் மிக பரபரப்பாக அந்த அறிக்கையினை எதிர்பார்க்கின்றது , ஆனால் வரவில்லை

உண்மையில் அந்த விஞ்ஞானி என்ன ஆனார் என தெரியவில்லை, மிக பெரும் துருப்புசீட்டான அவரை மொசாத் என்ன செய்தது என்று தெரியவில்லை

ஆக மொசாத் மாபெரும் காரியத்தை சாதித்துவிட்டு மகா அமைதியாக அடுத்தகட்ட நடவடிக்கையினை மகா மர்மாக செய்கின்றது என உலகம் அனுமானிக்கின்றது

சிரியா ஊடாக இஸ்ரேலின் எல்லையினை தொட்டு நின்ற ஈரான் இப்பொழுது மாபெரும் அதிர்ச்சியில் இருக்கின்றது

அடுத்த பரபரப்பான காட்சிகள் எப்பொழுதும் நடக்கலாம்