இந்திராவின் இந்தியா ‍ 03

Image may contain: one or more people and crowdஅந்த குழப்பான காலகட்டத்தில் சி.ஐ.ஏ தலமை செயலகமானது பாகிஸ்தான், பின்லேடனுக்கு வகுப்பு எடுத்துகொண்டே, இந்தியாவையும் குறிபார்த்தனர், இந்திரா அவர்களின் பெரும் எதிரியானார்.

இந்நிலையில் பொற்கோயில் சம்பவத்தால் சீக்கியர்கள் நொந்து போயினர், அது அவர்களின் ஆத்மா, அப்பொழுது ஒரு வதந்தி அல்லது தகவல் பரப்பபட்டது, கவனியுங்கள் லண்டனிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வந்து பொற்கோயிலில் பேசியவர்கள் பரப்பிய வதந்தி.

அதாவது இந்திரா பெரும் ராணுவ தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் , யுத்தத்தை சாக்காக வைத்து பஞ்ஞாபியரை அழிக்க போவதாகவும் வதந்தி இறக்கை கட்டி பறந்தது, அதாவது பாகிஸ்தான் ராணுவத்தினை உள்வாங்க விடுவாரம், பின்னர் விரட்டுகிறேன் என சகலத்தையும் அழித்துவிடுவாராம்.

கவனியுங்கள் இது முதலில்வந்த செய்தி, ஒரு வாரத்தில் ஜியா உல்கக் பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாபில் படைகுவிக்கிறார், போர் பரபரப்பு பற்றிகொள்கிறது.

இங்குதான் சீக்கிய சமூகம் அச்சத்தில் ஆழ்ந்தது, இந்திரா இனி தங்களை அழிக்காமல் விட மாட்டார் என பயத்தில் உறைந்தனர். இனி வாழ முடியாது என அவர்களுக்கு தோன்றிற்று, ஒரு கலாச்சாரமிக்க இனம் அழிவதை விட இருவர் அழிவது தவறில்லை என முடிவாயிற்று, பின்னர் நடந்த கொடூரம் உலகறிந்தது.

32 தோட்டாக்கள் இந்திரா மீது பாய்ந்தன.

அவரது பலமான உளவுதுறை அவருக்கு சீக்கிய காப்பாளர்களை மாற்ற சொன்னது, அப்படியானால் ராணுவத்து சீக்கியர்களை என்ன செய்வீர்கள் என கேட்டு மறுத்தார், இந்திரா

கிட்டதட்ட 7 முறை உயிர்தப்பிய இந்திரா, மெய்காப்பளரிடம் சிக்கினார். சஞ்சயின் மரணத்தின் பொழுதே கிட்டதட்ட மரணித்த இந்திரா, இம்முறை தப்பவில்லை.

ஒரு திட்டமிட்ட வதந்த்தி, அதற்கு வலுசேர்க்கும் படைகுவிப்பு என்ற மாயையில் நொந்திருந்த சீக்க்கிய சமூகம் சிக்கியதால் நிகழ்ந்த நிகழ்வு இது, பின்னாளில் அவர்கள் உண்மை உணர்ந்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பக்கம் இந்திய பார்வை இருந்ததே தவிர பஞ்ஞாப் எல்லையில் அல்லவே அல்ல.

சீக்கியருக்கு ஆபத்து என இறக்குமதியான வதந்தி, இப்படுகொலை மூலம் உண்மையானது கிட்டதட்ட 2000 சீக்கியருக்கு மேல் டெல்லியில் வன்முறையில் கொல்லபட்டனர்.

ஆனாலும் சீக்கிய இனம் உயர்வானது, சகல வலிகளையும் தாண்டி இன்னும் நாட்டிற்காக உழைக்கின்றது.

இந்திரா அமரர் ஆனார், இந்தியா பன்னாட்டுகம்பெனிகளின் வேட்டைகாடானது, தனியார் வங்கிகளை ஒழித்து வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா, இன்று இந்திய இன்சூரன்ஸ் கூட விற்பனை எனும் நிலை.

அண்டை நாடுகள் எல்லாம் ஆசுவாசமடைந்தன, சில திருமணவீடுகள் அல்லது மறைவு துக்கங்களில் எதிர் அரசியல்வாதிகள் எல்லாம் சந்திப்பார்கள், கேட்டால் நாகரீகம் என்பார்கள், ஆனால் அவர்கள் மனது ஆண்டவனுக்குத்தான் தெரியும்,

அப்படித்தான் இந்தியா மறைந்தபொழுது, எல்லா தலைவரும் வந்தார்கள்,சூத்திரதாரி பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல்கக் வந்தார், அஞ்சலி செலுத்திவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்பி சென்று சொன்னார்

“அல்லா இருக்கிறார், அமெரிக்கா இருக்கிறது, இந்திரா சாம்பலானார் இனி எனக்கென்ன கவலை”

இநதியாவும், அவர் உருவாக்கிய உளவுதுறையும் , இந்திரா உருவாக்கிகொண்டிருந்த புதிய இந்தியாவும் கதறி அழுதது.

திரு மு.க அன்று ஒரு அர்த்தமுள்ள வார்த்தை சொன்னார், அது நிதர்சனமான உண்மை

“இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல கண்ணீரில் மிதக்கின்றது”

முற்றும்

 

இந்திராவின் இந்தியா 02

Image may contain: one or more people

அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது ஒரு கூட்டாட்சி அமைப்பின் உச்சதலைவருக்கு தெரியாத விஷயமால‌, சமாளித்தார்.

தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷ்ம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம். இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது.

டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் சில உண்மைகள் புரியும்.

அதாவது இந்தியா அப்படித்தான். பல இடங்களில் அதன் போக்கு வித்தியாசமானது, கடுமையானது. இல்லாவிட்டால் இந்தியா இருக்காது.

இந்தியாவிற்கு அதிகம் உழைக்கும் அல்லது உழைத்த இனம் என பஞ்சாபியரை சொல்லலாம், இன்றும் இந்தியராணுவத்தை தாங்கி நிற்பவர்கள், சகல துறைகளிலும் பங்கெடுப்பவர்கள், கடும் உழைப்பாளிகள். மேலாக இந்திய விசுவாசிகள்.

பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலிகாலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள்.

பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 லட்சம் பஞ்சாபியர் செத்தனர். பிரிவினை வலி அவர்களுத்தான் தெரியும்.

திடீரென தமிழகத்தை இரு நாடுகளாக பிரித்து ஒரு பக்கம் செல்ல விசா தொந்தரவும், உளவாளி முத்திரை சித்திரவதை மரணமும் அன்றாடம் நடக்குமென்றால் சென்னை டூ மதுரை பயணம் எப்படி இருக்கும்? எந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்?, இது தான் பஞ்சாபியர் நிலை. ஏராளமான குடும்பங்களும், உறவினர்களும் எல்லைகோட்டுக்கு இங்கும் அங்கும் ஏக்கமாய் பார்த்துகொண்டே இருக்கும் நிலை.

இந்நிலையில் பஞ்சாபியர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அதாவது பஞ்சாப் மொழி பேசுபவருக்கு தனி மாநிலம், சீக்கிய மதத்திற்கு ஒரு மத அந்தஸ்து என சில கோரிக்கைகள், ஆனால் டெல்லி காதுகொடுத்தே கேட்கவில்லை (நாம் கச்சதீவு, ராமேஸ்வரம் மீணவர், ராஜபக்ஸே,காவிரி,மீத்தேன் என கத்தினாலும் கேட்கின்றார்களா அப்படித்தான்) அவர்களும் அசட்டை செய்யபட்டார்கள்.

விளைவு அகாலிதளம் மகா மக்கள் ஆதரவு பெற்றது, இது இந்திராவை சிந்திக்கவைத்தது, அப்படியும் பஞ்சாப் மொழி மாநிலத்திற்கு பதிலாக பிஞ்சிபோன பஞ்சாபை மேலும் பிரித்த்து ஹரியான உருவாக்கபட்டு சீக்கியர்களின் கோபம் மேலும் அதிகமானது.

ஒரு கட்டத்தில் உலகநாடுகளையே அடக்கிய இந்திரா? சும்மா இருப்பாரா?, அதிசயமாக உள்நாட்டில் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகள் எல்லாம் பல மாநிலங்களில் உடைய ஆரம்பித்தன,

அந்த மாநிலத்தில் “அவர்” (அவர் என்பதும் மூன்றேழுத்து) இறந்தார் அதனால் அந்த கட்சி உடைந்தது என உங்கள் கொள்கை இருந்தால் உங்களை பார்த்து அமைதியாக புன்னகைக்கலாம், அவர் இருந்திருந்தாலும் அந்த கட்சி உடையத்தான் செய்திருக்கும்.

அவ்வாறாக அகாலிதளத்திற்கு எதிராக அவரும் அவரின் வாரிசு சஞ்சயும் கண்டெடுத்த ஒருவர்தான் பிந்திரன்வாலே.

காங்கிரஸ் மேடையில் சஞ்சாயால் அமரவைக்கபட்ட பிந்திரன்வாலே பின்னாளில் “புனித பூமி” (காலிஸ்தான்) அடையாமல் ஓயமாட்டேன் எனும் தீவிரவாதியானான் எப்படி கதர் பஞ்சாபி துப்பாக்கி எடுத்தார்?

அந்த காலம் அப்படி, அந்த பக்கம் ஆப்கனை விழுங்கி ரஷ்யா பாகிஸ்தானின் எல்லைக்கு வந்தது, இந்த பக்கம் இந்தியா, பாகிஸ்தான் அழுதால் நாட்டமைக்கு தாங்குமா? ஏராளமான பணமும் ஆயுதமும் பாகிஸ்தானுக்கு வந்தது, அவர்களால் பப்பாளி மரத்தில் ஏற்றபட்ட ஒரு அப்பாவி சீக்கியன் பிந்திரன்வாலே.

இது சுதந்திர‌ போராட்டம் என்றார் அவர், பல கொலைகள் அரங்கேறின. இந்துக்கள் குறிபார்த்து கொல்லபட்டனர்.(அப்பொழுதுதானே கலவரம் வரும்). ஊரை ரத்தகறை ஆக்கிவிட்டு பொற்கோயிலுக்குள் ஒளிந்தனர். பொற்கோயிலுகுள் சென்ற இந்திய ஜனாதிபதியே மயிரிழையில் உயிர்தப்பினார்.

துணிந்த இந்திரா ராணுவ நடவடிக்கை தொடங்கினார், பொற்கோயில் ரத்த்தால் கழுவபட்டது, தீவிரவாதம் முடித்துவைக்கபட்டது.

பொற்கோயிலில் ராணுவம் புகுந்தது ஒவ்வொரு சீக்கியனுக்கும் வலிதான், ஏற்கனவே இந்தியா தங்களை சரியாக அங்கிகரிக்கவில்லை எனும் கோபம் இருந்தது அது கூடிற்று. ஆனாலும் ஒரு சிறிய மகிழ்ச்சி இருந்தது.

அதாவது பிந்திரன்வாலே கூட்டத்தை பெரும்பான்மை சீக்கிய‌ மக்கள் ஆதரிக்கவில்லை, அவன் தொலைந்ததில் நிம்மதியான சீக்கியர்கள் ஏராளம்.

பின்னர் ஏன் படுகொலை நிகழ்ந்ததென்றால், அதுதான் உலக அரசியல். பொற்கோயில் சம்பவத்தில் சீக்கியர்களுக்கு கோபம் இருந்ததே தவிர அவரை கொலை செய்யும் அளவிற்கு அல்ல.

ஆனால் கோபத்தை கூடுதல் பயமும் கூட்டி, இனி இந்திரா இருந்தால் சீக்கியர் வாழ முடியாது என ஒரு பிம்பத்தை உருவாக்கியது பல வெளிநாட்டு சக்திகள்.

சுருக்கமாக சொன்னால் உயிரோடு வைத்து பிந்திரன்வாலேயால் செய்யமுடியாததை அவன் செத்தபின்னால் செய்தார்கள். அதற்கான சூழ்நிலையை உருவாக்கியது பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல் ஹக், திட்டம் கொடுத்தது ஒரு பெரிய கை.

அவர்களின் குறி இந்திய எல்லைகளில் பதற்றம் உண்டாக்குவது, அது முடிந்தது இந்திரா படுகொலையில்

வருவார்..

 

இந்திராவின் இந்தியா ‍- 01

Image may contain: 1 person, textநாளை அன்னை இந்திராவின நினைவுநாள், அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம்

அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம்

உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியபெண்களை பட்டியலிடும் ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியபெண்ணை மட்டும்தான் சொல்லும் அதுதான் இந்திராகாந்தி.

இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்கமுடியாத முத்திரை பத்தித்தவர் அவர் ஒருவர்தான்.

மோதிலால்,ஜவர்லால்,மவுண்பேட்டன்,காந்தி,பட்டேல்,விஜயலட்சுமி பண்டிட் என சுற்றி, சுற்றி பெரும் அரசியல் ஜாம்பபான்களுடன் வளர்ந்தவர். அரசியல் காற்றைத்தான் அவர் சுவாசித்தார், அரசியலை பார்த்தபடியேதான் வளர்ந்தார்.

சீனாவின் துரோகம் நேருவிற்கு தாங்கமுடியாத வலி, அந்த சோகத்திலே இறந்தும்போனார். அதன் பின் வந்த இந்திரா பக்கத்துநாடுகளின் விஷயங்களை எல்லாம் அதிரடியாக கையாண்டதற்கு முதல்காரணம் துரோகி மாவோவும், ஏமாந்த நேருவும்.

இந்திரா இந்தியாவை ஆட்சிசெய்தவிதம் அனைவரும் அறிந்தது, அதனை மறுபடி விளக்கி சொன்னால், இதோ பாய்விரித்து படுத்துவிட்ட காங்கிரசை எழுப்பிவிட ஒருவன் வந்துவிட்டான் என அரசியலாக்குவார்கள், நமக்கு அவரின் அரசியல் வேண்டாம்,

இந்திராவின் பெரும் சாதனையான இந்திய உளவுதுறை வெற்றிகளை பார்ப்போம்.

இந்திய உளவுதுறை “ரா” அவர் காலத்தில்தான் தொடங்கபட்டது, அதுவரை இந்திய உளவு அமைப்பு இந்தியாவிற்குள் மட்டும் உளவுபார்க்கும் (தமிழக உளவுதுறை போல 🙂 ) , இந்திரா காலத்தில்தான் வெளிநாட்டு உளவு பார்க்கும் அமைப்பு கே.என்.காவ் தலமையில் தொடங்கப்ட்டது, அதன் பிராதான பாத்திரம் பி.ராமன் (இந்த தமிழர்தான் இந்திய உளவுதுறையின் பிராதான மூளை).

சில உணர்வாளர்கள் உண்டு, ஒரு நாள் நரசிம்ம”ராவ்” படத்தினை கடுமையாக திட்டிகொண்டிருந்தார்கள், விசாரித்ததில் ஈழகுழப்பத்திற்கு “ராவ்”வின் நடவடிக்கை காரணம் என எங்கோ படித்தார்களாம், அவர்கள் கண்ட “ரா” அப்படி.

சீனா இந்திராவின் முதல் எதிரி , காலம் மாறியது சோவியத் மாவோ தகறாறில் மாவோ தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதையும் மறந்து அமெரிக்க பக்கம் சாய, இந்திரா ரஷ்ய பக்கம் சேர்ந்து அட்டகாசமான ஆட்டம் ஆரம்பித்தார்.

இந்திராவும் அமெரிக்க அதிபர் நிக்சனும் நடத்திய பனிப்போர் பிரமாதமானது, இனி ஒரு இந்தியபிரதமர் அப்படி சவால்விட‌முடியுமா என்றால் அது சந்தேகம். நிக்சனே வாய்விட்டு சொன்னார், “இந்திரா ஒரு அரசியல் சூனியக்காரி”

இந்திய உளவுதுறையின் பெரும் சாதனைகளில் ஒன்று வங்கப்போர், ஒரு பாகிஸ்தான் எல்லையே எந்நாளும் தொல்லை, இதில் கிழக்கில் ஒரு பாகிஸ்தான் என்றால் தாங்குமா? அவர்களுக்குள் பிணக்கு எழுந்தநேரம் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவின் செல்லபிள்ளையானார், குழப்பம் தலைதூக்க வைத்து இந்தியா ராணுவ நடவடிக்கை வரை வந்து, என்றும் பாகிஸ்தான் மறக்காதவாறு மரண அடிகொடுத்தது, பிண்ணனியில் இருந்தது ரா,

ராவின் அறிக்கைபெறும் தலைவர் பிரதமர் இந்திராகாந்தி

இந்திராவின் திறமையான ரா, மற்றும் அதிரடி ராணுவம் கொடுத்த அடியில்தான், பாகிஸ்தானுக்கும் அந்த வெட்டு தழும்பு, தினம் கண்ணாடி பார்த்து தடவி தடவி அழுகிறது அது.

அதோடு விட்டாரா பூட்டோவை கிட்டதட்ட மனோகரா சிவாஜி போல இழுத்து வந்து சிம்லா உடன்படிக்கை எனும் பாகிஸ்தான் தோல்வி பத்திரத்தில் கையெழுத்துவாங்கிய பெருமை அவருக்கே சேரும்.

பின்னர் எல்லையில் போக்கு காட்டிய சிக்கிம் மன்னரை மிரட்டி இந்தியாவோடு சிக்கிமை இணைத்ததில் ராவும் இந்திராவும் மகத்தான வெற்றி பெற்றார்கள்.

உச்சகட்டமாக நிக்சனின் எதிர்ப்பையும் மீறி, இந்தியாவில் “புத்தர் சிரித்தார்”, அந்த அணுகுண்டு சோதனைக்கு ஏன் அந்தபெயர்?, திபெத்தில் புத்தரை அழவைத்தார்கள் அல்லவா? சப்பைமூக்கர்கள், அந்த புத்தர் இந்தியாவின் அணுவலிமை கண்டு சிரித்தார். (காரணம் இல்லாமல் இந்தியா எந்தபெயரும் வைக்காது)

பின்னர் இந்திராவின் வரிசையில் பர்மா,மாலத்தீவு நாடுகளும் சேர்ந்தன, அல்லது நாங்கள் சமத்துபிள்ளை என ஓடிவந்து காலில் விழுந்தன. கிட்டதட்ட இந்திய துணைகண்டம் அதிகார உச்சம் பெற்றது.

இந்திய வலிமைய தாங்கமுடியாத நிக்சன் அரசாங்கம், பொருளாதார தடை எனும் இன்றைய அநியாயத்தை அன்று ரூபாய் மதிப்பு இறக்கம் என மறைமுகமாக பழிவாங்கிற்று, அதில் விழ ஆரம்பித்ததுதான் ரூபாயின் மாகாசரிவு.

அதனையும் சமாளித்தார் இந்திரா, தெற்கில் பெரும் ராஜதந்திரியான ஜெயவர்த்தனே. பாகிஸ்தான் வாழ்க,அமெரிக்க நிலைக்க என கோஷம்போட்டபொழுது ஈழபிரச்சினையில் தலையிட்டு அவரை கதறவைத்த வரலாறுகளும் உண்டு.

ஈழ தலைவர் அமிதலிங்கத்தை அழைத்து ஒரு குடியரசு விழாவில் தனதருகே அமரவைத்த அந்த‌ ராஜதந்திரம் ஒன்று போதும், எழுந்து நின்று கைதட்டலாம்.

(பின்னர் அமிர்தலிங்கம் எப்படி கொல்லப்ட்டார் என்பதும், இன்று அதே டெல்லியில் ராஜபக்சேக்கும் அவனது கொள்ளுதாத்தா தர்மபாலாவிற்கும் நடப்பதை நினைத்தால், அப்படியே அமேசான் காட்டுக்குள் ஓட தூண்டுகிறது)

இந்திய உளவுதுறைக்கு இரு பெரும் அவமானங்கள் உண்டு ஒன்று கனிஷ்கா விமானவெடிப்பை தடுக்கமுடியாமல் போனது இன்னொன்று ஈழபிரச்சினைய குழப்போ குழப்பு என குழப்பி தள்ளியது, இரண்டும் இந்திரா காலத்திற்கு பிந்தியவை.

இந்திராவின் காலத்தில்தான் “ரா” பெரும் நடவடிக்கைகளில் வெற்றிமேல் வெற்றிபெற்றது, அங்குதான் இந்திராவின் வலிமையும், அவரின் ஆளுமையும் தெரிகிறது.

இவ்வாறாக சர்வதேசத்தில் உயரபறந்த இந்திரா உள்நாட்டு மக்களால் கொல்லபடும் நிலைக்கு எப்படி தள்ளப்ட்டார் என்பதுதான் சோகமான வரலாறு
அதனை ஒரு இந்தியராக எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டியது.

வருவார்..