எல்லா சாதிக்குமாகவே அவர்கள் ஆலயம் அமைத்தார்கள்

இந்து ஆலயங்களை பற்றி சொன்னால் அதில் தாழ்ந்த சாதி நுழைய அனுமதி இல்லை தெரியுமா? அதெல்லாம் பிராமணாள் வாக்கிங் ஏரியா என பல குரல்கள்

முதலில் எல்லா ஆலயங்களும் எல்லா சாதியும் நுழையும் இடமாகத்தான் இருந்தது

பின்னாளில் சில ஆலயங்களில் மட்டும் அக்கொடுமை நடந்தது, ஆனால் அதை எதிர்த்து ஆலய நுழைவு செய்ததும் இந்துக்களே

மதுரையில் வைத்தியநாத அய்யரும், முத்துராமலிங்க தேவரும் அதை செய்தனர்

பெரியார் மதுரை பக்கம் வராமல் ஏற்கனவே போராட்டம் நடந்த வைக்கம் பக்கம் சென்றார்

மதுரை பக்கம் ஏன் வரவில்லை என்பதற்கு ஏராளாமன விஷயம் உண்டு

இந்துக்களின் எல்லா ஆலயங்களிலும் மற்றசாதி நுழைய அனுமதி இல்லாமல் இருந்தது என்பது சரியல்ல‌

சுருக்கமாக சொன்னால் எத்தனையோ ஆலயங்களை கட்டிய மன்னர்கள் யாரும் பிராமணர் அல்ல மருதுபாண்டியர் உட்பட‌

எல்லா சாதிக்குமாகவே அவர்கள் ஆலயம் அமைத்தார்கள்

தஞ்சை கோவிலில் கூட அம்மாதிரி சிக்கல்வந்ததாக தெரியவில்லை

ஏராளமான ஆலயங்களில் எல்லா சாதியும் செல்லலாம் திருப்பதி, சபரிமலை எல்லாம் அவ்வகை

எமது யூகம் சரியாக இருந்தால் பழனி, திருச்செந்தூர் ஆலயங்களும் இன்னும் ஏராளமான ஆலயங்களும் அவ்வகையே

திருச்செந்தூர் ஆலயம் நெடுநாட்களாக சூத்திர சாதியான நாடார்கள் வசமே இருந்திருக்கின்றது , இன்றும் அப்படியே

ஏன் தாழ்த்தபட்ட சாதியான கலைஞரே திருவாரூர் ஆலயத்தினுள் தான் உருண்டு புரண்டு ஆடிய காட்சிகளை பல இடங்களில் நினைவு கூர்ந்திருக்கின்றார்

பெரியார் ஆலய தர்மகர்த்தாவாகவே இருந்திருக்கின்றார்

நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்ருட்சமாக காஞ்சிபுரம் கோவிலுக்குள் சுற்றி சுற்றி வந்திருக்கின்றார் இளம் வயது அண்ணா..