இம்மானுவேல் சேகரன்

அந்த சம்பவமும் அதை தொடர்ந்த கலவரமும் தமிழகத்தின் இருண்ட நாட்கள், தமிழகம் முழுக்க அக்கலவரம் பரவி விடுமோ என அஞ்சிய நாட்கள்

சாதி ஒழிப்பு போராளிகளான‌ அண்ணாவோ, கலைஞரோ ஏன் கம்யூனிஸ்டுகள் கூட அந்த கலவரத்தை கண்டிக்க தயங்கினர், அவ்வளவு பெரிய வெறியாட்டம் அது

பெரியார் ஒருவர் மட்டும் தைரியமாக முழங்கி கொண்டிருந்தார், “அந்த‌ முத்துராமலிங்கம் எனும் பயலை பிடித்து உள்ளே போடாமல் கலவரம் அடங்காது, சர்க்கார் அதை உடனே செய்யட்டும்” என தைரியமாக சொன்ன ஒரே தலைவர் அவர் ஒருவர்தான்

காரணம் அவருக்கு வோட்டு கணக்கு இல்லை, சமூக கணக்கே இருந்தது

என்ன நடந்தது?

1957ல், அந்த‌ தேர்தலில் முத்துராமலிங்க தேவரின் ஆதரவு பெற்ற சசிவர்ணதேவர் வெற்றிபெற்றிருந்தார். இதனை தொடர்ந்து இராமநாதபுரம் பக்கம் கலவரம் பரவியது, ஏன் பரவியது என்பதுதான் மர்மம்.

இந்த கலவரத்தில் தாழ்த்தபட்ட மக்களின் பிரதிநிதியாக இன்றைய திருமா போல் துணிவாக வந்து நின்றவர் இம்மானுவேல் சேகரன்

அந்த கமுதி ராமநாதபுரம் முதல் மதுரை தேனி வரையான பகுதியில் கடவுளுக்கு நிகராக வணங்கபட்டவர் பசும்பொன் தேவர், அவரின் முக்குலமே அப்பக்குதியில் ஆண்டுகொண்டிருந்தது

தாழ்த்தபட்ட மக்களும் இருந்த அப்பகுதியில் ஆங்காங்கே மோதல்கள் இருந்தன, நிச்சயம் தேவரை முழுக்க சொல்லவும் முடியாது. மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்ட மக்கள் நுழைய போராடியவர் தேவர்

ஆனால் அவரின் அடிப்பொடிகள் நிகழ்த்திய கலவரங்களை அவர் ஏன் தடுக்கவில்லை என்பதுதான் வரலாற்று மர்மம்

இம்மானுவேல் சேகரன் என்பவர் யார்? என்றால், அவரும் அப்பகுதிக்காரர் அன்றே ராணுவத்தில் இருந்தவர், படித்தவர். 7 மொழிகள் அவருக்கு தெரிந்திருந்தன. அப்பக்கம் தாழ்த்தபட்ட மக்களின் குரலாக உருவானார், ஒரு கட்டத்தில் ராணுவ பணியினை விட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தார்.

அப்போது திமு கழகத்தால் பலமிழந்துகொண்டிருந்த காங்கிரசுக்கு இம்மானுவேல் போன்றோரை இணைக்க வேண்டிய அவசியம் இருந்தது.

இன்னொன்று இம்மானுவேல் சேகரனை சேர்த்துகொள்ள மற்ற கட்சிகளுக்கு தயக்கமும் இருந்தது எல்லாம் வோட்டு கனக்கு

என்னதான் சமதர்மம் பேசினாலும் இம்மானுவேல் சேகரனை சேர்த்துகொள்ள அண்ணாவுக்கும் தயக்கம் இருந்தது, அது பயமா அல்லது வேறுவிஷயமா என தெரியவில்லை.

முக்குலத்தோர் வாக்கு வங்கியினை இழக்க திமுக விரும்பவில்லை என பின்னாளில் சொல்லபட்டாலும் இறுதிவரை அண்ணா அதுகுறித்து பேசவில்லை

சாதி ஒழிக்கவேண்டிய திமுக அன்று காங்கிரசை ஒழிப்பதிலே குறியாக இருந்தது.

ஏதோ ஒன்றிற்கு அஞ்சி யாரும் இம்மானுவேல் சேகரனை சேர்க்க தயங்கிய காலத்தில்தான் காமராஜர் அவருக்கு கை கொடுத்தார்.

இந்நிலையில்தான் தேர்தலும் நடந்து அதில் கலவரமும் வெடித்தது. ஏன் கலவரம் வெடித்தது என்பதற்கு இன்றுவரை பதில் இல்லை, பெரும் கலவரங்கள் எல்லாம் இந்தியாவில் அப்படித்தான். அழிவு தெரியுமேயன்றி வெடித்தபுள்ளி தெரியாது, ஆனால் நெடுநாள் வன்மம் மட்டும் காரணம் என்பது புரியும்.

அப்படி அந்த கலவரத்தை தடுக்க சில அமைதி முயற்சிகளும் எழுந்தன, அவற்றில் ஒன்றுதான் ஆட்சியர் தலமையிலான கூட்டம். அதில் தேவர், சரிவர்ணதேவர் போன்றோர் அப்பக்கமும், இம்மானுவேல் சேகரன் உட்பட 7 பேர் இப்பக்க சார்பாகவும் கலந்துகொண்டனர்.

அதில் உணர்ச்சிகரமாகவும், துணிவாகவும் பேசினார் இம்மானுவேல் சேகரன்.

மறுநாள் கொல்லபட்டார், தேவரை எதிர்த்து பேசியபின் அவர் கொல்லபட்டதால் பழி பசும்பொன் தேவர் மீது விழுந்தது

கொல்லபடும்பொழுது இம்மானுவேலின் வயது 33.

விவகாரம் விஸ்வரூபமானது, கொலையாளிகளை பிடிக்க முயன்றபொழுதுதான் கீழ தூவல் துப்பாக்கி சூடு எல்லாம் நடந்து அப்பகுதி எரிந்தது.

ரத்த ஆறு பொங்கி ஓடியது, தென்னகம் முழுக்க கலவரம் பரவி விடுமோ என்ற அச்சம் மேலோங்கியது

தாழ்தபட்ட மக்களுக்கு தமிழகத்தில் சுதந்திர இந்தியாவில் முதல் தலைவனாக தோன்றிய இம்மானுவேல் சேகரனை அரவணைத்த பாவத்திற்காக காமராஜர் சாதிவெறியினை தூண்டிவிட்டவர் என்ற பழி சுமந்தார்

பலர் அதை ரசித்தனர், ஆனால் யாரும் கலவரங்களை கண்டித்தோ ஜாதிவெறியினை கண்டித்தோ பேசவில்லை

பெரியார் மட்டும் துணிச்சலாக “அந்த முத்துராமலிங்கம் (சாதிபெயரை பெரியார் சொல்லமாட்டார்) என்பவரை பிடித்து உள்ளே போட்டால் ஒழிய அங்கு கலவரம் நிற்காதுங்க” என தைரியமாக சொன்னார்.

வேறு ஒரு தலைவனுக்கும் அதை பற்றி கருத்து சொல்ல தைரியமில்லை அண்ணா, கலைஞர் உட்பட.

பின்பு பல சர்ச்சைகள் எழுந்தன, வழக்குகள் எல்லாம் நடந்தன. முத்துராமலிங்க தேவர் இம்மானுவேல் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கபட்டார்.

அதாவது தா.கிருட்டினன் வழக்கிற்கு இம்மானுவேல் சேகரன் வழக்குதான் முன்னோடி, கிட்டதட்ட மூடபட்ட வழக்கு

இம்மானுவேல் சேகரனின் ரத்தம் அந்த சாதி வெறி கொலையாளிகளின் கரங்களில் மட்டுமா உண்டு என்றால் இல்லை

தாழ்த்தபட்ட மக்களின் தலைவனான இம்மானுவேலை ஆதரிக்க எல்லோருக்கும் பயம், அம்மக்களை எட்டிபார்க்க எவனுக்கு அக்கறையில்லை.

அன்று திருமா இல்லை, கி.சாமி இல்லை, பா.ரஞ்சித் இல்லை.

ஈழத்தில் சாதியினை டுமீல் டூமில் என சுட்டுவிட்டு இன்று

நிச்சயம் இம்மானுவேல் சேகரனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கவேண்டியது அந்நாளைய சாதி ஒழிப்பு போராளிகள் செய்தார்களா?

தி.க செய்ததா? திமுக செய்ததா இல்லை, அப்படி ஒரு எண்ணமே இல்லை

இம்மானுவேல் சேகரனுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் காத்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை

அவர்களுக்கு திருப்பி அடிக்க தெரியாத‌ பிராமணன் மட்டுமே கண்ணுக்கு தெரிவானன்றி, திருப்பி அடிக்கும் எந்த சாதியும் கண்ணுக்கு தெரியாது

இம்மானுவேல் செய்த தவறு என்னவென்று கொலை வழக்கில் விசாரிக்கும்பொழுது தெரிந்த உண்மை, ஒரு தாழ்த்தபட்டவன் தேவருக்கு எதிராக கலெக்டர் முன் நாற்காலியில் அமர்ந்துவிட்டான் என்பது

அந்த வெறிதான் கொலைக்கு காரணமேயன்றி, தேவரை கடவுளாக வழிபட்ட கூட்டத்தின் வெறியே காரணமன்றி வேறு அல்ல என்பது பின்னாளில் விளங்கிற்று

தேவரும் கொலைக்கு காரணம் அல்ல என நீதிமன்றமும் சொல்லிற்று.

ஆனால் இம்மானுவேல் சேகரனி சாவு வீணாகவில்லை, அதுவரை அவர்களுக்கொரு தலைவன் இல்லை, அவர்கள் குரலை சொல்ல யாருமில்லை

நாமெல்லாம் திராவிடர்கள் அதனால் எங்களுக்கு வாக்களிக்க வெண்டும், தமிழையும் பிராமண எதிர்ப்பையும் காப்பாற்ற எங்களை அன்றி யாருமில்லை என சொல்லி கொண்ட திமுகவோ திகவோ அவர்களை எட்டிபார்க்கவில்லை

இந்தியினை எதிர்த்த அளவு, இந்த சாதிவெறி கொலைகளை திமுக எதிர்க்கவில்லை என்பது இன்னொரு கோணம்

எல்லாம் சமூக நீதி எனும்பெயரில் நடந்த வாக்கு அரசியல் அன்றி வேறல்ல‌

ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், தாழ்த்தபட்ட மக்களுக்கு இம்மானுவேல் சேகரன் மிக உறுதியான தலைவராக திகழ்ந்தார் ஆனால் வீழ்த்தபட்டார்

இன்று அவர் வழியிலே திருமா போன்றவர்கள் வந்தார்கள், நிலைத்தார்கள். இன்று வலுவாக அவர்களால் கத்தவாவது முடிகின்றது

இம்மானுவேல் சேகரன் கொல்லபட்டாலும் திருமா போன்றவர்களின் உருவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்

தமிழகத்தின் கொடூர சாதிவெறிக்கு பலியான இம்மானுவேல் சேகரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

எப்படிபட்ட கொடூர காலங்களை எல்லாம் தமிழகம் கடந்திருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இம்மானுவேல் சேகரனின் கல்லறை நிற்கின்றது

இனி அப்படிபட்ட மோதல்களும் வேண்டாம், சாவுகளும் வேண்டாம்

ஒழியட்டும் சாதி, வலுக்கட்டும் மானிட நேயம். அதுவே இம்மானுவேல் போன்றோருக்கான மகத்தான அஞ்சலி

அந்த அஞ்சலில் அவருக்கானது மட்டுமல்ல, அதன் பின் அவர் சாதியிலும் எதிர் சாதியிலும் ஏராளமானோர் செத்தனர், எல்லோருக்கும் சேர்த்தே அஞ்சலி

இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளுக்காக பலத்த ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கின்றன, சாதி கொடுமைக்காக செத்தவர் அவர் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அந்த பரிதாபத்திற்குரிய மனிதனின் நினைவுநாள் அமைதியாக நடக்க வேண்டும்

அதுதான் அவருக்கான மகத்தான அஞ்சலி, அந்த நினைவு அஞ்சலி மிக மிக அமைதியான முறையில் நடப்பதே அவருக்கு பெருமையும் கவுரவமும் ஆகும்

Image may contain: 1 person, closeup
———————————————————————————————————————————————————————————————————————————————————————————-

 

இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் 144 தடை போட்டு அனுசரிக்கபடுகின்றது, இனி பசும்பொன் தேவரின் நினைவு நாளுக்கு கேட்கவே வேண்டாம்

இது போல ஒவ்வொரு சாதி அடையாளத்தவர் நாளிலும் இதே 144

ஆனால் கேளுங்கள், இது பெரியார் மண் என பெரும் வீராவேசம்

இம்மாதிரியான காலங்களில் பெரியார் மண் என்பது மறந்தே போகும், பெரியார் மண்ணிலா சாதி அடையாளங்களுக்கு 144 என யாரும் கேட்கமாட்டார்கள்

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் எல்லாம் சாதியினை ஒழித்ததா என கேட்க கூடாது, அதெல்லாம் கனவு காட்சிகள், கள யதார்த்தம் அல்ல‌

பெரியார் மண் இது என சொல்ல இம்மாதிரி காலங்களில் முடியுமா? நிச்சயம் முடியாது

ஆனால் தேசிய கட்சிகளை எதிர்த்து அரசியல் காட்சி வரட்டும், “டேய் இது பெரியார் மண் இந்திய தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது..” என சீறுவார்கள்

ஆனால் சாதி அடையாளங்களுக்கு 144 போட்டால், தீகோழி மண்ணுக்குள் தலைவைத்து கொண்டது போல் பதுங்குவார்கள்

எவனாவது ஒரு பெரியாரிஸ்ட், இந்த தமிழகத்தில் சாதி தலைவர்களுக்கான குருபூஜை தடைசெய்யபட வேண்டும், இதெல்லாம் சாதி அடையாளங்களை வலுபடுத்தும் அதனால் அரசுஇதை தடை செய்யட்டும் என சொல்லட்டும் பார்க்கலாம்

சொல்லமாட்டான், ஆனால் சும்மா பிரமணன், மனுநீதி என சம்பந்தம் இல்லாமல் உளறிகொண்டிருப்பான், கேட்டால் சாதியினை சொன்னது பிராமணனாம்

அவனா இம்மானுவேல் சேகரனை கொல்ல சொன்னான்? என்றால் பதிலே வராது. காரணம் அரசியல்

முதலில் இது பெரியார் மண் என இந்திய தேசியத்திற்கு எதிராக‌ அரசியல் செய்பவன் பூரா பயலுக்கும் 144 போட வேண்டும்